1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 2

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 7, 2011.

 1. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  தோழிகளே நீங்கள் கொடுத்த தைரியத்தில் அடுத்த பாகத்தையும் போட்டுவிட்டேன் படித்து விட்டு கருத்து கூறுங்கள் பா.........
  நான் என்பதே நீயல்லவா - 2


  அலுவலகம் சென்றவனை வரவேற்றது அளவுகதிகமான வேலைகளே வேலையில் மூழ்கியவனுக்கு மூச்சுவிடவும் நேரமில்லை ஒரு வழியாக மாலை 5 மணிக்கு தன் அன்றாட அலுவலை முடித்து வீடு செல்ல பயணமானான்.

  ------------------------------------------------------------------------------
  வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது உத்ரா கேட்டாள்
  "காலைல போன் பண்னேனே யார்கிட்ட டி கடலை வறுத்த?"

  "சரண் கிட்ட பேசிகிட்டு இருந்தேன்டி"

  "சரணா யாருடி அது எனக்கு தெரியாம?" என்றாள் குறும்போடு

  "ஏய் லூசு சொன்னேல பெரிப்பா பையன் டி" என்று முதுகில் ஒன்று வைக்க

  "ஆமா சொன்னேல மறந்துட்டேன் Sorry Pa..."

  அதற்கு மேல் சரணை பற்றி அவளும் கேட்கவில்லை இவளும் சொல்லவில்லை .


  உத்ராவும் விஜியும் சென்ற இடம் "ROTARY CLUB OF TIRUPUR". அதன் நுழைவாயிலை அடைந்தவுடன் இருவருக்கும் தங்களின் முதல் சந்திப்பு நினைவு வர இருவரும் அதை அசைபோட்டனர்.


  ROTARY CLUB அந்த ஊரில் பல நல்ல காரியங்களை சமுகநலனுக்காகவும்,மக்கள்நலனுக்காகவும் பல்வேறு பள்ளிகளையும்,சமுக அமைப்புகளையும் தன்னுள் இணைத்து கொண்டு செயல்பட்டு வருகிறது.இருவரும் பள்ளியில் NSSல் இருந்ததால் நிறைய சமுகப்பணிகளை இந்த நிறுவனத்துடன் இணைந்து செய்துள்ளனர் அதுவே பழக்கமாக இப்போதும் தங்களால் இயன்றதை அவ்வபோது செய்து வருகின்றனர்.


  அன்று இரத்த தான முகாம் இருந்தது அதற்கு தங்களால் இயன்றதை செய்து கொண்டிருந்தனர் இருவரும் முகாம் முடிந்து மாலை 5 மணிக்கு அனைவரும் கிளம்பியிருக்க அந்த இடமே காலியாகியிருந்தது தன் வண்டியை எடுத்து கொண்டு வெளிவந்த உத்ரா,வண்டி பஞ்சர் ஆன நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்த விஜியை பார்த்தாள்.

  "என்னாச்சு?"

  "வண்டி பஞ்சர் அதான் என்ன பண்றதுனே தெரியல"

  "எங்க போகனும்?"

  "காலேஜ் ரோடு"

  "வாங்க நானும் அந்த பக்கம் தான் போறேன்"

  இப்படித்தான் தொடங்கியது இவர்களின் நட்பு.இருவருக்கும் முதல் நாளே நெடுநாள் பழக்கம் போல் தோன்ற ஒருவரை ஒருவர் உயிர்தோழியாய் ஏற்று உன்னத நட்பில் அங்கமானார்கள்.அந்த நினைவில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

  இன்று அவர்கள் செல்லவிருந்தது கோவை மாநகரில் இருக்கும் ஒர் அனாதை இல்லத்திற்க்கு தங்களின் குழுவோடு இணைந்து பயணப்பட்டனர்.அங்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவியாய் தங்களால் இயன்றதை செய்துவிட்டு மாலை 5 மணிக்கு மனதிருப்தியுடன் கிளம்பினர் இருவரும்.

  காலையிலிருந்து வேலை செய்த களைப்பால் ரிஷியால் சாலையில் கவனம் செலுத்த முடியவில்லை.இவர்கள் இருவரும் தங்கள் பேச்சில் முழ்கியிருந்ததாள் சாலையை கவனிக்கவில்லை.ஒரு திருப்பத்தில் இரு வண்டிகளும் நேருக்கு நேர் சந்தித்தன............


  கடைசி நேரத்தில் முன்னால் வண்டி வருவதை பார்த்த ரிஷியும்,உத்ராவும் பிரெக் போட இருவண்டிகளும் லேசாக உராய்ந்து முட்டி நின்றன.இரு பெண்களின் கண்களிலும் அப்பட்டமான அதிர்ச்சி, விபத்து கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டதால் பெருமூச்சு ஒன்றை சொறிந்தவன் அந்த இருவரின் பக்கம் பார்வயை திருப்பினான் தன் மேல் உண்டான கோபத்தையும் அவர்களிடம் காட்டலானான்.


  "வண்டி ஒட்டறிங்களா இல்ல ,ப்ளைட் ஒட்டறீங்களா? பெரிய ரதினு நினைப்பு ரெண்டுபேருக்கும் முன்னாடி பாக்காம வரிங்க, திருப்பத்துல ஹாரன் பண்ணும்னு தெரியாத உங்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா?" என்று அவன் போக்கில் பொரிந்து தள்ள  கூட்டம் கூடிவிட்ட படியாலும்,தங்களின் மேலும் தவறுள்ள படியாலும் இருவரும் ஒன்றும் பேசாமல் வண்டியை திருப்பிகொண்டு வந்துவிட்டனர்.வரும் வழியில் இருவரும் ஏதும் பேசவில்லை.விஜியின் வீட்டை அடையும் போது இருவரின் மனமும் ஒரளவு சமன்பட்டிருந்தது.உத்ரா விஜி வீட்டில் காபி அருந்திவிட்டு பிரபாவதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றாள்.

