1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளம் ரெண்டும் ஒன்று
    நம் உருவம் தானே ரெண்டு



    திரைப்படம்:புதுமைபித்தன்
    இசை:ஜி . ராமனாதன்
    இயற்றியவர்:tn ராமய்யா தாஸ்
    பாடகர்கள்:cs .ஜெயராமன் , ஜிக்கி

    உள்ளம் ரெண்டும் ஒன்று
    நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)
    உயிரோவியமே... கண்ணே
    நீயும் நானும் ஒன்று (2)
    உள்ளம் ரெண்டும் ஒன்று
    நம் உருவம் தானே ரெண்டு

    காதல் ஜோதி வானிலே
    கலையாய் திகழ்வோமே...
    ஆஆஅ...ஆஆஆஆ...ஆஆஆ...
    காதல் ஜோதி வானிலே
    கலையாய் திகழ்வோமே...
    கண்ணா அனுராகத்திலே
    கனிந்தே மகிழ்வோமே...(2)
    அன்பே அனுராகம்...
    அது தானே வாழ்வின் யோகம்
    ஆஆஆ...ஆஆஆஅ..ஆஆஆஆஅ...
    அன்பே அனுராகம்...
    அது தானே வாழ்வின் யோகம்

    அசைந்தாடும் பூங்கொடியே
    ஆசை தென்றல் நானே
    அசைந்தாடும் பூங்கொடியே
    ஆசை தென்றல் நான்
    வானில் மேவும் நிலவோ
    கிள்ளை காத்து ஏங்கும் இலவோ (வானில்)
    வானில் மேவும் வளர்மதியே
    வாழ்வில் இன்பம் நீயே (2)

    உள்ளம் ரெண்டும் ஒன்று
    நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.

    ரகசியம் பரம ரகசியம்
    இது நமக்குள் இருப்பது அவசியம்



    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா

    ரகசியம் பரம ரகசியம்
    இது நமக்குள் இருப்பது அவசியம்

    ஒரு உருவம் நல்ல உயரம்
    இளம் பருவம் பார்வை பக்குவம்
    அதன் இதயம் என் இதயம்
    இரு இதயம் காதல் உதயம்
    (ரகசியம் )

    ஒரு தடவை ஒரு நிலையில்
    அதன் மடியில் காதல் நாடகம்
    அது முதலே மது மயக்கம்
    இனி எனக்கும் இல்லை உறக்கம்
    (ரகசியம் )

    இது நினைவா இல்லை கனவா
    இன்பம் நிஜமா மீண்டும் வருமா
    அந்த நிலவில் வந்த இரவில்
    வந்த சுகமும் இன்னும் சொந்தமா
    (ரகசியம் )
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
    பார்க்க வந்த கிளிப்பிள்ளே



    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
    பார்க்க வந்த கிளிப்பிள்ளே
    பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
    பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
    கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே


    கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
    பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
    என்னென்ன என்னென்ன நினைக்குது
    எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
    கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
    பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
    என்னென்ன என்னென்ன நினைக்குது
    எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
    (பட்டணம் பார்த்த)

    குங்குமத்தை சுமந்து கொண்டு
    குலுக்கி வரும் சிங்காரி
    குண்டு மல்லி பூவை கொண்டு
    கொழஞ்சி வரும் ஓய்யாரி ( 2 )
    கட்டி முகம் கொண்டவளே
    காதல் பேச வந்தவளே
    எட்டி எட்டி நின்னு நின்னு
    தவிப்பதென்ன இருட்டிலே
    (பட்டிகாட்ட பார்த்து )

    ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா ?
    அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா ?( 2)
    நேற்றிரவு வந்தவனா நெருங்க இன்பம் தந்தவனா
    அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே
    அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
    கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவனுகென்ன தூங்கிவிட்டான் ...அகப்பட்டவன் நான் அல்லவா

    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
    அகப்பட்டவன் நான் அல்லவா
    ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
    அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
    அகப்பட்டவன் நான் அல்லவா
    ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
    கைகளிலே போட்டு விட்டான்

    இவனுக்கென்று எதை கொடுத்தான்
    எலும்புடனே சதை கொடுத்தான்
    இவனுக்கென்று எதை கொடுத்தான்
    எலும்புடனே சதை கொடுத்தான்
    இதயத்தையும் கொடுத்துவிட்டு
    இறக்கும் வரை துடிக்க விட்டான்
    இறக்கும் வரை துடிக்க விட்டான்
    (அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

