How to do Meditation or Penance as told by gnanis of all religions

Discussion in 'Queries on Religion & Spirituality' started by Littlerose, Feb 15, 2012.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்!

    (If we do mistake, God will poke our eyes, only within eyes, coz, he is there as light within the hole in the pupil, so he kills us by poking us there... the explanations in tamizh below..)

    சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்த குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. ஆம், அந்த அளவிற்க்கு இது பிரபலமான வாக்கியம்.

    இந்த வாக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்க்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்க்காக மட்டுமே உபயோகபடுத்தினார்களே தவிர அதற்க்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்க்காக மட்டும் இல்லை!



    இதில் எவ்வளவு பெரிய ஞான கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.



    எந்த வாக்கியத்தை வைத்து கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ அதே வாக்கியம் நாம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடிகிறதா?


    ஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணை குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் சொல்லும் பெற்றோர்கள் ஒருகாலும் இப்படி சாமி வந்து கண்ணை குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள்.


    இந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். ஆம், குழந்தைகள் புறத்தில் இருந்து சாமி கண்ணை குத்தி விடும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் சாமி புறத்தில் அதாவது வெளியில் இருந்து குத்துவதில்லை! உள்ளே இருந்து தான் குத்தி கொண்டிருக்கிறது!


    ஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான். அவன் நாம் ஏதாவது தப்பு செஞ்சால் நம் கண்ணை குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்த குத்த நமக்கு கிடைப்பதே துன்பம்.



    இதுவே நம்மை இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் நமது முன்னோர்கள் தப்பு செய்யாதே அப்படி தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.


    எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டால்? திருமூலர் அய்யா திருமந்திரத்தில் இந்த பாடலில் எவ்வளவு அப்பட்டமாக சொல்கிறார் என்று படித்தால் புரியும்!


    கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
    கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
    கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களவொழிந் தாரே

    பாடல் – 2067


    இந்த பாடலுக்கான ஞான விளக்கத்தை “மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இருந்து தருகிறோம்.


    விளக்கம்:
    உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்!



    எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே!



    அப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலயே அவனை காணாலாம்!



    கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்!


    தம்மை கண்காணிப்பவை கண்டவர் களவு செய்ய மாட்டார்!



    கங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறு செய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்.


    இனி தப்பு செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணை குத்தாமல் பார்த்து கொள்வோம்.


    ஆம், ஞான சற்குருவை நாடினால்
    பார்த்து பார்த்து இருந்து கொள்ளலாம்!!!


    குறிப்பு:
    தப்பு செஞ்சா சாமி ஏன் கண்ணை மட்டும் குத்துது வேறு எதையும் குத்த வில்லை என்று யோசிப்பதுதான் ஞான வழி!


    கண்ணில் மட்டும்தான் குத்துவார்!


    சாமி எங்கு அடைக்க வேண்டுமோ அங்குதான் அடைப்பார்.


    புத்திசாலிகள் வழி எங்கு மூடியிருக்கிறதோ அங்குதான் திறக்க முயற்ச்சி செய்வார்கள்.


    இதுதான் ஞான வழி. வள்ளலாரும், சித்தர்களும் காட்டிய சன்மார்க்க வழி.
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இறைவனனை அடையும் வழி:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா ! பரம் பொருள் ! இறைவன் ! எல்லாம் வல்லவரும் கடவுளே ! அவரின்றி ஓர் அணுவும் அசையாது ! அவர் பேரொளியாக விளங்குகிறார் !அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளூம் கூறியிருக்கின்றனர் !

    அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள் , ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா ? இருக்கிறார் ! நம் உயிராக ! ஜீவாத்மாவாக சிறு ஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே ! இதையும் இதுவரை இவ்வுலகில்தோன்றிய அனைத்தும் ஞானிகளும் கூறிருக்கின்றனர் !

    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !

    உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !அது இறையம்சல்லவா !
    நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ! ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !

    நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!

    கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் !

    இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் ! நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !

    ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !

    நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் ! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !

    நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!

    நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் ! சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் !

    எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே !

    சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !


    பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர் !

    பரிதவிக்கும் மாக்களை மரணமிள்ளது காக்க ! பரிபாஷைகளை கூறியது சிந்திக்க வைக்க ! தெளிவடைய செய்ய ! மக்களை தன்னிலை உணரச் செய்யவே ! சந்தேகமற உபதேசித்து ஞான உபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள் !

    உலகமெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியது

    கடவுள் ஒருவரே ! அவர் ஜோதி வடிவானவர் ! எங்கும் நிறைந்தவர் ! எல்லாம் வல்லவர் ! மனித உடலில் தலையில் ஜீவனாக, ஒளிர்ந்து ,இருகண்மணியிலும் துலங்குபவர் !

    கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள் ஒளியை அடைய வேண்டும் !

    தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் ! நம் கண்மணி ஒளி பெருகி, நம்முள் கடந்து தான் , நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் ! கடவுளை நினைத்து கண்மணி ஒளியை நினைத்து குரு உபதேசத்தால் உணர்ந்துகுருதீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும் !

    நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் ! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் ! இதுவே கங்காஸ்நானம் !

    அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும் ! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகிகண்மணிமுன் உள்ள திரை விலகும் ! உருகி கரையும் ! பின்னர் தானே ஜோதி தரிசனம் !

    ஒவொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே , வள்ளலார் வடுலூரில் சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி தங்க ஜோதியை காண வைத்துள்ளார் ! ஞானம் பெறநாடுவீர் குருவை ! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி , உணர்த்தி தீட்சை தருகிறாரோ அவரே ஞான சற்குரு ! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!

    ஞானம் என்றால் பரிபூரண அறிவு ! தெளிவு ! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பரிபூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்ந்து கொள்வது ஞானம் !

    பற்பல பிறப்பெடுத்து துன்பபடுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனை !

    பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த , மும்மல , 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை !

    நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி , நாம் நம் உள் ஒளியை பெருக்கி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை !

    எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தை தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார் !

    ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே !! ஒரு ஆன்மா, தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகபெரிய சேவை !தானத்தில் சிறந்தது ஞானதானமே !!

    மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினர் வள்ளலார் ! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி தீட்சை தருபவரே உண்மையான சற்குரு !

    “கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி ! ”

    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !

