1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நடனம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Mar 20, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,159
    Likes Received:
    20,128
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தூக்கம்கலைந்தது கண் விழிக்க விருப்பம் இல்லை
    காகம் கரையவில்லை குயில் கூவவில்லை
    காலையில் எழுந்து என்ன செய்ய என்று சோம்பி கிடக்க
    கேட்டது ஒரு ஓசை புதிதான ஓசை
    சட்டென்று எழுந்தேன் திரைச் சீலை ஒதுக்கினேன்
    சாளரம் வழி தோட்டம் நோக்கினேன்
    ஆஹா என்ன ஒரு அழகு நடனம்
    மயில் ஒன்று தன் தோகை விரித்து
    நாற்புறமும் சுழன்று சுழன்று ஆடிய காட்சி
    கண் நிறைந்த காட்சி
    காணக் கிடைக்காத காட்சி
    இனிதாக துவங்கியது என் காலை பொழுது
     
    knbg, kaniths, jskls and 2 others like this.
    Loading...

  2. Star25

    Star25 Gold IL'ite

    Messages:
    292
    Likes Received:
    402
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @periamma : Simply superb!! Could visualise it right in front if my eyes. Awesome.
     
    periamma likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    3,934
    Likes Received:
    4,352
    Trophy Points:
    315
    Gender:
    Male
    :hello:அருமையாக பகர்ந்தார் பெரியம்மா
    ஆடியது அருமை ஆறுமுகனின் வாகனம்மன்றோ
    அங்கு எங்கோ பாலமுருகன் மறைந்திருந்து
    தாங்கள் அடைந்த பரவசத்தை
    பார்த்து மகிழ்ந்தான்
    முந்தைய நாளில் கற்றீரோ
    கந்தர் சஷ்டி கவசம் தன்னை!

    வாழ்கதங்கள் தமிழ் பற்று.
    வணக்கத்துடன்.
     
    knbg, periamma and jskls like this.
  4. jskls

    jskls Finest Post Winner

    Messages:
    6,786
    Likes Received:
    24,601
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அழகிய மயில் நடனம் தாங்கள் காண
    தங்கள் பொழுதை அழகாக்க
    சோம்பலிலிருந்து துள்ளி எழ
    இயற்கை செய்த மாயமோ மயிலின் ஆட்டமோ

    நல்ல பகிர்வு பெரியம்மா
     
    knbg, Thyagarajan and periamma like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,159
    Likes Received:
    20,128
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Star25 மிக்க நன்றி மா
     
    Star25 likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,159
    Likes Received:
    20,128
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Thyagarajan அன்பு சகோதரரே தங்கள் வருகைக்கு நன்றி .நேற்று செவ்வாய்கிழமை அந்த மயில் வந்தது செவ்வேள் முருகனின் அருள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சி
    தங்கள் பதில் கவிதை வடிவில் கண்டு ஆனந்தம் l
     
    knbg and Thyagarajan like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,159
    Likes Received:
    20,128
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls லக்ஷ்மி நன்றி மா .மயிலின் ஆட்டம் கண்டு மனமும் ஆட்டம் கொண்டது ஆனந்தத்தால் .
     
    Thyagarajan and jskls like this.
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,609
    Trophy Points:
    455
    Gender:
    Female
    கான மயில் களி நடனம்... கண்டீர் எம் பெரியம்மா...
    கான மயில் நடம் எமையும் காணவைத்தீர் உம் கவியால்....!
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,159
    Likes Received:
    20,128
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @knbg நன்றி பார்கவி
    சுழன்றிடும் மயில் தோகை தங்களையும் இங்கு வரவழைத்து விட்டதே .நீண்ட நாள் கழித்து வருகை புரிந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி
     

Share This Page