1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 20, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது…

    பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம்.

    ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி ஓடினாள்.

    பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா?

    அவளை கூப்பிட்டார்.

    தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது.

    “அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன
    ஸுவாஸினி வந்திருக்கா பாரு! மங்களகரமா இருக்கோல்லியோ? இந்த வேளைல நீ மாத்ரம் கண்ணீரும் கம்பலையுமா நின்னா
    நன்னாருக்குமா? நெத்தில குங்குமம் வெச்சுக்கோ”

    தாயினும் மேலான தயாபரனின் வார்த்தைகள் அவள் அழுகையை அதிகமாக்கியது.

    “இல்ல பெரியவா, நா… குங்குமம் வெச்சுக்க கூடாது”

    பெரியவா பதிலே சொல்லவில்லை.

    “எங்காத்துக்காரர் military-ல வேலை பாத்தார். ஆறு மாஸம் முந்தி டெல்லிலேந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துது. அதுல…. அவர்
    சண்டைல செத்து போயிட்டதா எழுதியிருந்தது. நா….நம்பலை பெரியவா! வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிண்டேன். டெல்லிக்கு
    போன் பண்ணினா, அவாளும், border-ல இருக்கறவாகிட்ட பேசி, அவர் செத்துப் போய்ட்டார்னு confirm பண்ணிட்டா! பேப்பர்ல கூட
    ரெண்டு மூணு தடவை ந்யூஸ் வந்துடுத்து. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..! கார்யம்-லாம் அப்போவே பண்ணிட்டோம். இன்னிக்கு நா…
    மடத்துக்கு வந்ததே, அவரோட அகால மரணத்துக்கு அவருக்கான கர்மாவை இனிமே எப்படி பண்றது-ன்னு கேக்கத்தான் வந்தேன். இந்த மாதிரி ஸுவாஸினி பூஜை நடக்கப்போறதுன்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன் பெரியவா….”

    நாதியில்லாமல் இருந்தவள், இன்று ஆத்மநாதனிடம் கதறிவிட்டாள்.

    பரப்ரஹ்மம் பேசாமல் இருந்தது.

    “அவரோட ஆத்மா ஶாந்தி அடையணும். இதுதான் என் ப்ரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். பெரியவா… இப்போ
    போகச்சொன்னா போய்ட்டு, இன்னொருநாள் வரதுக்குகூட தயாராயிருக்கேன்”

    பெரியவா பதிலேதும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்தார்.

    ஸாக்ஷாத் காலஸம்ஹாரமூர்த்தியாக ஜ்வலித்தார். தன் முன்னால் இருந்த மரடப்பாக்குள் கையை விட்டு, கை நிறைய குங்குமத்தை
    அள்ளினார், அழகான புன்முறுவலுடன் அவளிடம் நீட்டினார்.

    அவளோ முழித்தாள். அவளுடைய கை, குங்குமத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை!

    ” வாங்கிக்கோங்கோ ! பெரியவா தன் கையாலேயே குங்குமம் தரார்னா, ஒங்களோட பாக்யம்ன்னா! நீங்க ஸுமங்கலிதான்!

    பக்கத்தில் இருந்தவர்கள் முடுக்கியதும், நடுங்கும் கைகளில் குங்குமத்தை வாங்கிக்கொண்டாள்.

    “நெத்தில இட்டுக்கோ! ஓன்னோட மனக்லேஸம் அவஶ்யமில்லாதது. ஒம்புருஷன் உஸுரோட இருக்கான். ஸீக்ரமா ஒங்கிட்ட வரப்போறான்.”

    “உயிரோடு இல்லை” என்று ஆறு மாஸமாக அரஸாங்கம் முதல், அத்தனை பேராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு விஷயம், ஒரே நொடியில்
    தெய்வத்தால், “பொய்” என்று தள்ளப்பட்டது.

    அந்த பெண்ணோ, ஸந்தோஷத்தில், பெரிய பொட்டாக இட்டுக்கொள்ளவும், அங்கிருந்த பல ஸுவாஸினிகள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு,
    மஞ்சள், பூ, திருமாங்கல்யம் என்று வாரி வழங்கினார்கள். க்ஷணத்தில், அந்த இடம் குதூகலமானது.

    அன்று அவளும் ஒரு ஸுவாஸினியாக வரிக்கப்பட்டு பூஜையில் அமர்ந்தாள்.

    ஒருவாரம் கழிந்தது.

