1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாண விருந்து

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Jan 22, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தங்கம் தன் தோழி வாணியுடன் நடந்து சென்று கொண்டு இருந்தாள் .இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள் .அப்போது அவர்கள் பின்னே கிணிங் கிணிங் என்று சைக்கிள் மணி சத்தம் கேட்டது .இருவரும் திரும்பி பார்க்காமல் நடந்தார்கள் .மீண்டும் மணி ஒலிக்க வாணி திரும்பி பார்த்து விட்டு ஏய் உன் அத்தை மகன் ரத்தினம் வராருடி என்று சொன்னாள் .உடனே தங்கம் எல்லாம் தெரியும் நீ பேசாம வான்னு சொல்லிட்டு நடையை தொடர்ந்தாள் ரத்தினம் வேகமா வந்து அவள் முன்னே சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தி விட்டு ,எவ்ளோ நேரம் மணி அடிச்சுகிட்டு உன் பின்னாலே வாரேன் .நீ பாட்டில போய்கிட்டு இருக்கேன்னு கேட்டான் .எங்களுக்கு பேர் இருக்குல்லா .பேரைச் சொல்லி கூப்பிட வேண்டியது தானே.பின்னாலே கேட்குற மணி சத்தத்துக்கு எல்லாம் நாங்க திரும்பி பாக்ற பழக்கம் இல்லன்னு பதில் சொன்னாள் .உடனே ரத்தினம் இடி இடிக்கிற மாதிரி சிரிக்க ஆரம்பிச்சுட்டான் .ஏண்டி நான் தங்கம் தங்கம்னு உன்னை கூப்பிட, போற வார பயல் எல்லாம் இவன் எவண்டா கிறுக்கு பயல் தெருவிலே தங்கத்தை வித்துட்டு போறான்னு நினைப்பாங்கல்லா என்று சொல்ல , ஆமாம் உன் மூஞ்சியை பார்த்தா தங்கம் விக்கிற மூஞ்சி மாதிரியா இருக்கு அப்படின்னு அவள் பதில் சொன்னாள் .

    அப்புறம் ரத்தினம் அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பிச்சுட்டான் .எங்க அம்மா உங்க வீட்ல வந்து உன்னை பொண்ணு கேட்டாங்கல்லா .உன் அப்பா யோசிச்சு சொல்றேன்னு சொன்னாராமே.நம்ம என்ன அந்நியமா .அவரு தங்கச்சி தானே வந்து கேட்டா .உடனே பதில் சொல்ல வேண்டியது தானேன்னு கேட்டான் .ஏன் எங்க அப்பா மட்டும் தான் உங்க அம்மாவை கூடப் பொறந்தவன்னு நினைக்கணுமா .உங்க அம்மா அப்படி நினைக்கலையே .அப்படி நினைச்சிருந்தா ,அண்ணே உன் மகள் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் .உன் சக்திக்கு ஏத்த மாதிரி நகை போட்டு கல்யாணத்தை முடிச்சிரு அப்படின்னு சொல்லி இருக்கணும் அதை விட்டுட்டு இருபத்தஞ்சு பவுன் நகையும் என் மவனுக்கு ஒரு டிவிஎஸ் 50 யும் வாங்கி குடுத்துருன்னு சொல்றாங்களே .இவ்வளவு நாளும் சைக்கிள்ள தானே வேலைக்கு போனே .அப்படியே போக வேண்டியது தானே.கல்யாணம் முடிஞ்சா என்ன ரெண்டு கொம்பா முளைக்குது .வண்டி வேணும்னா நீங்களே உங்க சொந்த காசிலே வாங்கணும் அது தான் கெளரவம்.நீங்க கேட்டதை செய்ற அளவுக்கு எங்களுக்கு வசதி எல்லாம் இல்லை .அதனாலே நீங்க வேற பொண்ணை பார்த்துக்குங்க அப்படின்னு வெடுக்குன்னு சொல்லிட்டா .

    இதை கேட்டதும் ரத்தினம், நீ கவலை படாதே தங்கம் .நான் எங்க அம்மாட்ட பேசி நல்ல முடிவு எடுக்கிறேன் .நீ தான் என் மனைவி .நான் சம்பாத்தியம் பண்ணி வாங்கற வண்டியில உன்னை உட்கார வச்சு எங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போவேன் அப்படின்னு சொல்லி தங்கத்தின் முகத்தில் புன்முறுவல் வரச் செய்தான் .

    இப்படியாக ரத்தினம் தங்கம் கல்யாணம் சுபமாக முடிந்தது .வாங்க நாமும் கல்யாண விருந்து சாப்ட போகலாம் .
     
    sindmani, PavithraS, Caide and 5 others like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    நல்லா ரசிச்சு படிச்சேன் மா. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. :2thumbsup:
     
    2 people like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மிகவும் நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன் மேடம்
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா ரொம்ப சந்தோஷம் .நன்றிகள் பல
     
    2 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி உமா .மேடம் எல்லாம் வேண்டாம் .அது ரொம்ப அன்னியமா இருக்கு .
     
    3 people like this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ok இனி மேல் மா என அழைக்கிறேன்
     
  7. JanakiPriya

    JanakiPriya Junior IL'ite

    Messages:
    29
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Maa
    Very short and interesting story. Liked it.
     
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ennumaaaaa scooter varadhachanai yellam kekaranga??? :eek Ulagam thirundhirchunu la nenaichitruken? Ada Kadavuley! But namma nayagan aanalum rommmbha nallavaruuu!!! :2thumbsup:
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Welcome back ma with your usual wonderful stories.

    Story is short and simple but much needed message is conveyed.


    கதையில் ஊர் பாஷை பிடித்து இருந்தது மா. 'வர'தட்சிணை - போகற போக்க பார்த்தால் நாங்கள் தான் பெண் வீட்டார்க்கு கொடுக்க வேண்டி இருக்கும் போல எதிர்காலத்தில். ஏன் எனில், ஆண்-பெண் சதவிகிதாச்சாரம் மிகவும் சமனற்ற நிலையில் உள்ளது.


    மேலும் பல நல்ல கதைகளும் கவிதைகளுடன் தொடரவும் மா.
     
    2 people like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thank you JanakiPriya
     

Share This Page