1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சென்னையில் ஒரு மழைக்காலம் (புலம்பல்கள்)

Discussion in 'Stories in Regional Languages' started by asubha, Jul 13, 2012.

  1. asubha

    asubha Gold IL'ite

    Messages:
    204
    Likes Received:
    406
    Trophy Points:
    123
    Gender:
    Female
    வெக்கையா இருக்குது...

    ஐயோ...தாங்க முடியலயே...

    கடுப்பா வருது...

    அதிகாலைல பார்த்தாலும் உச்சி வெயில்தான் மண்டைய பொளக்குது...

    எப்பதான் விடிவு காலமோனு ஏங்கி தவிச்ச வேளைல...

    தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்னு நியூஸ்...

    ஹும்ம்ம்...மழை அப்புறம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சுச்சு...

    ஹைய்ய்ய் ஜாலி...

    இனி வெயில் இல்லை தொல்லை இல்லைனு பாட்டு பாடவே ஆரம்பிச்சாச்சு...

    குடை பிடித்து மழைல நடக்குறப்போ அப்படி ஒரு சந்தோஷம்...

    ஆனா இதெல்லாம் முதல் நாள் மட்டும்தாங்க :(...

    எங்க ரோடு உங்க ரோடு மட்டும் இல்ல,எல்லா ரோடும் சகதிக்காடு...

    என் செருப்பு சகதியில சிக்கி அறுந்து போச்சு...

    துவச்சு போட்டிருந்த டிரஸ்லாம் நனைஞ்சு போச்சு...

    வெறும் மழைத்தண்ணினா நடந்துறலாம்...

    இங்க சாக்கடை தண்ணியும்,குப்பையும் சேர்ந்து ஒரு மினி கூவம் ஆறு...

    மழை வலுத்தது...என் பிரச்சனைகளும் வலுத்தது...

    இங்க இருந்து ஒரு இடத்துக்கு பஸ்ல போகணும்னாலும்,

    மழைனால டிராபிக்...

    15 நிமிசத்துல போற இடத்துக்கு ஒரு மணி நேரம் ஆகுது...

    பேசாம ஒரு போட்(boat) வாங்கிருக்கலாமோ :? ...

    எங்க பார்த்தாலும் தண்ணி...ஈரம்...நசநசப்பு...

    இப்போ நினைக்கிறன்...

    இந்த மழைக்கு ஒரு முடிவே கிடையாதான்னு...

    சென்னையின் மழைக்காலம்...என் வாழ்வின் சோதனைக்காலம்...

    ச்சே என்ன வாழ்க்கைடா இது :(

    அதோ ஆபத்பாந்தவனாய் என்னை ரட்சிக்க வந்துவிட்டான் கதிரவன்...



    மீண்டும் வேண்டுகிறேன்...

    இந்த வெயிலுக்கு ஒரு விடிவு காலமே கிடையாதான்னு...;-)

    P.S : Apart from these I love the rainy season in chennai. :)

    மேகத்தின் கருவறையிலிருந்து

    ஜனித்த மழைத்துளி

    ஒவ்வொரு முறையும்

    நம்மை புதிதாய் ஜனிப்பித்து

    விடுகிறது

    தன் தொடுகையால்...
     
    2 people like this.
    Loading...

  2. born2vin

    born2vin Bronze IL'ite

    Messages:
    502
    Likes Received:
    12
    Trophy Points:
    48
    Gender:
    Female
    A good writeup, keep it up
     
  3. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nice pulampal. keep pulambing
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Nice Write up...............
     
  5. sgr37

    sgr37 New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    romba nalla sonnengappa!!

    சகோதரி, உங்களுக்காவது வெறும் வெயில் காலம், மழைக்காலம் காத்துகாலம் மட்டுமே, நான் இருப்பது டெல்லி!! இங்கே குளிர்காலம் என்று ஒன்று addup ஆகிடும்! உங்களை மாதிரித்தான், இந்த வெயில் போகவே போகாத(42-44degree) படுத்துதே, எப்ப மழைக்காலம் வரும்நு காத்து கிடப்போம். மழை தொடங்கவும், ஸ்கூல் திறக்கவும் சரியாக இருக்கும். அதுவும் இந்த மழை தொடர்ந்து வர்றமா, 2-3 நாளுக்கு ஒருமுறை வந்து பாடாய் படுத்தும். அப்போ high humidity சேர்ந்து கொள்ளும். அப்போ தொடங்கும் கொடுமை, வேர்த்து வேர்த்து ஊத்தி, எங்க ஊர் வெயிலே தேவலை அப்படின்னு தோண வேசிடும்!!இதுகூட கரண்ட்கட் சேர்ந்தால் இன்னும் விசேஷம்! Peak summerla வேலை செய்யும் இந்த room cooler kooda மழைகாலத்திலே wastethan!! உடம்போட ஒட்டின சட்டையும், வேர்வையும் சேர்ந்து, சமயல்கட்டையே வேருக்கடிசிடும், அதிலும் இந்த வாண்டுகளுக்கு மழை காலத்திலே பொண்ட பஜ்ஜி, வடை பகோடா ஆசையும் சேர, நம்ம வேர்வை ஆறில் குளிக்க ஒரே இன்ப மயம்தான். இது கூட திடீர் மழையில், தண்ணீர் supplying pipe ஓடைந்துதோ தொலைந்தோம்! அப்பறம் நாம வேர்வை நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிச்சுடவேண்டியதுதான்!! ஒருவழியா இந்த மழைக்காலத்தில் துணி காய்ந்தும், காயாமையும், ரோட்ல போட் விட்டும், பஸ் விட்டும், டிராபிக் jamla மாட்டியும் மாட்டாமையும் செட்டில் ஆகி இருப்போம், அப்போ மெதுவா விண்டரும் வந்து சேர்ந்திடும்!!
    தொடங்கும்போது ரொம்ப நல்லாவே பச்சை காய்கறிகளுடன், ஆரஞ்சு காரட், வெள்ளை காளிபிலோவேர், பிஞ்சு முள்ளங்கி, முத்து முத்தா பட்டாணி என்று ரொம்ப ஆர்பாட்டமா தொடங்கும், ஆனா கொஞ்சம் கொஞ்சமா குளிர் கூட கூட, நமக்கு குளிக்க தோணாம துவைச்சாலும் காயாத துணிகளை நினைச்சா துணி மாத்த வேண்டாம் அப்படிங்கற பீல் வருமே அப்பதான் வெயிலின் அருமை புரியும்பா. அதுல சுன்பச்கிங் கூட நடக்கும், எது எப்படியோ, ஒவ்வொரு சீசன்லையும் குறைசொல்லி குறை நிறைகளோடவே வாழ்ந்து கொண்டிருக்கோம்
     
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very good narration. good to read.
     
  7. asubha

    asubha Gold IL'ite

    Messages:
    204
    Likes Received:
    406
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @born2vin,Usha,Priyapradeep,ramyasuresh :Thank you so much:)

    @sgr37: kastamdhan akka, ஒவ்வொரு சீசன்லையும் குறைசொல்லி குறை நிறைகளோடவே வாழ்ந்து கொண்டிருக்கோம்.idhu noothuku nooru unmai
     
    1 person likes this.

Share This Page