1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாமரையின் வரிகளை ரசிக்கும் அளவிற்கு மதன் கார்க்கியின் வரிகளை ரசித்து இருக்கிறேன்.

    மதன் கார்க்கியின் தம்பி கபிலன் எழுதிய பாடல் இது. ஊடலை அழகாக வெளிப்படுத்தும் பாடல். கபிலன் இன்னும் என்ன பாடல்கள் எழுதி இருக்கிறார் என்று இனிமேல் தான் தேடி பார்க்க வேண்டும். கார்க்கியின் வரிகள் போலவே கபிலனின் வரிகளும் மனதை தொடுகிறது.

    YT - ஆக்சிஜன் தந்தாயே - கவண்

    தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
    நிழலோடும் உரசாத தன்மானம் எனது
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று எனது சமீபத்து வேலை சார்ந்த இன்டர்வியூ அனுபவத்தை பற்றி எழுதுகிறேன்.

    எனது profession மீது எனக்கு passion என்று சொன்னால் மிகையாகாது. பாடல்கள் பற்றி மணிக்கணக்காக என்னால் எந்த அளவிற்கு சந்தோஷம் பொங்க பேச முடியுமோ அந்த அளவிற்கு எனது வேலை பற்றியும் பேச முடியும். வேலை சார்ந்த புத்தகங்கள் படிப்பதும், வீடீயோஸ் பார்ப்பதும், இன்டர்நெட் ல பரவி இருக்கும் தகவல்கள் தேடுவதும், படித்ததை நண்பர்களிடம் டிஸ்கஸ் பண்ணுவதும் எனது அதி விருப்பமான செயல்கள்.

    அடிக்கடி வேலையை மாற்ற மாட்டேன். பல வருடங்கள் ஒரே இடத்தில வேலை பார்த்து விட்டு வேலை மாற்றத்திற்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஒரு வேலையில் இருந்து கொண்டே இன்னொரு வேலைக்கு இன்டர்வியூ கொடுக்கும்போது confidence கன்னா பின்னாவென்று எகிறும். 'Job description' படித்து, அதில் ஒவ்வொரு வரிக்கும் நான் எனது சொந்த வேலை அனுபவத்தை தொடர்பு படுத்தி ஒவ்வொரு ஸ்கிரிப்ட் தயாரிப்பேன். அப்படி தான் இந்த முறையும் 100% தயாராக போனேன். ஆறு கட்டங்கள் இன்டர்வியூ. எனது அனுபவத்தில் முதல் முறையாக நான் அதிக பட்சமாக சந்தித்த இன்டர்வியூ கட்டங்கள்.

    ஆறாவது கட்டம் - எஸ்சீக்யூட்டிவ் பதவியில் இருக்கும் நபர் என்னிடம் கேட்ட கேள்வி: உன்னுடைய பார்வையில் எதிர் காலத்தில் என்ன நடந்தால் இந்த கம்பெனி 'திவால்' ஆகும்?

    இந்த கேள்வியை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. சின்ன கம்பெனி என்றால் எதையாவது சொல்லி சமாளிக்கலாம். பிரசித்தி பெற்ற உலகம் முழுவதும் 'brand identity' இருந்து ஒவ்வொரு நொடியிலும் பணத்தில் புரளும்/குளிக்கும் கம்பெனி என்றால் என்ன பதில் சொல்லி சமாளிக்க முடியும்? போன வருடம் ஒரு நண்பரிடம் வேலை பற்றி டிஸ்கஸ் பண்ணதும், அவர் சொன்ன ஒரு புது விஷயத்தை நெட் ல படித்ததும் தக்க சமயத்தில் எனது நினைவிற்கு வந்தது. இன்டர்வியூ ல அந்த புது விஷயத்தை பற்றி ஆணித்தரமாக அடித்து பேசினேன். என்னுடைய பதில் கிளிக் ஆனது. உடனே அடுத்த எதிர் கேள்வி கேட்டார்: 'திவால்' ஆகாமல் இருக்க இந்த கம்பெனி என்ன பண்ண வேண்டும்? அதற்கு புத்தகத்தில் படித்ததை வைத்து சும்மா ஒரு பதிலை அடித்து விட்டேன். புள்ளி வச்ச பிறகு கோலம் போடுவது கஷ்டமா என்ன? :smiley::smiley:

    YT - தில்லு முள்ளு - இன்டர்வியூ - காமெடி சீன்
     
    kaniths and Sweeti83 like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த சில தினங்களில் கார்க்கி/கபிலன் எழுதிய பாடல் வரிகளை இங்கு குறிப்பிட்டேன். இன்று வைரமுத்து எழுதிய இந்த பாடல் FM ல கேட்டேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த பாடலை கேட்டேன். கேட்பதற்கு ஜில்லு னு இருந்தது.

