1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சமையலறையில் சமாதானம்.....

Discussion in 'Posts in Regional Languages' started by knbg, Jan 12, 2012.

  1. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    சமையலறையில் சமாதானம்.....

    நேற்று சமையல் அறையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது லேசாக முணுமுணுப்பு கேட்டது....:confused2:

    கூர்ந்து கவனித்தபோது சத்தம் கடலைப்பருப்பு டப்பாவிலிருந்து......:drowning

    "என்ன ?" என்று கேட்டேன்.....

    கட கடவென தனது கடுகடுப்பை கொட்டித்தீர்த்தது கடலைப்பருப்பு.....:rant:rant

    என்னை இப்போதெல்லாம் நீ கவனிப்பதே இல்லை....

    முன்பெல்லாம் உன் வீட்டில் எலித்தொல்லை இருந்தபோது....'கணவருக்கு பிடிக்கும்' என்று சாக்கு கூறி , வாரா வாரம் என்னை உபயோகித்து மசால்வடை செய்வாய்.....நானும் உன் கணவரை மட்டுமின்றி உன் வீட்டு எலிகளுக்கும் புரத சத்து தந்துகொண்டிருந்தேன்.....

    இப்போது , இந்த வீட்டில் எலிகள் இல்லை.......எப்போதாவது உன் கணவர், "மசால்வடை வேண்டும்" என்று கேட்டால்....."வேண்டாம் பா.....வாயு தொல்லை வரும்" என தவிர்த்துவிடுகிறாய்....

    tsk
    பிள்ளையார் சதுர்த்தியன்று மட்டும், கொழுகட்டைக்கு பூரணம் செய்யவும்,

    புத்தாண்டு அன்று பூரண போளிக்கு பூரணம் செய்யவும்,

    உன் ஆபத்பாந்தவனான 'இட்லி பொடி' பொடிக்கவும்,

    'அரைச்சுவிட்ட' குழம்புக்கு அரைத்து விடவும் ,

    நான் வேண்டும்......மற்றபடி என்னை நீ மறந்துவிடுகிறாய்......

    என் அண்ணா , 'காபூலி சன்னா'வுக்கு மட்டும் முதல் மரியாதை.....எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை......??? :spin

    தனது கடுகடுப்பை அடுக்கியது கடலைப்பருப்பு.....:spin

    எப்படி சமாதானம் செய்வது......?:idea

    எடுத்தேன் 'முட்டைகோஸை'........சமைத்தேன் 'கோஸ் கடலைபருப்பு கூட்டு'

    வாயு தொல்லைக்காக 'கூட்டு பெருங்காயம்' கூடுதலாய் சேர்த்து.....

    சமையலறையில் சமாதானம் திரும்பியது.......:thumbsup
    DSC01519.JPG
     
    3 people like this.
    Loading...

  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    wow that was very nice...
     
    1 person likes this.
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Thank you Vidu.....
     
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Haa Haa :rotfl:rotfl:rotfl
     
    1 person likes this.
  5. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Good one. Thats the story in many household...
     
    1 person likes this.
  6. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Dear Sweety and Suba.......:thankyou2::thankyou2::thankyou2:
     
  7. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    good one......:)
     
    1 person likes this.
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Thank you dear Shivshankari.....
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Knbg..நல்ல வெள்ளைக் கொடி சமாதானம் (முட்டைகோஸ் நிறத்தை தான் சொன்னேன்)
    இன்னொரு சமாதான முறையும் இருக்கே..அடைக்கு ஊற போட்ருங்க..

    நல்ல வேளை ஞாபகப் படுத்தினீங்க...நான் போய் Indian store il வாங்கி கொண்டு வரவேண்டும்...:)

    Sriniketan
     
    1 person likes this.
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீ....
    அட....!!! அடையிருக்கே.....!! கொஞ்ச நாளா அடைய மறந்துட்டேன்...:hide:அடடா மழைடா அட மழைடா......!!!
    மாட்டுப்பொங்கல் அன்று சித்ரான்னத்துக்கு துணையாக, புதினா வடை செய்துவிட்டேன்....
    இப்போது கடலைப்பருப்பு சமர்த்தாக , சண்டை போடாமல் இருக்கிறது.....:rotfl
     

Share This Page