1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி மஞ்சு! தொடர்ந்து படியுங்கள்!:)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-3

    மஞ்சுளாவைப் பார்க்கும்போதெல்லாம் மணிவீரனின் கண்களில் தெரியும் ஒளிக்கு காதல் என்பதைத் தவிர வேறெந்த பெயரும் இல்லை என்பது தாரிகாவுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது. தாரிகாவும் மணிவீரனும் நல்ல நண்பர்கள்.அவளும் இவனும் ஒரே வகுப்பும் கூட.....அப்படி ஏற்பட்ட பழக்கம் தான்.

    காலையில் சீக்கிரமே கல்லூரிக்கு வந்து மரத்தடியில் உட்கார்ந்துக்கொண்டு சிந்தியாவுக்காக காத்திருந்த போது தான் அவனாக வந்து பேசினான்.

    "ஹலோ........நீங்க மட்டும் எப்பவும் விலகியே போறீங்களே.....யார் கூடயும் ஒட்டாம?" சிரித்தான்.

    அந்த சிரிப்பில் வழிசல் இல்லை........ஆனால் ஒரு நேர்மை இருந்தது. தன் மனதில் இருக்கும் அதே வெளிப்படையான குணம் அவன் கண்களில் தெரிவதைக் கண்டு அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    "அப்படியெல்லாம் இல்லையே? என் தோழிகள் இருவரும் வேறு குரூப்! லஞ்ச் டைமில் அவர்களை பார்த்து பேசிவிட்டு தான் வருவேன்."

    "இப்படி உட்காரட்டுமா?" அவள் அமர்ந்திருந்த சிமண்ட் பெஞ்சின் ஓரமாக ஒரு இடம் கேட்டான். அவனுக்காக மனதிலேயே இடம் கொடுக்க பிற்காலத்தில் தயாராக இருந்தவள் பற்களைக் காட்டிக்கொண்டே அப்போது சொன்னாள். "தாராளமாக!"

    அவள் தந்த தாராளத்தின் எல்லையை மீறாமல் ஓரமாகவே அமர்ந்தவன், " உங்கள் தோழிகள் என்றால்.........அந்த தாவணி பிகர்....அதுவா?"

    "ஏய்..........." அவள் ஒற்றை விரலை அவன் கண்களுக்கு நேராக நீட்டி முறைத்தாள். அவன் உல்லாசமாக சிரித்தான்.

    "ஹா....ஹா.....சும்மா.....லுல்லுலாயி...." கண்சிமிட்டி அவள் கைவிரலை அவளிடமே பத்திரமாக ஒப்படைத்துவிட்டான்.

    குழந்தைக்கு விளையாட்டு காட்ட...சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை என்ற அளவில் புரிந்துக்கொண்டவள் தூரத்தில் வந்துக்கொண்டிருந்த சிந்தியாவை சைகையால் காட்டினாள். "இருங்க....அவளிடம் சொல்லித் தருகிறேன்."

    "ஓ........ஹா ஹா ஹா.......யாரு அந்த வாத்துகிட்டயா?"

    "வாத்தா?? யூ.........."

    "ஹே தரு......ஐயோ வேணாம்டி....." ஓடி வந்த வேகத்தில் அவளோடு மோதிக்கொண்டே நின்ற சிந்தியா அப்போது தான் அந்த ஆண்மகனைக் கவனித்தாள்.

    "யாருடி இவரு? ஏன் இவர அடிக்க போன?" மூச்சு வாங்கியது அவளுக்கு.

    "பின்ன? என் உயிர் தோழியை வாத்துன்னு இவரு சொல்வாரு.....அதை கேட்டுக்கிட்டு நான் தலையாட்டனுமா?"

    "யாரடி சொன்னாரு? மஞ்சுவையா?" அப்பாவியாய் அவள் விழி விரித்தாள்.

    அப்போது கூட தன்னைத்தான் அவன் சொல்லியிருப்பான் என்ற சந்தேகமே அவளுக்கு வரவில்லை.வீரன் அதற்கும் சிரித்தான்.தன் தோழி இப்படி ஒரு மக்காய் இருக்க வேண்டாம் என்று தாரிகாவுக்குமே தோன்றியது.

