1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஞ்சகல்யாணி-2

Discussion in 'Stories in Regional Languages' started by Ilamuriyan, Feb 16, 2013.

  1. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    [​IMG]

    முனுசாமி தொடர்ந்தார். " முத்து முதலில் நீ குதிரைகளைப் பற்றி தெரிந்து கொள்ளணும். குதிரைகள் பரம்பரை பரம்பரையாக நம்ம குடும்ப நண்பர்கள். நம்ம வாழ்க்கை அவர்களை சார்ந்து தான் இருந்திருக்கிறது. பஞ்சகல்யாணியும் பரமகல்யாணியும் சிவராசனுக்கு இரு கண்களாக இருந்தார்கள். இரண்டு குதிரைகளும் எப்போதும் சேர்ந்தே இருக்கும். சிவராசன் அவைகளை நன்றாக பழக்கி அவைகளுடன் விளையாடுவார். அவைகளை ஓடவிட்டு பின்னிருந்து தாவி அவைகளின் மீது ஒரு கால் பஞ்சகல்யாணி மீதும் மற்றொரு கால் பரமகல்யாணி மீதும் வைத்து நிற்பாராம். அவைகள் வேகமாக் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு குதிரையிலிருந்து இன்னோரு குதிரைக்கு தாவுவாராம்".

    முனுசாமி விவரித்த காட்சிகளை தன் மனக்கண்முன் கொண்டு வந்து ரசித்து முத்து கை தட்டினான்.

    " இரண்டு குதிரைகளும் ஒரே வேகத்தில் ஓடி ஒரே மாதிரி நடந்தாலும் அவைகளிடையே சில வேறுபாடுகள் இருந்தனவாம். பஞ்சகல்யாணிக்கு நிறைய ஞாபக சக்தி உண்டுனு சொல்வாங்களாம். அந்த ஞாபக சக்தி ஒரு நாள் சிவராசனுக்கு உதவியா இருந்தது. ஒரு நாள் பக்கத்து காட்டு வழியில் இரண்டு குதிரைகளுடன் அவர் வெகு தூரம் சென்று விட்டார். வீடு திரும்ப வழி தெரியாமல் அவர் திகைத்த போது பஞ்சகல்யாணி ஒரு பாதையில் ஓட ஆரம்பித்ததாம். பரமகல்யாணியும் பஞ்சகல்யாணியுடன் இணைந்து ஓட இறுதியில் அவர் வீடு வந்து சேர்ந்தாராம். அன்றிலிருந்து பஞ்சகல்யாணியின் ஞாபக சக்தி மீது சிவராசனுக்கு பெருமிதம் வந்தது. பரமகல்யாணி கொஞ்சம் முரட்டு குதிரை. சில சமயங்களில் சண்டித்தனம் பண்ணும். ஆனால் பஞ்சகல்யாணி அந்த சமயங்களில் பொறுமையாக இருந்து அவருக்கு ஆறுதல் அளித்தது.

    இரண்டு குதிரைகளும் இணைந்து ஓடுவதையும் அவற்றின் மீது அமர்ந்து அவைகளை லாவகமாக சிவராசன் கையாளுவதையும் பார்த்தால் கோழைகளுக்கு கூட வீரம் வந்துவிடும். அந்த குதிரைகள் அந்த ஊர்காரர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.

    பஞ்சகல்யாணியும் பரமகல்யாணியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே முடியாது என்பதை சிவராசன் பல முறை கண்டுள்ளார். அந்த குதிரைகளைப்பற்றிய செய்திகள் பாண்டிய மன்னரின் காதுக்கு எட்டியதூ. மாறு வேடத்தில் அமைச்சருடன் வந்து சிவராசனின் குதிரை லாயத்தை மறைந்திருந்து பார்த்த மன்னர் அந்த குதிரைகளின் வலிமை, அம்சம், கம்பீரம் இவற்றை பார்த்து வியந்தார். மன்னரின் பட்டத்து குதிரைக்கு வயதாகி களையிழந்து காணப்பட்டது. மன்னர் அமைச்சரிடம் சிவராசனிடமிருந்து ஏதாவது ஒரு குதிரையை வாங்க ஏற்பாடு செய்தார்.

    ஆனால் சிவராசனோ “இந்த குதிரைகள் என்னை பொருத்தவரை வெறும் குதிரைகளல்ல*, என் குடும்பத்தில் ஒருனவர்களாக அவர்களை நான் பாவிக்கிறேன்.. நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவர்கள் என் நண்பர்கள். நண்பர்களை ஒருவர் விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறிவிட்டான்.

    சிவராசனின் பதிலைக் கேட்டு கோபமடந்த மன்னர் அமைச்சரிடம் சிவராசனின் குதிரை லாயத்திலிருந்து இரண்டு குதிரைகளில் சிறந்த குதிரையை கைப்பற்றி வருமாறு கூறினார். பாண்டிய மன்னரின் வீரர்கள் சிவராசனின் குதிரை லாயத்திற்கு சென்று பஞ்சகல்யாணி குதிரையை கைப்பற்றினர். சிவராசன் எவ்வளவோ போராடியும் மன்னரிடம் சென்று மன்றாடியும் பார்த்தான். ஆனால் பஞ்சகல்யாணியை அவன் பிரிய வேண்டியதாயிற்று. பஞ்சகல்யாணியின் பிரிவு அவனை மட்டும் பாதிக்கவில்லை பரமகல்யாணி குதிரையையும் பாதித்தது. பிரிவின் துயரம் தாளாமல் பரம்கல்யாணி குதிரை நோய்வாய்பட்டு தன் உயிரை விட்டது. சிவராசன் பித்து பிடித்தவன் போலானான்."

    கதையை கேட்டு முத்து அழத்தொடங்கினான். அழுகையினிடையே " பஞ்சகல்யாணி குதிரைக்கு என்ன ஆச்சு?" என்று முனுசாமியை கேட்டான்.


    தொடரும்
     
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ilamuriyan..
    nice update...

    mannar yen sivarajan ah purinjukla..
    ippo paramakalyani kudhirai irnadhuruchu...
    panja kalyani kudhirai epdi iruku?
     
  3. helpmeangel

    helpmeangel Platinum IL'ite

    Messages:
    1,795
    Likes Received:
    1,005
    Trophy Points:
    208
    Gender:
    Female
    I have just one concern..the updates are very short.. :) good going!!!
     

Share This Page