1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாங்கள் தமிழர்கள் தான்

Discussion in 'Regional Poetry' started by strangerrr, Feb 20, 2012.

  1. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அந்நிய ஆட்சியாளர்கள் விட்டு சென்ற ஆங்கிலம் மொழி
    அறை-பகிர்த நண்பன் பேசிய அண்டை மாநில மொழி
    வேலை தேடி சென்ற கட்டாயத்தால் கற்ற வட இந்திய மொழி
    பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த பாவத்துக்கு கட்டாயமான உலக மொழிகள்
    பயணத்தில் கண்ட-கடந்து சென்றோர் பேசிய இன்னும் பல மொழிகள்





    இப்படி பல காரணங்களால் தாய்மொழில் தடுமாறினாலும்
    பேசும்போது அதன் 'கரம் உச்சரிப்பு முடியாவிட்டாலும்
    எழுத்து நடையில் அதன் இனிமையை குன்றவிட்டாலும்
    எங்கள் தாய்மொழி தமிழ் தான்! நாங்கள் தமிழர்கள் தான்!!

    ~stranger :)
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பேச்சுத் துணைக்கும், நட்புக்கும்,
    நமைப் புரிவதற்கும், வேலைக்கும்,
    பிற மொழி கற்பதில் தவறில்லை.
    தமிழை ஒதுக்குதல் சரியில்லை.

    விருந்து வேண்டும் என்பார்க்கும்,
    மருந்தே போதும் என்பார்க்கும்,
    அருந்தும் அளவு இங்குண்டு.
    இதை மீறும் சுவையும் எங்குண்டு?

    எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தான்
    இலக்கணம் கற்றதும் கிடையாது
    என நாமே சொல்லித் தவிர்த்திட்டால்
    நமைப் போல் அறிவிலியும் ஏது?

    நின்றிடப் பத்து மாதங்கள்
    பேசிட மும்முழு வருடங்கள்
    தமிழ் படித்திட ஆயுள் முழுவதுமே
    செலவிட்டாலும் அது தீராது.

    எனினும் நமக்கு அது தருமே
    பல அரிய பெருஞ்செல்வங்களையே!
    எனவே பெருமிதம் கொள்வோமே!
    நம் மொழிக்கோர் ஈடு இங்கிலையே!
     
    1 person likes this.
  3. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male
    excellent one rgs! thanks for sharing...
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எத்தனை மொழி கற்றாலும்

    நம் மொழி மறக்க முடியுமா

    ஆரம்பமே அமர்க்களம் நண்பரே

    தாய் மொழி வணக்கத்துடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள்
     
    1 person likes this.

Share This Page