    கண் வழி கட உள்ளே கடவுளை காண் !
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஈசத்துவம்(Eesathuvam)

    திருமூலர் திருமந்திரத்தின் ஆரம்பத்தில் உலக பொது விசயங்களை நன்னெறிகளை ஞானம் கலந்து உறைக்கிறார். சரியை, கிரியை, யோகம் அனைத்தும் கூறி முடிவில் ஞானத்தை பூரணமாக உறைகின்றார். அனைத்து சித்தர்களும் சன்மார்க்கத்தையே போதிக்கின்றனர்.

    “ஈசன் அது இது என்பார் நினைப்பிலார்”


    எல்லாம் வல்ல ஈசன் ஈசத்துவம் பெற்றதால் – எங்கும் நிறைந்த தன்மை பெற்றதால் ஈசன் என்பார். அந்த ஈசன் இறைவன் அது இது என வெறும் வாயால் பிதற்றுவர் உண்மை அறியார். இதயத்தில் நினைக்காதவர்களுக்கு ஈசன் தென்பட மாட்டார்.

    “ஊனமர்ந்தோரை உணர்வது தானே”
    இறைவன் மனித தேகத்தில் “ஊன்” கண்ணில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என்பதை உணர வேண்டும். இம்மானிட பிறவி எடுத்ததன் பயன் இதுவே.

    “சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
    ஆதிக்கண் ஆவதறிகிலர் ஆதர்கள்
    நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
    பேதித் தவரைப் பிதற்று கின்றாரே”

    எல்லாம் வல்ல இறைவன் பேரொளி . அதன் ஒரு சிறு சோதியானது மூன்று நிலையாகி சூரிய சந்திர அக்னியாகி முச்சுடராகி விளங்குகிறது. ஐந்து பூதங்களும் இணைந்து ஒரு சேர நின்ற கண்களில் துலங்குகிறது.

    மூன்றும் ஐந்தும் எட்டு ‘அ’ என்றும் கண்ணாக நிற்கிறது. ஆதிக்கண் என்றது நாம். நம் தாயின் கருவில் உருவாகும்போது இறைவனால் அருளப்பட்ட ஜீவனைக் குறிப்பதாகும். இரு கண் மூலமாகவே ஆதிகன்னான ஜீவனை அடைய முடியும். பாவாத்மாக்கள் இந்த உண்மையை சொன்னாலும் புரிந்து கொள்ளார். இறைவன் நம் உடலில் இங்ஙனம் குடி கொண்டிருக்க இது புரியாமல் சிவன் விஷ்ணு பிரம்மா என பலவாறு தெய்வங்களை கூறி பிதற்றுவார்கள்.

    உடலினுள்ளே பார்க்காமல் உலகிலே தேடுவார்கள்.

    நமது கண் ஒளியை பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆன்ம ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று விடும். இதுவே ஞான தவம். இப்படி செய்துதான் நாம் தூய்மையாகிதன் இறைவனை அடைய முடியும்.

    நம் சிரசிலிருந்து ஒரு நாடி கீழே இறங்கி நமது தொண்டையில் உள்ள சிறிய நாக்கின் மேல் பகுதியில் அண்ணாக்கின் மேல் நின்று அங்கிருந்து இரு நரம்பாக பிறந்து இரு கண்களிலும் வந்து சேர்க்கிறது.

    நாம் நம் கண்மணி ஒளிமூலம் தவம் செய்யும் போது இருகண்ணும் உள்ளே ஒன்றுசேரும் இடமே உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல. இதுவே நமது ஆத்மஸ்தானம். உயிர் இருக்குமிடம்.

    “உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”

    நமது உயிர் – பிராணன் – ஜீவன் – ஆத்மா இருக்கும் இடம் இதுவே.

    இதற்க்கு வாசல் இரு கண்களே ஆகும் இதை அறிந்தால் தானே தவம் செய்ய முடியும். குருவடி தீட்ஷை பெற்று உணர்ந்து தவம் செய்து ஆத்மஜோதியை தரிசிக்கலாம்.

    wishes n regards,

    S. Sriumadevi Srinivasan ​
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Maya lies inside our eyes:

    Yes, "Summa Iru" means "Keep Still" .... well, we all know that mind is a wavering one n our duty in this human birth is to make it stand still n not wavering.... i.e. mind is in the form wave or air...

    But, where is mind or Maya?.... there lies the secret.... it's inside our eyes inside our pupil.... There is a hole inside the pupil, which is been blocked by our mind/maya/karmic effect..... if it's so lesser, it can be cleared so sooner n vice versa...

    That's the reason, Avaiyaar has sung as "Ennum Ezhuthum Kann ena thagum".... meaning letter "a" (same has no. 8) and letter "vu"(same has the no.2) is in the right eyes and the left eyes... meaning.... the fire within the right eye pupil is the Surya kalai, coded as "8" or tamizh letter "a".... similarly, the fire within the left eye pupil is the Chandra kalai, coded as "2" or tamizh letter "vu".....

    The speciality of this two letters in tamizh language is, it's used as both alphabets as well as numbers.

    That's the reason, Avaiyaar has sung as "Ennum Ezhuthum(a(8) and vu(2) ) kann ena thagum"
    Here, kann refers to the "Pupil"

    The Supreme within us, our true knowledge or light inside is blocked from us inside the pupil as per our previous karmas .... Inorder to clear it, we should try to open our eyes n shed tears with complete passion n surrender towards the one who is ruling us from inside...

    For that, first, inorder to get the conciousness there in pupil, we need the deekshai from a real guru, who can go across all ur karmic screens inside our eyes n give us the conciousness in the pupil, from then, we r able to practice the real meditation or penance as however we look it n take it in our life

    But, until u get such a real guru, if u practise this meditation, automatically, un mind will start to come down(ofcourse, first will run so fast then will subside, that's the real nature of mind, so never stop it, but dont go with it, just watch it's doing.... be the evidence, not the doer, that's what the msg. from Lord Krishna also)...

    So, which means, when ur karmic effects are lessen, automatically by some means, ur lock will be opened by a real guru.... even with their power of mind, they are able to remove our lock... or with eye contact directly as per the power of guru n the real karmic effect of us....

    That's the greatness n the real benefit of this meditation....

    I have come across 2 such gurus in this lifetime.... with one, i have been given such a real deekshai n with the other one's disciple, i've been cleared all my doubts related to this n made all set into it.... inspite of me have never met the other one guruji inperson till now... anyway, blessed by both... with God's greatest passion n grace...

    But the main thing is, u should come out of indulging urself from the 5 great sins(including non-veg eating habbit, that also come under killing)... which i've mentioned already....

    At one point, we are able to see our own eyes, first the white part, then the black part, n slowly the fire or light from within the pupil when we are increasing the thavam, before which automatically we'll hear a bud opening feel and sound in the brahmarandhram, the real unstruck sound, the "Nada"....

