A dinner that opened our eyes

Discussion in 'Jokes' started by jayasala42, May 15, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ளவர்களே, கடந்த இருவது ஆண்டுகளாக நானும் பார்வையற்ற சிறுமிகளுடன் பணியாற்றி கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வணக்கம், வெங்கி




    உடலில்தான் உள்ளத்தில் அல்ல!
    _____-=-=-=-=-=-(<>)_(<>)=-=-=-___


    மாற்றுத்திறனாளிகளின் சிறப்புக் கூட்டம் ஒன்றில் பல்வேறு அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
    ‘அப்பாடா, ஒரு வழியாக வீடியோ ஷோ முடிந்தது. பார்வத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள் படும் தொல்லைகளும் சிரமங்களும் அதிகம்தான். கண்டிப்பாக நாம் அவர்களுக்கு உதவத் தான் வேண்டும்’
    ஆனால், ஒரு மாலை நேரத்தை வீணாக்கும் அளவுக்கு அதையே பார்த்துப் பேசிக்கொண்டிருப்பது தேவையா என்று தோன்றியது.
    அந்த வெள்ளிக்கிழமை மாலையை இலவச விருந்துடன் கொஞ்ச தர்ம கரியமும் செய்து கழிக்கலாம் என்று நினைத்துத் தான் நான் வந்து சேர்ந்தேன். வீடியோ, சொற்பொழிவு, எல்லாம் முடிந்தன. அடுத்தது உணவுதான். அதற்குப் பின்னர் கழன்றுகொண்டுவிடலாம், என்று ஆறுதல் அடைந்தேன்.
    நாங்கள் 40 பேர் காத்திருந்தோம். எங்களை நோக்கி வந்த மூன்று பேரில் தலைவர் போல் தோன்றிய பெண்மணி கை கூப்பி, “எல்லோருக்கும் நல் வரவு. எங்களுடன் வாருங்கள். டைனிங் ஹாலுக்கு போகலாம்” என்றார்.
    பின் தொடர்ந்தொம். அவர்கள் பார்வையற்றவர்கள் என்று கிசுகிசுத்தார் நண்பர்.
    என்ன ஆச்சரியம்! சிறிதும் தடுமாறாமல் அவர்கள் முன் செல்ல திருப்பங்களில் தயங்கியபடி நாங்கள் உணவுக் கூடத்தை அடைந்தோம்.
    பார்வையற்றவர்கள் வழிகாட்ட, பார்வைத்திறன் குன்றாதவர்களாகிய நாங்கள் உடன் சென்றோம். என்ன ஒரு முரண்பாடு!
    முதன் முதலாக என் மனத்தில் ஓர் உறுத்தல். சற்று நேரத்திற்கு முந்தைய என் மன உணர்ச்சியைப் பற்றிய ஒரு நெருடல், வெட்கம். மனதை என்னமோ செய்தது.
    உள்ளே சென்றதும் கதவு தாழிடப்பட்டது. கும்மிருட்டு! அறையின் ஜன்னல் திரைகள் கூட இழுத்து மூடப்பட்டு வெளிச்சத்திற்கு தடுபுக் காவல் சட்டம் போடப்பட்டிருந்தது. மூவரும் உண்ண அமர்ந்தோம். தலைமைப் பெண்மணியின் குரல் அந்த நிசப்தமான இருளில் ஒலித்தது.
    “உங்கள் மேசையில் 3- மணியில் ஸ்பூனுடன் கூடிய உணவுத் தட்டு, ஒன்பது மணியில் ஒரு முள் கரண்டி, 12- மணியில் இன்னொரு தேக்கரண்டி, 6-மணியில் காலி டம்ளர் மத்தியில் மற்றொரு 6- மணியில் மடித்து வைக்கப்பட்ட கை துடைக்கும் பேப்பருடன் கூடிய தட்டு”.
    இது என்ன அறிவிப்பு? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறதல்லவா?
    ஒரு கடிகாரத்தின் எண்கள் உள்ள நிலையை வைத்து , பொருள்களை அமைத்து அவற்றின் இடத்தை உணர்வது கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் வேலைகச்ளை எளிதாக்கிக் கொள்ளப் பின்பற்றும் முறை.
    இரண்டாவது அறிவிப்பு: இரண்டு நீர்ப்பாண்டங்கள் உங்களுக்கு சுழற்சி முறையில் வந்து சேரும். நேரான கூஜாவில் நீரும், வளைந்ததில் ஆரஞ்சுப் பழரசமும் இருக்கும்.
    மூன்றாவது அறிவிப்பு: பாத்திரம் உங்களிடம் வரும்போது உங்கள் டம்ளர்களை நீங்கள் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
    டம்ளரில் உங்கள் சுட்டு விரலை வைத்துக்கொண்டால் நீரோ, பழச்சாறோ உங்கள் விரலில் படும்போது நிரம்பிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
    அவர் “எல்லாம் புரிந்ததா?” என்று கேட்ட போது உம் கொட்டிய நாங்கள், இருட்டில் பக்கத்திலிருந்தவர் கையைப் பிடித்தும், மெல்லப் பேசியும் சந்தேகம் கேட்டுக்கொண்டோம்.
    அடுத்த ஒன்றரை மணி நேரம், எங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. அது ஒரு கற்றல்; பயிற்சி; கண்டுபிடிப்பு; வேடிக்கை; விநோதம் எல்லாம் கலந்த ஒரு புது விருந்து.
    ஆம்! எதையுமே பார்க்க முடியாத அந்தக் காரிருளில் நாங்கள் அருமையான பதார்த்தங்களைச் சுவைத்தோம். அவை என்னவென்று அறியாமலே!
    விருந்தின் வரவேற்பு பானம், பசியூட்டும் பதார்த்தம், ஆரம்பத் தின்பண்டங்கள், முக்கிய உணவு, ஐஸ்கிரீம் என்ற முழு உணவு முறையாக மூன்று பார்வையற்றவர்களால் பரிமாறப்பட்டது.
    நாங்கள் பதிவு செய்யும் போது தந்த தகவல்படி சற்றூம் பிசகாது சைவ, அசைவ உணவுகள் அவரவர்களுக்குப் பரிமாறப்பட்டது. உச்சக் கட்ட வியப்பு. ஓர் உணவுக்கும் அடுத்தற்கும் இடையே எந்த விதக் காத்திருப்பும் இன்றி உணவு பரிமாறப்பட்டது
    உணவுகள் ஒன்றன் பின் ஒன்றாகட்ய்ஹ் தடையற்று வரும்போது அந்த மாற்றுத்திறனாளிகளின் திறன் என்னைக் கவர்ந்தது. அல்ல, அல்ல. என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. கண்களில் நீர் பெருகியது. கர்ச்சிப்பை எடுக்கக்கூடத் தோன்றாமல் புறங்கையால் துடைத்துக்கொண்டேன்.

