1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    இன்று ஒரு புதுபாடல் ஒன்று கேட் டேன். வரிகளும் இசையும் அருமை

    கண்ணுக்குளே - காலக்கூத்து

    உச்சி மோந்து நான் பாக்கையிலே
    நெஞ்சில் ஆசையும் ஊறுதடி
    பொத்தி நான் வச்ச ஆசையெல்லாம்
    முத்தம் நீ தந்தா தீருமடா
    பாசமா முறைக்கிறேயே கோவமா அணைக்கிரையே
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தங்களது சிறப்பு விருந்திற்கு மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி.

    இந்த வருடம் தாயகத்தில் இருந்த போது Sri Krishna Sweets, Grand Sweets, Adyar Ananda Bhavan Sweets தினமும் குறைந்தது ஒன்றாவது ஒரு நாள் விடாமல் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டேன். சின்ன வயதில் இருந்து இப்போ இருக்கும் ஏழு கழுதை வயது வரை எங்க வீட்டில் எனக்கு இனிப்பை வாரி வாரி கொடுப்பார்கள். நம்ம ஊரு இனிப்பை நான் சாப்பிடும்போதெல்லாம் என் முகம் மலர்ச்சியும், மகிழ்ச்சியும், புன்னகையும் பார்த்தால் இனிப்பே சாப்பிடாதவர்களுக்கும் இனிப்பு சாப்பிடும் ஆசை வந்து விடும்.

    அந்நிய தேசத்தில் நான் ரொம்பவே நம்ம ஊரு இனிப்பு மிஸ் பண்ணுவேன்!!

    இந்த பாடல் வரியிலும் இனிப்பா?

    இந்த இரண்டு பாடல்களுமே (இளைய)ராஜா (இளைய)ராஜா தான் என்று சொல்ல வைக்கும் பாடல்கள். வெறித்தனமாக நான் விரும்பி கேட்கும் இளையராஜா பாடல்கள் லிஸ்ட் ல இந்த இரண்டு பாடல்களுக்கும் இடம் உண்டு. எனக்கும் இந்த இரண்டு பாடல்களை கேட்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது.

    இந்த வாரம் நான் எந்த புது பாடலும் தேடி கேட்கவில்லை.

    எவ்ளோ தூரம் என்னால் வேகமாக ஓட முடியும் என்று எனக்கே சவால் விட்டு பார்க்க ஆசை. அதனால் இந்த வார இறுதியில் தொழில் சம்பந்தமாக இரண்டு அதிமுக்கியமான சந்திப்பு ஏற்படுத்தி கொண்டேன். அதற்காக புத்தகங்கள் படித்து என்னை தயார் படுத்தி கொண்டிருந்தேன். இன்று நீங்க போஸ்ட் பண்ண புது பாடல் கேட்டு இப்போ என்னுடைய கவனம் கொஞ்சம் சிதறிவிட்டது. செம பாடல் வரிகள்!! :wink::wink:

    நான் இன்னொரு பாடல் கேட்டால் என்னால் இப்போ தொடர்ந்து படிக்க இயலாது. அதனால் எனது பங்கிற்கு பாடல் போஸ்ட் பண்ணாமல் இப்போ விடை பெறுகிறேன்! அடுத்த வாரம் சந்திப்போம்!
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நிதானமாக இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசித்தேன். போஸ்ட் பண்ண இந்த பாடல் வரிகளில் ஒரு முக்கியமான வார்த்தையில் தவறு இருக்கிறது. பாடல் வரிகள் படித்து என்னடா ஆசை ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கேனு யோசிச்சேன் -> பாடல் வரிகள் பாடலாக கேட்டபோது வார்த்தை மா(ற்)ற பொருள் சரியாக வந்து விட்டது..:wink::wink:

    இங்கு போஸ்ட் பண்ண எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தாண்டியும் இன்னும் சில வரிகள் அந்த பாடலில் இருக்கிறது. பாடல் வரிகளும், பாடி இருக்கும் விதமும், இசையும் காந்தமாய் என்னை இழுத்தது. அடிக்கடி நான் கேட்கும் புது பாடல்களில் இந்த பாடலுக்கு முக்கிய இடம் உண்டு.

    மெட்ராஸ் படத்தில் கலையரசனின் ரொமான்டிக் சீன்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. கலையரசன் நடித்த இந்த புது பாடலின் காட்சி அமைப்பை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்...

