1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Cycle --life's Ambition

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 8, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,373
    Likes Received:
    10,580
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிறுவயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி பிரேமையுடன் வளர்ந்தேன். கோயம்புத்தூரில் அப்பா ஒரு முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர் டூர் போயிருக்கும்போது நாள் முழுவதும் அதன் மேல் ஏறி வாயாலேயே ஓட்டி சிங்காநல்லூர், அரவங்காடு எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்த பின், அதனுடன் என் தம்பியின் நடைவண்டி, ஸ்டூல் போன்றவற்றை இணைத்து ரயில் பண்ணி ஓட்டினேன். அதுவும் அலுத்துப்போய் கொஞ்சம் பெரிய மேஜையையே இணைத்து ஓட்டிப்பார்த்தேன். அதற்கான ஆற்றல் பற்றாமல் லோடு தாங்காமல் ஒரே இடத்தில் முன் சக்கரம் வழுக்கி வழுக்கி ஒரு நாள் அந்த சைக்கிள் என் இம்சை தாங்காமல் உடைந்துபோனது.
    ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பின்போது ஆளுக்குக் காலணா செலுத்தி இரண்டணா கொடுத்து வாடகை சைக்கிள் எடுத்து எட்டுப் பேர் கற்றுக்கொண்டதை எப்போதோ கட்டுரையாக எழுதியிருக்கிறேன். கற்றுக்கொண்டதை விட, மற்றவர்களே ஓட்ட பின் ஸீட்டைப் பற்றிக்கொண்டு 'நேரப்பார்றா நேரப்பார்றா' என்று சொல்லிக்கொண்டே நாக்கு வெளியே வர ஓடினதுதான் அதிகம்.
    முதன் முதல் சைக்கிளில் 'பாலன்ஸ்' கிடைத்தது முதல் முத்தத்துக்கு ஈடானது என்பதில் ஆண் பெண் இரு பாலாரிடமும் அபிப்ராய பேதம் - ஸாரி, கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அதற்காக எத்தனை தயிர்க்காரிகள் மேலும் மோதலாம். எத்தனை முழங்கால் சிராய்ப்புகளையும் எச்சில் வைத்து ஊதலாம்.
    எஸ்.எஸ்.எல்.சி. படிக்கையில் வி.எஸ்.வி.யிடம் கணக்குப் பாடம் டியூஷன் போகவேண்டியிருந்தது. அவர் அம்மா மண்டபத்தின் அருகில் இருந்தார். தினம் டியூஷன் போவதற்கு எனக்கு கஷ்டமாக இருந்தது. சைக்கிள் வாங்கிக்கொள்ளலாமா என்று யோசித்தேன். எம்.என்.வரதன் தன் பழைய சைக்கிளை எனக்கு விற்பதாக சொன்னான். "ராலே மாடல்... இங்க்லாண்டுல ஷெஃபீல்டுலருந்து எங்க மாமா வரவழைச்சது"
    "என்ன விலை?"
    "ஓட்டிப் பாரேன் முதல்ல..."
    சைக்கிள் நல்ல கண்டிஷனில் இருந்தது. கதவுக்கு எண்ணெய் போட்டது போல சென்றது. பச்சை பெயிண்ட் அடித்து, மணி அடித்தால் தேவகானம் கேட்டது. சித்திரை உத்தர வீதிகளை ஒரு வெள்ளோட்டம் பார்த்துவிட்டு ஸ்டைலாக இறங்கினேன்.
    "என்ன விலை சொல்லு"
    "நீ என் ஃப்ரெண்டுங்கிறதுக்காக அம்பது ரூபாய். எனக்கு எண்பதுக்கு ஆஃபர் இருக்கு" என்ற எம்.என்.வி., "புதன்கிழமை வரைக்கும் வெயிட் பண்றேன்" என்று அந்த பச்சை தேவதையின் ஸீட்டைத் தட்டிவிட்டு அவள் மேல் ஆரோகணித்து அடுத்த கணம் காணாமல் போனான்.
    பாட்டியிடம் கேட்டதில், "உங்கப்பா என்னைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை வர்றான். அப்ப நீயே கேட்டுரு."
    "வாங்கித் தருவாளா பாட்டி?"
    "தராம என்ன? மென்னு முழுங்காம கரெக்டா சொல்லிடு - 'டியூஷன் போறது கஷ்டமா இருக்குப்பா... ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தா நன்னா படிக்கறேன். தவறாம போவேன்'னு
