1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மாதங்களில் அவள் மார்கழி

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Jan 16, 2013.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மார்கழி என்றதும் மனதிற்கு வருவது 'பூசணிப் பூ அண்ட் கொப்பி' தான்.அதை தினமும் வாசல்லே சாணி தெளிச்சு , சாணிலையே ஒரு' கோன் 'பண்ணி நடுல ஓட்டைப் போட்டு அந்த பூவை வைக்கணும். கடவுளோட ஸ்ரிஷ்டியே தை மாசத்துலக் காய்க்கற பூசணிக்காய் பூ மார்கழிலக் கிடைக்கணும்னு.

    அந்தப் பூவுக்கும் ஒரு மகத்துவம் வேணும்னு தான் இந்தப் பூசணிப் பூ கொப்பி.
    சரி மார்கழி வந்தாச்சு, கோலமும் போட்டாச்சு, ஆனால் பூ எங்கிருந்து வரும்?
    அதுக்கு நாங்கள் தான் போராடணும், இல்ல ஒரு சின்ன திருத்தல் , நாங்கதான் திருடனும்!எங்கே இருந்து?

    நாங்க இருந்தது தாம்பரம் ரயில்வே காலனில , எங்கத் தெரு முனையில நிறைய குடிசைகள் உண்டு, அதாவது 'துர்கா ஸ்டா'ல்லேருந்து எங்கத் தெரு முனை வரை குடிசைகளும் கடைகளும் தான்.

    நாங்களே சீக்கிரம் எழுந்து ஓடிப் போயி அக்கம் பக்கம் பாத்து , அந்தக் குடிசைக்காராப் போட்டுஇருக்கற பூசணிக் கொடிலேருந்து பூவை திருடி, அது நசுங்காம எடுத்து வந்து சாணில வைக்கணும். இது நிஜமாவே பெரிய வித்தை தான், ஒரு நாள் காணமப் போகலாம், தினமும்னா? ஸோ ,அவர்களும் கண்ல விளக்கெண்ணெய் விட்டுண்டு தான் எங்களைப் பிடிக்க ரெடியா இருப்பா. இன்னிக்கி வரைத் தெரியாது நாங்கள் எப்படி திருடினோம்னு !

    ஆனா ஒன்னு மட்டும் சொல்லணும், நாங்க அன்னிக்கி பூ திருடிட்டு ஓடி வந்ததுக்கு , ஒலிம்பிக்ச்லையோ ,ஏஸியன் கேம்ஸ்லையோ ஓடிருந்தா நிச்சயமா தங்க மெடல் கிடைச்சிருக்கும். நாடும் ஒரு பி.டி .உஷாவோட நின்னு இருந்திருக்காது.

    வைகுண்ட ஏகாதசிக்கு தாராளமா 'தாயக்கட்டை' விளையாடலாம், அதுவும் பரம பதம் (snakes and ladders )விளையாடலாம். ராத்திரி கண் முழிச்சுட்டு அடுத்த நாள் எல்லாரும் சாமியாடுவோம், என்ன புரியலையா?
    தூங்கி வழிவோம், நாலு மணி வரை தான் மேனேஜ் பண்ணுவோம், அதுக்கப்பறம் கும்பகர்ணனைப் பாக்கப் போயிடுவோம் .

    அவ்ளவா கோயிலுக்குப் போனதில்லை மார்கழி மாசம், மிஞ்சிப் போனால் ரயில்வே காலனியிலேயே ப்ளே க்ரௌண்டுக்குப் பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோயிலோ ,வெஸ்ட் தாம்பரத்துல இருக்கற ராமர் கோயிலோ தான் போவோம். கோயில்ல காலங்கார்த்தால ஸ்பீக்கர் போட்டுடுவான், அதுல இன்வேரியப்லி மொதல் பாட்டு ' விநாயகனே வினை தீர்க்க வந்தான்', அப்புறம் டி .எம்.எஸ் பாட்டுகள் தான்.சில சமயம் எரிச்சலா வரும் தூக்கம் கலயரதேன்னு .

    இப்ப என்னடான்னா கோயிலுக்குப் போறதே ஒரு ரிச்சுவல் , அதுவும் இந்தக் காலத்துப் பசங்களுக்கு மார்கழியா மன்னாங்கட்டியான்னு கூடத் தெரியாது.
    பொங்கலுக்குப் பதிலா, பிட்சாவும், களிக்குப் பதிலா கோகோ கோலாவும் தான் தெரியும் .திருவாதிரை அன்னிக்குத் தான் ஏழு காய் கூட்டும், களியும் கிடைக்கும், அது க்கு நாக்குல தண்ணி சொட்டச் சொட்ட காத்துண்டு இருப்போம், நாய் எலும்புத் துண்டுக்கு காதுண்டு இருக்கா மாதிரி.
    இதுல போராதக் கொறைக்கு ,;திருவாதிரைக் களி திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி'ன்னு பழமொழி வேறே சொல்லுவா. அப்டியும் சொறன இல்லாம செகண்ட் செர்விங் கேப்போம். இப்போ பண்ணா தின்றதுக்கு ஆள் இல்லை,.வேர் இஸ் த க்வெஸ்டின் ஆப் செகண்ட் செர்விங்?

    சில கோயில்ல காலங்கார்த்தால தீபாராதனை ஆனதும் நெய் சொட்ட சொட்ட சக்கரப் பொங்கலோ ,வெண் பொங்கலோக் கிடைக்கும், அதுல முந்திரிப் பருப்ப தாராளமா அள்ளிப் போட்டு இருப்பா.அதுக்குன்னே நிறய பேர் கோயிலுக்கு வருவா. பெருமாள் கோயில்னா கேட்கவே வேண்டாம், புளியோதரை தூள் கிளப்பும்.

    கோயில் பிரசாதம் டேஸ்டே தனி, என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் அதப் பாத்து சூடு போட்டுக்க முடியாது.

    என்ன நான் சொல்றது சரியா?
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நீங்க சொல்றது சரிதான், ma'am..No appeal :)

    நாங்க இருந்ததும் West Tambaram தில் தான் :)

    Sriniketan
     

Share This Page