1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஞ்சாமிர்தம்

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 29, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பஞ்சாமிர்தம்
    ---------------------------
    நாம் என்னவோ பழனியிலும் , திருச்செந்தூரிலும் டின் அல்லது பிளாஸ்டிக் டபபாக்களில் கிடைப்பது தான் பஞ்சாமிர்தம் என்று எண்ணுகிறோம்.சீவக சிந்தாமணியைப் படியுங்கள்.பஞ்சாமிர்தம் என்றால் என்னவென்று புரியும்.

    நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
    நல்வரை யமிர்தமு மல்லாக்
    காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
    கண்ணகன் புறவெதிர் கொண்டார்.

    பாடல் 2110-ன் பொருள்

    அந்நாட்டு மன்னன் உத்தரவுக்கு இணங்க சீவகனை எப்படி வரவேற்றனர் என்பதில் நாட்டில் கிடைக்கும், கடலில் கிடைக்கும், காட்டில் கிடைக்கும், மலையில் கிடைக்கும் ஐந்து ஐந்து வகையான பொருள்களுடன் சீவகனை வரவேற்றனர்.

    அவை யாவை:
    நாட்டில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்: நெல், பயறு, இளநீர்,கரும்பு, வாழை

    கடலில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
    முத்து, பவளம், சங்கு, உப்பு, ஓர்க்கோலை (ஆம்பர் எனப்படும் திமிங்கிலக் கழிவுப் பொருள்)

    மலையில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
    தக்கோலம் (வால் மிளகு அல்லது சிறுநாவல் பூ), தீம்பூ (வாசனைத் திரவியங்களில் ஒன்று அல்லது கிராம்பு) ஏலம், கற்பூரம், ஜாதிக்காய்

    காட்டில் கிடைக்கும் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
    தேன், அரக்கு, சந்தனம் ,மயில் பீலி, நாவி (கஸ்தூரி அல்லது புனுகு)

    இதோ பாடல் வடிவில்:–

    நாட்டிலமிர்து :’செந்நெல் சிறுபயறு செவ்விள நீர், செழுங்
    கன்னல் கதலியோ டைந்து’
    கடலமிர்து :’ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
    நீர்ப்படும் உப்பினோ டைந்து’

    வரையமிர்து :’தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
    கர்ப்பூரம் சாதியோ டைந்து’

    காட்டிலமிர்து :’அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி
    திருத்தகு நாவியோ டைந்து’

    இனிமேல் யாராவது பஞ்சாமிர்தம் என்றால் என்னவென்று கேட்டால் ஒரு உபன்யாசம் நிகழ்த்தி விடுங்க

    Jayasala 42
     
    PavithraS likes this.

Share This Page