    பெரியவாளின் திருவாக்கு, பொய்யாகுமா?

    இறந்ததாக கருதப்பட்டு, கருமாதியும் பண்ணப்பட்ட அவளுடைய புருஷன்….. மெலிந்து, சோர்ந்து ஒரு அதிகாலை வேளை வீட்டுக்குள்
    நுழைந்தான்..!

    அவனைக் கண்டதும், அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல், ஆனந்தத்தில் ஏதேதோ உளறினாள்.

    “எப்டி இருந்தேள்? எங்க இருந்தேள்?…. ஏன் ஒங்க head-quarters-ல கூட அப்டி சொன்னா?….”

    “நீ கேள்விப்பட்டதெல்லாம் நெஜந்தான். கிட்டத்தட்ட ஸாவோட விளிம்புக்கே போய்ட்டேன்.! குண்டு பாய்ஞ்ச வலியில, மயக்கமாய்ட்டேன்..!
    சலனமே இல்லாம, ஸன்னமான மூச்சுகூட இல்லாம இருந்த என்னை, செத்த பொணம்-னு நெனச்சிண்டு எதிரிகள்…. எங்கியோ இழுத்துண்டு
    போய் அநாதரவா போட்டுட்டு போய்ட்டா…! யாரோ சில மலைவாஸிகள் என்னை எடுத்துண்டு போயி ஸொஸ்தமாக்கினா..! அவா புண்யத்ல,
    எனக்கு புனர்ஜன்மா கெடச்சுது. அங்கேர்ந்து எந்தவிதமாவும் யாரையும் contact பண்ணக்கூட முடியல….! நன்னா நடக்க முடிஞ்சதும்,
    ஒடனே கெளம்பிட்டேன். ஒன்னோட ப்ரார்த்தனை வீண் போகல..!”

    ப்ரார்த்தனையா! !

    மலைவாஸியான பரமேஶ்வரனுடைய பரமக்ருபையன்றோ!

    “பெரியவா…. தெய்வம்னா….! எனக்கு குங்குமத்தை அள்ளி குடுத்தாரே!…”

    அழுது கொண்டே, ஶ்ரீமடத்தில் நடந்ததைச் சொன்னாள்.

    அவ்வளவுதான்! இருவரும் விழுந்தடித்துக்கொண்டு காஞ்சியில் பீடத்தில் அமர்ந்து அன்பைச் சுரந்து கொண்டிருக்கும், பரப்ரஹ்மத்தின்
    திருவடிகளில் வந்து விழுந்தார்கள்.

    “என்ன?….. ஆத்துக்காரர் வந்துட்டாரா?…ஒனக்கு இனிமே எந்த கொறையும் இருக்காது…”

    திருவாய் மலர்ந்தது காலனை எட்டி உதைத்த காலடி தெய்வம்!

    Recd. by whats up :)
     
    Loading...

  2. Madhumagie

    Madhumagie Silver IL'ite

    Messages:
    195
    Likes Received:
    182
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Ma'am

    Plz Can u decipher it in English for your fan ( :biggrin: its me ), if you don't mind

    want to know wats that in tamil and krishnaamma is impressed , she has posted in IL :rolleyes:
     
    krishnaamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    This is a post about one of the many miracles performed by the Sage of Kanchi, JagatGuru (Light of the Universe- Teacher) the former Peetaathipathi of Kanchipuram Sri Sankara Mutt (a Hindu Religious Organization) ,Sri Sri Chandrasekarendra Saraswathi Swamigal, who is referred with great respect and Bhakti as 'Maha Periyavaa' by his devotees and followers.

    Periyavaa was and is still continued to be considered as an incarnation of Lord Sankara Himself (as per Hindu belief, Lord Shiva). His words have been compiled as volumes of books named 'Deivaththin Kural' meaning Voice of God.

    This particular post of @krishnaamma speaks about the miracle that took place in the life of a lady by Periyavaa's Grace. This lady's husband was believed to be shot and dead while he was serving in Indian Military. She came to the above mentioned Kanchi Mutt to get some religious clarifications about performing the Last Rites of her husband as his body was never found and retrieved by the Indian Army, though they confirmed very strongly that her husband indeed was dead. So this lady was officially announced as the widow of the deceased Army Man.

