1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அனைவருக்கும் வணக்கம் !.............பெருமாளின் அனுகிரஹத்தாலும், அன்பான உங்கள் பிரார்த்தனைகளாலும் நான் நலம் :).....ஆனாலும் இன்னும் ஒரு மாதம் போகட்டும் தொடர்ந்து டிவி பார்க்க, கம்பியூட்டரிடம் நேரம் செலவழிக்க என்று மருத்துவர் சொல்கிறார், எனவே தயவு செய்து காத்திருங்கள் எனக்காக......வந்து வட்டியும் முதலுமாய் கதைகள் போடுகிறேன்....இங்கு வராமல் இருப்பது எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.......ஆனாலும் என்ன செய்வது?........

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    Caide and vaidehi71 like this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி , உங்களுக்கும் வந்து பதில்கள் போடுகிறேன் ! :grinning::hearteyes:
     
    Caide likes this.
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Glad to hear it. I was thinking about you.
    Wishing you good recovery. Don't strain.
    Vaidehi
     
  4. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    rest first mithathelam next :) take care and stay healthy :)
     
  5. lalsang123

    lalsang123 Bronze IL'ite

    Messages:
    72
    Likes Received:
    50
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hello ma,
    I have joined this community very recently.. I came across this forum just 3 days back.. The way you tell the stories are really nice.. I remember my paatti (who is no more) when I read these stories...Now I feel that I miss her a lot.. Those were really nice days which are unforgettable.. I have been reading every story and have been telling my 4 year old son..He loves it a lot.. He loves that kuruvi and paatti story very much and says daily at least once you tell me the story and Continue with other stories.. Hats off to you ma..
     
    krishnaamma likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹலோ, அனைவரும் நலமா? :)........வெகு நாட்கள் கழித்து இங்கு வருகிறேன்..........இனி தொடர்ந்து வர முயலுகிறேன்! .............முதலில் உங்கள் பதில்களை படிக்கிறேன், பிறகு, உங்கள் எல்லோரின் பதிவுகளுக்கும் தனித்தனியாக பதில் போடுகிறேன் :) ............ சரியா?

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :smile:
     
    Caide likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹலோ எப்படி இருக்கீங்க? ........ வெகுநாட்களுக்கு பிறகு இன்று தான் நான் வருகிறேன்........... உங்கள் பதிவு பார்த்து சந்தோஷம்...........தொடர்ந்து வாருங்கள் :)

    Nice to see you again .....in New ID!
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ho , thank you so much Dear :)................Me too after a long time I am entering here.............now my vision is ok and I will continue visiting here............want to post some more stories too............:thumbsup:

    அப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக பதில் போடும் போது நாம் அவருடன் பேசுவது போல இருக்கு தானே?, அது தான் அப்படி பதில்கள் போடுகிறேன் :)
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice to see you here. what is your name?..how can I call you dear?...........yes as you said our children are missing their 'patti thaaththaa' :(..what to do we have to fulfill that place.........right? .........that is why I started this thread.

    இங்குள்ள கதைகள் தவிர உங்களுக்கு ஏதேனும் கதைகள் தெரிந்தால் இங்கு பகிருங்கள்........இங்குள்ள கதைகளை படிப்பதால் நம் நினைவுகள் கண்டிப்பாக பின்னோக்கி செல்லும் அப்போது ஏதாவது சுவாரஸ்யமாய் நினைவுக்கு வரும் தானே? :)
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கூடா நட்பு!

    ஒரு காட்டில் நரி, ஓநாய், கீரி, எலி மற்றும் புலி ஆகியவை வசித்து வந்தன. நரியுடன் மற்ற நான்கு விலங்குகளும் நட்பு கொண்டிருந்ததாம்
    .
    இப்படி நான்கும் நரிக்கு நண்பர்களாக இருந்தாலும், நரி தன் நண்பர்களின் நலனை விட்டு, சுய நலனையே பெரிதாக நினைக்குமாம்

    அப்போ ஒருநாள் , இந்த ஐந்து மிருகங்களும் ஒரு மான் கூட்டத்தை பார்த்ததாம்.அந்த மான் கூட்டத்தில் ஒரு மான் மட்டும் நல்லா கொழுகொழுவென்று இருந்ததாம் . அதைக் பார்த்ததும், ஓநாய், நரி, எலி, புலி, கீரி ஆகியவற்றிற்கு அந்த மானை அடித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்ததாம்.

    அதை எப்படி அடித்து சாப்பிடுவது என்ற தயக்கம் ஐந்து நண்பர்களுக்கும் வந்ததாம் .ஏனென்றால் , யார் அடிக்கச் சென்றாலும் மான் நான்கு கால் பாய்ச்சலில் பறந்தோடி விடுகிறது. அதைப் பிடிப்பது என்பது பெரும் பாடாக இருந்ததாம்அப்படி இருக்கையில், அதன் மாமிசத்துக்கு ஆசைப்படுவது அவ்விலங்குகளுக்கு பெருத்த சவாலாக இருந்ததாம் .

