1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

கூட்டுக் குடும்பம்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Jan 9, 2012.

 1. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,656
  Trophy Points:
  283
  Gender:
  Female
  [​IMG]

  ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பம் கூட்டாக ஒன்று சேர்ந்து குடித்தனம் செய்வது தான் கூட்டுக் குடும்பம்.என்னைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பத்தில் எவ்வளவோ கத்துக் கொள்ளலாம்.

  [​IMG]

  ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க,
  நம்முடைய முன்னோர்களிடமிருந்து நம்முடைய பழக்க வழக்கங்களையும் ,நடை முறைகளையும் ,அறிந்து கொள்ள முடியும்.  எது எப்பொழுது, எதற்காக செய்யணும் ஏன் செய்யணும் என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருததருக்கொருவர் விட்டுக் கொடுப்பது , நமக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்காகவும் வாழ்வது ,மற்றவர்களுடன் மரியாதையுடன் பழகுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .

  [​IMG]

  எது முடிவெடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களை கலந்து ஆலோசித்து , முடிவெடுக்கலாம் . அவர்களுடைய அனுபவத்திலிருந்து அவர்கள் நல் வழிக் காட்டலாம் . ஒருத்தருடைய பலம் , பலவீனம் தெரிந்து வேலைகளை செய்யலாம் .முக்கியத்துவம் கொடுப்பதால் , சீக்கிரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது . அன்பும் , பண்பும் பரிமாறி , உதவும் வழக்கம் இருப்பதால் சகிப்புத் தன்மை வருகிறது .

  [​IMG]

  ஒரு கலர் பென்சில் பாக்ஸில் எப்படி கலர் பென்சில் எல்லாம் தனித்து இருந்தாலும் அவற்றை வைத்து ஒரு சித்திரம் எழுதும் போது , எல்லா கலருமே பரிமளிக்கிறது அதே போல் தான் கூட்டுக் குடும்பத்தில் உள்ள மனிதர்களும் . தனித்து இருந்தாலும் குடும்பம் ஒன்றாக சேரும் போது குடும்பம் நன்றாக செயல் படுகிறது .


  [​IMG]


  எந்த ஒரு காரியம் செய்ய முனையும் போதும் நமக்கு பக்க பலம் இருக்கிறது என்பதே நம்மை ஊக்குவிக்கும் !
  பலபேர் சேர்ந்து செய்வதால் , வேலை சுமை தெரியாது , வேலை சுமை இருந்தாலும் நகைச்சுவை யுடன் செய்தால் சுமை தெரியாது.
  [​IMG]


  வேலைகளை பகிர்ந்து கொண்டு இன்று நீ, நாளை நான் என்று இருப்பதால், எல்லோருக்கும் ஒவ்வொரு வேலையும் எப்படிப் பட்டது என்றும் தெரிய வரும்.
  ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


  [​IMG]


  என்னுடைய அனுபவத்தில் எனக்கு நிறைய நன்மையே கிடைத்தது.
  முதலில், இன்றும் எவ்வளவு வேலை இருந்தாலும், முகம் சுளிக்காமல் , மொனமொனக்காமல் என்னால் வேலை செய்ய முடிகிறது. அடுத்தது, சகிப்புத் தன்மை , இவள், இவன், இப்படிதான் இவர்களைக் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கத் தான் செய்யும் என்ற மன பாவம் என்னிடத்தில் , அதனால் நான் என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன், முடியவில்லை என்றால் விட்டு விடுவேன்.

  [​IMG]

  நாலு பேருடன் கலந்து கட்டிக் கொண்டு வேலை செய்யவோ, பேச்சுக் கொடுக்கவோ முடிகிறது. பூத் தொடுக்க, மாக் கோலம் போட , நாள் கிழமைகளில் ஒத்தாசையாக இருக்க, சின்ன சின்ன பாத்திரங்கள் தேய்ப்பது, வேலைக்காரி இல்லாவிட்டால், தன் கையே தனக்கு உதவி என்றிருப்பது , புடவை ப்ளவுச்களை மாற்றிக் கட்டிக் கொள்ள கொடுப்பது, அவசரத்திற்கு பொருள்கள், துணி மணிக் கொடுத்து உதவுவது இது எல்லாம் எல்லோருக்கும் இருப்பதில்லை!

  [​IMG]

  நிறைய பெயர் ரொம்ப , " நான் , என்னுடையது " என்றிருப்பார்கள் , கொஞ்சத்தில் எதையும் கொடுக்க மாட்டார்கள் .
  தாராள குணம், பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, யாரிடத்திலும் பொறாமைக் கொள்ளாமல் இருப்பது, விருந்தோம்பலில் சிறந்து விளங்குவது , வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வது . இவை எல்லாம் சிறப்பு அம்சங்கள் .

  [​IMG]


  பெரியவர்கள் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்கள் என்று அனுபவத்திலே தெரிந்து கொளவதால், அதை அடுத்து ,அடுத்து வரும் சந்ததியும் அந்த வழி முறைகளைக் கடைப் பிடிக்க முடிகிறது.  வாழ்க்கையே ஒரு கொடுக்கல் வாங்கல் தான், இந்தக் கையால் கொடுத்தால் அடுத்தக் கையால் வாங்கலாம் அன்பை!


  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

   
  1 person likes this.
  Loading...

 2. Padmini

  Padmini IL Hall of Fame

  Messages:
  6,796
  Likes Received:
  1,164
  Trophy Points:
  345
  Gender:
  Female
  Kootuk kudmbhattin arumai perumaigalai miga thelivagavum, azhagagavum edutthu uriththullergal thozhi!Malavanna malargal sernthu oru naaril thodukkappatta malai vasanaiyum, kannukku virundhum alippadhu pol koottu kudumbha muraiyum valarattum,
  Anbhudan
  pad
   
 3. prana

  prana IL Hall of Fame

  Messages:
  5,231
  Likes Received:
  2,560
  Trophy Points:
  340
  Gender:
  Female
  மாதங்கி மேடம்,
  உண்மைதான் அன்பு,சகிப்புத்தன்மை,விட்டுக் கொடுத்தல்,பகிர்ந்துக் கொள்ளுதல் என கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள் ஏராளம்..
  அதே சமயம் மனஸ்தாபம், வேலை பங்கீடு,வீட்டு செலவு பங்கீடு என சில குறைகளும் இருக்கிறது..
  இந்த வேகமயமான உலகத்தில் கூட்டுக் குடும்பம் சாத்தியமா என்பது ஒரு பெரிய சந்தேகம்தான்..
   
 4. g3sudha

  g3sudha IL Hall of Fame

  Messages:
  7,986
  Likes Received:
  8,287
  Trophy Points:
  445
  Gender:
  Female
  very nicely written
   
 5. knbg

  knbg Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  5,815
  Likes Received:
  5,605
  Trophy Points:
  455
  Gender:
  Female
  Mathangi ma'am,
  அருமையான பதிவு......:thumbsup
   
 6. sivshankari

  sivshankari Gold IL'ite

  Messages:
  1,238
  Likes Received:
  93
  Trophy Points:
  103
  Gender:
  Female
 7. Vasuma09

  Vasuma09 IL Hall of Fame

  Messages:
  2,772
  Likes Received:
  2,470
  Trophy Points:
  308
  Gender:
  Female
  Thanks a lot for sharing it.
   
 8. applevaio

  applevaio Silver IL'ite

  Messages:
  195
  Likes Received:
  62
  Trophy Points:
  68
  Gender:
  Female
  Good one.. Thanks for sharing..
   

Share This Page