    மெல்ல அவள் காதுக்குள் முணுமுணுத்தாள். "அவர் சொன்னது உன்னைத்தான்டி லூசு"

    "என்னையா??" ஆஆ....என்று வாயைப் பிளந்தவள்,அடுத்த நொடி தைரியமாய் அவன் கண்ணோடு கண் பார்த்தாள்.

    "என்னையா சொன்னீங்க?"

    "ம்ம்...." கண்மூடித் திறந்தான் ஆமாம் என்பது போல!

    "ஏன் அப்படி சொன்னீங்க?"

    "வாத்து நடை நடந்தா? அப்படித்தான் சொல்வோம்.நானாவது பரவாயில்ல....இப்படி உன்கிட்டயே சொல்றேன்! உன் கிளாஸ் பசங்க......."

    "பசங்க?" அவளுக்கு நடுங்கியது.

    "போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா பாய்ஸ் ஹாஸ்டல் முழுக்க சொல்லிக்கிட்டு திரியறானுங்க....."

    "ம்மம்க்க்...." அவளிடமிருந்து வினோதமான ஒலி கிளம்பியது. அடுத்த நொடி தாரிகா உட்கார்ந்திருந்த இடத்திலேயே தானும் உட்கார்ந்துக்கொண்டு அழ தொடங்கினாள்.

    "அய்யய்யோ....இப்படி அழுது வைக்காதம்மா.....அப்பறம் அதுக்கு வேற புதுசா ஒரு பேர வெச்சுருவானுங்க...."

    தாரிகா அவனை முறைத்துக்கொண்டே சிந்தியாவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டாள்.

    "என்னடி சிந்து நீ........ச்சீ....... ச்சீ.........இதுக்கெல்லாம் அழலாமா? அவனுங்களுக்கு நாமும் ஒரு பேரு வெச்சுட்டா போச்சு.....ஒன்னென்ன ஓராயிரம் பேர் வெச்சுடலாம். அழாதடா.....இந்தா தண்ணி.....குடி!"

    "ஏன் அப்படியே உன் ஃப்ரண்டுக்கு வுட்வர்ட்ஸ் குடுக்குறது?"

    "டேய்......வேணாம்! சொல்லிட்டேன்........சிந்து என்னை மாதிரி இல்லை...."

    முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டான் அவன். "ஆமாம் தரு........அவ நடக்குறது வாத்து மாதிரி இருந்தாலும் உன்னவிட அவ அழகு தான்.....சந்தேகமே இல்ல" இயல்பாக அவள் அவனை தோழமையோடு பேச, அவனும் அவள் பெயரைச் சுருக்கமாய் அழைக்க தொடங்கினான்.

    பக்கத்திலிருந்த புத்தகப்பையைத் தூக்கி அவன்மீது எறிந்தவள், "கிளம்புடா இங்கிருந்து.........பேசுன முதல் நாளே ஒருத்திய அழ வெச்சுட்ட.........."

    "யார் யாரை அழ வைத்தது?" என்ற கேள்வியோடு வந்த மஞ்சள் நிலவை......மஞ்சுளாவை அன்று தான்....அந்த நிமிடம் தான் வீரன் முதன்முதலாக பார்த்தான்.

    "இவந்தாண்டி.....என் கிளாஸ்மேட்......இன்னைக்குத்தான் பேசினான்.அதுக்குள்ளே சிந்தியாவைக் கிண்டலடித்து அழ வெச்சுட்டான்."

    மஞ்சுளா சிந்தியாவின் தோளில் தட்டினாள். "அடச்சி......எழுந்திரிடி......தொட்டாசிணுங்கி மாதிரி எதுக்கெடுத்தாலும்......"

    சிந்தியா அவளை ஏக்கமாய் பார்த்தாள். "மஞ்சு.....உனக்கு தெரியாதுடி.....இவரு.......இவரு........" திக்கித்திக்கி பேசியவளைத் தடுத்து நிறுத்திவிட்டு மஞ்சு தாரிகாவைப் பார்த்தாள்.

