1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Rajeni,

    Super story ma.. Seekiram vaanga suspense thanga mudiyala..
     
    Rajeni likes this.
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot for ur FB and all those likes dear Vanathi!! Posting next Episode now..
     
    Sweetynila likes this.
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    26. மித்ர மாளிகை - ஆதாரம்!

    கண்மூடி கற்சிலையாக அமர்ந்திருந்த தன் கணவனை ஒருவகை அச்சத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள் மேகலா. தவறாக ஏதோ நடக்கப்போகிறது என்று ஏற்கெனவே அவளது உள்ளுணர்வு அவளை நச்சரித்துக்கொண்டிருக்க ஏ.பி. அமர்ந்திருந்த விதம் அவளை அச்சப்படவைத்தது. அலுவலக அறை வாயிலில் அவரைப்பார்த்தபடி அவள் நின்றிருக்க அவள் வந்ததையோ நின்றதையோ அறியாமல் அசைவற்று அமர்ந்திருந்தவரின் மூடிய விழிகளின் ஓரத்திலிருந்து மெல்லிய கோடாய் கண்ணீர் கசிந்து வழிந்தது. பதறிப்போய் அவர் அருகில் விரைந்தாள் மேகலா.

    அவள் தொடுதலில் மெல்ல இமைதிறந்தவர் தன் கண்ணீரை துடைத்த மனைவியின் கையில் முகம் புதைத்துக்கொண்டார். தன் மற்றொரு கையால் அவரை தோளோடு அணைத்துக்கொண்டாள் மேகலா. பல நொடிகள் கடந்தபின் மெல்ல நிமிந்தவர் நடந்தவற்றையெல்லாம் தன் மனைவியிடம் சொல்லத் துவங்கினார்.

    அதிர்ந்துப்போய் அனைத்தையும் கேட்டிருந்தவள் சொன்னாள், “விஜி அண்ணனா இப்படி? அவரா பாரதிக்கு துரோகம் பண்ணாரு? நிஜமாவே நம்பமுடியலங்க..”

    “உன்னால நம்பமுடியல.. என்னால இதையெல்லாம் ஜீரணிச்சுக்கவே முடியல கலா.. அவன் அஃபேர் பத்திக்கூட நான் பெருசா நினைக்கல.. ஆனா அவன் எம்மேலயே பழிப்போடறான்.. பிஸினஸ்காக அவன் மேல பழிப்போடறேனாம்.. ஹவ் ரிடிக்குலஸ்!” என்றார் கோபமாக.

    வேறொரு சூழ்நிலையில் ‘அஃபேர் பத்தி பெருசா நினைக்கலயா? கட்டுன பொண்டாட்டிக்கும் துரோகம் பண்ணி இன்னொரு பொண்ணோட லைஃபையும் ஸ்பாயில் பண்ணது உங்களுக்கு பெருசா தெரியலயா’ என்று வாதாடியிருப்பாள் தான். ஆனால் இது விஜய்நந்தன் சம்பந்தப்பட்டது. அது தன் கணவனை எப்படி பாதித்திருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். மேலும் அவளாலும் கூட நடந்தவற்றை நம்பமுடியவில்லை. ஏ.பி. சொன்னது போல விஜய்நந்தன் ஏ.பி.யிடம் அப்படி பேசியது விசித்திரமாயிருந்தது – எதற்கும் ஏ.பி.யின் அலோசனைக்கும் அனுமதிக்கும் காத்திருக்கும் விஜய்நந்தன்!

    யோசனையில் ஆழ்ந்திருந்தவள் பின் கேட்டாள், “அந்த காமிரா ஃபூட்டேஜ்ல எதாவது யூஸ்ஃபுல்லா கிடைச்சுதா?”

    “அத நான் பாக்கவேயில்ல கலா..”, என்றார் ஏ.பி. சுவாரஸியமில்லாமல்.

    “ஏங்க?”

    “ஏன்னா.. காணாம போன பணத்தவிட அவன் எதுலயும் மாட்டிக்காம இருக்கனும்னு தான் நான் நினச்சேன்.. பாரதி காதுக்கு போகாமையே இதையெல்லாம் முடிச்சுடனும்னு தான் நான் அவ விட்டுக்கெல்லாம் போனேன்.. ஆனா அவன் எனக்கு காசு தான் முக்கியம்னு சொல்றான்..”, என்றார் விரக்தியாக.

    “சரிங்க அதுக்கப்புறமுமா அந்த வீடியோவ நீங்க பாக்கல?”

