1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கல் வாழ்த்து

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 14, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பழயன கழிந்து புதியன புகுதலே
    தை பொங்கலின தாத்பர்யம்
    புது மண் குழைத்து
    புது அடுப்பு உருவாக்கி
    புது பனை ஒலை வெட்டி
    அடுப்பெரிக்க விறகாக்கி
    புது நெல் அவித்து புத்தரிசியாக்கி
    புது பானை அடுப்பில் வைத்து
    அன்று கறந்த பசும்பாலுடன்
    தேங்காய் உடைத்த நீர் எடுத்து
    பானையில் ஊற்றி
    அரிசி களைந்து அதனையும்
    பானையின் விளிம்பு வரை ஊற்றி
    பால் தேங்காய் தண்ணீர் அரிசி நீர்
    ஆகிய முப்பெரும் பாலும் கலந்த பானையை
    சூடாக்கி பால் பொங்கி வழியும் போது
    குலவை இட்டு கை நிறைய அரிசி எடுத்து
    பானையை மூன்று முறை சுற்றி
    அரிசியை பானையில் இட்டு
    பொங்கல் இட வேண்டும்
    பால் பொங்கிச்சா வயிறு வீங்கிச்சா
    என்பதே எங்கள் ஊர் பொங்கல் வாழ்த்து
    அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
    என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    பால் போல் மனமும் நீர் போல் தெளிவும்
    வார்த்தையில் இனிமையும் கொண்டு
    சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்

    ருக்மணி
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அம்மா.....இந்த வருடமும் பொங்கல் விழாவிற்கு ஊரில் இல்லையே என மிகுந்த ஏக்கம் ...
    உங்கள் வரிகளில் கொஞ்சம் நிம்மதி ..உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா....நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அம்மா உங்கள் தேன் மதுரத் தமிழோடு
    தந்த தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி!!!!!!!!!!!!!!!

    எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று
    இனிதே வாழ என் இதயங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
     
  4. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    எல்லோரும் எல்லா நலனும் பெற்று
    இன்புற்று வாழ என் இனிய பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி லதா.பால் போல் பொங்கட்டும் வாழ்க்கை
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வாழ்த்துக்கு நன்றி சரோஜ்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கார்த்திகா உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எளிய வார்த்தைகள் கொண்டு ஏற்றமான வாழ்த்தினைச் சொன்ன பெரியம்மாவுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
  9. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Periyamma

    Arumaiyana varthaigalilll Pongal vazhuthu. Ungalukku yengal pongal vazthukkal.

    I want to celebrate pongal in way described by you??? But our pongal is always cooker pongal.

    MY HEARTY PONGAL WISHES TO ALL

    andal
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அம்மா என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    பொங்கல் செய்யும் போது நடக்கும் நிகழ்வுகளை விவரித்த உங்கள் கவிதை வரிகள் அருமை
     

Share This Page