    That's the real start towards self-realization... from then, we will start to understand the real nature both within us n outside us are the same, outer is just the same reflection of our inner self... that's it...

    When, we concentrate on our eyes n pupil particularly, our eyeballs starts to round so fast, observing the needed air for it's circulation, that's the real Pranayama done automatically, that's the meaning of "Summa Iru".... no need to observe air n practice(vaasi), our eyes are capable of doing it, we are unaware of it, that's all.... since air is observed, obviously mind will be observed.... so, now got the point so clear brother... Hope this helps....

    Also, the saying "Adi uthavura mathri annan thambi kooda udhava maatanga" is also closely related to this technique only...

    Here, Adi - Thiruvadi, the light within our pupil

    Annan - Vinayagar (4 handed one, means vaasi practised from the midpoint to the thagarakasam)

    Thambi - Murugan(12 handed one, means vaasi practised from the midpoint n the navel)

    Here, the distance is the measure in tamizh "Virakadai" is 4 for first one n 12 for second one...

    but they've emphasised the importance of "Thiruvadi" is more important than practising this important vaasi practice also... hence u should be clear of the importance of this "Thiruvadi".. the fire within our pupil....

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்

    அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” – இந்த பழமொழி நாம் எல்லாரும் நிச்சயமாக கேள்வி பட்டிருப்போம்!



    சிறு வயதில் ஏதாவது பொருள் வேண்டுமானால் அடம் பிடித்து அழுதே வாங்கி விடுவோம். இதையேதான் சித்தர்களும் மற்றும் ஞானிகளும் இறைவனிடம் செய்து ஞானம் பெற்றார்கள்.


    இறைவன் திருவடியில் கவனம் வைத்து அழும் இந்த தவத்தை மேற்கொண்டே இறைவனை அடைந்தார்கள்



    அந்த பாடல்களையே பாடினார்கள். அவற்றில் சிலவற்றை Manikavasagar, Vallalar, Azukanir Sidar, TiruGanaSambandar and Jesus போன்ற ஞானிகளின் கூற்றை பதிந்திருக்கிறோம்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அழுதே சாதித்தார்கள் ஞானிகள்

    “யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”

    - திருவாசகம் (Manikavasagar)

    யானே பொய்
    – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?


    என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!


    [​IMG]


    என் அன்பும் பொய் – நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்!



    ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!


    இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி?


    நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நஸ்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்!


    மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கின்றனர்.


    அழுதால் உன்னை பெறலாமே” என்றார் மாணிக்கவாச்கர்.


    “ நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”


    [​IMG]
    என்றார் வள்ளலார் (Vallalar).


    கண்ணீரோடு விதைக்கிறவன் கம்பீரத்தோடு அறுப்பான்” என்றார் இயேசு (Jesus) பெருமான்!


    [​IMG]


    ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர்.


    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!


    இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்க்காக அழத்தான் சொன்னார்கள்!


    இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்! எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!! அந்த ஞான்குழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்!


    அழுது, ஒளிபெருகி, அமுது பருகி, ஒலி கேட்டு, ஒளி கண்டு பேரின்பம் பெறலாம்! நம்மை படைத்தவனை பார்க்கலாம்! அவணடி சேரலாம்! ஞானம் பெற, இறையருள் பெற எப்படி அழ வேண்டும் என்பதை தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


    ———————————————————————————————————————————
    ஏன் அழ வேண்டும் எதற்க்கு அழ வேண்டும் என்றால் முதலில் நமக்கு சித்தர்கள் இறைவன் திருவடி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Sithargal – Thiruvadi

    இறைவன் திருவடி – சித்தர்கள்
    சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும் தெரிந்ததே!


    இதையெல்லாம் தாண்டி இவர்களின் பாடல் வரிகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்த பாடல் வரிகளில் இருக்கும் ஒற்றுமையை அறியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது அந்த வார்த்தையை மட்டுமே தெரிந்திருந்து அது எதை குறிக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கும் இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும். இந்த பதிவில் பார்க்க போவதே எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களில் மிளிரும் மெய்யான மெய்பொருளான இறைவன் திருவடிதான்.


    [​IMG]

    ஆம், சித்தர்கள் என்றாலே அன்பு, இரக்கம், புலால் மறுத்தல் மற்றும் கொலை தவிர்த்தல் என்ற கொள்கை உடையவர்கள் மேலும் பல அற்புதங்களை செய்வார்கள் என்று தெரிந்திருக்கும் அளவிற்க்கு இந்த இறைவன் திருவடி பற்றி அதிகம் தெரியவில்லை. ஈடு இணையில்லாத இந்த திருவடி தவத்தை செய்த மற்றும் அதை நமக்கும் தந்த எல்லா சித்தர்களின் பாதத்தையும் பணிந்து பதிகிறோம்.


    இங்கு நாம் பார்க்க போவது இறைவன் திருவடி (அ) அடி (அ) தாள் (அ) பத்ம பாதம் (அ) நற்றாள் (அ) நிமலனடி என்பதைத்தான். ஆம், இந்த எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தையைதான் குறிக்கின்றன.



    இந்த இறைவன் திருவடி பற்றி பட்டவர்த்தனமாக எங்கும் வெளியில் சொல்வதில்லை. இங்கு நான் தெரிந்து கொண்டதை பதிகிறேன். அதாவது நான் தெரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை சொல்ல வாய்ப்பு தந்த என் குரு நாதர் சிவ செல்வராஜ்அய்யாவை வணங்கி, வள்ளல் பெருமானையும் வணங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வணங்கி பதிகிறேன்


    [​IMG]

    ஆம், மூச்சு பயிற்ச்சி, சூரிய நமஸ்காரம், யோகாசன பயிற்ச்சி, மனிதர்களுக்குள் இருக்கும் உறவு முறைகளை அதாவது இகலோக வாழ்க்கையை பிரச்சினை இல்லாமல் எப்படி நகர்த்துவது போன்று உபதேசங்களும் மற்றும் கழுத்துக்கு கிழே செய்யும் கர்ம பயிர்ச்சிகள் எல்லாம் ஒரு அளவிற்க்கு நம் உடம்பை சிறிது பண்படுத்துவத்ற்க்கு பயன்படுமே தவிர ஒரு காலும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது என்று நம்புகிறோம். சொல்வது மட்டும் அல்லாமல் சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடலகளை விளக்கங்க்ளோடு வைக்கிறோம்.


    வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு இங்கு போடப்படும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் மேலும் உங்களுக்கு வள்ளலாரின் மீது நம்பிக்கை இருந்தால் (அ) ஏதாவது ஒரு சித்தரின் மீதோ (அ) ஞானியின் மீதோ நம்பிக்கை இருந்தால் அவர்களை நினைத்து படித்தால் நிச்சயமாக இது உங்கள் கண்களை திறக்கும்.



    இங்கு நீங்கள் ஒரு விடயம் கவனிக்க வேண்டும். ஆம், இங்கு நான் வள்ளலாரை ஞான சற்குருவாக ஏற்றிருந்தாலும் வள்ளலாரை மட்டுமே நம்பி நான் உங்களை படிக்க சொல்ல வில்லை எந்த சித்தரின் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்களை நம்பி படிக்க சொல்கிறோமே எப்படி!!!!



    ஏன் எனில் எல்லா சித்தர்களும் மற்றும் ஞானிகளும் இந்த இறைவன் திருவடி (அ) மெய்பொருளை பற்றிதான் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் ஞானத்திற்க்கான பாதை. எல்லா ஞானிகளும் இந்த திருவடி (அ) மெய்பொருளை பற்றித்தான் சும்மா இருந்தார்கள். ஆம், சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள்! இதை விட்டு விட்டு வேறு எதை செய்தாலும் ஞான பாதையில் முன்னேற முடியாது! ஆம், சும்மா இருப்பது எப்படி என்று தெரிய வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த இறைவன் திருவடி பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்பொழுதுதான் சும்மா இருக்க (தவம் – Meditation) முடியும்.


    இறைவனை நோக்கி நாம் வைக்கும் அடியில் இந்த வார்த்தை (திருவடி – கண்) எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடல்களிலும், நாம் இறைவனை வழிபடும் இடங்களிலும் மேலும் நமது தமிழ் பழமொழியில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பற்றியே பார்க்க போகிறோம்.


    ஏனெனில் இங்கு Meditation என்றால் கண்மூடி செய்வது என்று பெரும்பாலும் பரப்பபட்டிருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல!!! சித்தர்கள் சொன்ன தவ முறையை தெரிந்து கொள்ள இந்த சித்தர்கள் சொன்ன திருவடி பற்றி நிச்சயம் புரிந்திருக்க வேண்டும்.


    திருவள்ளுவர் (Thiruvalluvar), திருமூலர் (Thirumoolar), மாணிக்கவாசகர் (Manikavasagar), திருஞானசம்பந்தர் (thirugnanasambandar), சிவவாக்கியர் (SivaVakiyar), தாயுமானவர் (Thayumanavar), அபிராமி பட்டர் (Abirami Pattar), பட்டினத்தார் (Pattinathar) போன்ற எல்லா ஞானிகளின் பாடல்களிலிருந்தும் மற்றும் வள்ளல் பெருமானின் பாடல்களிலிருந்தும் இறைவன் திருவடி கண் தான் என்பதை எடுத்து வைக்கிறோம். படித்து சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
    8———————————————————————————————————————–2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி திருவள்ளுவர்

    திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்
    வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே நமது முன்னோர்கள் இதை உலக பொதுமறை என கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.
    [​IMG]
    திருவள்ளுவர்


    மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் கடவுள் வாழ்த்து பகுதியில்.


    10 வது குறளில்
    “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்”



    இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.
    10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்


    “கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
    நற்றாள் தொழார் யெனின்”



    நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார்.இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.


    திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ஐ பார்ப்போம்

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்”


    “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல”


    “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது”


    “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது”


    “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை”


    இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை இந்த வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். ஆம், இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார். நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்க்காக.


    இந்த அடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக காட்டும் அதாவது பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார்.


    இப்படி கடவுள் வாழ்த்தில் உள்ள 10 க்கு 7 குறளில் பட்டவர்த்தனமாக அடி என்று தெளிவாக சொல்கிறார் திருவள்ளுவர். ஆம், நற்றாள், அடி, தாள், மாணடி, இலானடி, தாளை, தாள்(2) என்று குறிப்பிடுகிறார். இப்படி 7 விதமாக சொன்னாலும் இந்த 7 வார்த்தைகளும் நிச்சயமாக் ஒரே பொருளைத்தான் குறிக்கும். சரியா?


    ஆம், வார்த்தைகள் 7 ஆனால் அர்த்தம் 1


    ஆம், இறைவனை அடையும் வழிகளை 7 விதமான வார்த்தைகளால் சொல்லியிருந்தாலும் வழி 1 தான்.
    அதுதான் இறைவன் திருவடி (அ) மெய்பொருள் (அ) சும்மா இரு என்கிற ஞான வழி!


    இந்த தலைப்பில் இறைவன் திருவடி என்று எதை சொல்கிறார் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை ஆனால் இறைவன் திருவடி க்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர் என்று பதிந்திருக்கிறோம். இனி வரும் விளக்கங்களில் வள்ளுவர் திருவடி என்று கண்களைத்தான் சொல்கிறார் என்று சொல்லியிருக்குகிறோம். படித்து புரிந்து கொள்க!


    திருக்குறளில் (Thirukural) கடவுள் வாழ்த்து பகுதியில் 10வது குறளில் என்ன சொல்கிறார்.


    “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்” – 10


    பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட வேண்டுமானால் இறைவன் அடியை சேர வேண்டும் என்கிறார்.
    இப்பொழுது இந்த குறளை பார்ப்போம்


    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
    நிலையாமை காணப் படும். – 349



    பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.


    ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் மேலும் திருவள்ளுவரும் (Thiruvalluvar), திருமூலரும் (Thirumoolar), அவ்வையாரும் (Avvaiyar) மற்றும் திருவருட் பிரகாச வள்ளலாரும் (Ramalinga Swamigal) பற்றற்ற என்ற இடத்தில் மிக சரியாக ஒத்து போகிறார்கள் என்பதை வேறு பதிவுகளில் மிக விரைவில் பதிவோம் (Click Here to see – Soon We will give the link here). ஏன் எனில் அந்த பற்றற்ற இடத்திலே இறைவன் துலங்குகிறான்!


    அதுவே திருவடி அல்லது மெய்பொருள்


    கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்


    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்” – 214



    இந்த குறளும் மறைமுகமாக திருவடி பற்றிதான் சொல்கிறது. மேலும் இப்படி அறிந்து உணர்ந்து இருப்பவர்களே உயிர் வாழ்வார்கள் என்று தெளிவாக சொல்கிறார்.



