1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    12. ஆட்டோகிராப்


    "நைட் கிளாஸ் வரலையா.." மாடியில் உட்கார்ந்து படித்துகொண்டிருந்த (படிக்க முயற்சி பண்ணிகொண்டிருந்த) என்னிடம் மூச்சு வாங்க ஓடி வந்தான் நாகேஷ். எல்.கே,ஜி முதல் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ப்ரியாவை காதலிப்பதாக முதலில் இவனிடம் சொல்லி இருக்க வில்லை. கொஞ்சம் லேட்டா தான் சொல்லி இருந்தேன். சாரதி போல இல்லாமல், எனக்கு சப்போர்டிவ்வா இருந்தவன்.


    "வரல டா.. நே ஏன் இப்படி மூச்சு வாங்க வாங்க ஓடி வர.. என்ன விஷயம்.." என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது,


    "அவள் வந்துருக்கா டா.. ப்ரியா.." அவன் கண்களில் ஆச்சரியம். யாருமே வரமாட்டார்கள். இறுதி பரிச்சை நடப்பதனால் யாரும் நைட் கிளாஸ் வரவேண்டாம்.. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வரலாம் என்று அறிவித்து விட்டார்கள். அவன் ப்ரியா வருவாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.


    நான் மெலிதாக சிரித்துகொண்டேன். இதுவாக தான் இருக்கு'ன்னு ஏனோ எனக்கு தெரிந்துவிட்டது. நான் நினைத்தது போல வந்திருக்கிறாள். ஆனால் ஏன்..?


    "டேய்.. அவள் உன்ன பார்க்க தான் டா வந்துருக்கா.. வா போகலாம்.." என்றான் என் நல்ல நண்பன் :)


    "இல்லை டா.. நான் வரலை.. அங்க வந்தா சத்தியமா படிக்கமாட்டேன். இன்னும் கொஞ்சம் கூட ஸ்டார்ட் பண்ணவே இல்லை.." எனக்கு வரவேண்டும் என்று ஆசை. கொள்ளை ஆசை. அவளை பார்க்கணும், ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு செகண்ட் போதும். கண்ணும் கண்ணும் பார்த்துக்கிற ஒரே ஒரு செகண்ட். ஆனால் பயம், பதற்றம். ஏதேனும் சொல்வாளா..


    "நீ வரணும் டா.. இங்க பாரு, அவள் என்ன குடுத்துருக்கா'ன்னு.." அவன் கையை நீட்டினான்.


    சின்னதாய் உள்ளங்கையில் உட்காரும் அளவிற்கு ஒரு நோட், பார்க்க டைரி போல என்று வைத்து கொள்ளுங்களேன். அதை பார்த்ததும் எனக்கு புரியவில்லை. நாகேஷ் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.


    "அவள் வந்தா டா.. அஞ்சு மணிக்கெல்லாம் வந்துட்டா. கேள்ஸ்'ல வேற யாரும் வரலை. கொஞ்சம் நேரம் அப்புறம் கிளாஸ் வெளிய வந்து இதை என்கிட்டே குடுத்த. பாய்ஸ் எல்லார்கிட்டையும் இதுல பில் பண்ண சொல்லிடு'ன்னு சொன்னா.." அவன் கண்களில் என்னை போலவே நச்சத்திரம்.


    ஸ்லாம் புக் எழுதுவது கொஞ்ச நாட்காளாக போய் கொண்டிருந்தது, எங்களிடம் இருந்து ஒரு டைரி பெண்களிடம் போகும், அவர்களிடம் இருந்து எங்களுக்கு வரும். பெயர், ஊர், அட்ரஸ் (அப்பொழுது செல் போன் பிரபலம் இல்லை. ஆனால் என்னிடம் ஒன்று இருந்தது :), பிடித்த கலர், படித்த புத்தகம்,பாட்டு, படம் என்று கேள்விகள் இருக்கும் நாங்களும் எழுதுவோம். ஆனால், இவள் தந்திருப்பது ஸ்பெஷல்.


    "எனக்காக தான் கதந்திருக்கா போலருக்கு டா.." வாய் விட்டே சொல்லிவிட்டேன். உள்ளே மனது குதி குதி என்று ஆடியது. அந்த நொடி எத்தனை டன் உற்சாகம் என்னை வந்து அழுத்தியதோ தெரியவில்லை.


    "உனக்காக தான் டா.. இங்க பாரு, என்னென்ன பில் பண்ணனும்'னு அவளே எழுதிருக்கா..அவன் டைரியை பிரித்து காட்டினான். அங்கே அவளை போலவே அவள் அழகான கை எழுத்தில், அவள் கேள்விகள் பளிச்சென்று மின்னின..


    பெயர், அட்ரெஸ், பிடித்த கலர், புத்தகம், இப்படி எல்லாரிடமும் கேட்கும் கேள்விகள். 'எல்லாரிடம் குடுக்க சொன்னாள்..' அந்த எல்லாரிடமும் என்பதில் நானும் இருக்கிறேன்.