    YT - குளிச்சா குத்தாலம் - டூயட்
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று WA ல படித்ததில் ரொம்ப பிடித்தது...

    சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்

    அந்த காலம் தான்
    நன்றாக இருந்தது....!
    ******************
    ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
    சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
    *********************
    பேருந்துக்குள் கொண்டுவந்து
    மாலைமுரசு விற்பார்கள்
    *********************
    மிதி வண்டி வைத்திருந்தோம்
    ***********************
    எம் ஜி ஆர் உயிரோடு
    இருந்தார்.
    **********************
    ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

    KB படங்கள் என்றால்
    ஒரு மாதம்அலசுவோம்
    ***************
    எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
    உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
    ************************
    கல்யாண வீடுகளில்
    பாய் போட்டு சாப்பாடு
    *****************
    கபில் தேவின்
    கிரிக்கெட். FANTASTIC
    5 நாள் MATCH
    ************************
    குமுதம், விகடன்
    நேர்மையாக இருந்தது.
    *******************
    எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
    கேசட்டிலும் பாடல் கேட்பது
    சுகமானது
    ************************
    வீடுகளின் முன் பெண்கள்
    காலையில் கோலமிட்டார்கள்,
    மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
    அரட்டை அடிப்பார்கள்
    *********************
    சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
    முன்பே திட்டமிடுவோம்
    **************************
    தீபாவளி பண்டிகையை கொண்டாட
    ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
    *****************
    புது SCHOOL UNIFORM தான்
    சிலருக்கு DEEPAWALI DRESS
    ***************
    டான்ஸில் ஆபரேஷன்தான்
    பெரிய ஆபரேஷன்
    நிறைய பேர்
    பண்ணி கொண்டார்கள்
    *******************
    வானொலி நாடகங்களை
    ரசித்து கேட்டோம்
    **********************
    எல்லோரும் அரசு பள்ளிகளில்
    படித்தோம்
    *******************
    சாலையில் எப்போதாவது
    வண்டி வரும்
    *******************
    மழை நின்று
    நிதானமாக பொழியும்
    *****************
    தமிழ் ஆசிரியர்கள்
    தன்நிகரற்று விளங்கினர்
    ***********************
    வேலைக்கு போகாதவன்
    எந்த குடும்பத்திற்கும்
    பாரமாயில்லை
    ***********************
    எளிதில் மணப்பெண் கிடைத்தாள்
    *********************
    கிரிக்கெட் - வெஸ்ட் இன்டீசை
    வெல்லவே முடியாது
    ***********************
    சந்தைக்கு போக
    பத்து ரூபாய் போதும்
    *******************
    அம்மா பக்கத்தில் உறங்கினோம்
    ***********************
    கொளுத்தும் வெயிலில்
    செருப்பு இல்லாமல் நடந்தோம்
    ********************
    முடி வெட்ட
    இரண்டு ரூபாய்தான்.
    Shaving 50 பைசா
    ******************
    சுவாசிக்க காற்று இருந்தது.
    குடிதண்ணீரை யாரும்
    விலைக்கு வாங்க வில்லை.
    ********************
    தெருவில் சிறுமிகள்
    பல்லாங்குழி ஆடுவார்கள்.
    அவர்களை கலாய்த்துகொண்டே
    நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.
    *******************
    டாக்டர் வீட்டுக்கே வருவார்.
    ********************
    காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
    *****************
    சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

    *****************
    மயில் இறகுகள்
    குட்டி போட்டன...புத்தகத்தில்.
    ******************
    ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
    அப்பாவிடம் அடி வாங்கினோம்.
    *****************
    மூன்றாம் வகுப்பிலிருந்து
    மட்டுமே ஆங்கிலம்.
    **************
    ஐந்தாம் வகுப்பு வரை
    அரைக்கால் டவுசர்.
    ****************
    மொத்தத்தில் மரியாதை இருந்தது..
    *******************
    தொலைந்து போனவை
    நம் நாட்கள் மட்டுமல்ல..
    நம் சுகங்களும்தான்..
    ***********************
     
    kaniths likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்ணதாசனின் வரிகளில் SPB யின் குரலில் MSV யின் இசையில் ஒரு அற்புதமான பாடல். தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கலாம். எத்தனையோ முறை இந்த பாடல் கேட்டு இருக்கிறேன். ஆனால் எப்போது கேட்டாலும் ஒரு freshness இருப்பது போலவே தோன்றும் எனக்கு.

