1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

August And August Presence Of Freedom

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 19, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,370
    Likes Received:
    10,574
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Freedom and Imprisonment are two sides of the same coin.What is freedom to one person is slavery for the other.In reality all opposites-profit/loss,success/failure,joy/sorrow invariably coincide.
    Nature/God has created everything for being recreated or transformed by by human beings in a batch of opposites.Here is a poem for illustration.Do enjoy.

    Jayasala 42



    விடுதலை- ஒரு உரத்த சிந்தனை

    வீசிவரும் காற்றதனில் ஓசையின்றி ஓடிவர ஆசையே
    ஆழ்கடலில் அலையதனில் தோணியிலே பாடிவர ஆசையே
    புள்ளினங்கள் போல தினம் வானகத்தில் பறந்துவர ஆசையே
    கள்ளமில்லா பிள்ளைகள் போல் மகிழ்வுடனே ஆடிவர ஆசையே

    உள்ளமதில் எல்லையில்லா ஆசைகள் ஆயின்
    உண்மையிலோ உள்ளதுவே சிறை பலவே

    வெள்ளமென பெருகிவரும் ஆறுதனின் விடுதலை
    பள்ளமான ஏரியிலும் அணைகளிலும் அது சிறை
    மின்னுகின்ற பொன்னதற்கு மண்ணின்று விடுதலை
    கன்னியரின் ஆசையினால் காதினிலே அது சிறை

    நிலத்தினின்று தோண்டும்போது கரியதற்கு விடுதலை
    நின்று நின்று செல்லும் புகைஊர்தியிலே அது சிறை
    நெல்லுமணி கதிர்களுக்கு அறுவடையில் விடுதலை
    வில்லுவண்டி ஏறி களம் செல்லுகையில் அது சிறை

    மலருகின்ற காலையிலே மலர்களுக்கு விடுதலை
    அலைஅலையாய் துவளுகின்ற கூந்தலிலே அது சிறை
    கதிரவனின் கதிர்களுக்கு காலையிலே விடுதலை
    கடலதனில் முனையதிலே மாலையிலே அது சிறை

    எண்ணுகின்ற கவியவனின் எண்ணமதன் விடுதலை
    எண்ணிலா ரசிகர்களின் எண்ணமதில் அது சிறை

    ஆழ்கடல் வாழ் முத்தினுக்கு பூமியிலே விடுதலை
    ஆரமாக தொடுப்பதனால் மார்பினிலே அது சிறை
    வாழ்வதிலே தலைவிடவே சிறை பலவே
    தாரமது இருப்பதனால் விடுதலையும் பலவுண்டு

    கட்டிவைத்த பருவமது கடிமணத்தில் விடுதலை
    கன்னியிடம் காளையவன் ஆண்மையது சிறை
    பத்துமாதம் காத்தபின்பு முத்து ஒன்று விடுதலை
    சத்து இலா வாழ்கையிலே வந்த பாசம் அது சிறை

    பள்ளிசிறை வீட்டுசிறை ஆக சிறை மிக பலவே
    பள்ளியறை செல்லும் காலம் வந்ததுமே அது சிறை
    கூடுவிட்டு போகும்போது உயிரதர்க்கு விடுதலை
    கூடுவிட்டு போனபின்பு உய்ய்ர் எங்கே சிறை ?
     
    jskls, vaidehi71 and rgsrinivasan like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,
    Very nice write up.
    Thanks for sharing,
    Vaidehi
     

Share This Page