1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நலமா வேதா ?

    Agree 100%

    அட்டகாசமாக இருக்கும் . பொன்னியின் செல்வன் audio book is available on iTunes. முதல் பாகம் மட்டும் கேட்டேன். முழுதாக கேட்கவேண்டும்.
     
    cinderella06 likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் ஒரு பாடலை கேட்கும்போது அந்த பாடல் எந்த சூழலுக்கு பொருந்தும், பாடலை எழுதிய கவிஞரின் அப்போதைய எண்ண ஓட்டம் எப்படி இருந்து இருக்கும், பாடலில் உள்ள வார்த்தைகள்/வார்த்தை அமைப்பு, வரிகளில் உள்ள கற்பனை திறன், பாடகர்கள் பாடி இருக்கும் விதம் பற்றி எல்லாம் யோசித்து பார்ப்பேன். இப்படி எல்லாம் யோசிப்பது என்னை எனது கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும். "Mentally high" நிலையில் இருப்பேன்.

    அடுத்த படியாக, பாடல் படம் பிடித்து இருக்கும் விதத்தை நான் கூர்ந்து கவனிப்பேன்..பாடல் எழுதிய கவிஞரின் எண்ண ஓட்டமும், இயக்குனர் படம் பிடித்த விதமும் ஒத்து போகிறதா என்று ஆராய்ச்சி செய்வேன். ஒத்து போனால்/படம் பிடித்த விதமே கவிதையாக இருந்து பாடல் கவித்துவமான பாடல் வரிகளை மிஞ்சி விட்டால், எனது கற்பனை உலகம் 'mentally high' நிலைக்கு இழுத்து செல்லும்.

    இசையில் நான் ஞான சூனியம் என்பதால் எந்த இசை கருவி உபயோகித்து இருக்கிறார்கள், எந்த ராகம் என்றெல்லாம் பிரித்து பார்க்க தெரியாது. ஆனால் ஏதாவது 'இசை' எனது இதயம் என்னும் இசை கருவியை மீட்டினால் எனது கற்பனை துள்ளி குதித்து ஆடி 'mentally high' நிலைக்கு இழுத்து செல்லும்.

    இந்த பழைய பாடலை கேட்டு நான் 'அப்படிப்பட்ட' நிலையில் இருந்தேன்.

    அந்த காலத்தில் எப்படி கடலை போட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த பாடல் ஒரு சாம்பிள்.

    காதலன் காதலியிடம் சொல்கிறான்/கேட்கிறான் - ஒரு மலரை கையில் வைத்து மஹாராணி உன்னை பார்க்க நின்றேன், நீ வர வழியில் யாரவது உன்ன பார்த்தாங்களா? வளையல் கொஞ்சும் உன்னோடு கை மேல ஏதாவது பரிசு தந்தங்களா? மலர் கூந்தல் அலை பாய என்ன சொன்னாங்க? இதழ் மீது சுவை என்ன தந்தாங்க?

    காதலி அதற்கு பதில் சொல்கிறாள்:

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


    ஒவ்வொரு வரியிலும் என்ன ஒரு கற்பனை!! கவியரசர் கண்ணதாசன் என்று சும்மாவா சொன்னார்கள்?

    YT - நான் மலரோடு தனியாக - இரு வல்லவர்கள் - TMS/PS
     
    Thyagarajan and Sweeti83 like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,

    நீங்க எப்படி இருக்கீங்க?

    உங்களது நலம் விசாரிப்பிற்கு தத்துப்பித்துவமான எனது பதில்: நேற்றை மறந்து, நாளை பற்றி நினைக்காமல், இன்று மட்டுமே நிஜம் என்று வாழ பழகி வருகிறேன். அதனால் நலமாக இருக்கிறேன். :smile::smile:

    எனது வேலை சார்ந்த புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நாவல்/கதை படிக்கும் பழக்கம் கிடையாது. அதனால் இன்னும் பொன்னியின் செல்வன் நான் படிக்கவில்லை. ஆடியோ கேட்பதை விட படித்தால் இன்னும் இனிமையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
     
    jskls likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கு அந்தி பொழுது மிகவும் பிடித்த வேளை. அதனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது. இந்த பாடலில் SJ's குரல் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரின் குரல் கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. காதல் வயப்பட்ட பெண்ணுக்கு இந்த குரல் பொருந்தும். காதலில் திளைத்த காதலனுக்கு PBS குரல் ஏக பொருத்தம். பாடல் வரிகள் கேட்பதற்கு இதமாக இருந்தது.