    ... படிக்கறதுக்குத்தானே கேக்கற... ஊர் சுத்த இல்லையே... தருவான். வந்த உடனே கேக்காதே. சாப்டுட்டு எட்டு எடமும் குளுந்திருக்கறப்ப கேளு."
    நான் பல விதங்களில் அந்தக் கணத்துக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன். நடுவே ப்ரில்லியன்டாக ஒரு ஐடியா. ராமன்தான் சொன்னான். தவறாமல் டியூஷன் சென்றால் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதையும் அப்பாவுக்கு எடுத்துரைக்கச் சொன்னான்... "எந்த அப்பாவும் இதுக்கு மாட்டேன்னு சொல்லமாட்டா."
    அப்பா வந்தார். காப்பி சாப்பிட்டார். பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி அவ்வப்போது கண்ணைக் காட்டினாள் - 'இப்ப கேக்காதே' என்று. ராத்திரி அப்பாவுக்கு வெந்தியக் குழம்பும் கீரையும் பண்ணியிருந்தாள். அப்பா ரசித்து சாப்பிட்டுவிட்டு வெற்றிலையும் அசோகா பாக்கும் வாங்கிவரச் சொன்னார். அதைப் போட்டுக்கொண்டு வாசலில் முழு நிலவில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.
    அதுதான் சரியான கணம் என்று தீர்மானித்தாள் பாட்டி. "துரைசாமி, ரங்கராஜன் என்னமோ கேக்கணும்ங்கறான்."
    "என்னடா?"
    "ஒரு சைக்கிள் வேணும்பா... டியூஷன் போறதுக்கு."
    "புதுசா?"
    "செகண்ட் ஹாண்டப்பா"
    "என்ன வெலை?"
    "அம்பது ரூபாதாம்பா"
    "முடியாது. டியூஷனுக்கு நடந்து போ. இல்லை, கீழச் சித்திரை வீதிலயே யார்கிட்டயாவது டியூஷன் வெச்சுக்கோ."
    "இல்லையப்பா... வந்து..."
    "வந்தும் இல்லை... போயும் இல்லை. உள்ளே போய்ப் படி."
    அந்தக் கணத்தில் என் கனவுலகம் கலைந்து போனது. இந்த மனுசனைப் போல ஒரு கிராதகன் இருப்பானா... இவன்லாம் ஒரு அப்பாவா என்று மனசுக்குள் கேட்டுக்கொண்டு உள்ளே போனேன்.
    அப்பா ஊருக்குப் புறப்படும் வரை அவருடன் பேசவே இல்லை. அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
    அதன் பின்னர் படித்து, பாஸ் பண்ணி, வேலை கிடைத்து, அலாகாபாத் சென்று ஏரோப்ளேன் கற்றுக்கொண்டு, பின்னர் டெல்லியில் ஸ்கூட்டர் கற்றுக்கொண்டு, பெங்களூர் வந்து அங்கு முதல் கார் வாங்கி, கார் மாற்றி, எழுத்தாளனான அனுபவத்தால் டிராக்டர், ரோடு இன்ஜின், லாரி, ரயில் இஞ்ஜினில்கூட ஒருமுறை என்று எத்தனையோ வாகனங்கள்... எத்தனையோ பயணங்கள்... ஆனால் அந்தப் பச்சை ராலே சைக்கிள் மட்டும் ஒரு நிறைவேறாத இச்சையாகவே தேங்கியிருந்தது.
    அப்பா இறந்துபோவதற்கு சில மாதங்களுக்கு முன் தன் பழைய நாட்களை ஒரு நண்பனுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டுவந்தார். அப்போது அதைக் குறிப்பிட்டார். "நீ எஸ்.எஸ்.எல்.சி. படிக்கறப்ப ஒரு சைக்கிள் வாங்கித்தான்னு கேட்டியே, ஞாபகம் இருக்கா?"
    "இருக்குப்பா."
    "வாங்கித் தரலைன்னு கோவிச்சுண்டு புறப்படறவரைக்கும் என்கூடப் பேசாம இருந்த..."
    "ஏம்பா வாங்கித் தரலை?"
    "எங்கிட்ட அப்ப அம்பது ரூபா இல்லைடா" என்றார்.
    courtesy-- Sujatha

    Jayasala 42
     
    tljsk and vaidehi71 like this.
    Loading...

  2. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Last line is very touching....

    Sujatha the great. :worship2:
     

Share This Page