1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Gst- சரக்கு மற்றும் சேவை வரி

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 6, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,370
    Likes Received:
    10,574
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சைகைப்புயல் வெடிவேலு அவசரமாய் ஆரிய பவனுக்குள் வந்து அமர்கிறார்...
    .
    வெடிவேலு : (சர்வரைப் பார்த்து…) “ஏய் தம்பி...! ‘சரக்கு’ இருக்கா..? என்ன சைட் டிஷ் இருக்கு..?”
    .
    சர்வர் : “யோவ்... இது டாஸ்மாக் இல்ல.. “ஆரிய பவன்” சைவ ஹோட்டல். இங்க சரக்கு இல்ல..”
    .
    வெடிவேலு : அப்ப சரக்கு மாஸ்டரும் இல்லயா....? சரி... சாப்ட என்ன இருக்கு
    .
    சர்வர் : இட்லி.. தோசை.. பூரி, டீ, காபி...
    .
    வெடிவேலு : லெமன் சேவை இருக்கா
    .
    சர்வர் : சொன்னேன்ல.. இட்லி.. தோசை.. பூரி, டீ, காபி... மட்டும்தான் இருக்கு
    .
    வெடிவேலு : சரி. ரெண்டு இட்லி, கொஞ்சம் ஜாஸ்தியா சட்னி.. அப்புறம் அந்த ரெண்டு இட்லியையும் அரை பக்கெட் சாம்பார்ல மொதக்கவிட்டு கொண்டு வா...
    .
    சர்வர் : (இட்லி, சட்னி, சாம்பாரை வைக்கிறார்..)
    .
    வெடிவேலு : (இட்லியை தொட்டுப்பார்த்து..) “ஏய்.. என்ன மேன் இட்லி சூடாவே இல்ல...?”
    .
    சர்வர் : ஆங்...! நீ குடுக்கற 20 ரூவாக்கு இட்லி ஆவியோட வருமாக்கும்... கடை பேரு “ஆரிய” பவன். இங்க எல்லாமே ஆறித்தான் இருக்கும்…!
    .
    வெடிவேலு : (சாப்பிட்டவுடன்..) பில் எங்க மேன்...? உங்கப்பனா குடுப்பான்?
    .
    (சர்வர் இட்லி ரூ. 20 + GST ரூ. 4 மொத்தம் ரூ. 24-க்கான பில்லை கொடுக்கிறார்)
    .
    வெடிவேலு : (பில்லைப் பார்த்து ஜெர்க்காகி… சர்வரிடம்..) ஏய்…! இது என்ன மேன்..? GST ரு. 4/-? இது நான் சாப்டவேயில்லயே..?
    .
    சர்வர் : GST-ன்னா Goods & Services Tax. இது நீ சாப்ட இட்லிக்கு கவர்மெண்ட் சாப்டுறது.
    .
    வெடிவேலு : ஏய்..! நான் பச்ச தமிழன்…! தமிழ்ல சொல்லு மேன்…!
    .
    சர்வர் : ஆங்...! அப்படியா..? GST-ன்னா சரக்கு மற்றும் சேவை வரி
    .
    வெடிவேலு : (மறுபடியும் ஜெர்க்காகி....) வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்...? வந்தவுடனே சரக்கு இருக்கான்னு? கேட்டேன். இல்லேன்னே. அப்புறம் (லெமன்) சேவை இருக்கான்னு? கேட்டேன். அதுவும் இல்லேன்னு சொன்னே. “சரக்கு”ம் இல்ல, “சேவை”யும் இல்ல அப்புறம் என்ன நொன்னைக்கி “சரக்கு மற்றும் சேவை” வரி வாங்கற...?
    .
    ங்கொய்யால... யார ஏமாத்தப் பாக்குற..? (விருட்டென்று வெளியேறுகிறார்..)
    .
    சர்வர்... அப்புடியே ஷாக்காகி நிற்கிறார்....

    jayasala42
     
    Loading...

  2. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
  3. sindmani

    sindmani Platinum IL'ite

    Messages:
    1,560
    Likes Received:
    1,697
    Trophy Points:
    285
    Gender:
    Female
    :roflmao:Nice vadivel style
     

Share This Page