1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கலோ பொங்கல்.

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Jan 14, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்புத் தமிழ்பொங்கும் ஐ.எல் வாழ் நெஞ்சங்களே..
    வணக்கம் வாழ்க வளமுடன்.

    நாளைபால் பொங்கட்டும் பானையிலே,
    இனி என்றும் இன்பம் பொங்கட்டும் வாழ்வினிலே
    தித்திக்கும் திங்கள்,
    ஆம் நாளை பொங்கல்.

    தமிழர் திரு நாளான இந்த நாளின் என் பதிவை என் தங்கத்தமிழில் இறக்குகிறேன்.

    "விடிஞ்சா பொங்கல். அடியாத்தி மலரு.. என்னடி நீ? புடிச்சு வச்ச புள்ளையார் கணக்கா அந்த கம்பியீட்டர் மின்னாடியே ஒக்காந்திருக்க? எழுந்து வெரசா வாடி ஆத்தா. கோலப்பொடி கலக்கனுமில்ல?"

    இன்றைய பொழுது இப்படித்தான் துவங்கியிருக்கும் இன்று மட்டும் நான் என் ஊரில் இருந்திருந்தால்.

    ஒவ்வொரு வருடமும் தீபாபளி, நியூ இயர், அது இது என்று எல்லாப்பண்டிகையும் வரத்தான் செய்யும் ஆனால் பொங்கல் வரும் பொழுது மட்டும் தெந்தமிழகம் குறிப்பாக மதுரை மாவட்டம் படக்கென்று விழித்துக் கொண்டு கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டு தயாராகி விடும்.

    இந்த ஒரு வாரமும் என்னமோ தன் வீட்டு கல்யாணம் போல் ஊரில் அத்தனை பேரும் வரிந்து கட்டிக்கொண்டு எதெதோ வேலைகள் செய்வார்கள்.அவரவர் பிழைப்பைப் பார்ப்பார்கள் சரிதான் ஆனாலும் சீசன் பிழைப்பாக மாங்காயும், பட்டாசும் விறபவன் கூட கரும்பு விற்கும் பொழுதுக்காகக் காத்துக்கொண்டிருப்பான் என்பது உண்மை.ஏனென்றால் இது அவனது விழா. அடித்தட்டு மக்களும் ஆசையாய் கொண்டாடி மகிழும் விழா.

    மதுரையைச்சுற்றிய காடுகழனிகளும் கிராமங்களும் கூட பாதி ப்ளாட் மனையாகி பசுமை வயலும், பம்ப் செட் குளியலும் எப்போதாவது என்றாகிவிட்டாலும் இந்த தருணம் பொங்கல் தரும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை மாறிவிட்ட மதுரையின் விவசாய வாழக்கையைப் புரட்டிப்பார்க்கும்.

    வயல்வரப்பை விட்டு வேறு பிழைப்பைத் தேடி வந்த மக்களும் கூட தமக்குள் எங்கோ ஒளிந்துகொண்ட மண்வாசனையை நுகர்ந்து பார்க்கும் காலம் இந்த பொங்கல் தான்.

    அது என்னவென்று தெரியாத ஏதோவொரு ஜெனெடிக் காரணம் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் பொங்கல் என்ற சொல்லிலேயே எங்களுக்கு நாவெல்லாம் தித்திக்குமா?

    ஆழி விழுங்கிய சங்கம் தொட்ட மதுரையில் ஆரம்பித்து ஆண்டு தோறும் தைத்திங்களில் மருத நிலத்தார் ஒன்றுகூடி வாழ்வளித்த தமிழ்க்கடவுள் செவ்வேலுக்கும்,வயல் பெருக்கி வாழவைத்த சூரியனுக்கும் நன்றிசொல்லி வழிபடும் அறுவடை விழா இந்த பொங்கல் விழா.

    இத்தனை நூற்றாண்டுகளாய் இன்று வரை அது தொடரும் பொழுது ஜெனெடிக் காரணம் இல்லாமலா போய்விடும்?

    கபாடபுரத்தில் பொங்கல் எப்படியோ ??
    எங்கள் அண்ணா நகர் பொங்கல் அம்சம் தான் போங்கள்.

    ஒரு வாரம் முன்பே 80 அடி ரோடு ஒரு இரவில் 50 அடியாக சுருங்கிவிடும். கரும்புக்கட்டுகள் கத்தையாக நின்று அழகான கரு நீல வேலி போல இருக்கும்.

    சரிந்து தொங்கும் வாழைகள் நெளிந்து நிற்கும் வாலைப்பெண்டாய் போவோர் வருவோர் முகத்தில் புன்னகை கொணரும்.