    YT - ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு

    இடையாட வளையாட சலங்கைகள் ஆட
    இலையோடு கொடி போல நடமாடினாள்
     
    kaniths and jskls like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இப்போ கொஞ்சம் தூக்கல் இசையில்/பாடல் வரிகளுடன் ஒரு பாடல் கேட்க வேண்டும் என்று தோன்றியது. இந்த பாடல் தான் இப்போதைக்கு நினைவிற்கு வந்தது. ஒரு காலத்தில் இந்த பாடல் வரிகளை விழுந்து விழுந்து ரசித்து இருக்கிறேன்.

    நீ கட்டும் சேலை - புதிய மன்னர்கள் - ARR/Vairamuthu

    நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்
    குட்டி குட்டி நிலவு தெரியுதடி
     
    kaniths and Sweeti83 like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது அலுவலகத்து நண்பர் அனுப்பிய WA மெசேஜ். படித்ததும் சிந்திக்க வைத்தது..
    கடவுளின் கணக்கு பற்றி ஆழமாக யோசிக்க ஆரம்பித்தால் கணக்கு மேல் இருக்கும் காதல் மறைந்து அடிப்படை கணிதம் கூட எனக்கு மறந்து விடும். ஏன் எதற்கு இப்படி நடந்தது என்று எதற்காவது விடை தேட ஆரம்பித்தால் பைத்தியம் பிடித்து விடும். விடை தேடி மனதை நோகடித்து/நேரத்தை வீண் அடிப்பதை விட்டுவிட்டு எதில் சிறந்து செயல்படுவோமோ அந்த விஷயங்களில் எல்லாம் முழு மனதோடு ஈடுபட்டு நேரத்தை விருப்பத்தோடு செலவிட்டு திருப்தியோடும் மகிழ்வோடும் இருப்பது நம் கையில் உள்ளது என்பதை தான் நான் இப்போதைக்கு பின்பற்றி வருகிறேன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    கடவுள் கணக்கு
    நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில்
    கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்.

    நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை!

    சிறு கதை ஒன்று எனக்கு ஒரு தெளிவினைக் கொடுத்தது.

    ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

    முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

    நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

    ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

    பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

    மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

    ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

    மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

    நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

    சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அடுத்த் நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

    மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

    ஒரு காசு வழங்கப்பட்டவர்
    மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.

    அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

    ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

    இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு.

    ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    Sweeti83 likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,

    எப்படி இருக்கீங்க? 'Like' மட்டும் போட்டுட்டு பாட்டு போடாம போறீங்க? உங்களுக்கு ஒரு ragging கேள்வி ரெடி பண்ணவா? :smile::smile:
     
    jskls likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SPB/SJ combo 'exclusive' songs என்னிடம் எத்தனையோ இருக்கிறது. 'அந்த மாதிரி' TMS/PS collection ஆசைப்பட்டால் போன வாரம் போஸ்ட் பண்ண பாடலும் இந்த பாடலும் கண்டிப்பாக சேர்த்து கொள்ளலாம். :wink::wink:

    இந்த பாடலில் எந்த வரிகளை போடறது னு தெரியலை. இந்த பாடலை வைத்து 'ragging' கேள்வி கேட்கலாம் எந்த வரி கிக் ஆனது என்று. :wink::wink:

    YT - தொட்டுவிட தொட்டுவிட தொடரும் - தர்மம் தலை காக்கும்- Kannadasan/KVM
     
    jskls likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட வரிகள் முழுவதும் கவனித்தது இல்லை. பாடலை கேட்க ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து விடுவேன். பாடல் முடிந்தவுடனும் நிதானத்திற்கு வர நேரம் பிடிக்கும். பாடல் முடிந்தாலும் திரும்பவும் பாடலை ஆரம்பித்து விடுவேன். தொலைந்து போவேன். பாடலை கேட்கும்போது நிதானம் இன்றி தொலைந்து போவது ஒரு இனிய அனுபவம். :wink::wink:

    PBS/PS 'exclusive' collection க்கு இந்த ஒரு பாடல் மட்டுமே போதும் எனக்கு. வேற எந்த பாடல் சேர்த்தாலும் இந்த பாடலை கேட்ட பிறகு வேறு எந்த பாடலையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்க மாட்டேன். :wink::wink:

    YT - அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை - PBS/PS/Kannadasan/MSV-TKR
     

Share This Page