    அதே படத்தில் இந்த பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தது:

    MD: Justin Prabhakaran

    YT - நெற்றி குங்குமம் - காலக்கூத்து - Singers: V.V. Prassanna & Chinmayi

    மழைக்கேங்கிய பூமியும் நானே
    முதல் மழையாய் நனைத்தவள் நீயே
    உன் அன்பில் கரைந்தே போனேன்


    YT - கண்ண கட்டி - காலக்கூத்து - Singers: Haricharan & Latha Krishna

    சொல்லால கொல்லாதே நான் மயங்குறேனே

    (ஆய கலைகள் அறுபத்தி நான்கில் 'கடலை' கலை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு தெரிய வில்லை. ஒரு வேளை 'மதன சாஸ்திரத்தில்' கடலை கலையும் அடக்கமாக இருக்குமோ? :wink::wink:)
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread க்கு நெருக்கமான ஒரு நண்பர் என்னுடன் WA ல பகிர்ந்த புது பாடல் இது. சூப்பர் சிங்கரில் இவருக்கு பிடித்த பாடகியின் குரலில் இந்த பாடல். நான் அந்த ப்ரோக்ராம் பார்த்ததில்லை. அதனால் எனக்கு இந்த பாடகியை பற்றி எதுவும் தெரியாது. இந்த பாடல் கேட்டபோது இவரது குரல் எனக்கு பிடித்தது.

    சீராக சென்று கொண்டிருந்த இந்த பாடலில் இடையிலும்/ இறுதியிலும் தகர டப்பா இசை. பாடல் பிடிக்கவே இல்லை. உடனே வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார்த்தேன் -> விரும்ப தகாத சில இடை செருகல்கள். இப்போ இந்த பாடலை சகித்து கொள்வது சுலபமாகி விட்டது. :smiley::smiley:

    YT - அபிமானியே - என் ஆளோட செருப்ப காணோம் - Singers: Priyanka & Ishaan Dev; MD:Ishaan Dev

    காலனி அணியவில்லை
    உன் காதலை நான் அணிந்தேன்
    நேரில் நான் உன்னை கண்டால் நெகிழ்வேன்
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாதம் நான் ஆராதிக்கும் ஒருவருக்கு பிறந்த நாள். பதினாறு வருடங்கள் கடந்தும் இவரை நான் ஆராதிக்கிறேன். இவருடன் போனில் பேசினாலும் நேரில் சந்தித்தாலும் அவ்ளோ சந்தோசமாக உணர்வேன்.

    முதல் முதலில் என்னை ஈர்த்தது இவரது தமிழ் தான். தமிழ் நாட்டில் வளராத இவர் இவரது வீட்டில் மட்டுமே தாய் மொழியான தமிழ் பேசுவார். வேறு எந்த மொழி கலப்படமும் இன்றி மிகவும் பொருத்தமான வார்த்தைகளுடன் தெள்ள தெளிவான உச்சரிப்புடன் தமிழில் சரளமாக பேசுவார்.

    மனதில் பட்டதை உண்மையாக பேசுவார். தப்பு என்றால் தப்பு தான். தயங்காமல் தவறை சுட்டி காட்டுவார்.

    இவரது குரல் வளம் கேட்பதற்கு இனிமையிலும் இனிமை. பேசினாலே பாடுவது போல இனிக்கும். புன்னகை வசீகரமானது.

    பரத கலையில் வெறி கொண்டவர். இவரது பரத நாட்டிய போட்டோ பார்த்தால் பார்த்து பார்த்து வடித்த சிலை போல தோற்றமளிக்கும்.

    நான் எனது வாழ்க்கையில் நேரில் சந்தித்தவர்களில் இவர் தான் பேரழகி.

    இவரது பிறந்த நாளுக்கு குறைந்தது மூன்று விதத்தில் வாழ்த்து சொல்வேன் - Greeting card (நான் தேடி பிடித்து வாங்கி தபால் அனுப்புவேன்), போன் கால், ஈமெயில்/இப்போ வாட்ஸாப்.

    இவருக்காக இந்த ஸ்பெஷல் பாடல்: TT - பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன்
     
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    நானும் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டேன். பதிவிட்ட வரிகளில் தவறு இருப்பது போல் தெறியவில்லை.
    அப்படி இருப்பின் எந்த வார்த்தை என்று சொல்லவும்.
     