    அந்த இருட்டில் என் கண்கள் உண்மையான பார்வையைப் பெற்றன!
    ”எல்லோரும் உணவு அருந்தி முடிந்தாயிற்றா?” என்ற கேள்விக்கு உற்சாகமாக அதை தொண்டை அடைக்கச்க் குரல் கொடுத்தேன்.


    விளக்குகள் ஒளிர்ந்தன. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எல்லோர் கண்களிலும் வழியும் கண்ணீரை எங்களின் மனத்தைப் புனிதப்படுத்தி வெளி வரும் தீர்த்தமாக நினைத்தோம்.
    கனத்த இதயம், விரிந்த மனம் இவற்றுடன் அறையை விட்டு வெளியே வந்தோம். யாரும் யாருடனும் பேசவில்லை. உணர்ச்சிகள் பேசின.
    ஒளியும் வண்ணமும் கொஞ்சம் இந்த அழகிய உலகைக் காணக் கண் பெற்றுள்ள நாம் எத்தனை பாக்கியசாலிகள்!
    மாற்றுத்திரனாளிகள் என நாம் அழைத்தாலும் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமானது.
    குறிப்பாக, பார்யற்றவர்களின் இருட்டு உலகைச் சில மணி நேரம் அனுபவிப்பதே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. ஆயுள் முழுவதும் கருப்பு ஒன்றையே கண்டுவரும் அவர்களின் வாழ்க்கை எத்தனை துயரமயமானது.
    அற்ப விஷயங்களுக்காக மனதிற்குள்ளேயோ, வெளிப்படையாகவோ அழுது , அரற்றி கிடைத்த அழகிய வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் நாம் எப்பேற்பட்ட முட்டாள்கள்!
    இன்று முதலாவது, “உற்சாகத்துடன் இருங்கள்” என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதை ஏற்போம்.
    கிடைத்த நல்லனவற்றைப் போற்றுவோம். நமக்குக் கிடைக்காததை அடைய முயற்சிப்போம். ஆனால் அதற்காக வருந்த மாட்டோம்.
    எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் அருளால் மனிதராகப் பிறந்து, பழுதில்லா அங்கங்கள் வாய்க்கப்பெற்ற நாம் நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதைக் கடமையாக மட்டுமல்ல, உரிமையாக எடுத்துக்கொண்டு செய்வோம்.
    இதுவே குறையொன்றுமில்லாமல் நம்மைப் படைத்தவனுக்கு நாம் கூறும் சரியான நன்றியுரையாகும்.
    -=-=-=-=-=-=-
    நன்றி ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயத்தில் எழுதிய திருமதி மோகனா சூரிய நாராயணன் அவர்களுக்கு,

    Jayasala 42
     
    Loading...

Share This Page