    "இவரு உன் கிளாஸ் தான?"

    "ஆமாம்......"

    இப்போது மஞ்சுளாவின் துளைக்கும் பார்வை சிந்தியாவை நடுங்க வைத்தது. "அப்பறம் என்ன இவரு........கழுதை முட்டின சுவருன்னு.....மரியாதை வேண்டிக்கிடக்கு? பேர் சொல்லியே கூப்பிட்டு பழகு.....இவனும் நம்ம வயசு தான்."

    ஆண்பிள்ளையைப் பேர் சொல்லி அழைப்பது எப்படி என்று சிந்தியா திகைத்தாள். தாரிகாவுக்கும் மஞ்சுளாவுக்கும் அவள் அதிர்ச்சிக்கு காரணம் தெரியாவிட்டாலும், அவளைப் போலவே கிராமத்தில் வளர்ந்தவனுக்கு அந்த திகைப்புக்கான காரணம் புரிந்தது.

    மஞ்சுளா வேறொரு காரணத்தைக் கண்டுப்பிடித்தவளாய், "உன் பேர் என்ன?" என்று வீரனைக் கேட்டாள்.

    "மணிவீரன்......" காலரைத் தூக்காத பெருமையோடு அவன் கம்பீரமாய் சொன்னான்.

    "ம்ம்.....இனிமேல் இவளை இப்படி சீண்டாதே........அவள் பட்டிக்காட்டில் பிறந்தவள்.....பயந்துவிடுவாள்....புரிகிறதா?" அவள் என்னவோ ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்தவளைப் போல அவனுக்கு உத்தரவிட்டாள்.

    அந்த அதிகார சொல் அவன் போக்கை நிறுத்தவில்லை என்றாலும், அவளின் அந்த திமிர் கலந்த பேச்சு அவனுக்கு பிடித்தது.அவனுக்கு மற்றவர்களை அடக்கித்தான் பழக்கம்.முதன்முறையாக தன்னை அடங்க சொல்லும் பெண்ணை அவன் கண்களில் ஆர்வத்தோடு பார்த்தான்.

    அதற்குள் தோழிகளைக் கிளப்பிவிட்ட மஞ்சுளா "வாங்க...கிளாஸ்க்கு போகலாம்!" என்று சிந்தியாவின் தோள் பிடித்து நடந்தாள்.

    "கருப்புசாமி கோயில்ல மணியடிக்கிறவன் மாதிரி ஆளும்....அவன் மூஞ்சியும்! இந்த அசகாய சூரன் சொல்லிட்டானாம்...இந்த பைத்தியமும் அதுக்கு அழுததாம்." சிந்தியாவின் காதுக்குள் கிசுகிசுத்தபடி மணிவீரனைக் கடந்தாள் மஞ்சுளா.

    தாரிகா மட்டும் அசையாமல் அவன் பக்கத்திலேயே நின்றிருந்தாள்.அவள் உடன் வராததைக் கவனித்த சிந்தியா தூரத்திலிருந்து திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள். "வரலயாடி?"

    "நீ போ..........நான் இவன் கூடவே கிளாஸ்க்கு போய்விடுகிறேன்." தாரிகா இங்கிருந்து கத்திய சத்தத்தில் தான் வீரன் சுய உணர்வுக்கு வந்தான்.

    "ஏன்டி இப்படி காதுக்குள் வந்து கத்தி தொலைக்கிற?"

    "அப்படியாவது நீ பூமிக்கு வரியான்னு பார்க்கத்தான்."

    தாரிகாவுக்கு புரிந்ததில் வெட்கப்பட்டவன், "சரி...சரி.....வா....டைமாச்சு......போகலாம்." மஞ்சுளாவைப் பார்த்த வினாடியில் இருந்து தன் நண்பனின் பார்வை அவள் பக்கமே இருப்பதை தாரிகா உணர்ந்தே இருந்தாள்.

    அன்று மட்டுமல்ல.....அதற்கு பின் வந்த நாட்களிலும் வீரனின் கண்கள் தாரிகாவைப் பார்த்துவிட்டால் பக்கத்தில் மஞ்சுளாவையும் தேடும்.அவள் இல்லாத நேரங்களில் அவன் கண்களில் தோன்றி மறையும் ஏமாற்றத்தைக் கண்டால்,அவனை விட தாரிகாவுக்கு தான் அதிகமாய் வலிக்கும்.