    யானை இடம் நன்றி வைத்தான்
    காக்கை இடம் உறவு வைத்தான்
    மான்களுக்கும் மானம் வைத்தான்
    மனிதனுக்கு என்ன வைத்தான் ?
    மனிதனுக்கு என்ன வைத்தான்
    ( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

    வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
    வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
    நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
    நான் குடிக்க விட்டுவிட்டான்
    (அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கட்டோடு குழல் ஆட ஆட
    கண் என்ற மீன் ஆட ஆட


    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

    கட்டோடு குழல் ஆட ஆட
    கண் என்ற மீன் ஆட ஆட
    பொட்டோடு நகை ஆட ஆட
    கொண்டாடும் மயிலேறி ஆடு
    கட்டோடு ...

    பாவாடை காத்தோடு ஆட ஆட
    பருவங்கள் பந்தாட ஆட ஆட
    காலோடு கால் பின்னி ஆட ஆட
    கள்ளுண்ட வண்டாக ஆடு
    கட்டோடு ....

    முதிராத நெல் ஆட ஆட
    முளைக்காத சொல் ஆட ஆட
    உதிராத மலர் ஆட ஆட
    சதிர்ஆடு தமிழே நீ ஆடு
    கட்டோடு ...

    தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக
    புன்னை மரம் பூசொரிய
    சின்னவளே நீ ஆடு
    கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட
    கண்டு கண்டு நான் ஆட
    செண்டாக நீ ஆடு
    கட்டோடு ....


    பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட
    மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு
    வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட
    ரெண்டு பக்கம் நான் ஆட
    சொந்தமே நீ ஆடு
    கட்டோடு .....
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    துள்ளி ஓடிடும் கால்களேங்கே
    தூண்டில் போடும் கண்களெங்கே


    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    துள்ளி ஓடிடும் கால்களேங்கே
    தூண்டில் போடும் கண்களெங்கே
    கள்ளப் பார்வை போனதெங்கே
    கன்னிச் செல்வமே .. ஓ...
    (துள்ளி)


    மாலையிட தேதி சொன்னார்
    மஞ்சளுக்கு தூது சொன்னார்
    பாலருந்த நாள் குறித்தார்
    பஞ்சணையை விரித்து வைத்தார்


    கண்ணிருந்தும் பார்வையில்லை
    காலிருந்தும் ஓட்டம் இல்லை
    கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை
    காதல் தெய்வமே... ஓ...


    தாமரையில் தேனெடுத்து
    சாறெடுத்து நெய்யெடுத்துத்
    தங்கமென்ற உடலெடுத்து
    கண்களுக்கு விருந்து வைத்தார்
    (தாமரையில்)


    ஆ....ஆ...உன்னடிமை ஆன பின்பு
    என் உடைமை ஏது இங்கு
    மன்னன் உந்தன் மலரடியில்
    கண்ணிரண்டை சாத்தி வைத்தேன்
    நாளுமில்லை பொழுதுமில்லை
    நன்மை இல்லை தீமை இல்லை
    வாழ்வதென்று இணைந்து விட்டோம்
    வஞ்சமின்றி வாழ்ந்திருப்போம்ஆ...ஆ...ஆ...
    ( நாளும்)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா

    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
    ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
    ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

    அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் அழகழ*காய் படிக்குதப்பா
    அச்சடித்த காகிதத்த அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
    ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச்சொன்னா புரியலேப்பா
    நாட்டுக்குதான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா


    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
    ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

    பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா
    பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவமப்பா
    காசுபணம் சேருதப்பா காரு வண்டி பறக்குதப்பா
    சேத்த பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பா

    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
    ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
    பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
     
    Last edited: Mar 4, 2011
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா


    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா

    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    என்றும் உள்ளது ஒரே நிலா
    இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ.....ஆ......
    இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா (அன்று)

    அம்பிகாபதி கண்ட நிலா
    அமராவதியைத் தின்ற நிலா
    கம்பன் பாடிய வெள்ளி நிலா
    கவியில் ஆடிய பிள்ளை நிலா அ... அ...
    கவியில் ஆடிய பிள்ளை நிலா (அன்று)

