1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வீரன்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jul 7, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வானம் பன்னீர் தெளிக்க
    அருகிருந்த மரங்கள் சாமரம் வீச
    வாசலில் வரைந்த கோலம்
    காற்றோடு காணாமல் போக
    கன்னி அவள் மீண்டும்
    புள்ளி வைத்து கோலம் போட
    தளரா முயற்சி வெல்லும்
    என குரல் கேட்டு தலை நிமிர
    கண்டாள் ஒரு கள்வனை
    எதிர் வீட்டு சாளரத்தில்
    என் முயற்சி வெல்லும்
    உன் முயற்சி வெல்லுமா
    இருட்டில் நின்று பேசும் நீ
    வாய்ச்சொல்லில் என்றும் வீரனே
    பதில் அளித்து சென்றாள் பாவை அவள்


    எங்க ஊரில் ஆனி /ஆடி மாதங்களில் அடிக்கும் காற்றில் கோலம் போடுவது மிக கஷ்டம் .அதன் விளைவே இந்த கற்பனை
     
    Last edited: Jul 7, 2018
    Karthiga, jskls, rgsrinivasan and 3 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா,
    ஆடிக்காற்றில் அம்மி பறக்கும் என்பார்கள், இங்கே என்னவென்றால் கவிதை பிறக்கின்றதே?! :) எதிர் வீட்டுக் கள்ளவீரனுக்குத் தக்க பதிலுரைத்தாள் வீரமங்கை. புள்ளி வைத்துப் போடும் கோலமானாலும், அள்ளித் தெளித்துப் போட முடியுமா? அதற்கென்று மெனக்கெட்டு முயன்றால் தானே அழகிய கோலம் விரியும்.அதுபோலத்தானே வாழ்க்கையென்னும் கோலமும் ? தளரா முயற்சியும், போராடும் குணமும் இவற்றோடு நேர்மையும் பணிவும் தான் வாழ்க்கைக் கோலம் மிளிர உதவும் புள்ளிகள் என்று தோன்றுகின்றது. அந்தப் புள்ளிகள் சரிவர அமையாது போனால், அலங்கோலமாகிவிடும் அபாயமும் உண்டு.
    "காலமிது காலமிது" என்று கவியரசர் பாடினார். கோலமிது கோலமிது என்று நீங்கள் எங்களைப் பாட வைக்கிறீர்கள். உங்கள் கற்பனையில் விரிந்தக் கவிதைக்கோலம் அழகு.
     
    periamma likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தலைப்பின் அங்கதமும், வரிகளின் தெளிவும் இரசிக்க வைத்தது பெரியம்மா.
    நல்ல முயற்சி. -rgs
     
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS
    மிக்க நன்றி பவித்ரா.கோலம் போடும் போது ஒரு சிறிய கற்பனை .
    சிக்கு கோலம் போடும் கன்னி சட்டென்று சிக்கி விடுவாளா ?தமிழ் கன்னியின் தனித்திறமை அல்லவா அது.கழுத்து வலி காரணமே தாமதமான பதிலுக்கு காரணம்.வாழ்க வளமுடன்
     
    PavithraS likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @rgsrinivasan Rgs மிக்க நன்றி .தங்கள் தூய தமிழுக்கு ஈடு எதுவும் இல்லை
     

Share This Page