1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாரிங்கே வந்தது?

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jan 19, 2012.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    யாரிங்கே வந்தது? கதவை
    யாரிங்கே அசைத்தது?

    காற்று அடித்திருக்கும் இல்லை
    கடிதமேதும் வந்திருக்கும்

    உடைத்து சென்றவள் மீண்டும்
    ஒட்ட வருவாளா?
    நேற்று போனவள் மீண்டும்
    நெருங்கி வருவாளா?

    என்னைக் காணாத ஒரு நாள் கூட
    ஒரு யுகம் என்றாள்
    அவளைக் கண்டே ஒரு யுகமானது இன்று

    என் கண்களிலே 'நான் கரைந்தேன்' என்றாள்
    இன்று கண்டு பிடிப்பேனோவென்று
    மறைந்தே நின்றாள்

    என் சிரிப்பிலே 'நான் சிறையானேன்' என்றாள்
    என்னைக் காதல் சிறையிலே அடைத்து
    அவள் மட்டும் ஏன் விடுதலையானாள்?

    தமிழே மறந்து போனது
    அவள் பற்றி பேசும் வார்த்தைகளன்றி
    வேறு தமிழே மறந்து போனது

    மொழி மறந்தேன் ; உறங்கும்
    விழி மறந்தேன்

    சிறு சத்தம் கேட்டால் கூட கதவை
    திரும்பிப் பார்கிறேன்

    யாரிங்கே வந்தது? கதவை
    யாரிங்கே அசைத்தது?
    காற்று அடித்திருக்கும் இல்லை
    கடிதமேதும் வந்திருக்கும்
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thats a good one CRVenkatesh and optimistic as well. Nice to read. Thanks. -rgs
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    thanks rgs for taking time to read
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    மெல்ல திறந்தது கதவு என்றால், சந்தேகமே இல்லை..இது காற்று விடு தூது தான்.:)

    Nicely potrayed the feelings crv..Sir!

    sriniketan
     

Share This Page