    "இல்லை டா.. நான் வரலை. நீ போ.."


    "அப்போ நீ வரலையா.. சரி இதுல எழுதி குடு.. நான் அவள் கிட்ட கொடுக்கணும்"


    "இல்லை.. நீங்க எல்லாரும் எழுதி குடுத்துடுங்க.."


    "அப்போ.. நீ.. எனெக்கென்னமோ உனக்காக தான் இதை குடுத்திருக்கா'ன்னு தோணுது.." அவன் உறுதியாக சொன்னான். எனக்கும் அப்படி தான் பட்டது,


    "பார்க்கலாம் டா.. அவள் எனக்காக தான் இதை கொடுத்திருக்கா'ன்னா.. மறுபடி இது நாளைக்கு வரும்.." அவனை அனுப்பி வைத்தேன்..


    நான் எதிர்பார்த்தது போலவே அது மீண்டும் வந்தது.. அது இன்னும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சியை அள்ளிகொண்டு வந்தது..
     
  2. nivsrini

    nivsrini Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    82
    Trophy Points:
    68
    Gender:
    Female
    kadhaiya muzuvadhumaaga mudikka maateergalo? eppavum padhi padhi dhano? interestinga padikuromulla. ippadi disappoint pannalama?
     
  3. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    தொடர்ந்து எழுத நேரம் இல்லை.. என்ன செய்வது :(
     
  4. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    13. I HATE YOU !


    ஏதோ ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பதை விட அவஸ்தையான விஷயமீ இருக்காது. அதுவும் இந்த காதலில் காத்திருப்பது அழகான அவஸ்தை. அடுத்த நாள் சாயுங்காலம் நயிட் கிளாஸ் செல்வதற்காக காத்திருந்தேன். எந்த காரணத்திற்காக பரிச்சைக்கு முன்பு லீவ் விடுவார்களோ அதை நான் முற்றிலும் மறந்தேன். அந்த நாள் முழுவதும் புத்தகமும் கையுமாக இருந்தேனே தவிர ஒரு எழுத்து கூட படிக்கவில்லை. ஈக்வேஷன்களில் அவள் இன்று வருவாள என்ற கேள்விக்கான பதிலை தேடினேன். பார்முலாக்களில் அவள் அந்த டைரியை மீண்டும் தருவாளா என்று யோசித்தேன். ஒரு வழியாக மணி ஐந்தானது. புத்தகங்களை ஒரு ஒப்புக்க பையில் எடுத்து வைத்துவிட்டு நைட் கிளாசிற்கு பறந்தேன்.


    "அவள் வரலை டா.." நாகேஷ் எனை விட ஆவலாய் இருந்திருப்பான் போல. அவன் முகத்திலும் கொஞ்சம் ஏமாற்றம்.


    "ச்ச்சே.. என்னடா இப்படி ஆச்சு.." நான் சோர்ந்தேன்.. அப்போ அவள் எனக்காக தரலையா.. அவளுக்கு என்ன பிடிக்கலையா.. அப்போ நான் லவ் பெயிலியரா.. அடுத்த ஒரே ஒரு நொடியில் கன்னபின்னவென்று இடிந்து போனேன்.


    "ஆனால் அவள் தங்கச்சி கிட்ட டைரி குடுத்து அனுப்பி இருக்கா டா.." அந்த டைரியை ஏன் முன்பு நீட்டினான்.


    அவ்வுளவு தான். வார்த்தைகள் வர மறந்து ஒரு நொடி (மீண்டும்) பறந்தேன். அந்த டைரியை அவன் கையில் இருந்து வாங்கினேன்.


    "ஆமா டா.. நான்.. அவள்.. குடுத்திருக்கா.." சந்தோஷத்தில் திக்கு முக்கடி போனேன். நான் எதிர்பார்த்தது இதை தான். ஆனால் அது நடக்கிறது..


    "சாரதி நைட் கிளாஸ் வந்துருக்கான் டா.." சர்ரென்று ஏன் உற்சாகம் இறங்கியது. படுபாவி இந்த விஷயம் எல்லாம் தெரிந்தால் என்னை காலி செய்து விடுவானே..


    அவனாக கண்டுபிடித்து என்னை திட்டுவதற்கு முன்பு நானே அவனிடம் போய் நடந்ததை ஒப்பித்தேன்.


    "அவள் நேத்து இதை குடுத்தாளா.." அவன் கையில் இப்பொழுது அந்த டைரி.


    "ம்ம்..ம்ம்.." நானும் நாகேஷும் சேர்ந்து தலை ஆட்டினோம்.


    "நீ எழுதலன்னு தான் இன்னைக்கும் குடுத்தா'ன்னு எப்டி சொல்ற.." இப்படியெல்லாம் கேட்டு நம் சந்தோஷத்தில் ஆப்பு வைப்பது தான் இவனுக்கு முக்கியம்.. சை.. நல்ல வேலை நாகேஷிடம் பதில் இருந்தது.


