1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாயின் அரவணைப்பு!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 15, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    தன் மகள் தாய்மைப் பேறு பெறும்போது,
    தன் உதவிக கரம் கொடுக்க விழைபவள்,

    அருமையாக வளர்த்த தாய்தான்! இந்தப்
    பெருமை கிடைப்பதும் நம் நாட்டில்தான்!

    கடல் கடந்து சென்று, பணியில் அமர்ந்து,
    கடலென அன்பு காட்டும் தாயைப் பிரிந்து,

    தாய்மைப் பேறு பெறுகின்ற சில பெண்கள்,
    தாயின் உதவியைப் பெறுவதில்லையே!

    இந்திய தேசத்தில், குழந்தை பெற்ற பின்,
    ஐந்து மாதங்கள் வரை, சொந்த பந்தங்கள்

    விருந்தாக வந்து போக, தன் தாய் வீட்டின்
    விருந்தோம்பலில் மகிழ்வாள் அன்பு மகள்.

    தன் கணவன் உடனிருக்க, பிள்ளை பெற்று,
    அவன் உதவிகளை மட்டுமே தான் பெற்று,

    தன் சேயை வளர்ப்பாள், அமெரிக்க நாட்டில்
    தன் வாழ்வை அமைத்துக்கொண்ட மகள்!

    தாயின் அரவணைப்பைத் துணைக்குத் தந்து,
    சேயின் வளர்ப்பை எளிதாக்குவன் கணவன்!

    'தாயும் தந்தையும் யாவும் நீயே!' என இந்தத்
    தாயும் ஆகும் தந்தைகளை வாழ்த்துவோம்!


    வாழ்க அன்புக் கணவர்கள்! :thumbsup
     
    Loading...

  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு சகோதரி,
    “தன் கணவன் உடனிருக்க, பிள்ளை பெற்று,
    அவன் உதவிகளை மட்டுமே தான் பெற்று”..........'


    “தாயும் தந்தையும் யாவும் நீயே!' என இந்தத்
    தாயும் ஆகும் தந்தைகளை வாழ்த்துவோம்!”.


    இது, எனக்கும் எனனைபோல் மேல் நாட்டில் வாழும் மற்ற சகோதரிகளுக்கும் இந்த கவிதை பொருந்தும்!
    மிக்க நன்றி.
    வாழ்க அன்பு கணவர்கள்
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தாயுமானவர்கள் இந்த அன்புக் கணவர்கள்! :bowdown
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தாயுமான கணவனை அடைந்த எல்லா பெண்களும் பாக்கியசாலிகள்....
     

Share This Page