1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நெருப்பு

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 20, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எப்போதும் மேல்நோக்கி இருக்கும்,
    பற்பல நாவுகள் கொண்டிருக்கும்,
    அவிர்ப்பாகம் தேவரிடம் சேர்க்கும்,
    அனைத்தையுமே புனிதப்படுத்தும்,

    அக்னியே! நீயும் சூடுபட்டவனாய்
    உணர்ந்தாயோ பாவம் அந்நேரம்?
    அதனால் தானோ, ஒடுங்கியதாய்
    உன் தோற்றமும் கண்டது வெகுநேரம்?

    எங்கள் சீதை உனில் இறங்கி,
    தன் கற்பை உலகுக்கு நிரூபித்தாள்.
    உந்தன் கர்வமெலாம் ஒடுங்கி
    தழையா உனையும் குனியச் செய்தாள்.

    தழைந்தது உன் தலை மட்டுமன்று.
    விளங்கிய அவள் புகழ் சிறிதன்று.
    தன் பதி பெயரும் காத்திட்டாள்.
    தழதழப்புடன் தன்னிலை உரைத்திட்டாள்.

    அவள் பதியோ அவளைக் குறை சொன்னார்.
    அவளை உன்னுள்ளே புகச் சொன்னார்.
    அதனாலே அவள் பழி நீங்கியது.
    அவரை பலர் மனமும் தூற்றியது.

    ஏன் சொன்னாரென அவள் மனமும்
    அரற்றிக் கொண்டே இருந்ததுவாம்.
    பிறர் முன் அவள் புகழும் குறையாது
    என்றே அவர் மனமும் மகிழ்ந்ததுவாம்.
     
    Loading...

  2. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    சீதையின் செயலையும், நெருப்பையும் நீங்கள் ஒப்பிட்ட விதம் அருமை!!! மொத்தத்தில் கவிதை அருமை!!!!
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Kayalvizhi, for your appreciation. Happy to receive a first from you. Besides, I still expect a lot of brickbats for 'justifying' Rama's act there. -rgs
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    RGS,

    Thank you for this wonderful poem.

    களங்கமில்லாதவன் தன் மணாளன்
    என்று களங்கிய கற்புக்கரசி
    மன்னனிடம் நீதி கேட்டபின்
    சுட்டெரித்தாள் மதுரையை தன் கற்பினால்
    சீதை இறங்கியதால் பட்ட வலி
    கண்ணகிக்கு உதவியதால் நீங்கியதோ?
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Quite a different thought Viswamitra. Liked it so much. That incident too, is debatable. Btw, did you happen to watch a wonderful programme in Podhigai TV on 15 Jan, where the topic of the PattimanRam was, "Which is the best? Kambaramayana or Silappadhigaram? -rgs
     

Share This Page