1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொழுதும், நிறைவும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 5, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குளிர்காலம் தொடங்கி விட்ட இப்பொழுதில் பகலும்
    தன் அருமை நன்றாக உணர வைக்கும் முகமாய்,
    பொழுதிலே குறைந்தும், வெம்மையிலே தணிந்தும்,
    ஏங்க வைத்து, கழிந்தே போகும் மிக விரைவாய்.

    போர்வையைப் போல் நமைத் தன் அணைப்புக்குள்ளாக,
    வைத்திருந்து, உடலை மிக நடுங்கச் செய்யும்
    குறும்பதனைக் காற்றாகிய நட்பொடு அழகாக,
    நடத்தி, மிக நீண்டிருக்கும் இரவாகிய பொழுதும்.

    காவியங்கள், உபநிடதம் எல்லாம் நன்கு படித்து,
    செவிக்கினிய இசையதிலே நன்றாகத் திளைத்து,
    சேயாம் நம் நிலையதனை நன்றாக உணர்ந்து
    தாயாகிய இறையவரின் அருமையதை நினைத்து

    மோனத்தில் எப்போதும் இருக்குமவர் தாளை,
    தியானத்தில் இருந்து நாம் சற்றே முயன்றால்
    ஏனம் நீர் நிறைய, தன் வெற்றிரைச்சல் தன்னை,
    நீங்குவது போல் நம் குறையெல்லாம் நீங்கும்.
    -ஸ்ரீ
     
    1 person likes this.
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மனதின் கரை நீங்கினால் குறையும் நிறையாகும்.
    அருமையான வரிகள் rgs
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot AkhilaaSaras, for your appreciation. -rgs
     

Share This Page