1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிறை நிலவாய் நான்

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 19, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஒரு வரி நீ, மறு வரி நான், என
    குறளாய் பிரியாது இருந்தோம்
    மேல் வரி நீ, கீழ் வரி நான், என
    இதழாய் பிரியாது இருந்தோம்

    உன் பிரிவினால் அர்த்தமற்ற
    குறளாய் ஆனேன் நான்
    உன் பிரிவினால் மொழியும்
    இன்றிப் பிழையானேன் நான்

    நீ இல்லாத நாட்கள் எனக்கு
    விடியாமலே போகட்டும்
    நீ இருக்கும் நாட்கள் எனக்கு
    முடியாமலே போகட்டும்

    பிறை நிலவாய் நான், உன்
    பிறை முகம் பார்க்கையில்
    முழு நிலவாய்
    நிறைவடைவேன் நான்
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ரசனைக்குரிய அழகு கவிதை......:thumbsup
     
  3. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    அழகான வரிகள்...... அருமை :thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குறள் என்று சொல்லி பிரிவில் தவித்திருக்கும் இன்னொரு வரியே.
    உன் மேலானவரின்(மேல் வரி) கீழான பார்வை(கீழ் வரி) எப்போதும் உன் மேல் தான்.
    இடறல் ஆகாதே..hury-burry ஆகாதே
    இன்னொரு வரியும் உன்கூடவே வந்திடுமே
    உன் பிறை முகம் தேய்வதற்குள்.....
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    superb lines... especially those lines...
    Keep rocking sanjana...
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ரொம்ப நல்லா இருக்கு சன்மித்திரன்..

    விடியா இரவேது
    முடியா நாளேது
    வளரா பிறையேது

    உன்னை முழுமையாக்க
    முழுமையாய் உன்னுடையவனாக
    வருவான் விரைவில்
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நன்றி உங்கள் ரசனைக்கும்.. அன்புக்கும்..
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கயல்... அழகான பெயர்... :)

    நன்றி உங்கள் அன்புக்கும், ரசனைக்கும்....
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    பிறை முகம் தேயாது.. எனை வளரும் பிறையாய் தன் தீராத காதலில் எனை வளரச் செய்யும் அத்தானின் அன்பிருக்க.. என்றும் வளர்வேன் நான்...

    கூடவே உங்கள் அனைவரின் அன்பும் இருந்தால்... நன்றி உங்கள் அன்புக்கும், அழகான பதிலுக்கும்..
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வரிகளில் நான் மிக ரசித்த வரிகளை நீங்களும் ரசித்ததை சொல்லி, எனை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த உனக்கு, நன்றி வைஷூ. :)
     

Share This Page