    ஒருநாள் அவளாகவே கேட்டாள். "என்னடா லவ் பண்றியா?"

    "ம்ம்ம்........."

    "அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது வீரா........"

    "ஆனால் எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது."

    "வீரா........."

    "ப்ளீஸ் தரு.........என் மனதை நோகடிக்கும்படி எதுவும் சொல்லாதே.......விட்டுவிடு! உன் தோழிக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்காது...."

    "நீயும் என் ஃப்ரண்டுடா........உனக்கு வலிக்க கூடாதேன்னு தான் சொல்றேன்."

    அவன் சிரித்தான். "அடி போடி.....நீ காதலிச்சிருக்கியா? அப்படி காதலிச்சிருந்தா வலி கூட சுகம் தான்னு உனக்கு புரியும்."

    தாரிகா சிரித்துக்கொண்டாள்.'எனக்கா புரியாது? எனக்கு புரிஞ்சது உனக்கு புரிஞ்சா உன்னால தாங்கிக்க முடியாதுன்னு தான்டா சொல்றேன்.' அவள் மௌனமாய் மனதுக்குள் சிந்திக்க தொடங்கினாள்.

    அவனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

    "போலாமா தரு?" சிந்தியா அவர்களின் வகுப்புக்கு வந்தாள்.

    "இதோ கிளம்பிட்டேன் சிந்து." தாரிகா புத்தகங்களை அடுக்க தொடங்கினாள்.

    மணிவீரன் சிந்தனைக் கலைந்தவனாய் அவளை வம்பிழுத்தான். "ஹே வாத்து.....என்னடி ஆளையே காணோம் ரொம்ப நாளா? கண்ணுலயே சிக்க மாட்டேன்றியே........பயந்துட்டியா?"

    அவர்கள் இருவரும் சகஜமாய் பேச தொடங்கியிருந்தார்கள் இப்போது."உன்னைப் பார்த்து நான் ஏன்டா பயப்படனும்?"

    "ஓய்........என்ன மரியாதை தேயுது?" அவளின் ஒற்றை ஜடை பின்னலை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான்.

    "ச்சீ....விடுடா........தேஞ்சு போன உன் மூஞ்சிக்கு இதுவே அதிகம்......"

    "மன்மதன்டி.....நானெல்லாம் எங்க ஊரு வயக்காட்டுல இறங்கி நடந்தேன்னு வச்சிக்க........"

    "பொண்ணுங்க சேறு வாரி இறைப்பாங்களா?" அவனை பேச விடாமல் தடுத்து காலை வாரினாள்.

    "அடியேய்.......உன்ன.........ஏய் தரு நீ முன்னாடி போ.............இவளை ஒரு கை பார்த்துட்டு வரேன்." கைகளை மடக்க தொடங்கினான் அவன்.

    "ஐயோ தரு..........இந்த அரை பைத்தியத்துகிட்ட என்னை தனியா விட்டுட்டு போய்டாதடி........" சிந்தியா உண்மையாகவே அலறினாள்.

    தாரிகா இருவரையும் பார்த்துக்கொண்டே சலிப்போடு உட்கார்ந்துவிட்டாள். "எனக்கு தெரியாதா? இதே வசனத்தை ஒரு மணிநேரமா சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் அசையாம இங்கயே உக்காந்துகிட்டு இருப்பீங்க......நான் உங்களுக்கு காவல்? மஞ்சுளாவைப் பார்த்து நீ சைட் அடிப்ப........அதை யாரும் பார்த்துடாம இருக்க, நான் எல்லாரையும் பார்க்கணும்? அங்கயும் நான் தான் காவல்? ம்ம்?"