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
  9. tnkesaven

    tnkesaven Gold IL'ite

    Messages:
    544
    Likes Received:
    160
    Trophy Points:
    108
    Gender:
    Male
    முத்துக்குமாரின் வரியில் லயித்தது காதல் கொண்டேன் என்ற படத்தில் வந்த "தேவதையை கண்டேன்" என்ற பாடலைக் கேட்ட போது தான்.இந்த பாடல் கதையை உள்வாங்கி எழுதப்பட்டதா,இல்லை இந்த பாடலைப் படித்த பின் இயக்குனர் இந்த கதை எழுதினாரா என்ற குழப்பம் எனக்கு உண்டு.படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும்.

    "ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழி தேடி வந்தது

    அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது"

    என்ற வரிகள் கதநாயகனின் நிலையை தெளிவாக உணர்த்தும்.காதலி கூடவே இருந்தாலும் வேறு ஒருவனின் காதலியானதை கண்ட ஒருவனது மன வலியை காட்சிகளை விட இந்த இரு வரிகள் இயல்பாய் உணர்த்தியது.

    "காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

    காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது"

    என்ற‌ வ‌ரிக‌ள் ப‌ட‌த்தின் காட்சிக‌ளை விட‌ வீரிய‌மான‌வை.

    நாய‌க‌ன் நாய‌கியிட‌ம் எதை எதிர்ப்பார்க்கிறான் என்ப‌தை ப‌ல காட்சிக‌ள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் சொன்ன‌தை விட‌ பின்வ‌ரும் வ‌ரிக‌ள் மிக‌ எளிதாய் இய‌ல்பாய் சொல்கின்ற‌ன‌.

    "விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி

    வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்

    ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்"

    அடுத்த‌ முறை இந்த‌ பாட‌லை கேட்கும் போது க‌தையை மெல்ல‌ அசைப்போடுங்க‌ள்.இதோ,இந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ள்

    தேவ‌தையை க‌ண்டேன்

    காத‌லில் விழுந்தேன்

    என் உயிருட‌ன் க‌லந்து விட்டாள்

    நெஞ்சுக்குள் நுழைந்தாள்

    மூச்சினில் க‌ல‌ந்தாள்

    என் முக‌வ‌ரி மாற்றி வைத்தாள்

    ஒரு வண்ணத்து பூச்சி என் வழி தேடி வந்தது

    அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது

    தீக்குள்ளே விர‌ல் வைத்தேன்

    த‌னித்தீவில் க‌டை வைத்தேன்

    ம‌ண‌ல் வீடு க‌ட்டி வைத்தேன்

    ச‌ர‌ண‌ம் ௧

    தோழியே ஒரு நேர‌த்தில்

    தோளிலே நீ சாய்கையில்

    பாவியாய் ம‌ன‌ம் பாழாய்ப்போகும்

    சோழியாய் என்னை சுழ‌ற்றினாய்

    சூழ்நிலை திசை மாற்றினாய்

    கான‌லாய் ஒரு காத‌ல் கொண்டேன்

    க‌ண்ணைக் குருடாக்கினாய்!

    காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

    காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது

    உன்னிட‌ம் கோப‌ம் இங்கு நான் கொண்டால்

    எங்கு போவ‌து என்ன‌ ஆவ‌து

    என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வ‌து.

    ச‌ர‌ண‌ம் ௨

    விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி
    வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்
    ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்

    அழியாமலே ஒரு ஞாபகம்

    அலைபாயுதே என்ன காரணம்?

    அருகாமையில் உன் வாசம் வீசினால்

    சுவாசம் சூடேறிடும்

    கல்லறை மேலே பூக்கும் பூக்கள்

    கூந்தலைப் போய்தான் சேராது!

    எத்தனை காதல் எத்தனை ஆசை

    தடுமாறுதே தடம் மாறுதே

    ஒரு ஊமைக்கனவு உடைந்து போகுதே!!
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    'தப்பு' செய்யறதுல 'தப்பு' இருந்தா 'தப்பு' தானே ? :wink:
    ஒரு எழுத்து மாறியதால் வார்த்தை மாறுது. வார்த்தை மாறுவதால் பொருள் மாறுகிறது. :wink:
    அந்த நான்கு எழுத்து வார்த்தை எந்த வார்த்தை என்பதை PM அனுப்புறேன்.
     

Share This Page