    அந்திப்பொழுதில் காதலியை சந்திப்பதற்கு காதலன் சைக்கிள் ஓட்டி வருகிறான். எனக்கு பல கேள்விகள்: காதலி எப்படி வீட்டிற்கு தெரியாமல் காதலனை சந்திக்க வருகிறாள்? சந்திக்கும் நேரம்/இடம் எப்படி பறி மாறிக்கொள்வார்கள்? யார் தூது போய் இருப்பாங்க? அந்த காலத்து பெண் "கண்களை தாண்டி" தீண்டுவாரா? :wink::wink:

    MD: MSV-TKR
    Singers: PBS, SJ
    Lyricist: Kannadasan

    YT-மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் - பாசம்

    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
    மயங்கிய ஒளியினைப் போலே
    மன மயக்கத்தை தந்தவள் நீயே
     
    jskls and cinderella06 like this.
  5. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Kadhal nu vandhadu apram aduthu adhthu eppidi vena sandhipaanga. Naa partha varikum( movie la) renduperum collegela padipaanga, maadi keezha veetula kudiirupaanga,coincident ta sandhipaanga :wink:
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    எனக்கு அந்த காலத்து படங்கள் பார்த்த நினைவே இல்லை. அதெல்லாம் குடும்ப பாங்கான படங்கள் என்று நினைத்து பார்க்காமல் ஒதுக்கி விட்டேன்..:wink: :wink:நீங்க சொல்றதை பார்த்தால் அந்த காலத்து படங்களிலும் நிறைய 'விஷயம்' இருக்கும் போல இருக்கே..

    நீங்க சொல்வதும் சரி தான். காதலில் விழுந்த பிறகு காதலி/காதலனை சந்திக்க எப்படியோ திட்டமிட்டு அதற்கு தகுந்த படி வீட்டில் சொல்வதற்கு பொய் பித்தலாட்டம் சரளமான வந்துரும் னு நினைக்கிறேன்.

    எப்போதோ படித்தது எனது நினைவிற்கு வருகிறது :wink::wink::
    நாமளே கிணத்துல விழுந்தா அது காதல் திருமணம்
    பத்து பேர் பிடித்து கிணத்துல தள்ளி விட்டா பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம்
    ரெண்டுக்கும் பெரிசா வித்யாசம் ஒன்றும் இல்லை.
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் கேட்கிறேன். மனதை ஈர்க்கும் மெல்லிசை பாடல்..முதலில் கேட்டபோது எந்த அளவிற்கு பிடித்து இருந்ததோ அதே அளவிற்கு இப்போ கேட்டபோதும் பிடித்தது.

    TT - வாராயோ வாராயோ - ஆதவன் - Unnikrishnan/Chinmayi
     
    cinderella06 and jskls like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த சில வாரங்களாக நான் குறைந்த பட்சம் ஒரு முறையாவது தினமும் கேட்கும் பாடல் இது. ரொமான்டிக்கான நபர்கள், பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி, இந்த பாடல் வரிகளை வெகுவாக ரசித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி.

    TT - ஒத்த பார்வையில் - கடம்பன்

    தற்செயலாக இன்று நான் கேட்ட இந்த புது பாடலை எழுதியவரும் யுகபாரதி தான். இந்த இரண்டு பாடல் வரிகளுக்கும் இருக்கும் கவித்துவமான ஒற்றுமை என்னை கவர்ந்தது. செம ரொமான்டிக்!! பாடல் வரிகள் - அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்..:wink::wink:

    TT - எம்பூட்டு இருக்குது ஆசை - சரவணன் இருக்க பயமேன்
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மெசேஜ் படித்து மனம் கனத்து விட்டது..இப்படி பேர் தெரியாத எத்தனை துறவிகள் இருக்கிறார்களோ?

    Source: WhatsApp
    Credit: Friend

    புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

    புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

    மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
    புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.

    அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

    நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?

    புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

    புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

    புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
    புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.
    அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன்.
    சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
    எவ்வளவு போராடியிருப்பாள்.?
    புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

    எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
    எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

    எது கடினம்?
    யார் துறவி இப்போது!!
     
    Thyagarajan and Sweeti83 like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன மெசேஜ் கொஞ்சம் சீரியஸ். அதனால் கொஞ்சம் சிரிக்க இந்த மெசேஜ். :wink::smile:

    இந்த மெசேஜ் எனக்கு அனுப்பியது ஒரு ஆண் நண்பர். இவரை எட்டு வருடங்களாக எனக்கு தெரியும். இவருக்கு திருமணம் முடிந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. மெசேஜ் ல சொன்னது சொன்னபடி அப்படியே நடந்து கொள்பவர். இவர் ரொம்ப நல்லவர்!

    Source: WhatsApp
    Credit: Close friend

    இல்லற வாழ்வில்
    இன்னல் இன்றி
    இன்னிசை ஒலிக்க
    இன்றியமையா
    இசை ஸ்வரங்கள்
    ஏழு அல்ல
    மூன்றே மூன்றுதான்
    ...............
    ...............
    ...............
    ...............
    ...............
    ...............
    ...............

    *ச ரி மா*
     
    Thyagarajan and jskls like this.

Share This Page