    காதல் ரோமியோ கண்ட நிலா
    கன்னி ஜூலியட் வென்ற நிலா
    பாவை லைலா பார்த்த நிலா
    பாலைவனத்தின் வண்ண நிலா அ... அ..
    பாலைவனத்தின் வண்ண நிலா

    நாடுதோறும் வந்த நிலா
    நாகரிகம் பார்த்த நிலா
    பார்த்து பார்த்து சலித்ததிலா
    பாதி தேய்ந்தது வெள்ளி நிலா அ... அ...
    பாதி தேய்ந்தது வெள்ளி நிலா (அன்று)


    *********************************************


    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    (சோகம் )

    திரைப்படம்:பெரிய இடத்துப் பெண்.
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:பி.சுசீலா


    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா ..ஆஆஆஆ
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா

    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா

    காதல் தந்தது வண்ண நிலா
    களங்கமில்லா கன்னி நிலா
    மேகம் மூடிய வெள்ளி நிலா
    வெள்ளை உள்ளம் கொண்ட நிலா ..ஆஆஆ
    வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா

    பேசச் சொன்னது அன்பு நிலா
    பிரியச் சொன்னது துன்ப நிலா
    தூங்கச் சொன்னது காதல் நிலா
    துடிக்க விட்டது கால நிலா ...ஆஆஆ
    துடிக்க விட்டது கால நிலா

    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா ... ஆஆஆ
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா
    ****************************
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா

    சக்கரைக்கட்டி ராஜாத்தி -
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி



    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    சக்கரைக்கட்டி ராஜாத்தி -
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே -
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி


    பட்டுப் போன்ற உடல் தளிரோ -
    என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
    தோகை மயிலின் தோளை அணைத்து
    கண்டு கொள்வது சுகமோ
    தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் -
    விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்
    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    சேதி என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்


    அத்தை மகனே அத்தானே -
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே -
    நான்பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்.ஆஹா..
    (சர்க்கரை)


    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்
    மடியைத் தேடி வந்து விழவோ -
    இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
    மாலை வரையில் சே(சோ)லை நிழலில்
    கண்கள் உறங்கிட வரவோ
    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    சேதி என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்
    (சர்க்கரை)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி


    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி


    கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்


    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


    அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
    தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
    இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
    பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
    அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
    ஆமா.. வள்ளலார்
    அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
    ஆமா.. வள்ளுவர்
    பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
    ஆமா.. பாரதியார்

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

    *********************************

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி


    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்


    பெண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    இருவர்: சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி


    ஆண் : கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

    ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    இருவர்: சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


    பெண் : அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
    தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
    இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
    பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் (இசை)
    ஆண் : அன்பில் உயர்ந்தவர் யாரு
    குழு : வள்ளலார்
    ஆண் : ஆ... வள்ளலார்
    பெண் : அறிவில் உயர்ந்தவர் யாரு
    குழு : வள்ளுவர்
    பெண் : ஆமா.. வள்ளுவர்
    ஆண் : பாட்டில் உயர்ந்தவர் யாரு
    குழு : பாரதியார்
    ஆண் : ஆமாம்... பாரதியார்

    இருவர்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    அனைவர் : லாலல்ல லல்லலல்லலால்லலா
    லாலல்ல லாலல்ல லால்லலா
    லாலல்ல லல்லலல்ல லால்லலா
    லாலல்ல லால்லல்ல லால்லலா ...
    லாலல்ல லல்லலல்லலால்லலா
    லாலல்ல லாலல்ல லால்லலா
    லாலல்ல லல்லலல்ல லால்லலா
    லாலல்ல லால்லல்ல லால்லலா

    பெண் : கோவிலைத் தேடி தெய்வம் வந்ததோ
    கோவிலைத் தேடி தெய்வம் வந்ததோ
    கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ
    தாய் முகம் பார்க்க பிள்ளை வந்ததோ
    தங்கத் தாமரை அரும்பி வந்ததோ (இசை)
    மழலையைக் கேட்டேன் மனம் குளிர்ந்தது
    மடியில் சுமந்தேன் நினைவு வந்தது
    ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது
    மகனே என்றொரு குரல் கொடுத்தது

    பெண் : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
     
    Last edited: Mar 4, 2011

Share This Page