1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொடரும்-15 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Oct 25, 2012.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அங்கே தலைவிரிகோலமாய் நின்று கொண்டிருந்த ஸ்வேதாவை கண்டதும் இருவருக்குமே ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

    "அக்கா..." என்று கண்களில் கண்ணீரோடு அருகில் ஓடி வந்தவளின் தலை முடியை பற்றியவளை தடுக்க அர்ஜுன் முன்னேறிய அந்த நொடி முடியை விலக்கிய அவளது முகத்தில் கண்களின் சிவப்பு நிறமும் அதன் ரௌத்திரமும் அவனை நிதானிக்க செய்தது.

    "டேய்....கிட்ட வந்த இவளையும் உயிரோட பார்க்க முடியாது..." என்று பேசியது பெண்ணாய் இருந்தாலும் அதில் இருந்து வெளிப்பட்டது அப்பட்டமான ஆண் குரல்

    "நீ...நீ...யாரு...?" என்றவனது கேள்விக்கு சிரிப்பை பதிலாய் தந்தாள் ஸ்வேதா

    "நான் தான? சொல்றேன்! ஆனா தெரிஞ்சி என்ன பண்ண போற?எப்படியும் இங்கிருந்து நீங்க உயிரோட போகபோறது இல்ல..." என்று பேசிகொண்டிருந்தவளின் கவனம் சிதறும்போது அவளை நெருங்க நினைத்த நேரம் பின்னிருந்து எதுவோ தன்னை இழுத்ததை போல் வெகு தூரம் சென்று விழுந்தவனின் தலையில் பலமாய் அடிபட்டு ரத்தம் கசிந்தது..

    வலியில் துடித்துகொண்டிருந்த ப்ரீதாவிற்குமே உடல் உதற தொடங்கியது

    "ப்ளீஸ்...வேண்டாம் அவளை விட்டுடு..." என்று வலியில் மெதுவாய் முனங்கியவனை கண்டு பலமாய் சிரித்தாள் ஸ்வேதா.

    "வலிக்குதா?? உங்களுக்கு மட்டும் தான் வலிக்குமா? எனக்கு வலிக்காது? உங்கள மாதிரி தானே நானும் என் ஸ்வேத்தாவோட சந்தோஷமா வாழணும்னு நெனச்சேன்?எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நோய் வரணும்? ஒரு தடவ என் ஸ்வேத்தாவ பிரிஞ்சுட்டேன் இனியும் அவளை பிரிய மாட்டேன்...அவளையும் என்னையும் பிரிக்க யாராவது வந்தா அவங்க எல்லாருக்கும் இதே கதி தான்" என்று பேசிகொண்டிருந்தவளின் கவனம் சட்டென்று அழுது கொண்டிருந்த ப்ரீத்தாவின் கழுத்தில் பட்டது

    அங்கே தங்கத்தால் தொங்கி கொண்டிருந்த சங்கிலியில் ஸ்வேதாவின் புகைப்படம்

    "இது...இது என் ஸ்வேதா இல்ல....இது எப்படி உன் கழுத்துல........?" என்று கேட்ட குரலில் இருந்த கடுமைக்கு பயந்தவளாய்

    "ஸ்வேதா....ஸ்வேதா...எங்க அக்கா தான்" என்று அவள் கூறிய அடுத்தநொடி அவள் தலை முடி விடுவிக்க பட்டது

    "நீ...நீ என் ஸ்வேத்தாவோட தங்கையா....??" என்று அவள் முகத்தையே பார்த்துகொண்டு இருந்த ஸ்வேதா திடீரெண்டு அவளை பிடித்து தள்ளி
    "இங்கிருந்து போ........" என்று வெறிகொண்டதை போல் கத்தினாள்

    தயங்கியபடி அர்ஜுனை அவள் பார்க்க

    "போன்னு சொன்னேன்........." என்று கத்திய குரலுக்கு நடுங்கியவலாய் அங்கிருந்து அகன்றாள் ப்ரீதா.

    தலையை தாங்கியபடி எழ முயன்றவன் அமைதியாய் நின்ற ஸ்வேதா உண்மையில் அவள் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டான். இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது இதை பொறுமையாய் தான் கையாள வேண்டும் என்று எண்ணியவனாய் அவன் யோசித்துகொண்டிருக்க

    "நீ ஸ்வேதா தங்கைய விரும்புறியா?"

    "அது..."

    "சொல்லு........."

    "ம்....ஆமாம்" என்று அவன் கூறிய அடுத்த நொடி விகாரமாய் புன்னகைத்தாள் ஸ்வேதா

    "அப்ப நீ இங்கிருந்து வெளியபோக முடியாது.....எங்க காதல் சேர முடியாத இந்த உலகத்துல யார்காதலும் சேர கூடாது! சேர விடமாட்டேன்" என்று சைக்கோவை போல் கத்தி சிரித்தவளின் வலிமைமுன் என்ன முயன்றும் முடியாமல் போனவன் நினைவிழந்து அடைக்கபட்டான்.

