1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புதிய உதவியாளர்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jun 4, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    [JUSTIFY]
    'வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்', என்ற வாசகமே உணர்த்தும், இவை இரண்டும் செய்வது எவ்வளவு கடினம் என்று! முன் நாளில், என்னதான் சண்டையும் சச்சரவும் இருந்தாலும், ஒரு கல்யாணம் வந்துவிட்டால், எங்கிருந்தோ சொந்த பந்தம் வந்து கூடும், உதவி செய்வதற்கு. நட்புடன் உள்ளூர் மாமிகள் பலர், முறுக்கு சுற்றவும், மற்ற பக்ஷணங்கள் செய்யவும், ஓடி வந்து உதவுவார்கள். வீட்டின் பின் கட்டில், புதிய கொடி அடுப்பு வைத்து, அதில் சீர் பக்ஷணங்கள் செய்யப்படும். முறுக்கில், மாப்பிள்ளை பெண்ணின் பெயர்களைக் கூட எழுதுவார்கள்! ஆனால், தீப்பெட்டி போல, அபார்ட்மென்ட்டில் வசிக்கும் இந்தக் காலத்தில், என்ன செய்ய முடியும்? நாலு பேர் வந்தாலும், திணறும் நிலைதான் இன்று!

    இதனால்தான் 'புதிய உதவியாளர்கள்' இக்காலத்தில் உருவெடுத்தார்கள். 'கல்யாணக் காண்ட்ராக்டர்கள்!' A to Z நாங்கள் செய்வோம் என்று கூறுவார்கள். இது நிஜம்தான். கல்யாணச் சடங்குகள் அனைத்தும் இவர்களுக்கு அத்துப்படி மங்கல வாத்தியம் ஏற்பாடு முதல், திருமண வைபவத்திற்கு வேண்டிய அனைத்தையும் இவர்களே கவனிப்பார்கள். பணக் கத்தை மட்டும் தயார் செய்தால் போதும் காலையில் மங்கல ஸ்நானத்திற்கு எண்ணெய், ஷாம்பூ தருவது முதல், பக்ஷணம் கொடுத்து உறவினர்களை அனுப்பும் வரை, தேவையான எல்லாமே, கவலைப்படாமல் பெண் விட்டார் முடிக்கலாம்.

    மேடை மீது அதிகம் உறவினர் செல்வதில்லை; 'கௌரி கல்யாண வைபோகமே' என்றுகூடப் பாடுவதில்லை எல்லாமே இயந்திர கதியில் செய்யப்படுகின்றன. நேற்று நான் சென்ற திருமணத்தில், பூ + அக்ஷதையைக் குட்டிச் சுருக்குப் பையில் இட்டு, அனைவருக்கும் தந்தார்கள்! அதற்கு எத்தனை பணம் வசூலிக்கப்பட்டதோ, அறியேன்! வரவேற்பில், இன்ஸ்டன்ட் மெஹந்தி, Portrait வரைதல் என்ற கவுன்ட்டர்கள் இன்றைய ஃபாஷன்! இதுபோலப் புதிய சேர்க்கைகளால், இருபது லக்ஷங்கள் செலவு என்பது சர்வ சகஜமாகப் போய்விட்டது.

    பெற்றோரின் கஷ்டங்களை நினைத்தேனும், புதுமணத் தம்பதியர், சண்டை போடாமல், இணைந்து இனிது வாழ்ந்தால், எல்லோருக்கும் நலமே!

    :exactly: [/JUSTIFY]
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Raji,

    Thank you for this wonderful blog. It is true that we have contractors for everything and it costs a lot of money. Sometimes, I feel building a house is easier but building a home (relationship) is hard. Even though the couple could go to a marriage counseling, I doubt how much an expert could help in relationship building.

    Viswa
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sir,

    Thanks for your nice feed back. :)
     

Share This Page