1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 7

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Feb 2, 2012.

 1. priia192

  priia192 Bronze IL'ite

  Messages:
  16
  Likes Received:
  27
  Trophy Points:
  33
  Gender:
  Female
  வாரநாட்கள் எப்படியோ கடந்து விட்டது மஞ்சரிக்கு விடுமுறை நாட்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெள்ளி இரவு ஹோட்டல் வந்த மஞ்சரிக்கு போரடித்தது. எவ்வளவு நேரம் தான் அந்த சிறிய ரூமிற்குள் இருப்பது? இன்டர்நெட் டிவி எதுவும் பயனளிக்க வில்லை. பெற்றோரின் நினைவு அவளை வாட்டி கொண்டு இருந்தது. பிறந்ததிலிருந்து இவ்வளவு நாள் அவர்களை விட்டு பிரிந்தது இல்லை. அதுவும் இவ்வளவு தொலைவில். இங்குள்ள தனிமை அதை இரட்டிப்பாக்கியது.

  சனியன்று மதியம் வரை நேரத்தை ஒட்டி தள்ளிய மஞ்சரி முடியாமல் சிறிது தூரம் எங்காவது வெளியில் நடந்து விட்டு வரலாம் என்று கிளம்பினாள். இங்கு உள்ள வானிலை பற்றி சரியாக தெரியாத மஞ்சரி மழைக்கும் குளிருக்கும் இதமான உடை அணிய மறந்து விட்டால். அவள் வெளியில் செல்லும் பொது நன்றாக இருந்த வானம் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டி விட்டது. இதெல்லாம் கவனிக்காத மஞ்சரி கால் போன போக்கில் நடந்து கொண்டு இருந்தாள். திடீரென இரு மழை துளிகள் அவள் மேல் விழுந்ததும் உணர்வு பெற்ற மஞ்சரி அவசரமாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள். எனினும் அவள் திரும்ப ஹோட்டல் வந்து சேர்வதற்குள் தெப்பலாக நனைந்து விட்டாள். குளிர் எலும்பு வரை உடுறவி இருந்தது.

  நடுக்கத்துடன் ரூம் கதவை திறந்த மஞ்சரி அவசரமாக குளியலறை சென்று சுடுநீரில் குளித்தாள். இருந்தும் அவளால் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. அரைகுறையாக உடைமாட்டி கொண்டு கட்டிலில் விழுந்து போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்க முயன்றாள். சிறிது நேரத்திலேயே அவளுக்கு நல்ல காய்ச்சல் வந்து விட்டது. சின்ன வயதிலிருந்தே hospital என்றால் மஞ்சரிக்கு அலர்ஜி. வற்புறுத்தி தான் அவளை அழைத்து செல்ல முடியும். இப்பொழுது யாரும் இல்லாததால் அவளுக்கு hospital செல்லும் எண்ணமும் வரவில்லை. அப்படியே தூங்கி போன மஞ்சரி காய்ச்சலும் உணவு எதுவும் உட்கொள்ளாததாலும் மயக்கமாகி விட்டாள்.
  அர்ஜுன் அவளது அறைகதவை திறந்து கொண்டு வந்து பார்த்த போது அவளது உடல் கொதித்து கொண்டு இருந்தது. உடனடியாக அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கே emergency ரூமில் அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்தார்கள். மதியத்திற்கு மேல் மஞ்சரிக்கு நினைவு திரும்ப ஆரம்பித்தது. அதுவரை அர்ஜுன் தான் தவித்து போய் விட்டான். நேற்று வேலை என்று அவளுக்கு ஒரு போன் கூட செய்யாமல் போய் விட்டோமே என்று வருந்தி கொண்டு இருந்தான்.

  மஞ்சரி கண்விழித்ததும் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த அர்ஜுனை பார்த்தாள்.

  அர்ஜுன், "அப்பா எந்திரிச்சாச்சா!! உடம்பு சரி இல்லேனா ஒரு போன் பண்ண மாட்டியா? உனக்கு என்ன ஆச்சோன்னு நான் பயந்து போய்டேன்"


  மஞ்சரி, " லேசான காய்ச்சல் தானே அதுவே சரி ஆகிடும்னு நினைச்சேன்"


  அர்ஜுனுக்கு இருந்த கோபத்தில் அவளை நன்றாக திட்டி இருப்பான். உடம்பு சரி இல்லாதவளை நாமும் வருத்தபடுத்த கூடாது என்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு அமைதியாக பேசினான்.