    "அவளோட தங்கச்சி என்கிட்டே குடுத்தா டா.. இதுல அந்த அண்ணாவ பில் பண்ணி தர சொல்லி பிரியா சொன்னா'ன்னு என்கிட்டே குடுத்துட்டு போனா டா.."


    நான் மீண்டும் மேலே பறந்தேன். அவளது தங்கை ரேணு எங்கள் பள்ளி தான். டென்த் என்பதால் அவளும் நைட் கிளாஸ் வருவாள். ஒரு முறை கூட அவளிடம் பேசியதில்லை. அவளது அக்காவை போலவே அவளும் அமைதி டைப்.


    "டேய் இது நீ குடுத்த கார்ட் தான.." சாரதி அந்த டைரியை பிரித்திருந்தான். நான் அவளது சைக்கில் கூடையில் போட்டு வாய்த்த சின்ன கார்டை அவள் அழகாய் ஒட்டி வைத்திருந்தாள். அடுத்த பக்கம் நான் அலுமினியம் காகிதத்தில் வரைந்து குடுத்த ரோஜா.. அடுத்த பக்கத்தில் பெண்கள் தினம் அன்று அவள் கூடையில் போட்ட கவிதை.


    நாகேஷும் சாரதியும் என்னை பார்த்து முறைத்தார்கள். இதெல்லாம் எப்போடா நடந்துச்சு என்ற பார்வையோடு.. (நீங்களும் இதையே முனுமுனுப்பது காதில் விழுது.. நீங்க மைன்ட் வாய்ஸ் னு நெனச்சி சத்தமா திட்ரிங்க :D )


    நான் ஹிஹி என வழிந்தேன். மேலும் திருப்பினோம். அழகான அவளது கை எழுத்தில் அவள் அங்கங்கே எழுதி இருந்தாள்.


    I wrote your name in the sand
    but the waves washed it away
    I wrote your name in the air
    but the winds pushed it away
    I wrote your name in my heart and
    I got heart attack


    "ஹோ..." என இருவரும் சத்தம் போட்டார்கள்.. நான் என்ன செய்வது எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் நின்றேன்.. ச்சே.. சும்மா ஒரு கொடேஷன்.. எங்கேயாது படித்திருப்பாள்.


    அடுத்த பக்கம் திருப்பினோம்..


    I HATE YOU..


    மூன்று பேருமே அதிர்ச்சி ஆனோம்.. அதன் கீழே இருந்த வார்த்தைகள் என்னை இன்னும் இன்னும் அதிர்ச்சிக்குள் தள்ளின.. ஆனால் இது வேற ஒரு விதமான அதிர்ச்சி.,,


    H - Happy to See you
    A - Always missing you
    T - Take you in my mind
    E - Ever never forget you


    "உனக்கு தான் டா எழுதிருக்கு.. அதான் உன்கிட்ட தர சொல்லி குடுத்திருக்கா.. அவள்ட முதல்ல நீ பேசு டா.. என்ன சொல்ல வரா'ன்னு கேளு.." நாகேஷ் என்னை விட உற்சாகத்தில் குதித்தான். எனக்கு சகலமும் மறந்து விட்டது. I HATE YOU.. எனக்குள் முணுமுணுத்து கொண்டேன்.. என்னை பார்த்து தான் சொல்கிறாள்.


    அடுத்து வந்த பக்கங்களில் எங்கள் கிளாஸ் மக்களின் ஆடோகிராப்புகள்.. அட போங்கப்பா என்று திருப்பி கொண்டே போனோம்.. ஒரு இடத்தில சட்டன் ப்ரேக் அடித்தோம்.. அவளுடைய டைரியில் அவளே எழுதி இருந்தாள்..


    NAME : PRIYA
    FAVOURITE COLOR : BLUE
    PET NAME : YARIBI
    FLOWER : YELLOW ROSE
    SONG : KADHAL MAZHAIYE (ROJA), KADHAL MAZHAIYE (JAY JAY)


    "யாரிபி.. யாரிபி.." எனக்கு நானே சொல்லி பார்த்தேன். ஏனோ அந்த வார்த்தை இனித்தது. மீண்டும் மீண்டும் சொன்னேன். சொல்லி கொண்டே இருந்தேன். அந்த பெயரை சொல்லி அவளை அப்பொழுதே கூப்பிட வேண்டும் போல இருந்தது. உன் பெயர் கூட உன்னை போல எப்படி அழகா இருக்கு என்று கேட்க வேண்டும் போல இருந்தது. யாரிபி..."


    "அது என்னடா யாரிபி.." சாரதி யோசித்தான்..


    "டேய்.. பிரியா'வ ரிவர்ஸ் ல எழுதினா யாரிபி டா.." நாகேஷ் ஆசல்டாக அந்த கோடை உடைத்தான். இவனெல்லாம் நல்ல வரணும்..


    நான் கொஞ்சம் நொந்தேன், ச்ச.. எனக்கு தோனலையே.. "உன் கிட்ட அந்த பாட்டு இருக்கா டா.."


