1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறு பிள்ளை!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 17, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கால் தரையில் பாவாமல்
    வாயெல்லாம் சிரிப்போடு
    பாய்ந்து முன் வருவாளாம்
    என் தாய் அவளே மீனாட்சி!

    தண்ணொளியாய், தாமரையாய்,
    செண்பகம் வெட்கும் மென்மையுமாய்,
    விண்ணிறைந்த பேரருளாள்,
    விருப்புடன் இரங்கி வந்தாளாம்!

    பச்சைப் பட்டுடுத்தி,
    இச்சையுடன் வழங்கும்,
    கொச்சைச் சொல் பொருந்தி,
    சர்ச்சைக்கப்பால் நின்றாளாம்!

    பிள்ளைத்தமிழ் பாடும்
    குருபரனின் முன்னாலே
    சொல்லுக்கப்பால் நிற்கும்
    மழலையென வந்தாளாம்!

    செழுமையும், நிறமும் கொண்டு,
    முன் காணா முழுமையுடன்
    வழமைக்கு மாற்றாய் வந்து
    இனிய பதில் மொழிந்தாளாம்!

    சிற்றில், சிறுபறை,
    சிறுதேர், அம்மானை
    மற்றும் பல பருவம்,
    தமிழ் சொல்ல மகிழ்ந்தாளாம்!

    இல்லை என வேண்டும்
    இரவலருக்கெல்லாம் அவள்
    இல்லை எனாது தரும்
    ஈகை நிறைந்தமைபவளாம்!
     
    PavithraS, jskls and vaidehi71 like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Rgs,
    I liked it. Not sure whether I understood correctly.
    Yes, Goddess Meenakshi is one who is close to me. Definitely will help at times of distress. Love the way you have written it.
    Thanks,
    Vaidehi
     
    rgsrinivasan likes this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @rgsrinivasan ,

    A new and easy 'Meenakshi Pillai Tamil' enjoyable even by Malalais!

    Beautiful! Enjoyed!
     
    rgsrinivasan likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Vaidehi, for your appreciation. If you can mention what you didn't understand, I can clarify that. -rgs
     
    PavithraS and vaidehi71 like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Suryakala Madam, for your appreciation. -rgs
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan

    என் மனதில் இருப்பதை நீங்கள் கவிதையில் வடிக்கிறீர்களோ என்று வியப்புறும் தருணங்களில் இதுவும் ஒன்று. இரு தினங்களாக மதுரை மல்லியைப் பற்றியும், நான் இன்னும் தரிசனம் செய்யக் கொடுத்து வைக்காத அன்னை மீனாக்ஷியைப் பற்றியும் கணவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த முறை தாயகம் செல்லும் போது கட்டாயம் அழைத்துச் செல்வதாக அவரும் உறுதியளித்தார். இன்று காலையில் உங்கள் கவிதை வடிவிலே அவளைக் கண்டேன் ! மெய் சிலிர்த்தேன் !
     
    periamma and rgsrinivasan like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குமரகுருபரரின் ஆற்றொழுக்கு மிக்க அற்புதத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சிறு வயதில் பாடமென வந்ததுண்டு. சட்டென்று அன்னை அவள் வந்த அக்காட்சி மட்டும் நினைவு வர, எழுத முயற்சித்தது இது.
    இட்டதை விட வெட்டியது மிகுதி. பின்னொரு நாள் பதிய முயல்கிறேன் பவித்ரா! நான் விரும்புவதெல்லாம் ஒன்றே - எண்ணத்தை சொல்லால் நிறுவ வேண்டும் என்பதே! இன்னும் முயன்று கொண்டிருக்கின்றேன்.

    ஒரு சிறு பெண் குழந்தை பாவாடை பிடித்த படி ஓடி வந்து ஒரு மழலைச் சொல் மிழற்றும் அவ்வின்பத்துக்கு என் சொற்கள் ஈடாமோ?

    சீக்கிரமே மதுரை சென்று வாருங்கள்! அருமையான கோயில்! அற்புதமான ஊர்!
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி! -rgs
     
    periamma and PavithraS like this.
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,372
    Likes Received:
    10,578
    Trophy Points:
    438
    Gender:
    Female
    I had a darsan of Meenakshi in your poem.Very often I used to see this Meenakshi with pattu pavadai, sattai ,and ornaments in my dreams very often.Since I am always bound by reason and logic ,I don't understand the significance.The psychology texts dealing specifically about 'dreams' don't give a clue.We have visited Madurai only once or twice.Someone suggested doing kanya pooja during days other than navarathri.We have already distributed dress food etc to poor girls in the locality.,though the traditional kanya Pooja formality was not followed.i never felt that any god/Goddess is after such ritualistic formats.Yet the dream continues.Is it a 'bramai'?I want to ignore, yet the image is undeletable.

    Let Her come and go whenever she wants.The entire world is Hers.
    Jayasala 42
     
    rgsrinivasan likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs மீனாக்ஷி அழகை கண் முன்னே கொண்டு நிறுத்தியது உங்கள் கவிதை
    கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து என்ற பாட்டு நினைவுக்கு வந்தது மதுரையை ஆளும் அரசி அல்லவோ அவள்
     
    rgsrinivasan likes this.
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Jayasala madam, for your feedback and for sharing the information about the Goddess coming in the form of a little girl.
    I do remember my mom telling once that she was a part of the Suhasini pooja that Maha Periyava did when she was about 11 years or so, during Navaratri. Perhaps, She may be giving a message which you are yet to understand? I don't know Madam. Kudos to your helping tendency. -rgs
     

Share This Page