    On the particular day that the lady chose to come to the Mutt, there was a Suvaasini Pooja, a prayer ritual conducted in honor of Women who are married- it has lots of importance among married women of Hindu Culture as it is said to bestow the husbands' a long and healthy life and thereby loads of marital bliss to the women participating in the Pooja. When this Lady of our attention stood there witnessing this Pooja, someone offered her Sindhoor, the Kum-Kum, which adorns the face of married Hindu Women as Bindhi. Believing that her husband is no more and she is unqualified as a widow to take Kum-Kum (again it is connected to Hindu Religious Customs and Practices) she refused to accept the offer and tried to leave the scene.

    Maha Periyavaa who knows everything asked her why she refused to accept Kum-Kum offered during a happy Pooja Time. The woman told everything about the fate of her husband and said that she only came to know what can be done for her deceased husband to forever Rest in Peace, as his body was not found yet. Seeing the pitiable state of this Lady, the Sage of Kanchi, closed His eyes in meditation and after a while opened His eyes and took loads of Kum-Kum in His hand and gave it to the lady concerned saying that her husband was still alive and will soon return home to her. He dismissed what even the Army and Government of India confirmed and said positively that the lady's husband was still alive.

    In a matter of few minutes, the gathering of the married women offered this lady all things considered very auspicious for married women- Kum-Kum, Bangles, Turmeric, Beetle leaf and nuts, saree and all that. The woman could not believe what was happening, but she had huge confidence in the words of Maha Periyavaa so she accepted them whole heartedly and went home happily.

    A week after this incident, the lady's husband who was all mal nourished and weak but very much alive came home. The lady was stunned to see her husband back. On enquiry, the husband told how he was shot in his chest by enemy Army who dragged his severely wounded body and left in a deserted place. Some mountain region people found him and nursed him back to health. Without any communication connection with the outside world, this person could not convey to his higher officials that he was still alive. Once he gained strength to walk, this person started his walk back home and thus arrived at his wife's doorsteps on fine day.

    The lady's joy knew no bounds. As a couple they immediately went to Kanchipuram to pay their gratitude to the Seer, Maha Periyavaa. He also wished the couple good luck.

    So @Madhumagie , this is the snapshot of what your favorite writer posted here in IL. I feel blessed to do this translation today. So Thank you ! My humble Pranaams to His Holy Feet.
     
    Madhumagie and krishnaamma like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Madam Krishnamma,
    I am delighted to read your mail on 'periyavaalin karuna kataaksham' on a suwaasini pooja day.
    I am reminded of an incident in our village home in 1935 as narrated by my Amma. I have written a snippet 'Puratchipatti kamini' sometime in may 2014 to our group.here is an extract of the mail and english translation of the Tamil version also.

    [​IMG]


    Normally whenever a marriage, Seemantham or poonal is decided to be celebrated, the first thing asked for is" When is the Sumangali Prarthana Or Pondugal' and Samaaradhanai.
    We have been following this as per strict family traditions regarding number of
    pondugal, samayal etc etc.

    Some 100 years back there was no treatment for for ptyphoid and T. B.and mainly many youngsters ,boys within 25 to 30 years of age, all married , lost their lives.Having lived in a joint family I know the impact of such cruel ends. In many houses there will be a widowed athai or periamma with or without children, isolated and not allowed to participate in any of the auspicious functions and people avoided seeing their faces.
    What is the mistake they had committed?

    My kollu patti( appa's patti) was the head of the family. Hers was the final word at home.She was 86 and thatha was 93 suffering from paralysis. Patti was looking after all his needs.

    It was the year 1935. One of the grand sons of the patti was getting married. Everybody was talking about Sumangali Prathanai. Patti had altogether different ideas.

    A week before the marriage,kamu patti convinced and invited 25 young widows belonging to different communities from our village and next village on a particular day.
    The house was decorated with kolam & Semman. Nice lunch with payasam vadai was ready.

    Patti as usual gave bath to Thatha and made him sit on an easy chair. All were assembled in the koodam, some to witness and some to gossip.
    She started the pooja with a small slokam From Kanaka Dhara stavam of Adi sankara, and performed karpur Aarathi. All the ladies ( all widows) were served good lunch and provided with sarees and blouses.

    After the lunch she started giving a small lecture ( which my Amma, 35, at that time vividly remembered.
    Her talk in brief ran like this

    " கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைபட்டவள் .. ஆறு குழந்தைகளின் தாய்.நிறைய இன்ப துன்பங்களைப் பார்த்தவள்.என் பொறுப்பிலேயே 15, 20 கல்யாணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் சுமங்கலி பிரார்த்தனை நடக்கும்போது என் மனதில் தோன்றியது என்ன?