    அதுமட்டுமில்லாமல் இறைவனை உணர உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் 700 கோடி வழிகள் பற்றி எல்லாம் இந்த குறளில் சொல்லவில்லை. இந்த குறளில் உள்ள வழி உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான ஒரே வழியான ஞான வழியை ப்ற்றி மட்டும்தான் சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த “ஒத்தது அறிவான்” என்ற குறளுக்கான விளக்கம் “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்ற குறளுடன் மிக தொடர்புடையது இதுவே ஞான இரகசியம்.



    விளக்கம்:
    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்” – 214



    ஒத்தது அறிந்தவன் உயிர் வாழ்வான் அறியாதவன் செத்து போவான்.
    ஒத்தது எது? நம் உடம்பில் ஒரு கண்ணைப்போல உள்ள மற்றொரு கண்!?
    ஒத்தது எது? உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று போல் உள்ள கண்கள்!
    ஏன் ஒன்று போல் உள்ளது? இறைவன் எல்லார் கண்மணி-ஊசிமுனை துவாரத்தின் உள்ளிலும் ஊசிமுனை அளவாக ஒரே அளவாக இருக்கிறான்! இறைவனுக்கு பாகுபாடே இல்லை! எல்லாரும் அவர் பிள்ளைகளே! எல்லாருக்கும் சமமான – ஒரே தன்மையில் தான் இறைவன் – பரமாத்மா – சீவனாக – ஒளியாக கண்களில் மிளிர்கிறான்!


    நமது இரு கண்களும் ஒப்பற்றவை! நம் உடம்பில் ஒரேமாதிரி உள்ள இரண்டு பொருள் கண்கள் மட்டும்தான். நமது உடம்பில் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போல் இருப்பது கண்கள்தான்! கண்-மணி தான்! நம் வாழ்வே கண்ணில்தான் இருக்கிறது! நமது கண்களில் – மணியில் – மத்தியில் – ஊசிமுனை துவார்த்தின் உள்தான் ஊசிமுனை அளவு ஒளி உள்ளது!


    உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதும் கண் மணியே!


    கண்தானம் யார் வேண்டுமானலும் எந்த பாகுபாடுமின்றி யாருக்கும் கொடுக்கலாமல்லவா?


    ஏன்?


    எல்லார் கண்ணும் ஒன்றாக இருப்பதால்தான்!? யாருக்கும் எந்த வித்தியாசமும் கண்ணில் இல்லை! ஆம், 700 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த கண்கள்தான்.


    இதுவே மாபெரும் இரகசியம்!


    திருக்குறளில் மேலும் சில குறள்களை கொடுக்க முடியும் எனினும் எல்லா ஞானிகளின் பாடல்களையும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அடுத்தடுத்த ஞானிகளின் திருவடி (அ) மெய்பொருள் பாடல்களை கொடுக்க போகிறோம்.
    8—————————————————-2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
    [​IMG]
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி திருமூலர்

    திருவடி பற்றி திருமூலர்

    திருவடி பற்றி திருமூலர் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக திருமந்திரத்தில் சொல்கிறார் என்றும் மேலும் எவ்வளவு அழகாக ஞானத்தையும் அதற்க்கான பாதையையும் சொல்கிறார் என்பதே இந்த பதிவு.
    மேலும் எங்கள் சபை அன்பர்கள் பலதடைவைகள் நேரிலோ அல்லது வலைத்தளங்களிலோ சிலருடன் ஆனிமீகம் பற்றி பேசும் போது அவர்கள் நீங்கள் வள்ளலார் சொன்ன சன்மார்கத்தை பின்பற்றுகிறீர்கள் நாங்கள் எங்கள் இடத்தில் சொல்லி தருகின்ற சன்மார்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதை எங்கள் அன்பர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள். இது மிகவும் தவறான கருத்து. ஆம், வள்ளல் பெருமான் எந்த சன்மார்கத்தை பின்பற்றி உச்ச நிலை அடைந்து அதை நமக்கும் சொன்னாரோ அதே சன்மார்கத்தைதான் திருமூலரும் மற்றும் எல்லா சித்தர்களும் சொன்னார்கள் என்பதையும் இந்த “திருவடி பற்றி திருமூலர்” என்ற பதிவில் சொல்கிறோம்.


    திருமந்திரத்தில் முதல் பாடலாக இங்கே வைக்க விரும்புவது 138 வது பாடல்தான்


    பாடல் – 138

    திருவடி யேசிவ மாவது தேரில்
    திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
    திருவடி யேசெல் கதியது செப்பில்
    திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.



    இறைவன் திருவடியே நமது கண்கள்!


    இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்


    விளக்கம்

    “திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
    திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
    திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
    திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”
    மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.


    எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி!



    இதுதான் மெய்பொருள்!


    இதைத்தான் இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறோம்.


    முன்னதாக திருவள்ளுவர் திருவடி பற்றி சொன்னதை பதிந்திருக்கிறோம். இனி திருமூலர் மட்டுமல்ல வள்ளலார், திருஞான சம்பந்தர், போகர் என்று எல்லா சித்தர்களின் திருவடி பணிந்து திருவடி பற்றிய பதிவுகளை ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். திருவள்ளுவர் மட்டுமா திருவடியை வெவ்வெறு விதமாக சொல்லியிருக்கிறார். திருமூலரும்தான்!


    இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில். இந்த இணையடியிலே எல்லாமே அடங்கிவிடும் என்ற அற்புதமான பாடல்.


    திருமந்திரத்தில் உள்ள முக்கியமான பாடல் இது. மந்திரம், மருந்து, தானம் மற்றும் தூய்மையான நெறி எது என்று உள்ளடக்கிய பாடல். ஆம், இறைவனை அடையும் பாதையில் மந்திரம், தந்திரம், தானம் மற்றும் தூய்நெறி எல்லாமே இந்த இணையடி யாகிய திருவடி தான் என்று சொல்லும் பாடல்.


    “மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
    தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
    சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
    எந்தை பிரான்தன் இணையடி தானே”



    திருவடியே கதி, திருவடியே சிவலோகம் மற்றும் திருவடியே சரணாகதி என்று சென்ற பாடலில் உள்ள பாடலை பார்த்தோம். மேலும் தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இதுதான் என்று சொல்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை இந்த திருவடியை பிடித்தால் மட்டும் போதும் அதை உணர்த்துவதற்க்கு தான் திரும்ப திரும்ப பதிவு.


    மேலும் சித்தர்கள் பாடல் என்றாலே புரிந்து கொள்ள மிக கடினமாக இருக்கும் என்ற மேலோட்டமான கருத்தை மறுக்கும் பாடல். இறைவனை அடையும் பாதையை எந்த வித கடினமும் இல்லாமல் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய அளவில் இருக்கும் பாடல்.