    “பாத்து என்ன பண்ணப்போறேன்? அவ கிட்ட கொட்றதுக்கு இவன் தான் எடுத்திருப்பான்.. அத கண்டுபிடிச்சு ப்ரூவ் பண்ணி என்ன பண்ணப்போறேன்? வேண்டாம்.. அந்த உறவு முடிஞ்சு போச்சு அதுக்கு மேல அசிங்கப்படித்திக்க வேண்டாம்..” என்றார்

    “இல்லங்க.. தப்பு செஞ்சாருன்னு ப்ரூவ் பண்ண சொல்லல.. தப்பு பண்ணலேங்கறதுக்கு ஏதாவது ப்ரூஃப் கிடைக்குமானு பாக்கலாமே”, என்றாள் நிதானமாக அவள்.

    “அவன் இவ்வளோ பேசினதுக்கப்புறமுமா அவன நம்பற?”

    “இவ்வளவு பேசினதுனால தான் சந்தேகமா இருக்கு..”

    “சரி.. அவன் மேல தப்பில்லனா.. பின்ன வேறே எதுக்காக அவன் அப்டியெல்லாம் பேசினான் நடந்துகிட்டான்.. டு யூ ஹாவ் எனி தியரி?”, கோபமின்றி சாதாரணமாகவே கேட்டார் ஏ.பி. குரலில் ஒரு துளி ஆர்வம் கூட எட்டிப்பார்த்தது.

    “நோ.. அவரோட செய்கைக்கும் பேச்சுக்கும் எந்த காரணமும் யோசிக்கமுடியல.. அவர் தப்ப மறைக்க பாக்கறாருக்கறத தவிர! பட் ஏன் அவ்வளவு அஜிடேட் ஆகி.. உங்க மேல பழி போட்டு.. தப்ப மறைக்க இதெல்லாம் தேவையானு தோணுது.. தப்ப மறைக்க தெரியாம ஓவர்ரியாக்ட் பண்ணிட்டாரா? இல்ல நமக்கு புரியாத வேறே ஏதாவது விளக்கம் இருக்கா?” , தனக்குத்தானே பேசுவது போல யோசனையில் கேட்டாள் மேகலா.

    ஏ.பி.க்கு மனைவியின் எண்ண ஓட்டம் புரிந்தது. இவை அனைத்தும் அவரையும் அரித்துக்கொண்டிருக்கும் கேள்விகள் தான். எனவே, ஓர் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டபடி சொன்னார், “சரி, எதுக்கு அது ஒரு கொற அந்த ஃபூட்டேஜ்ஜையும் பாத்துடலாம்”.

    அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. காலையே குளித்துக்கிளம்பிய ஏ.பி. அலுவலகம் செல்வதற்கு தயாராக வர அவருடன் தானும் வருவதாக கிளம்பினாள் மேகலா. இருவரும் சென்று அலுவலகத்தை அடைய ஞாயிறு என்பதால் செக்யூரிட்டி தவிர அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. தன் அலுவலக அறையில் அமர்ந்துக்கொண்டு செக்யூரிட்டியை இண்டர்க்காமில் அழைத்தார் ஏ.பி. அவர் வந்து சேர வீடியோ டேப்கள் வைத்திருக்கும் அறையை திறக்குமாறு பணித்துவிட்டு அந்த அறை நோக்கி மேகலாவுடன் நடந்தார். அந்த செக்யூரிட்டி அவரை ஒரு விசித்திர பார்வை பார்த்துவிட்டு சாவியை எடுக்க ஓடினான்.

    செக்யூரிட்டி கதவைத் திறக்க உள்ளே சென்று தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்த பதிவுகளை ஆராய்ந்த ஏ.பி. “செக்யூரிட்டி!” என்று அறையே அதிரும் வண்ணம் கத்தினார். அவர் பின்னால் நின்றிருந்த மேகலா ஏ.பி.யின் திடீர் சீற்றத்திற்கு காரணம் அரிய அவர் அருகில் நெருங்கி பதிவுகள் அடுக்கியிருந்த அலமாரியை பார்வையிட்டாள். ஏ.பி. திரும்பி வந்த வாரத்தில் ஆறு பதிவுகளே இருந்தன. அந்த வெள்ளிக்கிழமை பதிவு காணாமல் போயிருந்தது. அதிர்ந்துப்போய் தன் கணவனை திரும்பிப்பார்த்தாள். அவர் ஆமாம் என்பதாய் தலையாட்ட ஓடி வந்த செக்யூரிட்டியிடம் மேகலாவே கேட்டாள், “இதென்ன செக்யூரிட்டி இந்த வெள்ளிக்கிழமையோட டேப் எங்க?”