    வீரன் சிந்தியாவைப் பார்த்து கண்சிமிட்டிக்கொண்டே தாரிகாவிடம் சொன்னான். "ஹா....ஹா.....நீ காவலன் படம் பார்த்ததில்லையா தரு? அசினுக்கும் விஜய்க்கும் இடையில மாட்டிக்கிட்டு அசினோட தோழி முழிக்குமே? அந்த கதையில் வெயிட்டான ரோல் அந்த பொண்ணுக்கு தான். உனக்கு அப்படியொரு உயர்ந்த பதவியை அளித்திருக்கும் எம்மையா நீ சாடுகிறாய்?"

    "யாரு நீ விஜய்? மஞ்சுளா......அசின்? இதை மட்டும் அவங்க இரண்டு பேரும் கேட்டாங்க........."

    சிந்தியா தாரிகாவை முந்திக்கொண்டு சொன்னாள். "இதை கேட்டுகிட்டு உட்கார்ந்திருந்த நம்ம இரண்டு பேரையும் துரத்தித் துரத்தி அடிப்பாங்க...ஹா "

    "ம்ம்....ம்ம்.....சரி சரி........பப்ளிக்....பப்ளிக்......" மணிவீரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டே அவள் மேலே பேசாமல் நிறுத்தினான்.மணிவீரனின் காதல் தாரிகாவின் மூலமாக சிந்தியாவுக்கும் தெரிந்திருந்தது.

    அதை பற்றி எதையும் ஆரம்பத்தில் சொல்லாதவள், இன்று தாரிகாவோடு வீட்டுக்கு செல்லும் வழியில் கேட்டாள். "மஞ்சுளா இவனை ஏற்றுப்பாளா? உனக்கு அப்படி தோணுதா?"

    தாரிகாவுக்கு "காவலன்" படம் தான் கண்ணில் தோன்றியது.'அந்த தோழி நானென்றால் மணிவீரன் திருமணம் செய்துகொள்ள போவது என்னையா? அது நடக்குமா?'
     
    6 people like this.
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Nallaa pogudhu Deva... friends galaattaa nallaa irundhadhu...
     
  4. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    aahaa ....engadaa karai nilavukal kaanomnu theditte irunthaa neenga ore thread la update panreengalaa ?!@#$%^&*() ippadi oru villatthanam panni ennai thread a theda vitta devaaaaaaaaa urrrrrrrrrr .....hehe irunga padichuttu varen :) :)
     
    1 person likes this.
  5. zingy

    zingy Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,115
    Likes Received:
    791
    Trophy Points:
    215
    Gender:
    Female
    Very interesting episode deva.
    And thanks for longer episode .It is not never long enough for me though :)
     
  6. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Deva...
    This episode is so interesting... Maniveeran kum, manju,tharu,sindhu ku idaiyil nadakira uraiyadaal.. remba iyalba and jolly ya irunthathu dear....
     
  7. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    College endra sonnale love thaan...at least sight kandippa irukkum....jolly athu thaane
     
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    shhhhh apapa ippave kanna kattudhe,....
    priya, unmaila yaar yaarai luv panrangannu nan manappaadam pannave enakku rendu naal agum pola iruke...
    epdi ipdi sikkalla sikka vaikkara...

    un ezhuththu naalukku naal merugerudhu...super machchi..
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    யாரு யாருக்கு பா ஜோடி?
    யாராவது சொல்லுங்களேன்.........

    தேவா பா அருமையான கதைகளம் .........
    என்னோட எதிர்பார்ப்பு அதிகமாய்டுச்சு..........
    அவங்க பேச்சுக்கள் இயல்பா இருந்தது பா & சூப்பராவும்..........

    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........
     
  10. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    கறை நிலவுகள் - பின்னூட்டங்கள்

    Friends..

    தேவாவின் கறை நிலவுகள் கதையின் பின்னூட்டங்களை இங்கு கொடுங்கள். கதையின் எல்லா பகுதிகளும் பின்னூட்டங்களும் ஒரே த்ரியடில் இருந்த சில எபிசொதேஸ் படிக்க முடிவதில்லை It got missed some times. So நீங்க உங்க comments இந்த த்ரியட்ல குடுங்க please.

    Thanks Nithya for initiating this kind. Thanks priyanka too for discussing about this kind of posting story here long time back.

    Thanks,
    Sowmya.
     

Share This Page