  " லேசான காய்ச்சலா? நேத்து நைட்லிருந்து ஞாபகம் இல்லாம இருக்கே அது உனக்கு லேசா? இன்னிக்கும் நான் வராம இருந்து இருந்தா என்ன ஆகி இருக்கும்? என்னாலே நினைச்சு கூட பார்க்க முடியலே"


  அர்ஜுனின் இந்த வார்த்தைகள் மஞ்சரிக்கு இதமாக இருந்தது. தன்னை பார்த்துக்கொள்ள ஒரு ஆள் இருப்பது அவளுக்கு சந்தோசமாக இருந்தது. அதனால் சிரிக்க முயன்றாள். அவளது சிரிப்பை பார்த்த அர்ஜுன் அவளை நன்றாக திட்டி விட்டான். அவனை பொறுத்த வரை மஞ்சரி ரொம்பவுமே விளையாட்டாக இருப்பதாக நினைத்து விட்டான். ஆனால் மஞ்சரிக்கு தான் அர்ஜுனை பற்றி சரியான முடிவுக்கு வர முடியவில்லை. சில நேரங்களில் நன்றாக பேசும் அர்ஜுன் உடனே முறைத்து கொள்வதால் அவளால் அவனோடு பழகவும் முடியவில்லை விலக்கி வைக்கவும் முடியவில்லை.


  ஹாஸ்பிடல்'இல் இருந்து அவளை அழைத்து சென்ற அர்ஜுன் தானும் அவளோடு தங்குவதாக சொன்னதும் மஞ்சரிக்கு அதிர்ச்சி ஆகி விட்டது. ஆனால் சரியாக நடக்க கூட முடியாத நிலையில் யாரும் இல்லாமல் இருப்பது முடியாது என்பதால் அவள் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள். உடம்பு சரிஇல்லாமல் போனதை அவள் வீட்டுக்கு தெரிவிக்காததால் அர்ஜுனின் தங்கலும் மறைக்க பட்டது.

  அர்ஜுன் திங்கட்கிழமையும் லீவ் சொல்லிவிட்டு அவளை விட்டு எங்கும் நகராமல் அவளை பூப்போல பார்த்து கொண்டான்.


  அர்ஜுன் இருந்த இரண்டு நாட்களும் மஞ்சரியை ஒரு மகாராணி போல உணர வைத்தான். காய்ச்சலுக்கு இதமாக கஞ்சி செய்து கொடுத்ததிலிருந்து அவளுக்கு எந்த அசௌர்கியமும் நேராமல் பார்த்து கொண்டான். அவனது பணிவிடைகளால் மஞ்சரியின் மனதில் அர்ஜுன் பலபடிகள் உயர்ந்து விட்டான். மஞ்சரியும் அவனோடு நன்றாக உரையாட ஆரம்பித்து விட்டாள்.


  திங்கள் இரவு அவன் கிளம்ப தயார் ஆனதும் அவனது பிரிவை மஞ்சரியால் தாங்கி கொள்ள முடியவில்லை. அர்ஜுனாலும் தான். இருந்தும் இருவரும் வெளியில் காட்டிகொள்ளாமல் பிரிந்தனர். அன்றைய இரவு முழுவதும் எப்பொழுது விடியும் மற்றவரை சந்திப்போம் என்றே இருவரும் நினைத்து கொண்டு தூங்கி போயினர்.


  செவ்வாய் காலை அர்ஜுன் தனது காரோடு மஞ்சரியின் ஹோடேலுக்கு வந்து விட்டான். அவனை பார்த்த உடன் சந்தோசமாக வந்து காரில் ஏறிகொண்டாள் மஞ்சரி. இருவரது உறவும் ஒருபடி முன்னேறிவிட்டது.


  இரண்டு மாதங்கள் கழித்து..