    இந்த பாடலில் திருவடி தான் மருந்து என்று கூட சொல்லவில்லை மாமருந்து என்று சொல்கிறார். இந்த மருந்தே நம்முடைய பிறவி பிணியை தீர்க்கும் மருந்து. நீங்கள திருவருட்பாவை படித்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயமாக வள்ளலாரும், திருமூலரும் மிகவும் ஒத்து போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். (பாடலில்)


    திருவருட்பா மூன்றாம் திருமுறை – நல்ல மருந்து என்ற தலைப்பில் உள்ள ஒரிரு வரிகள்.


    “சஞ்சலம் தீர்க்கும் மருந்து – எங்கும்
    தானேதா னாகித் தழைக்கும் மருந்து
    அஞ்சலென் றாளும் மருந்து – சச்சி
    தானந்த மாக அமர்ந்த மருந்து!”



    விளக்கம்:

    அடியார்களின் மன சஞ்சலங்களை தீர்க்கும் மருந்து!
    உலகெங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஜோதி மருந்து!
    அஞ்சாதே என அடியார்களுக்கு அபயம் நல்கும் மருந்து!

    சத்து – சித்து ஆனந்தமாக விளங்கும் மருந்து! சத்தான ஒளியை தியானிக்க சித்துக்கள் கூடிவரும் பின் பேரானந்த நிலை கூடும்!


    திருமந்திர பாடலில் திருமூலர் திருவடி தான் மாமருந்து என்று சொல்கிறார். திருவருட்பாவில் எங்கள் திருவருட் பிரகாச வள்ளலார் அந்த திருவடியான மருந்து என்ன என்ன செய்யும் எப்படி எல்லாம் இருக்கும் என்று சொல்கிறார்!


    திருமூலர் மந்திரம், மருந்து, தானம், சுந்தரம் மற்றும் தூய்மையான நெறி இது அனைத்துமே திருவடி தான் என்று சொல்கிறார். வள்ளலார் இந்த திருவடியான மருந்தே உலகத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் சச்சிதானந்த மருந்து என்று சொல்கிறார்.


    இன்னும் என்ன சொல்ல வேண்டும் இந்த திருவடி பற்றி?


    ஆனாலும் அடுத்த பாடலும் திருவடிதான்!


    திருவடி பற்றி அதாவது மெய்பொருள் பற்றி இங்கு நாங்கள் பதிந்து கொண்டிருப்பது இறைவனை காட்ட கூடிய பாதையில் எவ்வளவு முக்கியமானது மேலும் இதை தெரிந்து கொள்வதற்க்கே மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். மேலும் இது எவ்வளவு முக்கியம் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் வெட்ட வெளிச்சமாக சொல்கிறார்.


    “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று சொல்லியவர் அவ்வையார் தான். அதே வாக்கியத்தை மாறாமல் திருமூலரமும் சொல்கிறார் என்பதை இந்த பாடலில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதனினும் திருமூலர் ஒரு படி மேலே சென்று அரிதான இந்த மானிட பிறவியை பெற்றும் கூட இந்த திருவடியை (அ) மெய்பொருளை தெரிந்து கொள்ளாதவர்களை சாடுகிறார்.


    அந்த பாடல் – திருமந்திரம் 2090

    “பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
    பெறுதற் கரிய பிரானடி பேணார்
    பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
    பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”



    விளக்கம் – “மந்திர மணி மாலை” என்னும் புத்தகத்தில் இருந்து


    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! பெறுதற்கரிய மானிட பிறவியை பெற்றும், பல்லாயிரம் ஆண்டு தவம் செய்யினும் கிட்டாத இறைவனடியை, தேடியும் காணொணாத கடவுளை இவ்வளவு எளிதாக அடைய வழிகாட்டியும் உணராதவர்களை ஈனப்பிறவிகள் மிருகங்கள் பிராணிகள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் திருமூலர். மனித உடல் கொண்ட மிருகங்கள் செய்த பாவம், உண்மை உணராது போய் விடுகின்றனர்.



    இறைவனடி சேரும், பேரின்பம் பெறும் வாய்ப்பை இழந்தவராவர்? நல்ல மனிதன் – உத்தமன் – ஞானி – சித்தன் என்று நல்ல பெயர் எடுக்காமல் மனித மிருகமாகவே மரிக்கின்றனர்! ஏ, மனிதா நீ ஏன் பிறந்தாய்? வாழவா? சாகவா? வாழ்வின் பொருள் அறிய வேண்டாமா? வினை தீர்க்க பாடுபட்டாயானால் வேண்டிய வரம் தந்து ஆட்கொள்வான் இறைவன்!


    அடுத்தடுத்த பதிவுகளில் திருமூலரும் சத்திய ஞான சபையின் ஜோதி தரிசனத்தை சொல்கிறார் என்பதும் மேலும் இந்த ஞான தவத்தை திருமூலர் எந்த அளவு வெட்ட வெளிச்சமாக சொல்கிறார் என்பதையும் சேர்த்து.


    இந்த இணைய தளம் முழுக்க இருக்கும் விடயம் இதுதான். திருவடி (அ) தாள் பற்றி திருமூலர் திருமந்திரத்தில் எவ்வளவு முக்கியமாக சொல்கிறார் எனும் பாடல். இந்த ஒரே தவம் போதும் எல்லாருக்கும் இறைவனை காட்டும் என்று சொல்லும் பாடல். இந்த ஞானதவத்திற்க்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்லும் அற்புதமான பாடல்.


    மேலும் இந்த பாடலுக்கான எங்கள் குரு நாதரின் விளக்கம்


    திருமந்திர பாடல் – 2113


    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.



    விளக்கம்:


    மனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு! மெய்தாள் ஒன்றுண்டு! மெய்ந்நெறி ஒன்றுண்டு!


    இறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்!


    மெய்த்தவம் - உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய்! இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே! அதனுள் ஒளியே! இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்!


    மெய்த்தாள் - மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு! அதுவே நம் உயிர் நிலை! அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது!


    மெய்நெறி - மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம்! உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம்! அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன்! ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று? வாருங்கள் காண விரும்பினால்? வேண்டுங்கள் பெற விரும்பினால்! கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக! வருக!


    8——————————————————-2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    திருவடி பற்றி வள்ளலார்

    திருவடி பற்றி திருவருட்பாவில் வள்ளலார் / ராமலிங்க அடிகளார்

    நான் வெளியிடுகிற அனைத்து ஞான இரகசியங்களும் வள்ளல் பெருமான் அருளால்தான் என்னால வெளியிட முடிகிறது என்ற எங்கள் குரு நாதர் சிவா செல்வராஜ் அய்யாவின் வார்த்தையை நினைவு படுத்தி எங்கள் ஞானகுரு வள்ளல் பெருமான் திருவடி பற்றி திருவருட்பாவில் பாடியிருப்பதை கொடுக்கிறோம்.