    ஒரு பெண் சுமங்கலியாக இறந்ததாலேயே தெய்வமாகிறாள் என்றால்,' சுமங்கலி பிராத்தனை என்பது ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு தான்.ஆனால் இது காலம் காலமாக மூளை சலவை செய்யப்பட்ட ( brain washed), பெண்களால் முழுதுமாக முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆண் ஆதிக்கம்.


    ஒரு பெண் தன கணவனுடன் சந்தோஷமாக வாழ்வது கொடுப்பினை தான். குழந்தைகளும் தாய், தந்தை இருவரது ஆதரவுடன் வளருவது மிக்க மகிழ்ச்சி தான்.

    ஆனால், ஒரு பெண் சுமங்கலியாக இறந்தவுடன் அவளை தெய்வமாக வழிபடுவதும்,கணவனை இழந்தவளை ஒதுக்கி வைப்பதும் எந்த விதத்தில் நியா யம் ?
    தன துக்கத்தை மறந்து, மறைத்து,குழந்தைகளுக்காக ஓடாக உழைத்து, படிக்க வைத்து, முன்னுக்குக் கொண்டு வந்து, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து , தான் 'அமங்கல ' மாகக் கருதப் பட்டாலும்,குழந்தைகளின் மங்கள வாழ்விற்குத் துணையாக இருப்பவள் அவள் தானே?

    தன்னை உருக்கி குடும்பத்தை ஒளிர வைப்பவள் அவள் தான்.

    இவ்வளவு நாட்களாக, குடும்ப வழக்கம், பாரம்பர்யம் , கலாசாரம் என்று என்னையே ஏமாற்றிக் கொண்டேன். இப்போது என் பேரனின் கல்யாணத்தின் போது தான் என் எண்ணத்தைச் செயலாகும் துணிவு வந்துள்ளது.




    எத்தனையோ முறை மடி, ஆசாரம் என்று ஏக ஆர்ப்பாட்டமாக நடந்த சுமங்கலி பிராத்தனையைவிட, இந்த முறை, ஜாதி, இனம் பார்க்காமல் கொண்டாடிய நிகழ்ச்சி மன நிறைவைக் கொடுத்தது .


    நான் அதிகம் படிக்க வில்லை.புரட்சி வீராங்கனை யும் அல்ல.. நற்பண்புகளுக்கு மதிப்புக் கொடுப்பவள் தான். பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டுள்ள என் கணவரை அவரது இறுதி மூச்சு வரை கவனித்துக் கொள்ளுவதில் எனக்குப் பெருமைதான். அதைவிட " சுமங்கலி' என்ற பதவியை நான் உசத்தியாக நினைக்கவில்லை. வாழ்வின் இறுதி என்பது நம் கட்டுப் பாட்டை மீறிய செயல்.

    கணவனை இழந்து , தன இன்பங்களைத் துறந்து, குடும்பத்தின் மங்கலத்துக்காகவே பாடுபடும் இந்த பெண்களின் ஆசி , புது மண தம்பதிகளை சிறப்பாக வாழ வைக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றாள் பாட்டி.


    5 வருடமாக மௌனம் காத்த தாத்தா கூட பொக்கை வாய் திறந்து சிரித்தாராம்.

    வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் கைதட்டிக் கொண்டே உள்ளே நுழைய, அதுவும் ஒரு traditional சுமங்கலி பொண்டுகளை நினைவு படுத்தியது. அனைவரின் கண்களிலும் நீர் நிரம்பியது.

    அன்று முதல் எங்கள் குடும்பத்திலும், அதைத் தொடர எண்ணின பல குடும்பங்களிலும் இந்த வழக்கம் பிரபலமாக நடக்கிறது. வசதியுள்ளவர்கள் இதை ஹால் எடுத்து செய்வதும் உண்டு.

    My mother had written what her kamu Patti spoke verbatim, and transferred the message to all the children of next geneartion.Paatti had done a silent Revolution those days. Kaamu Patti in her traditional madisar saree,a sincere house wife, opened the eyes of many people.

    We are not against tradition and culture. It is very rare to think of a lady born in 1850 to think along a different line notwithstanding the criticism she might have to face.

    When my daughter/ son's marriage were conducted, I spoke about this to my MIL, who ,having become a widow at the age of 29, saw reason and allowed me to follow Kamu Patti in our house also.


    Whenever any family is celebrating Sumangali Praththna in our village and surrounding towns, even today they talk about the Revoutionary Patti( Puratchi patti).

