1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விவசாயம்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Oct 30, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வான் உயர வரப்பு உயரும்
    வரப்பு உயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயர கோல் உயரும்
    கோல் உயர குடி உயரும்

    நம் தமிழ் கவிஞர் அவ்வையார் எழுதியது மேலே உள்ள கவிதை .இது விவசாயம் ஒரு நாட்டின் ஜீவாதாரம் என்பதை வலியுறுத்துகிறது .ஒரு நாட்டின் உயிர்நாடி விவசாயம் .அந்த விவசாயம் அழிந்து போனதால் தான் இன்று நாட்டில் வன்முறைகள் கொலை கொள்ளை என்று தீயவை பெருகி விட்டன .இன்றைய தலைமுறையினர் வயல்கள் பார்த்ததில்லை .காற்றில் ஆடும் பயிர்கள் பார்த்ததில்லை .வயலில் நிறைந்த நீரில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நாரைகளை பார்த்ததில்லை .விளைந்த நெற்கதிர்களை கொத்தி தின்ன வரும் பறவை கூட்டங்களை பார்த்ததில்லை . இவை அனைத்தையும் நேரில் கண்டு ரசித்திருக்கிறேன் .அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

    சிறு சிறு சதுர பரப்பு நிலங்களே வயல்கள் .அவற்றை சுற்றி நான்கு பக்கங்களிலும் உள்ள புல்பாதையே வரப்பு .இது ஒவ்வொரும் நிலத்துக்கும் எல்கை என்று கூட சொல்லலாம் இதே போல் இன்னொரு சதுர பரப்பு நிலம் அடுத்தவருக்கு உரியதாகும் .அந்த நிலத்தை சுற்றிலும் வரப்பு இருக்கும் .இந்த இரு வரப்புகளுக்கிடையே சிறிய நீரோடை செல்லும் .ஒரு அடி அகலமே இருக்கும் .இந்த நீரில் கால் நனைத்து நடப்பது மிக சுகமாக இருக்கும் .சில சமயங்களில் சிறு சிறு மீன்களும் ஓடையில் துள்ளி விளையாடும் .நாம் நடக்கும் போது நம் பாதங்களை கொத்தி செல்லும் .என்ன ஒரு சுகானுபவம் அது .

    [​IMG]

    [​IMG]

    நாளை பயிர் வளரும்
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான பதிவு பெரியம்மா ! ஆரம்பமே கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும்,கருத்துக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னுடைய சிறு வயதில் இதுபோன்ற வயல் வரப்புகளுடனும், தோப்புகளுடனும் வாழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது இறைவன் அருளே ! என்ன ஓர் அனுபவம் ! இப்போது நினைத்தாலும் வயல் காற்றும் நாற்றும்,வாய்க்கால் நீரும்,குழைந்த சேறும் -இரசமான நினைவுகள். உங்களின் அடுத்தடுத்தப் பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
     
    kaniths and periamma like this.
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அருமையான பதிவு.
     
    periamma likes this.
  4. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    அந்த பம்பு செட் குளியல்.

    எப்படி ஒரு தலைமுறைக்குள் எல்லாம் அழிந்து விட்டது?
     
    kaniths and periamma like this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Periamma,

    Wonderful. Simply fine.

    வரப்பில் நடந்து செல்வதே சுகானுபவம்!வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் திடீரென்று பாதை அடைபட்டுப் போனது போல தோன்றும்..இன்னொரு வளைவு தென்படும்.எங்கள் ஊரில் கொள்ளிடம் நதி.வீட்டில் bathroom என்ற concept கிடையாது.காலை 4.30 மணிக்கு எழுந்து 1மைல் நடந்து கொள்ளிடம் சென்று துணி துவைத்துக் குளித்து விட்டு 6.30 மணிக்குள் திரும்ப வேண்டும்.
    என்னுடைய அக்கா பெண் சென்னையிலிருந்து லீவில் அங்கே வந்தாள் .ஒரு 10 பேராகக் கொள்ளிடம் போனோம் அம்மா ஒரு பெரிய அலுமினியம் தூக்கு நிறைய தயிர் சாதமும் வடு மாங்காயும் கொடுத்தனுப்பினார்.எனக்கு 14 வயது.மற்றவர் அனைவரும் சின்னவர்கள். எல்லோரும் நீண்ட நேரம் மணலில் விளையாடி குளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தனர் .என் அக்கா பெண் மட்டும் தண்ணீரை விட்டு வெளியே வர மனமில்லாமல் இருந்தாள் .பயங்கர பசியில் எல்லோரும் சேர்ந்து எல்லா சாதத்தையும் சாப்பிடவே அவளுக்குப் படு கோபம். எனக்கும் தயிர் சாதம் வேணும்;அதுவும் இங்கேதான் சாப்பிடணும் என்று பிடிவாதம் பிடித்து அழ ஆரம்பித்தாள்.கொள்ளிடம் வந்திருந்த அண்டை வீட்டுக் காரரிடம் அம்மாவிடம் விவரம் சொல்லக் சொன்னோம்.அம்மா 'சாதம் இருக்கிறது.ஆனால் அந்த பெண்ணை ஒரு மைல் நடந்து வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்லுமாறு சொல்லுங்கள். நதிக் கரையில் சாப்பிடட்டும் .அழுதுகொண்டே வீடு திரும்பினாள் பெண்.
    எங்கள் புக்கக கிராமத்தில் ஒரு வழக்கம். திருமணமான பெண் கிராம வாழ்க்கைக்கு லாயக்கா என்று பரி சோதிப்பார்கள். பெண்ணை அழைத்து வந்து .நாலு நாளைக்கெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு காவேரிக்கு செல்வார்கள்.புடவையின் ஒரு பகுதியை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்க கொண்டு மறு பகுதியைக்
    கல்லில் தோய்த்துப் பிழிந்து, பிழிந்த பகுதியை இடுப்பில் சுற்றிக்கொண்டு மறு பகுதியைக் கழட்ட வேண்டும்.இத்தனையும் பக்கத்து வீட்டு மாமிகள் எதிரில், திறந்த நதிக் கரையில். நான் சமாளித்து விட்டேன்.பாத் ரூமிலேயே பழக்கப் பட்ட என் ஓரகத்தி(ஓர்படி ) பயந்துபோய் அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடி வர. என் மாமியார் பயந்து போய் விட்டார்.இந்த வழக்கத்தை இப்போது கடைப் பிடித்தால் ,பிறப்புரிமைச் சட்டம் மீறல் என்று கைதாகி விடுவார்கள். என்ன வழக்கமோ!

    jayasala42
     
    periamma and PavithraS like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS ஆம் பவித்ரா அந்த நினைவுகள் மிகவும் இனிமையானது .
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu நன்றி உஷா
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Jey உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து போட்ட பம்ப்செட் குளியல் நினைவுக்கு வந்ததா .மிக்க நன்றி
     
    Jey likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jayasala நன்றி ஜெயசாலா
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kkrish Kamala just go through this posts about our ancient Agriculture
     
    kkrish likes this.

Share This Page