    ரோட்டுக்கடைகளை கண்டபடி ஏசுபவரெல்லாம் இந்த வாரம் மட்டும் வீட்டு வாசலில் கூட கடை திறக்க விடுவார்கள்.

    புதிதாய் பிடுங்கிய மஞ்சள் மணம் காற்றில் தவழ்ந்து வந்து தன் பிறந்த மண்ணின் பெருமையை மணக்கச் சொல்லும்.

    குட்டி குட்டி ராட்டினங்கள், அவ்வப்போது மணியோசையோடு அசைந்து வரும் யானைகள், கூவி அழைத்து கரும்பு விற்கும் கிராமப்பெண்களின் பொங்குதமிழ் பேச்சுகள், அடுத்த ஸ்டாப் ஆட்டோ ஸ்டாண்டில் கட்டிய குழல் ஒலிப்பெருக்கியில் 'செல்லாத்தா' பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி, வீடு தோரும் புதுவண்ணப்பூச்சு.

    ஜவுளிக்கடைகளெல்லாம் கடல்களாகி மக்கள் அலை வெள்ளமாய் மோதும். இப்படியாக எங்கள் மதுரை மா நகரம், எங்கள் அண்ணா நகர் கலைகட்டும்.
    அட அல்ட்ரா மாடர்ன்(?) அண்ணா நகரே இப்படியென்றால் கிராமங்கள்?..
    அப்பப்பா..

    ஒரு வாரம் முன்பே படையெடுக்கும் இளசுகள் கூட்டம் வீடு வீடாய் போட்டிகளில் கலந்து கொள்பவர் பெயர் சேகரிக்கும்.

    உரி அடிப்பதில் இருந்து, க்ரிக்கெட், கால்பந்து,சாக்கு ரேஸ், சைக்கிள் ரேஸ், கபடி(ஸ்பெஷல்),சிலம்பம்,ஓட்டப்பந்தயம், உண்டி வில் அடித்தல், கழுதை ரேஸ், ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டு என்று வரிசை வருடா வருடம் பெரிதாகிக்கொண்டே போகும்.

    பொங்கல் பொழுதில் மதுரை மாவட்ட ரோடுகளில் பயணித்தால் தெரியும். ஒவ்வொரு கிராமத்திலும் மைக் செட் வைத்து ஒருவர் அழக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க எதாவது ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கும்.

    வீடுதோரும் வாசலில் வண்ணக்கோலம் மிளிரும்(அதில் சிறந்த கோலத்துக்கு பரிசு கூட உண்டு).

    காணும் பொங்கலில் கையில் பலகாரத்தட்டுடன் அண்டைய வீடுகளுக்கு கொடுத்து மகிழ்ந்து பின் பெரும் வண்டிகளில் கிளம்பி தன் குலதெய்வக்கோவில்களில் அங்காளி பங்காளியாக ஆஜராகி ஒன்றாக பொங்கலிட்டு உண்டு மகிழ்வது மதுரைமண்ணின் பொங்கல் கடமை.

    மாட்டுப்பொங்கலுக்கு மாடுகன்றுகளைக் குளிப்பாட்டி பூவைத்து,
    கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து பூசை செய்து,
    புதுப்பட ரிலீஸ் போல அவற்றை ஓட்டி விடுவாரகள்.(அப்புறம் அதை பிடிக்க வேறு ஓடுவாரகள்- அதுக்குப்பேர்
    மஞ்சுவிரட்டு/ஜல்லிக்கட்டு. சிறு வயதில் அதை மொட்டை மாடியில் நின்று கொண்டு விசில் அடித்து ரசிப்போம்.)

    பொங்கலுக்கு முந்திய தினம் போகி முடிந்து வாசல் பெருக்கி தெளித்து முன் காலை இரண்டு மணி சுமாருக்கு மப்ளர் சகிதம் நாங்களெல்லாம் ஆஜராகிவிடுவோம் வாசலில்.

    20 அடி ரோட்டில் பத்தடியை எங்களுக்கு ஒதுக்கிக்கொண்டு (மிச்சம் பத்து எதிர்த்த வீட்டுக்காரருக்கு) சாணி மெழுகிய தரையை வழுவழுப்பாக கூட்டிப்பெருக்கி கோலமிடுவோம்.

