அவன் உனக்கு அனைத்துமானேன் உன்னை நித்தம் அணைக்க உன் எதிர்பார்ப்பை தணிக்க வழியின்றி தவிக்கிறேன் நீ எண்ணில் உண்டு உள்ளதால் தான் உள்ளம் அமைதி கொண்டிருக்கிறது உன்னில் நானிமிருக்கிறேன் நானிருப்பதால் தானோ நீயும் தவிக்கிறாய் எனைப்போன்றே காதலர் தினம் இன்று காதல் மட்டுமே உடன் கொண்டு கட்டுண்டு கிடக்கிறோம் வாழ்கிறோம் வாழ்வு தொடர காதல் வாழ நம் நெஞ்சமும் இணைந்தே நினைந்தே வாழ்ந்திடுவோம் வாழ்த்த மட்டுமே முடிகிறது வசந்தம் வீசும் நினைவுகளினூடே அவள் உன்னை கண்ட நேரம் மனதில் வலி நீங்கி இன்பம் மலர்ந்த நேரம் உன் குரலை கேட்ட நொடி மெல்லிய சங்கீதம் இதயத்தில் ரீங்காரமாய் ஒலிக்குதடா காரணமின்றியே நேசித்தேன் காதலித்தபின் ஆயிரம் காரணங்கள் வரிசையிட்டு நின்றன செல்லமாக கோபிக்க காரணம் ஆயிரம் இருந்தும் என் காதலுக்கு உயிரளித்த உன் மேல் கோபம் கொள்ள கூட தெரியவில்லை ! புன்னகையை காதல் மொழியாய் வெளியிடுகிறேன் காதலுக்கு ஒரு நாளா காதலர்க்கு ஒரு நாளா காதலிக்க ஒரு நாளா காதலிக்கு ஒரு நாளா இந்த வாழ்க்கை போதுமோ என் காதலை உறைக்க உன்னை காதலிக்க நேரம் போதவில்லை உனக்காக காத்திருக்க நேரம் போவதில்லை