    "என்ன பாட்டு.." இருவரும் கோரஸ் போட்டார்கள். நான் அந்த டைரியை தொட்டு காண்பித்தேன்.


    "ரோஜா.. ஜே.ஜே.." என்னிடம் அந்த பாடல்கள் இல்லை.


    "என்கிட்டே இருக்க.. நான் கொண்டு வரேன்.." நாகேஷ் சாதாரணமாய் சொன்னான். அடுத்து வரபோகும் நாட்களில் இந்த இரு பாடல்களுக்கும் நான் பயங்கரமான பைத்தியமாய் நான் மாறபோவது அப்பொழுது இருவருக்கும் தெரியவில்லை..



    அடுத்த பக்கத்தில் தான் கிளைமாக்ஸ் இருந்தது...


    NAME : என் பெயர்
    DATE OF BIRTH : என் பிறந்தநாள்
    ADDRESS : என் முகவரி..


    அதன் கீழ் நான் எழுதுவதற்காக சில கேள்விகள். ஏன் மனதில் இருந்த அந்த வசனத்தை எனக்கு முன்பாக நாகேஷ் சொன்னான்..


    "டேய் உன்னோட டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி இருக்கா டா.. கண்டிப்பா அவள் ஓகே தான் சொல்றா.."


    என்னால் நம்ப முடியவில்லை.. நம்பாமல் இருக்க முடியவில்லை.. அப்படி என்றால்...


    அந்த டைரியில் நான் என்னை பற்றி எழுதினேன். பிடித்த நிறம், பிடித்த பாடம், பிடித்த புத்தகம்.. அவளது தங்கை ரேணு அந்த டைரியை நாகேஷிடம் இருந்து வாங்கிகொண்டாள். நான் படிப்பதை சுத்தாமாக மறந்து போனேன். அவளிடம் என்ன பேசுவது என்று யோசித்து யோசித்து கடைசியாக அவளிடம் பேசுவது என்று முடிவு செய்தேன். ஆனால் எப்படி.. பரிச்சை நேரம் இது. இனி அவள் நயிட் கிளாஸ் வருவாளா என்பது கேள்வி குறி..


    'அவங்க வீட்டுக்கு போன் பண்ணு டா.. எல்லாருடைய நம்பரும் நம்ம கிளாஸ் அட்டன்டன்ஸ்'ல இருக்குமே.."


    "ஆமா ல.. " என்று அவனை பார்த்தேன். அன்று இரவு வீடு திரும்பும் பொழுது அவள் வீடு போன் நம்பர் எனக்கு மனப்பாடம் ஆகி இருந்தது..
     
  5. nivsrini

    nivsrini Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    82
    Trophy Points:
    68
    Gender:
    Female
    meendum arai kurai kadhai. Oru naal muzhuvadhumai utkaarndhu kadhai neriaya part post pannunga. so oru vaaram kandippai padikalam. piragu one whole day, for another one week... please follow this. so u will get time also we wont disturb you for whole week.
     
  6. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    14. ஹல்லோ


    பிசிக்ஸ் முடிந்தது, கெமிஸ்ட்ரி முடிந்தது. பாழப்போன இரண்டு பரிச்சைக்கு நடுவிலே இரண்டு நாள் லீவ் வேறு. பரிச்சை எழுதும் முன்னும் பின்னும் அவளை பார்க்கும் சந்தர்பங்கள் வேறு அவ்வுளவாக கிடைக்கவில்லை. ஏன் என்றால் பரிச்சை அப்படி. தமிழில் இங்கிலீஷில் சென்டம் அடிக்க முடியாது ஆனால் சயின்ஸ் சப்ஜெக்டுகக்ளில் முடியும். இதை போன்ற எக்சாம்களில் சென்டம் வருமா வராத என்பதை தீர்வு செய்வது ஓடு ,மதிப்பு கொச்டின்கள் தான். மற்றபடி இரண்டு மார்க், பத்து மார்க் எல்லாம் அண்டர்லைன் செய்து எழுதுவது, படம் வரைவது பாகம் குறிப்பது என்று ஏக்க செக்க டகில்பாச்சா வேலை காட்டிவிடலாம், அந்த பருப்பெல்லாம் ஒன மார்க் கொஸ்டினில் வேகாது. இப்படிப்பட்ட பரிச்சை முடிந்தும் அனைவரும் கூடி ஆன்சர்களை விவரிக்க வேண்டும் என்பது ஒரு எழுட்படாத விதி. இதனால் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கொஞ்சம் கூட ஏற்படவில்லை. (இரண்டு பரிசைகளிலும் நான் தலா இரண்டு இன் மார்க்குகளை சொதப்பி விட்டேன் என்பது ஒரு எக்ஸ்ட்ரா பிட்)


    இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் அடுத்த பரிச்சைக்கும் அவளை பார்க்க முடியாது. ஏனென்றால் அடுத்து வருவது பயாலாஜி. நான் தான் கம்பியூட்டர் குரூப் ஆச்சே. எப்படி அவளை பார்க்க முடியும். ஒரு நாள் லீவ், அடுத்த நாள் பயாலாஜி,அடுத்து ஒரு நாள் கூட எனக்கு லீவ் ஏன் என்றால் அதற்கும் அடுத்த நாள் நம் கம்பியூட்டர் சயின்ஸ். அட போங்கடா, அடுத்து ஐந்து நாட்கள் பார்க்க முடியாது, என்னடா நாலு நாள் தானே கணக்கு வருது என்று நினைப்பவர்களுக்கு ஒரு தலைப்பு செய்தி, அடுத்த நாள் தான் கணக்கு பரிச்சை. கணக்கி பரிச்சையில் இருக்கும் டிவிஸ்ட் என்ன என்றால் அது தான் கடைசி பரிச்சை. அதற்கப்புறம் ??


    இப்படி நினைத்தாலே உங்களுக்கு பகீர் என்கிறதா..(அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்று வடிவேல் மாதிரி சொல்கிறீர்களோ) அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும். எனக்கு மனதில் ஓடியதெல்லாம் ஒரே ஒரு விஷயம். அவளை பார்க்க வேண்டும். அந்த அழ்கான ரக்ஷசியின் பார்வையில் பட வேண்டும். ஒரே ஒரு மைக்ரோ நொடி மட்டுமே என் முன் வீசப்படும் அந்த கண்கலின் தாக்கத்தை உணர வேண்டும், அந்த அவஸ்தையில் சிக்கி.. ஐயோ.. அதை எப்படி சொல்வது. சரி விடுங்கள். அவளை பார்க்கணும், அவ்வுளவுதான். ஆனால் எப்படி..


    ஆனால், எப்படி எப்படி என யோசித்திருக்க, அவளது பயாலாஜி பரிச்சை முடிந்தது. பிரியா நல்லா எழுதி இருக்கா என்று ரோஜா நாகேஷிடம் சொல்ல, அதை வந்து என்னிடம் சொன்னான் அவன். அடுத்த நாள் நாங்கள் கம்பியூட்டர் சயீன்ஸ் சிங்கங்கள் மட்டும் நயிட் கிளாஸ் வந்து படியோ படி என்று படித்து கிழித்து மறுநாள் பரிசையிலும் கிழித்து (அங்கேயும் சென்டம் அடிக்கும் வாய்ப்பை நான் இழந்து_ வீட்டிற்கும் வ்நதாயிற்று. இப்பொழுது எனக்கு ஒரு புதிய தலைவலி. இன்னும் இருப்பது ஒரே ஒரு பரிச்சை. அதற்கு பின் அவள் எங்கேயோ நான் எங்கேயோ. அவள் என்னை பார்த்து தம்மா தூண்டு சிரித்தது, எனக்கும் ஒரு கார்டை கொடுத்தது. அட என்ன தான் அர்த்தம். அவளுக்கு என்னை பிடித்திருக்கிறது என்று தான் எல்லா வானிலை அறிக்கைகளும் சொல்கின்றன. ஆனால், அவள் சொல்லவில்லையே. அது சரி அவள் எப்படி சொல்வாள். நான் அவளிடம் அதன் பின் பேசவே இல்லையே. அவளா வந்து என்னிடம் சொல்வாளா என்ன. தைரியத்தை வரவழைத்து கொண்டு நான் ஒர மேட்டரில் இறங்கினேன்.


    அவள் வீடு நம்பரை அட்டேண்டன்சில் இருந்து அஜாக் செய்தது அப்பொழுது எனக்கு உதவியாய் இருந்தது. மதிய நேரம் இன்று நல்லவேளை எங்கள் வீட்டில் யாரும் இல்லை. தங்கை தீபா பள்ளிக்கு சென்றுவிட்டாள், அப்பா வழக்கம் போல ஆபிஸ். ஒரு மகராசிக்கு மஞ்சள் நீராட்டு விழா, அம்மாவும் வீட்டில் இல்லை. பரிச்சை முடித்த கையேடு வீட்டிற்கு வந்த நான், சோபாவில் உட்கார்ந்து கொண்டு அவள் வீட்டிற்கு டயல் செய்தேன். அது வேறு லேண்ட்லைன் அந்த காலை யார் எடுப்பார்கள், வேறு யாரோ எடுத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அட யாரோ எடுப்பதை விடுங்கள். அவள் எடுத்தாலே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ரிங் போனது, போனது... போனது.. முப்பது நொடிகள் கிட்டதட்ட கழிந்த பின் டக் என்ற ஓசை.


    "ஹல்லோ.."


    அவள் தான். அவளே தான்.. அவளது குரலை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவளோடு நேரிடையாக பேசியதெல்லாம் இல்லை. அன்று ஏன் காதலை சொன்னது இல்லாமல். ஆனால் எனக்கு கண்டிப்பாக தெரியும். அவளே தான்.


    "ஹலோ.. யார் பேசறிங்க.." என்னிடம் இருந்து பதில் இல்லை. அவளே கேட்டாள்..