    மிரண்டு விழித்த செக்யூரிட்டி, “சார்.. இந்த வெள்ளிக்கிழமை நான் செக் பண்ணப்போ எல்லாம் இருந்துச்சுங்களே” என்றான்.

    சந்தேகமாய் ஏ.பி. அவனைப்பார்க்க, “சார்.. வார வாரம் வெள்ளிக்கிழமை நான் வழக்கமா இதெல்லாம் செக் பண்றதுதான்.. அதுவும் இது சமீபத்திய டேப்.. கண்டிப்பா எனக்கு தெரிஞ்சிருக்கும்.. நம்ம விஜய் சார் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப்பாக்கலாம் சார்..”, என்றான் தயங்கிக்கொண்டே.

    “விஜய் கிட்டயா? ஏன்?”

    “அவரும் நேத்து வந்து வீடியோ டேப் பாக்கனும்னு சொன்னாரு.. அவரு எதாவது செக் பண்ண எடுத்திட்டு போயிருக்காலாமோனு தான் சார் சொன்னேன்”, என்று விளக்கினான்.

    “விஜய் வந்தானா? எப்போ?”

    “நேத்து ராத்திரி சார். ஒன்பது மணி இருக்கும். நைட் ஷிஃப்ட் செக்யூரிட்டி வர நேராயிடுச்சுன்னு நான் தான் இருந்தேன். டேப் பாக்கனும் அந்த அறைய தெறனு சொன்னாரு சார்.. நானும் தெறந்து விட்டேன். ‘நான் பாத்துக்கறேன் நீ போ’னு என்ன அனுப்பிட்டாரு”

    மீண்டும் பதிவுகள் அடுக்கி வைத்திருந்த அலமாறி அருகில் சென்ற ஏ.பி., இதற்கு முன் பணம் காணாமல் போன தேதிகளை ஒரு தோராயமாய் நினைவில் கொண்டு அந்த தேதிகளைத்தேட, அதை ஒட்டிய தேதிகளில் இன்னும் சில வீடியோக்கள் காணாமல் போயிருந்தது தெரிந்தது. மேகலாவிடம் சைகையில் அந்த இடங்களை சுட்டிக்காட்ட அவளும் புரிந்துகெண்டாள்.

    மேலே எதுவும் பேசாமல், “சரி.. நான் விஜய்கிட்ட கேட்டுக்கறேன்.. நீங்க ரூம லாக் பண்ணிடுங்க”, என்றுவிட்டு மேகலா பின் தொடர வெளியே வந்தார்.

    வீடு திரும்பும் வழியில் ஏ.பி. அமைதியாய் கார் ஓட்டிக்கொண்டிருக்க மேகலாவே மீண்டும் பேச்சைத்துவக்கினாள். “ஏங்க.. அந்த செக்யூரிட்டி நம்பிக்கையானவரா?”

    “ரொம்ப.. ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்பளோட ப்ராஜெக்ட் டீட்டெய்ஸ் திருடி தர சொல்லி இவர்கிட்ட தான் பேரம் நடந்தது.. நிறைய காசு.. இவரு படியல.. எங்கிட்ட வந்து சொல்லிட்டாரு.. அதுமட்டுமில்லாம விஜய் வராமையே வந்தான்னு சொல்ற தைரியம் யாருக்கும் வராது.. நான் அவன் கிட்ட கேக்க ரொம்ப நேரம் ஆகாதுனு அவங்களுக்கு தெரியும்..” என்றார்.

    “ஆமா.. அவர் வராமையே வந்தாருன்னு சொல்லமுடியாது.. வந்திருக்காரு” என்றாள் மேகலா ஒப்புதலாக.

    “ஹ்ம்ம்.. ஏன் வரனும்.. அதுவும் நேத்து சாயங்காலம் தான் அவ வீட்ல அந்த ப்ரட்சனை நடந்துது.. உடனே அவளோ அவசரமா ஏன் வரனும்?” என்றார் புருவம் உயர்த்தி.

    “ஒரு வேள நம்ப கூட இருக்க பிடிக்காம.. அவரு தான் பிஸினஸ பிரிச்சுக்கனும்னு நினக்கிறாரோ?” என்றாள் மேகலா யோசனையாக.

