1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை வளர்ப்பு - மனதில் தோன்றியதை பகிறு

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jun 16, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குழந்தை வளர்ப்பு - மனதில் தோன்றியதை பகிறுகிறேன் !

    எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை
    ! கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....

    கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன் !

    அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
    உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?

    எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

    1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
    4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
    8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
    13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
    20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.


    ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ !

    நான் ஒரு கதை படித்தேன் இதோ அது

    சிறுவன் கேட்ட வரம்!!!

    ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்.

    தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

    ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர்,

    "என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

    என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

    "கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதைப் போல* வாழ வேண்டும். எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்
    நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க
    வேண்டும். அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும். அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில*க்கக் கூடாது.
    என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும். என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்
    என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை. நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

    இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

    "அந்த குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

    ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

    "இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்"!!!

    எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.

    இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா? [​IMG] இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?

    குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.

    "குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
    இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

    குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.

    ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
    எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.

    அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
    செய்யத்துவங்குகிறது.

    கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க :( மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. [​IMG] ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.

    அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் :( ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.

    நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் ; எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.

    பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.

    அவசியத்துக்கு வேலைக்கு போகதீங்க !

    தவிர்க்கமுடியாடி போங்க !!


    கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?

    எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.

    உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.

    சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்

    அன்புடன்
    க்ருஷ்ணாம்மா [​IMG]
     
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
  4. PadmaManivannan

    PadmaManivannan New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    very nice and very much important topic to be definitely read....:thumbsup
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Padma :)
     

Share This Page