  மஞ்சரி அர்ஜுனது அபார்ட்மென்ட் அருகிலேயே வந்துவிட்டாள். அவளுடன் தங்கி இருந்த பெண்ணை அவளுக்கு பிடிக்க வில்லை என்றாலும் அர்ஜுனின் அருகில் இருக்க முடியும் என்பதால் பொறுத்து கொண்டாள். இந்த இரண்டு மாதத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள் ஆனாலும் அர்ஜுன் தனது மனதை மஞ்சரியிடம் வெளிபடுத்த வில்லை. மஞ்சரிகும் அவன் மேல் பிரியமுண்டு என்று அவன் மூளை சொன்னாலும் எங்கே தான் தனது காதலை சொல்லும் போது அவள் மறுத்து விடுவாளோ என்ற பயத்தில் சொல்வதை தள்ளி போட்டு கொண்டே இருந்தான்.


  ஆனால் தன் பாட்டியிடம் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொண்டு விட்டான். பாட்டியும் அவனை தனது காதலை சொல்ல தூண்டி கொண்டு தான் இருந்தார்கள் ஆனாலும் எதோ ஒன்று தடை செய்ய அவன் சொல்லாமலே தள்ளி போட்டு கொண்டே இருந்தான். இந்த நிலையில் பாட்டி அங்கு வருவது முடிவாகி விட்டது.


  இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவார்கள் என்ற சமயத்தில் அர்ஜுன் தனி வீடு பார்த்து கொண்டு குடி போனான். மஞ்சரி அவனுக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்தாள்.அவனது புதிய வீட்டுக்கு அனைவரையும் அழைத்து விருந்து வைக்க அர்ஜுன் விரும்பினான். மஞ்சரியும் விருந்துக்கான வேலைகளில் ஆர்வமுடன் பங்கேற்று கொண்டாள். இந்த சமயத்தில் தான் மஞ்சரிக்கு அர்ஜுன் மேல் தான் கொண்டுள்ள காதல் தெளிவாகியது.
   
  3 people like this.
  Loading...

 2. meenakshijanani

  meenakshijanani Silver IL'ite

  Messages:
  326
  Likes Received:
  90
  Trophy Points:
  68
  Gender:
  Female
  Hai Priaa,
  Romba Vegama rendu masathai oottiteenga.
  Arjun Manjariyai nerunga vaichiteenga.
  ippo pattiyai vera varavalaikka poreenga..
  kooda irukkum ponnai pidikalainu hint vera?
  What's next?
  Waiting.
   
 3. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hi ma...
  epdiyo arjun vandhu hospital kooptu poi manjari ah nalla pathukuttan... he s taking care of manju well.......
  rendu perum eppo love ah solla poranga....
  patti kitta manju epdi nadandhuppa???
   
 4. JananiSubbu

  JananiSubbu Silver IL'ite

  Messages:
  300
  Likes Received:
  57
  Trophy Points:
  68
  Gender:
  Female
  hi...
  athukulla rendu perukum love vanthutucha...!!!
  patti than intermediator ah....avanga naala than love a unnarvala manju...
  any surprising incident will occur....
   
 5. devivbs

  devivbs Platinum IL'ite

  Messages:
  1,572
  Likes Received:
  1,073
  Trophy Points:
  283
  Gender:
  Female
  hi Priia..
  oru valiya Arjun-Manjari nerungi palaga aaramchutaanga..
  Manju ku roomate pidikala nu sonneengale! oru velai antha pen Arjun kooda nerungi palagum pothu varum poramaiyai kondu thaan Arjun mel thanakkulla love ah purinjupalo Manju?
  eagerly waiting ma..
  -devi.
   
 6. Vasupradha

  Vasupradha Gold IL'ite

  Messages:
  448
  Likes Received:
  330
  Trophy Points:
  123
  Gender:
  Female
  Hi Priiaa,

  Paatti vandhu daan rendu paerayum serththu vekka poraangalaa......... manju eppadi purinjukka pora....arjunah love panromnu.........waiting eagerly for next post!!

  Vasupradha.S
   
 7. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  பிரியா பா,

  கதை அழகா கொண்டுபோறீங்க பா......
  மஞ்சு எப்படி தெரிஞ்சுகிட்டா?......
   
 8. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hi ma...
  waiting for next update...
   
 9. priia192

  priia192 Bronze IL'ite

  Messages:
  16
  Likes Received:
  27
  Trophy Points:
  33
  Gender:
  Female
  Hi all,

  Sorry!!! i am busy with some work.. will post the next update soon..
   

Share This Page