1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குளக்கரை விடியல்!

Discussion in 'Regional Poetry' started by sundaramuthu, Mar 6, 2011.

  1. sundaramuthu

    sundaramuthu New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    குளக்கரை விடியல்!

    இத்தனைபேர் சுற்றிவர
    அத்தனை அழகா நான்!?
    மீசை முறுக்குது ஆசைச்சூரியன்...

    சூரியக்கதிர் வருடச்
    செவ்விதழ் விரித்தது
    தண்ணீர் குளத்துத் தாமரை...

    தாமரை இதழ்விரியத்
    தன் முகம் புதைத்தது
    நிலவுக்கு ஏங்கிடும் அல்லி...

    அல்லிக் குளத்தினில்
    வெள்ளிச் சிதறல்கள்,
    துள்ளித் திரியும் மீன்கள்...

    மீன்களைப் பார்த்ததும்
    மோகம் பெருகிட
    மோனத் தவமியற்றும் கொக்கு...

    கொக்கிற்குப் போட்டியாய்
    குளக்கரையில் தவமிருக்கும்,
    ஒற்றைக்கால் அரசமரம்...

    அரசமரத்தடியில்
    அசையா நெடுந்தவம்,
    அன்னையைப்போல்
    பெண்தேடும் பிள்ளை!
     
    Last edited: Mar 6, 2011
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    SM

    IL--க்கு நல்வரவு!


    இன்றைய விடியல் எனக்கும் இனிமையே...உங்கள் புனைவைப் படித்ததும். இங்கே குளமும், கரையும், அரசமரப் பிள்ளையாரும் இல்லையெனினும்......குளக்கரைக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.
    அருமை! மேலும் தொடருங்கள். :cheers
     
  3. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    miga arumayaana kavidhai SM... kulakkarayil vidiyal thedum aayirakkanakaana pengal...
     
  4. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    மூன்று வரி எழுதி கடைசி வரியின்
    சொல்லை முதல் சொல்லாக்கி...................
    கவிதை மிக அருமை sm
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குளக்கரை விடியலுடன்,
    வரவை பதித்து கவிதையில் கருத்தை,
    பதித்த விதம் நன்று எஸ்எம். வாழ்த்துக்கள்.

    சீக்வெண்ஷியல் திண்கிங் அபாரம்.
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அருமையான ஆரம்பம் sm...குளக்கரை விடியலில் குலக்கரைக்கே சென்று வந்தேன். நன்றி
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஜெயா சொன்னது போல் எனக்கு எங்கள் ஊர் குளத்தங்கரை போய் வந்த மாதிரி இருந்தது.sm பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள். இனி அமர்க்களம் தான்.வாழ்த்துக்கள்.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விடியலின் இதம்
    உங்கள் வரிகளில்
    அருமையான
    துவக்கம்.

    உங்கள் வரவுக்கு மேலும் வர இருக்கும் வரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
     

Share This Page