    அதனால ஆழ்ந்து யோசித்த நரி ஒரு யோசனை சொன்னதாம். ''மான் தூங்கிக்கொண்டிருக்கும் போது எலி, மானின் காலைக் கடிக்க வேண்டும். அப்படிக் கடித்து விட்டால் கடிப்பட்ட காயத்துடன் மானால் அதிவேகமாக ஓட முடியாது. அப்போது புலி பாய்ந்து மானைக் கொன்று விடலாம். அப்புறம் நாம் அனைவரும் மான் கறியைப் பங்கு போட்டு தின்று பசியாறலாம்,'' என்றதாம்.

    இதற்கு எலியும், புலியும் ஒப்புக் கொண்டனவாம். ஒருநாள், மான் ஒரு மரத்தடியில் களைப்பாக தூங்கி கொண்டிருந்ததாம் . அதுதான் சமயம் என்று யோசித்த எலி, மெதுவாக பதுங்கிப் போய் மானோட கால் குளம்பை கடித்ததாம்.

    பாவம், மான் வலியால் துடிதுடித்துப் போனது. கூரான முள்குத்தியது போன்ற வலி, கால் பாதத்திலிருந்து விண் விண்னென்று வலிக்க, அது தன் காலை பார்த்ததாம்.

    அந்நேரம் பார்த்து புலி ஓடி வர, பயந்து போன மான் நிற்கக் கூட நேரமில்லாமல் காற்றாய் பறந்ததாம் . ஆனால், முன் போல மானால் ஓட முடியவில்லை[​IMG] அதால் பாதத்தை தரையில் ஊன்ற முடியவில்லை, பாவம்ஒரு காலை தூக்கியவாறு மூன்று காலில் ஓட, புலி அதனை விடவும் வேகமாய் ஓடி அதைத் துரத்தி அடித்ததாம்.

    அடிபட்ட மான் தரையில் பொத்தென்று விழுந்ததாம்.விழுந்த மானின் கழுத்தைக் குதறியது புலி.
    மெலியாரை வலியார் எய்ப்பது மனிதனில் மட்டுமல்ல, விலங்கிலும் உண்டு என்பதை புலி நிரூபித்தது. மான் விலுக் விலுக்கென்று தன் கால்களை உதைத்துக் கொண்டே விழிகள் விரிய பரிதாபமாய் உயிரை விட்டது [​IMG]

    இதற்காகவே காத்திருந்தது போல ஐந்து விலங்குகளும் மான் கறியை ருசிக்க ஆசையோடு அதைச் சுற்றி நின்றன. நண்பர்கள் நால்வர் நாவிலும் எச்சில் ஊறுவதைக் கண்டது நரி. ஆனால்அ, தற்கு மான் கறியை தான் மட்டுமே முழுதாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.

    எல்லாரும் சமமாகப் பங்கிடும் போது தனக்கு கொஞ்சம் தான் மாமிசம் கிடைக்கும். அதே, முழு மானாக இருந்தால் வேண்டிய மட்டும் சாப்பிடலாம். ஆகையால், எப்படியாவது இந்த மான் கறியை நாம் மட்டுமே உண்ண வேண்டும். அதற்கொரு வழியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் மூளையைக் கசக்கிக் கொண்டதாம். சட்டென்று ஒரு யோசனையை சொன்னது அது.

    ''நான் மானை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நால்வரும் சென்று காட்டாற்றில் குளித்து விட்டு வாருங்கள். பிறகு நான் சென்று குளித்து விட்டு வருகிறேன். அதன் பின் எல்லாரும் சேர்ந்து இந்த மானை ருசிக்கலாம்,'' என்றதாம்.

    நரி சொன்னதற்கு ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காமல், மற்ற விலங்குகள் குளித்து விட்டு வருவதற்காக குதூகலத்துடன் ஓடி போச்சாம்.

    ஆற்றில் குதித்து நனைந்த புலிக்கு அகோரமாகப் பசி எடுத்தது. அது ஆவலுடன் நரி இருந்த இடத்திற்கு முதலில் வந்து சேர்ந்தது.

    அங்கு நரி உலகமே அழிந்து போனது போல் சோகமே உருவாக இருந்ததாம் . அதைக் கண்ட புலி,

    ''என்னாச்சு நண்பா? ஏன் இந்த சோகம்? அதுவும் சுவையான மான் கறியை உண்ணப் போகும் இந்த நேரத்தில் எதற்கு இந்த சோக கீதம்?'' என்றது.

    தொடரும்...............
     

Share This Page