    ".. நீங்க யாரு பேசறிங்க.." நான் குழறினேன். அட ச்சீ.. என்ன இப்படி உளர்றேன்...


    "நான்..." சற்று நேரம் மவுனம், என்ன நினைத்தாலோ தெரியவில்லை. "ப்ரியா பேசறேன்.." என்றாள்.


    ஆகா.. ஆஆகா.. அதெல்லாம் ஒரு பீல்.. அவளிடம் எனக்கு ஏற்பட்ட, வார்த்தைகளால் விளக்க முடியாத தருணங்களில் இதவும் ஒன்று. அந்த அழகான குரலில் ஏதோ ஒன்று இருக்கிறது போங்கள்.


    "நான்..." மென்று முழுங்கி ஏன் பெயரை சொன்னேன்.


    அந்த நிமிஷம் நான் சர்வ நிச்சயமாய் நடக்கும் என்று நினைத்த விஷயம் இது தான். என் பெயரை கேட்டதும் அவள் மவுனம் ஆகி விடுவாள். இப்படி நான் நினைக்க கூட இல்லை. நம்பினேன். ஆனால் அடுத்த நொடி அவளுடைய ரியாக்ஷன்.


    "ஓ.. ஆங்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க.." அந்த குரலில் தெரிந்த தெரிந்த திடீர் உற்சாகத்தில் நான் மொத்தமாய் திக்கு முக்காடி போனேன்.


    "நானா.. வந்து நல்லர்கேனே.. நீங்க.." சத்தியமாய் உளறினேன், கேவலம் கேவலமாய் வழிந்தேன்.


    "நல்ல இருக்கேனே.. எக்ஸாம் எப்படி பண்ணிங்க.." அடிப்பாவி என்ன பேசுகிறாள் இவள்.ஒரு வேலை யார் என்று தெரியாமல் பேசுகிறாளோ. உன்னிடம் காதலை சொல்லி உன்னை அழவைத்தவன் நான் பெண்ணே.


    "நல்லா பண்ணிருக்கேன்.."


    "அப்படியா.. சென்டம் வருமா.. உங்கள தான் கம்பியூட்டர் மிஸ் ரொம்ப நம்பி இருக்காங்க.." அவள் உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.


    "எல்லா ஒன் மார்க் நல்லா பண்ணிருக்கேன். ஒரே ஒரு பை மார்க் மட்டும் சரியா பண்ணலை.." நான் என்னையே நொந்து கொண்டேன். அடப்பாவி சென்டம் வரதே இதில், போச்சே போச்சே..


    அதன் பின்பு மவுனம். இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. நானே அந்த மவுனத்தை உடைத்தேன்.


    "வந்து// இணைக்கு நயிட் கிளாஸ் வர முடிமா.. கொஞ்சம் பேசணும்.."


    "ம்ம்.. வரேனே.." கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அன்று அந்த பதில் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. இன்று வரை அவள் எனக்கு ஒரு ஆச்சரிய குறியாய் தான் இருந்து வருகிறாள்.


    அன்று இரவு நயிட் கிளாசிற்கு நான் ஒரு டைரியோடு சென்று இருந்தேன். அவளிடம் ஆட்டோ கிராப் வாங்குவதற்கு..
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    இந்த பதிவை நேற்று இட்டிருக்க வேண்டும். தாமதம் ஆகிவிட்டது.

    ஜனவரி 22 : இது என் காதலின் பிறந்தநாள். இதயத்தில் கருத்தரித்த என் ஆசைகள் அவள் கண் முன்பு பிரசவித்த நாள். இன்று நான் உன்னருகில் இல்லை. இனி எத்தனை நாட்கள் ஆகும் என்றும் தெரியவில்லை. இன்று உன்னை எண்ணி கொண்டிருந்தேன். நம் காதல் வளர்ந்த நாட்களை எண்ணி கொண்டிருந்தேன். நம் காதல் நமக்கு முதல் பிள்ளை. பார்த்து பார்த்து வளர்த்தோம். நம் பிள்ளைக்கு இன்றோடு வயது பத்து :)

    என்றுமே உன்னிடம் நான் சொல்லிகொள்வது இது தான் : உன்னை நான் விரும்புறேன்.
     
    2 people like this.
  8. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    பிரச்சனைகள் வாழ்க்கையில் வரலாம், இன்று என் அன்றாட வாழ்கை முழுதும் பிரச்சனையாகவே மாறிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு என்னால் கணினியை தொட முடியாது. இருக்கட்டும், மனதில் என் கன்னியை எண்ணி கொண்டே இருப்பேன்.

