1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Madrasa Nalla Madras

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by jayasala42, Aug 23, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,373
    Likes Received:
    10,580
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெரிய கூடம்,முற்றம்,திண்ணை,தாழ்வாரம் என்று கிராமத்தில் பழகிய எனக்கு மதராஸ் ஒரு புதிய உலகம்.130 ரூபாயில் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம்.25 ரூபாய்க்கு மேல் வாடகை தர முடியாது
    மரினா,ரிப்பன் கட்டிடம்,கலங்கரை விளக்கம் ,செத்த காலேஜ் ,உயிர் காலேஜ் ,சினிமா என்று சுற்றினாலும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைய வேண்டுமே.

    கை கொடுத்தது திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தனம்.எட்டு குடும்பங்கள் உள்ள ஒரு வீடு.ஒரே அறை.சின்ன சமையல் ரூம்.பொதுவான இரண்டு குளியலறை கழிப்பிடங்கள்.இரண்டு பேர் சர்க்கார் உத்யோகம்.இருவர் சமையல்காரர்கள்.ஒருவர் சாஸ்திரிகள்.மூன்று பேர் கம்பெனி வேலை.ஏறத் தாழ 40 பேர்.
    கச கச சத்தம்,குழநதைகளின் கூப்பாடு,சல்லாபங்கள் ,சண்டைகள்,சமரசங்கள் எல்லாமே அம்பலத்துக்கு வரும் நிதர்சனங்கள் ,போட்டி,பொறாமை எல்லாமே சேர்ந்த ஒண்டுக் குடித்தன அனுபவம். நல்லது,பொல்லாதது எல்லாவற்றுக்கும் எல்லோரும் கூடி விடுவார்கள் .
    அன்பு,பண்பு ,sharing ,பொறுமை யாவற்றையும் கற்றுக் கொடுத்தது இந்த மெட்ராஸ் பட்டினம் தான்.சரிவர தாழ்ப்பாள் போட முடியாத கழிவறையிலும் ,குளியலறையிலும் பட்ட டென்ஷன்!
    'Engaged என்று தெரிவதற்காக வெளியில் வைக்கப்பட்டுள்ள பக்கெட்டை எடுத்துக் கொண்டு போய் விடும் சிறு பையன்களின் கொட்டம்!
    கணவனுக்குத் தெரியாமல் கைக் குழந்தையைப் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மாட்னி ஷோ சினிமா பார்க்கும் பெண்கள்!
    ,இரண்டு ரூபாய் பொருளை
    இருபது ரூபாய் சொல்லும் அடாவடி வியாபாரிகள்,
    மூன்று ரூபாய் சாமானை இரண்டு அணாவுக்குப் பேரம் பேசும் மாமிகள்
    எல்லாம் மதராசில் தினம் கண்ட காட்சிகள்.
    வாடகை ----Rs 30
    மளிகை ----Rs 30
    பால் -----Rs 15
    காய் ------Rs 15
    பஸ் சார்ஜ்---Rs10
    Entertainment ---Rs 10
    R .D -------------Rs 10
    Emergency Rs 10
    ன்று திட்டமிட சொல்லிக் கொடுத்தது மதராச பட்டினம்.
    இருபது வருடமாகப் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியாத பல விஷயங்களை மூன்றே ஆண்டுகளில் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது மதராச பட்டினம்.
    ஒண்டுக் குடித்தனத்தில் இல்லாத விஷயங்கள் டிவி,கம்ப்யூட்டர் ,குளிர் சாதனப் பெட்டி,போன் மட்டுமல்ல,privacy யும் secrecy யும் தான்.இந்தப் புறாக் கூண்டில் உதித்த நன்மணிகள் பல நல்லாசிரியர்களாய்,பொறியியல் வல்லுனர்களாய்,அனைத்துத் துறைகளும் பிரகாசிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    இப்போது ஒண்டுக் குடித்தனம் இல்லை.அதன் மறு பெயர் அடுக்ககம்.Flats
    இதில் privacy உண்டு.secrecy உண்டு .எல்லா வசதிகளும் பூரணம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்றே தெரியாத வாழ்க்கை.
    இரண்டையும் பார்த்து ரசித்து,'change is the only unchangeable thing in the world'என்ற பேருண்மையை நமக்குப் புரிய வைத்த மதராசப் பட்டினத்துக்குக் கோடி வணக்கங்கள் .
    Jayasala 42
     
    vaidehi71, kaniths and periamma like this.
    Loading...

Share This Page