1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வுக் கூட்டு

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Jan 18, 2017.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வுக் கூட்டு

    காளைகளுக்கு போராடும்
    எம் காளையர்களா
    தம் காளைகளை
    வதைப்பார்கள்?

    காளைகள் போராட்டம்
    சாதி மத பேதமின்றி
    தமிழ் உணர்வினை
    உசிப்பியே எழுப்பி
    ஒருமித்தது

    ஏய் பீட்டா நீ பேட்டா வாங்கி
    எங்கள் பாரம்பரியத்தை
    தகர்க்க நினைக்கிறாய்

    உரசிப் பார்க்காதே
    எம் காளையர்களை
    விலை போகும் இழிநிலை
    கைக்கூலிகள் என நினைத்தாயோ

    எம் காளையர்களின்
    தமிழ் உணர்வு போராட்டத்தில்
    தகர்ந்து தவிடு பொடியாகி ஓடிடுவாய்

    மொழிப் போராட்டத்திற்கு பின்
    சுயமாய் ஒருங்கிணைந்த
    இளைஞர் பட்டாளம் இது

    அமைதிப் புரட்சி வழி
    தமிழின பாரம்பரியம்
    காத்திடும் பட்டாளம் இது

    நிற்காது இத்தோடு இப்பட்டாளம்
    தோற்காது இப்பட்டாளம்
    வரும் காலங்களில்
    எம் உணர்வினை
    காத்திட
    இணைந்திங்கே
    போராடும் இப்பட்டாளம்
    அரசியல் அல்லக்கைகளுக்கு
    ஆப்பு வைத்திடும் இப்பட்டாளம்
     
    meepre, HakunaMatata, Amica and 11 others like this.
    Loading...

  2. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    உணர்வு பூர்வமான எழுத்து... ஏர் தழுவுதலை ஆதரிப்பிபோம்..
     
    PavithraS and GoogleGlass like this.
  3. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    உங்கள் கவிதை நிதர்சனத்தை பிரதிபலித்தது.

    மிகவும் அருமை
     
    PavithraS and GoogleGlass like this.
  4. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    அருமை அருமை
     
    PavithraS and GoogleGlass like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

    என்பதை பறைசாற்றும் வீராவேசம் கொண்ட கவிதை அருமை ! நம்மை ஒன்றிணைப்பது புயலும்மழையும் மட்டுமல்ல நம் பாரம்பரியமும் அதை விட்டுக்கொடுக்காத வீரமும் கூட!
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ் தெரியாத மாமனிதர்களுக்கு தமிழரின் பண்பாடை பற்றி என்ன தெரியும் .தமிழனுக்கே தெரியவில்லையே.கவிதை மிக அருமை
    காளைகளின் கூட்டம் கண்டு மிரளும் அதிகார வர்க்கங்கள் இனியாவது ஜால்ரா போடாமல் இருந்தால் சரி
     
  7. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    I have to just say this whole agitatiom is beyond the jallikattu ban.

    last night when i heard of jammers, powercuts and control at marina, i was worried a wee bit for the women who were protesting, this morning i hear of so many positive reports of how safe the ladies were the whole night.
    Many a time we hear even here that india is so unsafe and people are animals. I would want to say it is so harsh to push all men under a umbrella ( exactly as saying the bull is a wild animal)

    I only hope political parties don't try to push in with thier agenda. This is an example of the power of youngsters , a spontaneously gathered one at that,can be channelised for the good of all.

    Tamil..the state of mind and pride beyond being just a language..
     
  8. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    Cows and bulls are very affectionate animals. I am not sure how many of you are from farming families. They are part of your life part of your families with names, moods and more.

    Alanganallur kaalai, kangeyam kaalai poi jersey pasu vara vazhi vittuttom. Ippo namma kuzhandaikku kudukum paalilium kalapadam.
    Nam rajapalayam naai na oru bayam kalanda mariyadai ippo adai kanom.
    Manjal ippo avargal manjal capsules for immunity enru vikkiraargal.
    Uppuai thottu theccha nammala enamel poidum solli ippo salt pota palpodi ubayoyoga padutha solraan. How many of you have seen the sale of our vepam kucchi for24$ on amazon. Nambalanna. Search for ayurvedic chew sticks and all the neem powders. Same with our coconut oil, pana vellam.
    Let us stop allowind the fmcg and pharma to brain wash us and cause medical terrorism. Go back to our roots. Pazhaya sadam vengayam is 100% safe
    And best nutrition proved by the very country that thrust cornflakes on us.
    Be aware and raise awareness.
    Let the ripples shake and strengthen the gen next
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Very True !
    Well said !
     
    GoogleGlass likes this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமை,அருமை நண்பரே ! நிதர்சனத்தை உள்வாங்கிய உணர்வு மிக்க வரிகள் !

    சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது காளை ! எங்கள் தமிழ் இளைஞர்களென்னும் காளை ! உரிமைக்காகவும்,பண்பாட்டை மீட்டெடுக்கவும் இப்படி அழகான ஓர் அமைதிப் போராட்டம் ! இதை யாருமே எதிர்பார்க்கவில்லையென்பது வெட்ட வெளிச்சம். சட்டமென்பது மக்கள் நலனுக்காக,மக்கள் உணர்வுகளை மதிக்காமலிருப்பதற்காக அல்ல என்று பறை சாற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புணர்வு நிறைந்த போராட்டம். அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களுக்கு இடங்கொடாமல்,நமது இளைஞர்கள் ஒன்று கூடி செய்யும் அறிவார்ந்த புரட்சி- இன்று ஜல்லிக்கட்டுக்காக,நாளை மண்ணின் மைந்தர்களான விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்காக-பின்னர் சாக்கடையாகிவிட்ட அரசியலமைப்பினைத் தூய்மைப் படுத்துவதற்காக- இப்பட்டியல் நீளுமென்றேத் தோன்றுகின்றது. வரவேற்க வேண்டும்-வன்முறைக் கலப்பில்லாத இளைஞர் போராட்டம் வீதிக்கு வந்ததை. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிக்கச் சொன்ன பாரதியைப் பின்பற்றி ஆத்திரம் தவிர்த்த இளைஞர்கள் ரௌத்திரம் பழகினால் சரித்திரம் மாறும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. நேர்மையற்றவர்களே,திருந்துங்கள்.இல்லாவிடில் மக்கள் புரட்சி வெடிக்கும் போது காணாமல் போவீர்கள் !

    இந்த நேரத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்த சமூக வலைத்தளங்களுக்கு ஓர் ஸல்யூட் !
     

Share This Page