1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குடும்பத்தைக் காக்கும் தேவதைகளுக்கான உட

Discussion in 'Posts in Regional Languages' started by pudugaithendral, Feb 18, 2010.

  1. pudugaithendral

    pudugaithendral New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    3
    Gender:
    Female
    பெண்களுக்கே இருக்கும் பலவித பிரச்சனைகளின் காரணம் பெண்களுக்கே புரியாது, தெரியாது.படித்த பெண்களும் இதில் விதி விலக்கல்ல.

    அந்த 3 நாட்கள் மேட்டருங்க. 24 மணிநேரத்துக்கு பிரச்சனையில்லை(whisper shield போல) எனும் ரீதியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அந்த வகை நாப்கின்கள் வாங்கும் ஆளா நீங்க??

    மேட்டர் உங்களுக்கு. அத்தகைய நாப்கின்கள் உள்ளே ப்ளாசிடிக் வைத்திருப்பார்களாம். அதனால் இன்ஃபெக்*ஷன், அரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகமாம். பருத்தியிலானால் ஆன நாப்கின்கள் மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.

    மகளீர் நல மருத்துவர் சொன்னதாக சமீபத்தில் கேள்விபட்ட இன்னொரு
    செய்தியையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சாதாரண நாட்களில் கூட பேண்டியையும் 3 முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை டாய்லெட் உபயோகித்த பின்னர் தண்ணீர் விட்டுக்கழுவி, டிஷ்யு பேப்பரால் ஒத்தி துடைத்து ஈர்ப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது
    மிக அவசியம்.

    திருமணத்திற்கு முன்பு வரை கொடியிடையாளாய் வளைய வந்தவள் அப்புறம் ”கொடிய இடையாளாய்”
    ஆகிவிட்டாள் என கேலி பேசுவது உண்டு. ஆனால் அதற்கான காரணங்களை யாரும் உணர்வதில்லை.


    தாய்மைக்கு பெண் கொடுக்கும் விலை தன் அழகு. கரு உண்டான உடனே அவளின் உடல் தாய்மைக்கு
    தயாராகி, ஹார்மோன்கள் மாறுகின்றன.

    குழந்தை பிறக்கும் வரை இருவருக்கும் உண்கிறாள். பிறந்த பிறகோ பாலூட்ட சக்திவேண்டுமென உண்கிறாள்.
    இவை எல்லாம் தருவது அதிக எடை. தவிரவும் நம் இந்திய பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு உடற்பயி்ற்சி செய்யும் பழக்கமில்லை.

    கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும், குடும்பம், வேலை, இத்யாதிகள் என இவற்றுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறாளே தவிர தன்னை பற்றி பரிபூரணமாக மறந்து விடுகிறாள்.

    பிரசவம் தவிர குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை பெண்ணுக்குத்தான் செய்யப்படுகிறது. இதனால்
    ஏற்படும் விளைவு உடல் பருமன் என சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றில் பல பெண் மருத்துவர்களும் ஒத்துக்கொண்ட விடயம்.

    இதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்!!!

    ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். வேலைக்கு போகும்/ போகாத பெண்களுக்கு இது அதிகம். தவிர மாமியார்,புகுந்தவீட்டு
    பிரச்சனை, புரிந்து கொள்ளாத கணவன், குழ்ந்தைகளின் கல்வி, எதிர்கால பயம் எல்லாமும் காரணம்.

    மன அழுத்தம் அதிகமானால் ஒன்று அதிகமாக சாப்பிடத்தோனும்,
    இல்லையேல் குறைவாக சாப்பிடுவோம். விளைவு உடல் பருமன்.

    பிள்ளை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால் அந்த மாபெரும் பொறுப்பு பெண்ணின் கையில்தான்
    இருக்கிறது. இதுவும் மன அழுத்தம் தரும் விடயம்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

    பொதுவாகவே அனைவரும் பசிக்குத் தான் சாப்பிடுகிறோமே தவிர போஷாக்கான உணவு எடுத்துக்கொள்வதில்லை. அதிலும்
    பெண்கள் மீதம் இருப்பதை உண்பர். இல்லையே அன்றைக்கு மோர் சோறுதான். இது பல வீடுகளில் நடக்கும் விடயம்.

    இதில் போஷாக்கு எங்கேயிருக்கிறது. பழங்கள், சாலட்கள் இவைகள் அன்றாட உணவில் எங்கே எடுத்துக்கொள்கிறோம்.
    இத்துடன் வால்நட், பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    வால்நட்டில் உடம்புக்குத் தேவையான ஒமேகா 3 சத்து இருக்கிறது. சைவ உணவு உண்பவர்க்ளுக்கு ஒமேகா சத்து கிடைக்க வால்நட் தான் சிறந்தது.

    உடல் நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் போனால் போதும் என்று நினைப்போமே தவிர சின்ன சின்ன விடயங்களுக்கு மருத்துவரிடம் செல்வதில்லை.

    மருத்துவரை கலந்தாலோசித்து, தகுந்த நியுட்ரீஷியன் உதவியோடு
    சத்தான உணவு எடுத்துக்கொண்டு, தகுந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    இதற்கான அவசியத்தை பெண்கள் உணர்ந்து செயல்படவேண்டும். ஆண்களும் தனது மனைவிக்கு தேவையான வசதிகளை
    செய்து கொடுத்து, அனுசரணயாக இருக்க வேண்டும்.

    குடும்ப விளக்கு ஆரோக்கியமாக இருந்தால் அந்தக் குடும்பமே நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

    பதிவிட நான் அழைக்கும் மூவர்
    vidoosh vidya

    snehidi


    ramalakshmi

    View attachment 130036
     
    Loading...

Share This Page