    It is not about breaking traditions or disrespecting elders.It is altogether a new dimension towards betterment of the society against the atrocities committed against women , who became victims to the cruel fate.Kudos to Kamu Paatti who derived a pet name 'Kamini' after this incident.

    The Translation of The Tamil version as requested by Viji Madam. Pl read my message along with this English version, which may not be a literal translation but the essence has been conveyed.

    Patti's talk
    -----------
    " I was married into a joint family. I had six children. I have seen enough of the joys and sorrows of family life.I myself have taken initiative to conduct 10 to 12 weddings and organized all the arrangements. Everytime when the Sumangali Prathana was conducted, do you know what I felt?

    A girl is deified just because she died as a 'Sumangali ( while her husband was alive), it means that Sumangali Prathana itself is a clear expression of male dominance.Pitiably ladies of those times were brain washed to accept the same and it has become a celebration gladly accepted by the brain washed women and celebrated essentially by women, men safely keeping aloof enjoying their dominance.

    It is no doubt a great blessing that both husband and wife live long with harmony and children are brought forth under the love, care and guidance of both the parents.

    But when a lady dies as a sumangali, she is deified, whereas a widow is secluded and separated from all the auspicious activities. She is the one who takes the role of father and mother, suffers day and night for educating the chilldren. Though being considered 'Amangal' or 'inauspicious' ,it is she who toils for the ' or 'mangal' or subiksha or welfare of the family.

    She keeps herself in the dark, behind the curtains to illuminate the entire family.

    For all these years I have been a silent spectator, giving respect to the traditions and customs keeping my own feelings buried. deceiving myself.Now only I have stood courageous and I want to give shape to my feelings during the wedding of my grandson.

    I have performed so many Sumangali Prarthanas following all the suddha, visuddhi formalities, very strictly adhering to the traditions. But the mental solace and satisfaction which I have obtained now on conducting a function without considering caste, creed discrimination giving due recognition to the really 'auspicious women' is beyond description and far more superior to what I experienced those days.

    I am neither educated, nor a revolutionary woman. I definitely regard family values and culture.I am taking care of my husband who is laid down with stroke for years. I would like to take care of him until his last breath and would prefer to die only after him. The status 'of " sumangali' is nothing compared to the life long service that I am fortunate to do to my dear husband with whom I have lead a harmonious for more than 75 years.

    The ultimate date of our life journey is something beyond our control.

    I sincerely hope that blessings by these women, who have sacrificed all their enjoyment for the 'mangal' or auspiciousness of others will really be beneficial to the couple entering into wedlock.
    The grand old man who never opened his mouth for the past five years laughed aloud giving a beautiful 'toothless smile'

    All the women standing outside the house watching the smart talk given by patti clapped their hands and entered the house.This scene reminded of the traditional sumangali Prathan in which . women clap their hands to denote the arrival of Sumangali Devathas ( women who died as sumangalis are supposed to have become Goddesses)

    Everybody was in tears and hugged patti and appreciated her.

    This practice is being followed in our family and some other families who were supportive of patti's great thoughts.
    Some people conduct this function even in big halls inviting the so called'inauspicious women' giving them the due recognition which they richly deserve."


    Jayasala 42
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi Madhu, Pavithra explained very well about the content of my post and I hope you are happy now :)
     
    Madhumagie likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you so much Pavithra..........really you helped me in time..........very good translation !................:clap2::clap2::clap2::clap2::clap2:
     
    PavithraS likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hats off to your kollu Patti! :thumbup: [​IMG][​IMG][​IMG]
     
    Last edited: Dec 21, 2016
  8. Madhumagie

    Madhumagie Silver IL'ite

    Messages:
    195
    Likes Received:
    182
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thank you so much for taking all the time to write in English :)
     
    PavithraS likes this.
  9. Madhumagie

    Madhumagie Silver IL'ite

    Messages:
    195
    Likes Received:
    182
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Yes Ma'am

    that was very nice to you to share , it was so informative , becoz i stay in bangalore much of tamil shankracharyas i dont know , though i had read about kanchipeeta gurujii who was accused for murder in paper , not much knowledge i have about such a powerful peeta and the pontif , thanks for knowing about them here in your post.

    thnks Ma'am
     
  10. Madhumagie

    Madhumagie Silver IL'ite

    Messages:
    195
    Likes Received:
    182
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Sorry typing mistake , " that was very nice of you to share ,.....")
     

Share This Page