    நடு இரவு!!

    கண் திறந்தவனுக்கு அந்த இருளிலும் ஏதோ சிறு வெளுச்சமாய் தெரிந்த ஒளியில் பக்கத்தில் வாயடைத்து கிடந்த ஒரு பெண்ணின் உருவம் நன்றாகவே கண்ணுக்கு புலப்பட்டது...

    "இது....." என்று சற்று நினைவு படுத்தியவனுக்கு அது வர்ஷாவாக தான் இருக்கும் என்ற யூகம்! நகர முற்பட்டான் ஹ்ம்மம்ஹ்ம்ம் பிரயோஜனம் இல்லை!

    திடீர் என்று தாங்கள் இருந்த இடம் நகரவும் ஒன்றும் புரியாமல் விழித்தான்
    "இது எந்த இடம்? எங்கே அடைக்கபட்டிருக்கிறேன்? ஹ்ம்ம்ம்ஹ்ம்ம் ஒன்றும் தெரியவில்லை அந்த இடம் அசைந்ததில் தன் மேல் சாய்ந்தவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்பது அவனது தொடைபகுதியில் உணர்ந்த அவளது இதயத்துடிப்பே கூறியது

    " இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் ஆபத்து! " என்று அவள் கைக்கட்டை கடித்து துப்பியவன் ஒரு முறை மனதளவில் அவளிடம் மன்னிப்பு கோரி சற்றுபலமாகவே பின்னோக்கிசென்று அவள் தலையை இடித்தான்
    வலியினால் சற்றே மயக்கம் தெளியதுவங்கியவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதை உணரவே வெகு நேரம் ஆனது சாப்பாடு தண்ணீர் இல்லாதது வேறு சோர்வை கொடுக்க மெல்ல கண் திறந்து சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு அங்கு தன்னோடு ஒருத்தன் இருக்கிறான் என்பதை அறியவே வெகு நேரம் ஆயிற்று

    இருவருக்கும் மட்டுமே கேட்கும் குரலில்
    "வர்ஷா.......வர்ஷா.....இங்க பாருங்க.....என்ன தெரியுதா?" என்று சொன்னவனின் குரலை கிரகித்து கொண்டவளாய்

    "ஹ்ம்ம்...நான் இங்க எப்படி வந்தேன்? நீங்க யாரு?" என்று மெல்ல கேட்டாள்

    "அதெல்லாம் அப்பறம் சொல்றேன்..நான் ஒரு போலீஸ் அதிகாரி... நம்ம பெரிய ஆபத்துல இருக்கோம் என்னோட இந்த கட்டை கொஞ்சம் கழட்டுங்க..." என்று சொல்லவும் தனக்கிருந்த சக்தியால் அதை முயன்று எப்படியோ கழட்டி விட்டாள்.

    "சார்...இது எந்த இடம்? எனக்கு பயமா இருக்கு" என்றவளது வாயில் கைவைத்து பொத்தியவன்

    "ஸ்ஹு.....சத்தம் போடாதீங்க...மொதல்ல இங்கிருந்து தப்பிக்கணும்" என்று செவுரை நாலாபுறமும் ஆராய ஒரு மூலையில் உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்த ஒரு எலும்பு கூடை கண்டு அலறபோனவளை மீண்டும் தடுத்தான் அர்ஜுன்

    சூழ்நிலையின் தீவிரம் புரிய இங்கிருந்து வெளியேறும் மார்க்கம் தான் அவனுக்கு தெரியவில்லை....

    தொடரும்........
     
    4 people like this.
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..

    varsha uyiroda dhan iruka..
    arjun varsha rendu perum andha idathla irundhu thappichruvangla??
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    interesting... arjun epadi varsha-vayum serthu kaapatha poraan... :spin
     
  4. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice update ma :thumbsup
     
  5. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Yams...

    Very interesting... eppadi 2 perum thappika poranga? Eagerly waiting.
    Regards,
    S.Uma
     
  6. ahalyakanna

    ahalyakanna New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Yams..

    very much thrilling.... Please update soon..
     
  7. harinee

    harinee Bronze IL'ite

    Messages:
    50
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hi Yams

    nice to see you back, ippo than story continuation padithen, asuual you have rocked and thrilled with the episodesl Really fantastic updates.

    Please update soon
     
  8. mka

    mka Senior IL'ite

    Messages:
    61
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Gender:
    Female
    waiting fr next episode... again kaanama poitenga...
     
  9. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    waiting for next update..
     
  10. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wer is the next part??
     

Share This Page