    [​IMG]


    வள்ளல் பெருமானை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்லும் பலருக்கு வள்ளலார் திருவருட்பா முழுக்க என்ன பாடி அருளியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை அப்படி தெரியாமல் இருப்பவர்களுக்கு இங்கு எங்கள் குரு நாதரின் திருவருட்பா விளக்க உரையிலிருந்து எடுத்து கொடுக்க போகும் பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.


    திருவடி தவம் என்றால் என்ன என்று தெரியாதவர்களை நாங்கள் நேரிலும் இணையத்திலும் பலரை சந்திக்கிறோம். ஐயோ, இவர்களுக்கு எல்லாம் இதுகூட தெரியவில்லையே என்று எள்ளி நகையாடுவதற்க்காக அல்ல இந்த பதிவு. எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.



    ஆம், எங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எந்த வித பாகுபாடு இல்லை மேலும் இவர்கள் பக்குவமானவர்கள், பக்குவமில்லாதவர்கள் என்று எந்த வித பாகுபாடும் இல்லாமல் சொல்கிறோம் வள்ளல் பெருமானையோ அல்லது சித்தர்களை நம்பி எங்கள் தளத்திற்கு வருபவர்கள் எல்லாரையும் படித்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.


    திருவருட்பா மூன்றாம் திருமுறை யில், திருவடி புகழ்ச்சி என்ற பகுதியில் இருக்கும் பாடல்.


    இறைவனின் திருவடியின் பெருமையை – மகிமையை தன்மையை சொல்வதாகும் இத்திருவடி புகழ்ச்சி! முதலில் இறைவனின் திருவடியை பணிய வேண்டும்! சரணடைய வேண்டும்! பின்னரே திருமுடி தரிசனம்!



    இறைவன் திருவடி எது? என தெரிய வேண்டுமா? இறைவனடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்!பணிவு – கனிவு – அன்பு – பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய திருவடி எப்படி பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!


    தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
    தரும்இணை மலர்ப் பூம்பதம்
    சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
    சாட்சியாகிய பூம்பதம்
    தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
    சமரசமுறும் பூம்பதம்
    தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
    தமக்குள் உயிராம் பூம்பதம்



    தவாத சாந்தப்பதம் – சாந்தமே – அமைதியே உருவான இரு கண்மணியின் உள்ளே திருவடி! துவாத சாந்தப்பதம் – நம் சிர நடுவில் உச்சியில் விளங்கும் ஒளிநிலை! அனுபவத்தில் அறியும் ஸ்தானம்! தரும்இணை மலர்ப் பூம்பதம் – இருகண்மணி உள் நடு , சிர நடு உச்சி ஆக இருபதத்திற்க்கும்நம்மை அழைத்து செல்லும் இணையான இரண்டு தாமரை மலர் போன்ற பதமான இரு கண்மணிகள்.
    சகலர் - மும்மலம் உள்ள சராசரி மனிதர்! பிரளயாகலர் - இரு மலம்உள்ளவர்! விஞ்ஞானகலர் - ஒரு மலம் உள்ளவர்


    சாதனை செய்து வர வர மும்மலங்கள் ஒவ்வொன்றாக போய்விடும். மலமற்ற நிலையே இறைநிலை! இதய சாட்சியாக பூம்பதம் – இதய சாட்சியாக நம் மனசாட்சியாக இறைவனே உள்ளிருந்து நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். அப்படி சாட்சியாக இறைவன் இருப்பது – பூப்போன்ற திருவடி – கண்மலர்.


    தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில் – குறைவில்லாத நிலையில் அணு நிலையம், தானே உருவையும் துலங்குகின்றது. பூம்பதங்களில்! சமரசமுறும் பூம்பதம் – எல்லா அணுவிற்க்கும் அனுவாகவவும், எல்லாவற்றிலும் தானேயாயும் சமமாக இலங்கும் பூம்பதம். மலர்ப்பாதம் – திருவடி – கண்மணி!


    தருபரம் சூக்குமம் தூலம் – தற்பரம் + சூக்குமம் + தூலம் மூவகை நிலை நம் உடல்! இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்பதம். இம்மூன்று நிலையிலும் உயிராகிய பதம் நம் திருவடி! பரமான – மேலான தெய்வம் பராபரமாக நம் நடுவில் கண்மணி நடுவில் சிர நடுவில் உள்ளில் ஒளியாக துலங்குகிறது!
    இந்த ஒரு தவம் போதும் எல்லாருக்கும் வழி காட்டும் என சொல்லும் வள்ளல் பெருமானின் அற்புதமான பாடல்!


    எத்தனையோ முறை எப்படி எப்படியோ நேரிலும், இணையத்திலும் பலமுறை சொல்லிவிட்டோம் இந்த ஒரு தவம் (திருவடி – பதம்) போதும் எல்லாருக்கும் அருளும் எனவும் மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தவம் எல்லாம் தேவை என்ற அவசியமே கிடையாது. இந்த ஒரே தவம் போதும் என்றும்.
    மற்றபடி பல இடங்களில் சொல்லி தருவதை போல இது முதல் பயிற்ச்சி இதை முடித்தால்தான் அடுத்த பயிற்ச்சி அதற்கு அடுத்தது இதை விட உயர் நிலை பயிற்ச்சி என்று எல்லாம் இந்த ஞான தவத்தில் (திருவடி தவத்தில்) கிடையாது! இதை வள்ளல் பெருமான் பாடலிலேயே புரிந்து கொள்ள முடியும்! யார் யார் எல்லாம் இந்த தவத்தை செய்தார்கள் என்றும் மேலும் செய்யும் இந்த ஒரே திருவடி தவத்திற்கு ஏற்ப நல்ல நிலையை அடைய முடியும் என்றும் சொல்லும் பாடல்.


    வான இந்திரர் ஆதி எண்திசை காவலர்கள்
    மாதவத் திறனாம் பதம்
    மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந்தரர் வான
    வாசிகள் வழுத்தும் பதம்
    மணியுரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர்
    சித்தர் மாமுனிவர் ஏத்தும் பதம்
    மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யஷர்கள்
    மதித்து வரம் ஏற்கும் பதம்



    வான இந்திரராதி எண்திசை காவலர்கள் – அஷ்டதிக் பாலர்கள்! இந்திரன் முதலான அஷ்டதிக் பாலர்கள்! மாதவத் திறனாம் பதம் – யாராயிருந்தாலும் மாதவம் செய்து அதற்க்கு தகுந்த படி அருள் பெறலாம்! திருவடி அருளும்! யாருக்கும் அருளும் திருவடி.