    “அப்டினா.. சொல்லி தொலச்சிருந்தா சுமூகமா பிரிஞ்சிருக்கலாமே.. இவ்ளவு தரம் எறங்கிபோவான்னு நான் நினக்கவேயில்ல”, என்றார் வேதனையாக.

    வீடுவந்து சேர்ந்த பின் இராமசந்திரனுக்கு தொலைப்பேசி செய்து நடந்ததை கூறினார் ஏ.பி.

    “நேத்தே ஆஃபீஸ் பொயிட்டானா? என்னடா சொல்ற.. அவன.. நானே ஃபோன் பண்ணி டேப்ஸ் எடுத்தானானு கேக்கறேன்”, என்றார் இராமசந்திரன் கோபமாக.

    “வேண்டாம்டா.. ஏற்கனவே ரொம்ப அசிங்கப்பட்டாச்சு.. நீ பிஸினஸ்ல அவனோட ஷேர செட்டில் பண்றதுக்கான லீகல் வேலைய பாரு.. எவ்ளவு சீக்கிரம் இந்த மெஸ்ல இருந்து ரிலீவ் ஆகறேனோ அவ்ளோ நல்லது எனக்கு என் பிஸினஸ்க்கும்”, என்றார் ஏ.பி.

    “உனக்கு வேண்டாம்னா விட்டுடு.. என் திருப்திக்காக அவன கேக்க தான் போறேன்.. அண்ட் அஃப் கோர்ஸ் அவனோட செட்டில்மென்ட் பத்தியும் பாக்கறேன்.. அடிட்டர்ட்ட பேசிட்டு அதபத்தி டிஸ்கஸ் பண்லாம்” என்று முடித்தார் இராமசந்திரன்.

    தத்தம் நினைவுகளில் உளன்றவாறு மீதமிருந்த ஞாயிறை ஏ.பி.யும் மேகலாவும் கழித்தார்கள். கணவனின் மனநிலை புரிந்து மகளைக்கூட தானே வைத்துக்கொண்டு அவருக்கு வேண்டிய தனிமையை அளித்தாள் மேகலா.

    அடுத்த நாள் விஜய்நந்தன் அலுவலகத்திற்கு வருவாரா என்ற கேள்வியோடு அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார் ஏ.பி. வந்தால் என்ன செய்வது? மற்றவர்கள் முன் வெளியேற சொல்லவேண்டுமா? இல்லை விட்டுவிட்டு பின்னர் இராமசந்திரம் மூலம் பேசவேண்டுமா? என்ற கேள்விகளில் அவர் மனம் உளன்றுகொண்டிருக்க தொலைப்பேசி ஒலித்து அவர் கவனத்தைக் கவர்ந்தது. அழைப்பை எடுத்து அவர் செவிக்கு கொடுக்க எதிர்முனையில் இராமசந்திரன் தான் பேசினார்.

    “சொல்லுடா சந்துரு..”, என்று தன் மனதை அரித்த கேள்விகளைக்கேட்க ஏ.பி. தயாராக, இராமசந்திரன் சொன்ன செய்தியில் அவர் ஸ்தம்பித்து நின்றார்.

    (தொடரும்)
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni marupadiyum suspense.?Romba naal engalai wait panna vachuratheenga.update as early as possible.sema thrill
     
    Rajeni likes this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Such an immediate reply amma!! Thanks a lot!! Even I want to give frequent updates but vela dhan vidamatengudhu.. Will definitely try to post soon!
     
  6. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Madam again suspense. Yen pa naana thooganuma vendama. Adutha ennanu yosichu yosichu mandaye vedichidum.
     
    Rajeni likes this.
  7. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    935
    Likes Received:
    1,746
    Trophy Points:
    263
    Gender:
    Female
    sema episode Rajeni. Can't predict who is good, who is bad. Current scenario is thrilling. Flashback is even more interesting. Excellent writing. Idha solli solliye yen vay valikkudhu. Enakku mattumachum micha story ya oru rough draft avadhu pm Pannungalen, how about this?:tonguewink::tonguewink:
     
    AnooSA and Rajeni like this.
  8. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Rajeni
    Very nice depiction. Filled with suspense.. Keeping us always in curious state to know what next.

    Your are a great writer ..:clap2:
     
    Rajeni likes this.
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Mandai udaiyarathukulla adutha post thara try panren Madam!! :p
     
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Haha.. apdi ellam neenga solla koodathu.. ipove vai valicha apram remaining episodes and stories ku yaar FB kudukarathu ;)
    Micha storya dhan naanum yoschitruken..
     
    stayblessed likes this.

Share This Page