    அந்த ராத்திரியிலும் கோலம் போடும் எங்களுக்காகவே கடை திறந்து வைத்திருக்கும் நாயர்கடை டீயோடு பெரும்பொங்கல் பானைக்கோலமும் பக்கத்திலேயே என் ரங்கோலியும் அருகில் நான் எப்பொழுது வரையும் கூலர்ஸ் அணிந்து இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லிச் சிரிக்கும் சூரியனும் கலர் கோலம் வரைந்து,
    வாசலில் வாழை கட்டி வீடெங்கும் தென்னங்கீற்று தோரணம் கட்டி முடித்து வேக வேகமாக ஓடிப்போய் அம்மாவுடன் சேர்ந்து ஆற்றுமணல் குவியலில் சிமெண்ட் பலகை போட்டு
    மண்ணடுப்பு வைத்து
    அதில் மஞ்சள் குங்குமமிட்டு,
    மஞ்சள் கட்டிய புதுப்பானையில் பொங்கல் வைக்கும் முன்பு
    ஓடிப்போய் தலைகுளித்து
    தளரப்பின்னிப் பூவைத்து
    புதுப்பாவடை தாவணி கட்டி(அட அது ஒரு காலங்க..இப்ப இல்ல),
    குலவையிடும் நேரம் சரியாய் ஓடி வந்து ..

    "உலுல்லுல்லுல்லு..."என்று குலவையிட்டு
    சரிந்துஒழுகும் பொங்கல் அது கிழக்கா என்று பார்த்து மகிழ்ந்து.
    பொங்கலோ பொங்கல் அன்று கூவி சூரியனையும் கொஞ்சம் சைட் அடித்து..
    செய்த பொங்கல் சாமிக்குப் படைத்து
    தேங்காய் உடைத்து தூபதீபம் காட்டி,
    வழை இலை துடைத்து
    தரையில் வரிசையில் அமர்ந்து
    இலையில் வைத்த பொங்கலை நுனிவிரலால் நெய்யொழுக
    டுத்து
    நாவின் நடுவில் அதை வைத்து தொண்
    டைக்குள் இனிக்கஇனிக்க அது ஒழுக
    கண்மூடி ருசித்து ரசித்து..
    அட..டாடா....


    தமிழுக்கும் அமுதென்று பேர், தமிழனின் இந்த பொங்கலுக்கு எது நேர்?


    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



     
    Loading...

  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    எங்கே இந்த மலரையும் காணோம் அதன் மறுபக்கத்தையும் காணோம் என்று இந்த வலைதளத்தார் தவித்துக்கொண்டிருக்கையில் 'இதோ வந்துட்டேன் ஆத்தா' என்று நீங்களே டப்பிங் இல்லாமல் சொந்தக் குரலில் கூவிக் கொண்டு நுழைந்தது அழகாகத்தான் இருந்தது. அலுக்காத தமிழ் மதுரைத் தமிழ். வைகைப்புயல் இத்தனை நாள் தாக்குப் பிடிக்க முக்கிய காரணம் எங்கள் ஊர் பேச்சாக்கும் என்று மதுரைக்காரர்கள் மார்தட்டிக்கொள்வதில் விஷயம் இருக்கத்தான் செய்கிறது.

    அரைத்தெருக் கோலம் அழகான பானை
    மஞ்சு விரட்டுக் காளை அதனை மடக்க ஓடும் காளை
    கல்பனாவில் மீனாட்சியில் புதுப்படம்
    எங்கள் மகிழ்ச்சியில் இல்லை கலப்படம்

    குலவை ஒலியில் குழையும் எங்கள் இதயம்
    எங்கள் குலப் பெண்டிருக்கு இன்று ஒரு இனிய உதயம்
    மதுரையில் மணக்க மணக்க மல்லிப்பூவும் உண்டு
    சுவைக்க நல்ல விசாலம் காபியும் உண்டு
    எம்.ஜி.ஆர் மன்றமும் உண்டு தமிழ்ச் சங்கமும் உண்டு
    நல்லதோர் தமிழும் உண்டு நல்ல மனமும் உண்டு
    புதுப்படக்கூட்டமும் உண்டு
    புதிய சிந்தனைகளும் உண்டு

    இது பாண்டி வளநாடு அல்லவா
    மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
    ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை அல்லவா?