    காதல் ரோஜாவே.. உன் வாசம் நான் போகும் திசை எல்லாம் என்னை தேடி வந்து தீண்டட்டும். அடுத்த பதிவை இடும் வரை, எனக்காக காத்திரு
     
    3 people like this.
  9. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    15. I HATE YOU - 2


    உற்சாகம் பொத்திக்கொண்டு வர, நான் நைட் கிளாஸ் சென்றடைந்தேன். அவளிடம் பேசி அவளை இரவு பார்க்க வரசொல்ல போகிறேன் என்று ஏற்கனேவே நாகேஷிடம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால்


    சாரதியிடம் சொல்லவில்லை. சொன்னால் என்னை கைமா செய்திருப்பான். நான் ஏனோ தேவை இல்லாமல் அவளையே சுற்றுகிறேன் என்று இப்பொழுதெல்லாம் அவனும் அடிக்கடி சொல்ல ஆரம்பித்து


    விட்டான். அவனிடம் சொல்ல பயம், ஆனால் நாகேஷ் அப்படி இல்லை, ஏன் காதலுக்கு (?) அவனிடம் நல்ல ஆதரவு. ஸ்கூல் சென்று என் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தி வெளியே வந்தேன். ஸ்கூல்


    பில்டிங் கிரவுண்ட் ப்ளோரின் வரண்டாவில் நாகேஷ் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து உற்சாகமாக கை அசைத்தேன். 'அவள் வரா டா..' என்று சற்று உறக்கமாகவே கத்தினேன். அவன் உடனே அருகில்


    இருந்த எதையோ எடுத்து தூக்கி காட்டினான். அது சாரதியின் பை !!


    "நீ போன் பண்ணியா .." இது சாரதி. அவனிடம் நாகேஷ் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டான். இப்போ வழக்கம் போல விசாரணை.


    "ம்ம்.."


    "அவள் உன் கிட்ட சென்டம் வருமா'ன்னு கேட்டா ?"


    "ம்ம்..."


    "நீ அவளை பார்க்கணும், நைட் வா'ன்னு சொன்னியா.. "


    "ஆமா.."


    "அவளும் வரேன்னு சொன்னா.."


    "ஆமா டா.." என்ன பிரச்சனை இவனுக்கு. எனக்கு கொஞ்சம் கடுப்பாகி போனது. ஆனால் என்னை விட அதிகம் கடுப்பானது அவன் தான்.


    "என்னடா நடக்குது இங்க.. அதன் உங்க ரெண்டு பேர்க்கும் ஒன்னும் இல்லை'ன்னு ஆகிடுச்சி இல்லை. அப்புறம் எதுக்கு இப்படி பண்ணிகிட்டிருக்க"


    நான் எப்போ சொன்னேன். இவன் எதுக்கு முடிஞ்சிடுச்சு சொல்றான். நாகேஷ் நடுவில் வந்தான்.


    "மச்சி, கொழப்பமே இல்லை டா. அவளும் உன்ன லவ் பண்றா டா.. இல்ல அவள் உன்கிட்ட பேச கூட மாட்டா. இன்னைக்கு வரா இல்லை. என்ன பிளான்.."


    நான் அப்பாவியை அந்த டைரியை எடுத்து காண்பித்தேன். "இந்த டைரியை அவ கிட்ட குடுத்து எழுத சொல்ல போறேன்.."


    நாகேஷும் சாரதியும் ஒன்றாக சேர்ந்து 'தூ' என்றார்கள்..


    ***********


    அவளுடைய நீல நிற சைக்கிளை அவள் ஸ்டேண்டில் நிறுத்தி விட்டு, வராந்தாவில் நடந்து வந்து அவள் வழக்கமாய் உட்காரும் கிளாஸ் ரூமில் சென்று அமரும் வரை அவள் என்னையே பார்த்து கொண்டு


    வந்ததாக சாரதியும் நாகேஷும் சத்தியம் செய்யாத குறையாக சொன்னார்கள். நான் ஏதோ வயதுக்கு வந்த பெண் போல தலையை தொங்கபோட்டு கீழே பார்த்தபடி உட்கார்ந்துவிட்டேன்.


    "உன்னையே பாத்துகிட்டு வந்தா டா.."


    "நீ என்ன ம**க்கு கீழ பாத்துகிட்டு இருந்த.. அவளை பாக்க மாட்டியா.."


    என்னை விட இந்த இருவருக்கும் ஏக்கசக்க உற்சாகம் தொத்திகொண்டது.


    "எனக்கும் பாக்க ஆச தன்.. ஆனா என்ன தெரில, ஏதோ ஒரு பயம்.. டேய் இந்த டைரிய நீயே அவள் கிட்ட குடேன்.." ஏன் காதலின் முதல் தூதாக நாகேஷை அனுப்பி வைத்தேன். அவன் சட்டேன்று வாங்கி


    சிட்டென்று பறந்தான்.