  உத்ரா வீட்டினுள் நுழைந்ததும் தங்கையின் சீண்டலிலும்,தந்தையின் பேச்சிலும் இந்த சம்பவத்தை மறந்தே போனாள்.


  ஆனால் விஜியால் தான் மறக்க முடியவில்லை தன் மேலும் தவறு இருக்கும் போது அவர்களை மட்டும் குற்றம் சொல்லியதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை அவன் கூறிய அதே வார்த்தைகளால் அவனையும் காயபடுத்த வேண்டும் என்று எண்ணினாள்.அவன் முகமும் ,அவன் பேசியதுமே அவள் மனதிரையில் ஒடிக்கொண்டே இருந்தன.அவன் மேல் உள்ள வெறுப்பு தான் அதற்கு காரணம் என்று நினைத்தாள்.ஆனால் அது வெறுப்பு தானா?.........

  --------------------------------------------------------------------------------------------------------

  வீட்டிற்கு வந்த ரிஷியோ என்னென்று அறியாத உணர்வுகளில் சிக்கித்தவித்தான்.என்றும் வாய் ஒயாமல் பேசுபவன் இன்று ஒன்று பேசாமல் சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்தனர் குருமூர்த்தியும் லட்சுமியம்மாளும்.ஆனாலும் எதுவும் கேட்கவில்லை.


  கண்களில் இப்பவோ அப்பவோ என்று கொட்ட காத்திருந்த கண்ணீருடன் பார்த்த அந்த பெண்ணின் முகமே மனதில் தோன்றி ரிஷியை இம்சித்தது.அவள் கண்ணீரை துடைத்து தன்னோடு சேர்த்தணைத்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது தன் எண்ணப்போக்கை அறிந்தவன் அதிர்ந்தான்.

  முதல் முறை பார்க்கும் பெண்ணை நான் ஏன் இப்படி நினைத்தேன்? யார் அவள்? இவள் தான் என்னவளா? எனக்குள் காதல் வந்து விட்டதா? அதனால் தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதா? என பல கேள்விகளை தனக்குள் கேட்டு கொண்டான்.அவள் தன்னை ரொம்பவும் பாதிக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது மற்ற எதுக்கும் அவனிடம் பதில் இல்லை.

  அவளைப்பற்றி எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும்,
  ஆனால் எப்படி?அவள் இந்த ஊர் தானா? என்ன செய்கிறாள்?அவளுடன் ஒருத்தி இருந்தாலே யார் அவள்? இப்படி அவளை பற்றி சிந்தித்த படியே அவனறியாமல் கண்ணயர்ந்தாள்.

  இவன் எண்ணம் பலிக்குமா பொறுதிருந்து பார்ப்போம்...........................
   
  3 people like this.
  Loading...

 2. AkhilaaSaras

  AkhilaaSaras Gold IL'ite

  Messages:
  1,514
  Likes Received:
  396
  Trophy Points:
  160
  Gender:
  Female
  hey ena thean na keta udaney potutua yaruku yar jodi nu... kalaku.... come on come on
   
 3. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks aki pa......

  neega kettu sollana eppadi,

  apparam kalyana velai ellam eppadi pohuthu? pa
   
 4. bsaranya

  bsaranya Senior IL'ite

  Messages:
  56
  Likes Received:
  20
  Trophy Points:
  23
  Gender:
  Female
  hai then,ladies eppadi sandai podamal vantenga (pen kulatuke avamanam).viji risiya ninaikira,rishi yaarai ninakirar?
   
 5. nithyakarthigan

  nithyakarthigan Gold IL'ite

  Messages:
  600
  Likes Received:
  509
  Trophy Points:
  188
  Gender:
  Female
  Hi Thenu...

  Sorry yesterday i was not able to give you comment....:bowdown

  Good start...:thumbsup Rishi rendu perla yaarai paththi nenahchaan.... viji thaane....?


  Best Wishes Thenu... Keep going....:)
   
 6. sipanneer

  sipanneer Bronze IL'ite

  Messages:
  447
  Likes Received:
  43
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Hi Theanu,

  Rishi yaara ninaichaan...viji..thane..vijiye irukattum paa..
  viji thaane rishiya ninaikiraal.....
  uthiya thaan ninaichaano..theriyalaiye..
  aana oru jodi confirmed......aduththa jodikku scene..
   
 7. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Yeh good going ma. Ithu enna triangle luv storyah illa Rishiyum vijiya than ninaichana..........:confused2:
   
 8. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks saranya,

  sandai podalamnu than irunthom avana parthu pavama irunthalla vittutom engaluku eraka manasu pa.........
  rishi yaarai ninakiran?- theriyalaiye.....

  keep reading pa......
   
 9. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks nithi pa.......

  sorry lam ethuku pa neega padichathe santhosam ........

  Rishi yaarai paththi nenahchaan - ketu sollaren.......

  keep reading pa......
   
 10. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks sumathi pa.........

  Rishi ya keten pa theriyalanu solaran

  adutha jodikku scene varum........

  keep reading pa...............
   

Share This Page