    நல்ல வாழ்த்து வழங்கி எங்கள் மனதில் குதூகலம் உண்டாக்கிய இந்த வலைப்பூவை மனமாரப் பாராட்டுகிறேன்.
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று வாழ எங்கள் அரசி மதுரையை ஆளும் மீனாட்சியை மனமார வேண்டிக் கொள்கிறேன்.
    உங்கள் ஜென் குருவிற்கு விசேஷமான நல் வாழ்த்துக்கள். அவனால் தானே உங்கள் வலைப்பூ 2010ம் ஆண்டின் சிறந்த வலைப்பூக்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. என்னது விஷயமே தெரியாதா?
    அன்புடன்
    வரலொட்டி

    பி.கு. பொங்கல் சுவைத்த அலுப்பில் அப்படியே காலை நீட்டிப் படுத்துவிடாதீர்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. பொன்னியின் செல்வன் 23-24 வந்துவிட்டது. காதல்பாட்டின் ஐந்தாம் பாகம் மலர்ந்துவிட்டது. புத்தகம் வெளியாகிவிட்டது. புகைப்படங்கள் இங்கே வெளியாகிவிட்டன. ஒரு சுற்று சுற்றி வந்தால் எல்லாவற்றையும் பார்த்துவிடலாம்.
     
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    மலர்...மதுரக்கி என்னையவும் இழுத்துட்டு போயிட்டயேத்தா...
    அங்காளி பங்காளி வீட்டிலிருந்து வரும் பனங்கருப்பட்டிப் பணியாரம், தித்திக்கும் அடிக்கரும்பு...ஹ்ம்ம்....

    வாழ்த்துக்கள்!
     
  4. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    don't even start..
    Mhmm.. I have to make do with the pathetic excuse of a pongal which I am going to make tomorrow..
    :)
    Thanx for coming dear
     
  5. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    hi malar

    Pongal o Pongal
    Chakkarai Pongal

    cheers
    suresh
     
  6. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    இதுக்குத்தான் பெரிசா fb போடக்கூடாதுன்னு சொல்றது! அதையும் blog ஆ நெனச்சி விட்டுட்டீங்களோ?

    வரலொட்டி
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    athellaam illa..
    unga azagana kavithaikku adukka enna ezuthalaamnu azhagiya thoranthu vachutu ukkaanthirukaen.
    waitees...
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    your poem is worth waiting for, malar. I'll wait.
    sridhar
     
  9. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    மண்பானைப்பொங்கலும், மண்வாசனையும் மதுரையில் தானே
    மண்ணையேக்காணாமல் நா மலங்க விழிக்கிறேன் இங்கு தானே

    அமுதமும் இப்படித்தான் இருக்குமென்றெண்ணும்படி அம்மா செய்வது தான் பொங்கல்
    வெளக்கியெடுத்த வெங்கலப்பானையில் வெளங்காமல் நான் செய்வது தானா பொங்கல்?

    பொங்கல் ரிலீஸ் புதுப்படம் எங்கே?
    அஸ்ட்ரோவில் பழைய பட்டிமன்றம் தான் இங்கே

    நா செய்தது பொங்கலா அவியலா சொல்லுப்பு?
    என்பது தான் மன்றத்தில் எடுக்கப்படும் தலைப்பு

    கஷ்டப்பட்டு நான் செய்யும் இந்த இனிப்பு
    கலங்காத என் கணவருக்குக்கூட நாளை வரும் மலைப்பு

    இந்த அழகில் நாளை வீட்டில் பத்து பேருக்கு விருந்தழைப்பு
    அய்யோ பாவம் அவர்கள், நல்ல வேளை நாளன்று மன(வயிறு)தாற்றிக்கொள்ள விடுப்பு.

    குலவை ஒலி கேட்பதுவும் எங்கே..
    தினம் அல்லாவைத் தான் கூப்பிடுகிறார்கள் இங்கே

    அது சரி அவருக்கும் சேர்த்து நாளை குலவை போட்டால் ஆச்சு
    ஆனால் மல்லிகைப்பூ? அது எங்கே போச்சு?

    விசாலம் காப்பியெல்லாம் கிடைப்பது அரிது
    மோச்சா என்று மூச்சா போல ஒரு வகை இங்கு பெரிது.

    என்னமோ போங்க...
    நீங்கள் போடும் குலவைச்சத்ததைக்காட்டிலும்
    நான் விடும் பெருமூச்சில் தான் இழுவை அதிகம்.
    ரொம்ப நன்றி வரலொட்டி சார். ஆயிரம் சொல்லு ஆத்தா கை பழைய சோறு மாதிரி வருமா? என்பது போல. ஆயிரம் எழுதினாலும் தாய்மொழியில் ஒரு வரி போல வருமா??

    Thank you for your blessings sir..
    As you said oru round varrathukulla kaanum pongale vanthurm pOlarukae..:)
     
  10. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Iniyamalar,

    so superb write up. Pongal vechu, athai sappitta mathiri irundhadhu.

    Varalotti sir FB, very nice.

    Ungal kavidhai nagaichuvai kalandha inimai.

    Mann manakkum pongal vazthukkal.

    andal
     

Share This Page