    "குடுத்தாச்சு.. ஒரு எட்டு மணிக்கு வாங்கிடலாம். அது வரைக்கும் படிப்போம்." சாரதி அறிவித்து விட்டு படிக்க ஆரம்பித்தான். அப்பொழுது மணி ஆறு. அதன் பின் வந்த இரண்டு மணி நேரம், என்


    வாழ்கையின் மிக நீளமான இரண்டு மணி நேரம் :)


    *****************


    ஒரு சின்ன வெளிர் நீல நிற டைரி அது. அவள் என்னிடம் கேட்டது போலவே அவளிடம் பல கேள்விகளை நானும் கேட்டிருந்தேன். அவள் பெயர், அவள் பிறந்த நாள், அவளுக்கு பிடித்த நிறம், அவளுக்கு


    பிடித்த நடிகர் நடிகை. என்று எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கு நானே பதில் எழுதி இருந்தேன். 'உன்ன பத்தி எனக்கும் தெரியும்' என்று ஒரு சின்ன சீன் தான் அது. நான் அவளிடம் கேள்விகளுக்கு


    பென்சில் எழுதியிருந்தாள். ச்ச.. என்ன அழகான கை எழுத்து அவளுக்கு..


    Your Sunsign
    - Scales (Thulam)


    Your favourite Singer
    - Hariharan, Chithra


    Favourite Sports
    - Chess


    Favourite Leader
    - Gandhiji


    Favourite Player
    - Agassi


    அவள் எழுதிய வார்த்தைகளை படித்த அடுத்த நொடி அவளுக்கு பிடித்தவை எல்லாம் எனக்கு பிடித்தவை ஆனது. (இன்றும் அவளுக்கு பிடித்தவைகள் தன் எனக்கு பிடித்தவைகள்)


    You want to become ________
    - An Engineer


    Your ambition in life is _______________
    - to be a good girl for all


    any words to me _________________
    - 1. Thanks (For your wishes), 2. Sorry (Because I hurt your heart). And I Like your Character. I HATE YOU


    இதற்கு மேல் யோசிக்க எதுவும் இல்லை. அவளுக்கு என்னை சர்வ நிச்சயமாய் பிடித்திருக்கிறது.




    ஒன்பது மணி.. நைட் கிளாஸ் முடிந்தது. இது தன் எங்கள் வாழ்கையின் கடைசி நைட் கிளாஸ். நாளை கடைசி பரிச்சை. பள்ளியில் எங்களுக்கு கடைசி நாள். இனிமேல் நயிட் கிளாஸ் இல்லை, சைக்கில்


    டெஸ்ட் இல்லை. ரிவிஷன் டெஸ்ட் இல்லை. அவளை பார்பதற்கான வாய்ப்பும் இல்லை. அவள் வெளியே வந்தாள். அவள் சைக்கில் எடுபதற்காக ஸ்டான்ட் அருகில் சென்றாள். சென்றவள் வெகு நேரமாக


    அங்கே நின்று கொண்டிருந்தாள். எனக்கு மட்டும் அல்ல, என்னை சுற்றி இருந்தவர்களுக்கும் புரிந்தது.


    "டேய்.. உனக்காக தாண்ட வெயிட் பண்றா.. போ.. போய்ட்டு பேசு.. இனிமே சான்சே இல்லை, நாளைக்கு லாஸ்ட் டே.." நண்பர்கள் பின்னால் இருந்து தள்ளி விட, நான் சின்ன சின்ன அடிகளை முன்னே


    வைத்து அவளை நோக்கி நடந்தேன்.


    அவள் எங்கோ பார்த்து கொண்டிருந்தாள், ஆனால் அந்த கண்கள் என்னை எதிர்பார்ப்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. பில்டிங் வராந்தாவின் முனை தன் அவள் சைக்கில் நிறுத்தி இருந்த இடம். இன்னும்


    பத்து பதினைந்து அடியில் அவளை அடைந்து விடுவேன். என்ன பேசுவது, என்ன பேசுவது என்று ஏன் இருதயத்தை விட அதிகமாய் மூளை அடித்து கொண்டது. அவளோ கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல்


    சாதரணமாய் நின்று கொண்டிருந்தாள். இதோ வந்துவிட்டேன், வராந்தா முடிந்துவிட்டது. இரண்டு படிகள். ஒவ்வொன்றாய் இறங்கினேன். அவள் ஏன் முன் நின்று கொண்டிருந்தாள். சற்று தலையை நிமிர்த்தி


    பார்த்தேன். எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ அவளும் அவளுடைய பார்வையை என்னை நோக்கி வீசினாள். ஒரு பக்கம் பள்ளியின் டியுப் வெளிச்சம் அவள் மீது விழ, மறுபக்கம் நிலாவின்


    வெளிச்சம் அவள் மீது படர, அழகின் உச்சியில் அந்த முகம் என்னை பார்க்க..


    சட்டேன்று ஏதோ ஒரு வெக்கம் எனக்குள் பரவ, அப்படியே அவளை விட்டு விலகி ஏன் சைக்கிள் இருக்கும் பக்கம் சென்றேன். சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டேன்.


    என்ன செய்துவிட்டேன் நான். நாளை கடைசி நாள். அதன் பிறகு அவளை பார்க்கவே முடியாது !!
     
  10. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    என்ன செய்துவிட்டேன் நான். நாளை கடைசி நாள். அதன் பிறகு அவளை பார்க்கவே முடியாது !!
     

Share This Page