    மதியிரவி ஆதிசுரர் அசுரர் – சந்திரன் சூரியன் முதலான தேவர்களும்! அசுரர்களும்! அந்தரர்வான வாசிகள் – அந்தரத்திலே இருப்பவர்கள் அதாவது விண்ணிலும் மண்ணிலும் அல்லாது ஆவியாக அந்தரத்திலே இருப்பவர்! அந்தரர்! வானவாசிகள் விண்ணுலகத்திளிருப்பவர்கள் இப்படி எல்லாரும் வணங்கும் திருவடி ! பரமாத்மா! இறைவன்!


    மணியுரகர், கருடர், கந்தர்வர், விஞ்சையர், சித்தர், மாமுனிவர் என எல்லாரும் போற்றும் பரம்பொருள் இறைவன்! மாநிருதர், பைசாசர், கிம்புருடர், யஷர்கள் என்பாரும் பரமாத்மாவை எண்ணிதவம் செய்து அருள்பெற உதவும் திருவடி!


    இந்த பதம் என்ற திருவடியை கண்தான் என்று எப்படி சொல்கிறோம் என சிலருக்கு சந்தேகம் இருந்தால் இந்த பாடலில் தீர்ந்து விடும்!


    ராமலிங்க அடிகளாருக்கு வள்ளலார் என்ற பெயர் வந்ததன் முழு முதல் காரணம் ஞானத்தை வெட்ட வெளிச்சமாக சொன்னதால்தான் என்றால் அது மிகையாகாது! ஆம், பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உள்ளதை உள்ளபடி சொன்னதால்தான் திரு அருட் பிரகாச வள்ளலார் என்று பெயர் பெற்றார்!


    ஆம், எல்லாரும் இறைவன் அருள் பெற வேண்டி இறைவன் திருவடி (அ) பதம் (அ) தாள் இதுதான் என வெட்ட வெளிச்சமாக திருவருட்பா முழுவதும் அள்ளி தெளித்தார் எங்கள் அருள் வள்ளல் ஆன வெள்ளாடை துறவி.


    இங்கு நாங்கள் எங்கள் ஞான குருவான வள்ளல் பெருமானை உயர்த்தி துதிபாடவில்லை



    உண்மையைத்தான் சொல்கிறோம் சொல்வதோடு மட்டும் அல்லாமல் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் பகர்ந்ததை எங்கள் குருவின் ஆசியோடு இங்கு பதிகிறோம்.


    இதுவரை பார்த்த 2 பாடல்களிலும் திருவடி பற்றியும் அந்த திருவடியை யார் யார் எல்லாம் பற்றினார்கள் என்பதை பார்த்தோம். இப்பொழுது பார்க்க போகும் பாடலில் திருவடி (பதம்) இதுதான் என சொல்லும் பாடல்.


    என் அறிவெனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய்
    இருந்த செங்கமலப் பதம்
    என் அன்பெனும் பதம் என் அன்பிற்க்கு வித்தாய்
    இசைந்த கோகனகப் பதம்
    என் தவமெனும் பதம் என் மெய்த்தவப் பயனாய்
    இயைந்த செஞ் சலசப்பதம்
    என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு
    இனிய நல்விருந்தாம் பதம்

    என் அறிவெனும் பதம் – நமக்கு அறிவு, தூய அறிவு துலங்குவது திருவடியிலிருந்த்துதான்!


    என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம் – அறிவு புற அறிவு, ஆன்ம அறிவு என இரு வகைப்படும்! கண்மணியின் முன், வினைதொகுதியிலிருந்து பெறும் அறிவு துன்பத்தை தரும் புற அறிவு! உள்ளே ஆன்மாவிலிருந்து துலங்கும் அறிவு ஆன்ம அறிவாகும். அங்கனம் புற அறிவுக்கு உள் உள்ள அறிவினுக்கு அறிவாய் விளங்குவது திருவடியே! இறைவனே! உள்ளிருந்து அறிவிப்பவன் பரம்பொருளே! அந்த அழகிய திருவடி சிவந்த தாமரை போன்றது!


    என் அன்பெனும் பதம் – கண்மணி முன்னிருந்து வரும் அன்பு.


    என் அன்பிற்க்கு வித்தாய் இசைந்த கோ கனகப் பதம் - கண்ணிலிருந்து வரும் அன்பு உள் இருக்கும் ஒளி தங்கமயமான தங்க ஜோதியிலிருந்து வரும் கருணையின் வெளிப்பாடே! நாம் காட்டும் அன்பிற்கு வித்தாய் ஆதாரமாய் இருப்பது. கண்மணி உள்ளிருக்கும் – இரு உதயத்தினுள் பொங்கி பிரவாகமாக விளங்கும் தங்க ஜோதியின் இரக்கமே, கருணையே வடிவான திருவடியேயாகும்!


    என் தவமெனும் பதம் - நாம் தவம் செய்ய வேண்டிய திருவடி!

    என் மெய்த்தவப் பயனாய் இயைந்த செஞ் சலசப்பதம் – என்னுடைய மெயில் உடலில் கண்மணியில் ஒளியாக இருக்கும் திருவடியை எண்ணி தவம் செய்ததன் பயனாய் என்னுள் உணரப் பெற்ற திருவடி! அது சிவந்த ஒளி! ஆடும் திருவடி! மேய்த்தவம் செய்வாரே அறிவர் திருவடியை!


    என்[​IMG]இரு கண்மணியானபதம் – நமது இரு கண்மணிகளாக உள்ளதே திருவடி! இறைவன்! பரம்பொருள்! [​IMG] என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – எனது இரு கண்மணிகளின் உள் ஒளியாக துலங்கி உள்சென்று அமுதம் வழங்கும், எனக்கு விருந்தளிப்பதும் இந்த திருவடியே!


    இதற்க்கு மேல் கொடுக்கலாம் என்றால் நிறைய பாடல்களை கொடுக்க முடியும் ஆனால் தற்பொழுது இது போதும் என்று கருதுகிறோம்! வள்ளல் பெருமான் திருவருட்பா முழுக்க முழுக்க பாடியிருப்பது இந்த பதம் என்னும் திருவடி தவத்தை பற்றித்தான். படித்து புரிந்து கொள்க.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
    8—————————————————————2​
    இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
    [​IMG]
     

Share This Page