1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள் - கதைப்பகுதி

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 21, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்பு தோழிகளுக்கு,

    கறை நிலவுகள் கதையும் அதற்கான பின்னூட்டங்களும் ஒரே நூலில் இருப்பதால் தொடர்ச்சி விட்டு போவதாக சிலர் சொல்லியிருந்தீர்கள்.அதனால் தான் இதை தொடங்கினேன்.இங்கு கறை நிலவுகள் கதையின் அத்தனை பகுதிகளையும் முடித்தவரை நாளொன்றாக போடுகிறேன்.

    இங்கே உங்கள் பின்னூட்டங்களை பதிவிடாதீர்கள்.இல்லாவிட்டால் மறுபடியும் அது பழைய நூலோடு இணைக்கப்படும்! உங்கள் பின்னூட்டங்களை எப்போதும் போல இங்கு http://www.indusladies.com/forums/s...guages/153721-2965-2993-3016-2984-3007-a.html பதிவிடுங்கள்.

    நன்றி!:)
     
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-1

    எல்லா மனித உயிரினங்களுக்கும் தொட்டில் பருவம், தவழும் பருவம், நடை பயிலும் மழலைப் பருவம்,உற்சாகமே உரித்தான இளமைப்பருவம், வியர்வை சிந்தி உழைக்கும் காலம், நிற்க வழியில்லாமல் ஓடும் காலம்,ஓய்வாக அமரும் காலம் என்று வெவ்வேறு பருவங்களும் காலங்களும் வாழ்க்கையில் உண்டு.அனைத்தையும் கடக்க முடியாமல் பாதி வழியிலேயே நிராசையோடு உயிர்விட்டவர்களும் உண்டு.அனைத்தையும் கடந்தும் நிறைவில்லாமல் வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு.கடந்து வந்த காலத்தை அசைப்போடாமல்......அசைப்போட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பலரும் ஒரே ஒரு பருவத்தையும்,அதை வாழ்ந்த காலத்தையும் மறக்கவே முடியாது.

    அது இளமைப்பருவம்! இனிமையான கல்லூரிக்காலம்!

    சிலர் தங்கள் வாழ்க்கையை கல்லூரிக்கு முன்னான வசந்தகாலம்.....கல்லூரிக்கு பின்னான போராட்ட காலம் என்று கூட பிரித்துவிடும் அளவுக்கு முக்கியமான காலக்கட்டம் அது.இங்கிருந்து தான் உள்ள தடுமாற்றங்கள் தொடங்குகின்றன.....தொடங்கி வைக்கப்படுக்கின்றன! இங்கிருந்து தான் தாளாத துன்பங்கள் உணரப்படுகின்றன......உணர வைக்கப்படுகின்றன! இங்கே அள்ளித்தரும் இன்பங்கள் எத்தனையோ.........வாழ்க்கைப் பாடம் சொல்லித் தரும் அனுபவங்களும் அத்தனையே! இங்கே உல்லாச வழிகள் எத்தனையோ...........உள்ளம் உடைக்கும் வேதனைகளும் அத்தனையே!

    இங்கே கனவுகள் உண்டு........காதல் உண்டு.........சண்டைகள் உண்டு........சமாதான தூதுகள் உண்டு........எதிர்பார்ப்புகள்.....ஏமாற்றங்கள் எல்லாமே உண்டு! எத்தனையோ பேர் காதலிக்கலாம்! ஆனால் அத்தனையும் கைக்கூடுவதில்லை! ஜெயித்துவிட்டால்அது மெய் காதல்! தோற்ற மற்றவை எல்லாம் வெறும் அனுபவம் மட்டும்தான்!

    "
    கன்யா கலைக் கல்லூரி"யும் அதில் படிக்கும் எத்தனையோ மாணவர்களும் கூட இந்த விதியில் இருந்து தப்ப முடியவில்லை. விதிவிலக்காக தப்பிக்க அந்த கல்லூரி மட்டும் அப்படியென்ன உயர்வு என்கிறீர்களா? அதற்கு காரணம் அங்குள்ள மாணவிகள் தான்! அதிலும் குறிப்பிட்ட ஒரு மாணவி தான்! அவள் பெயர்..........தாரிகா!

    தாரிகா......எதார்த்தவாதி! எது நடந்தாலும் அதை பற்றிய அதிகமான மகிழ்ச்சியோ கவலையோ அவளிடம் இருக்காது. உணர்ச்சிகளை முகத்தில் காண்பிக்கவே மாட்டாள் என்று சொல்ல முடியாது தான்! ஆனால் அதிகப்படியான அதிர்ச்சியோ கோபமோ பயமோ பரபரப்போ அவள் முகத்தில் இதுவரை காணப்பட்டதில்லை. ஆனால் அவள் வாய் இருக்கிறதே.............அது ஓயாமல் பேசும்! அவள் முகம் காட்ட தவறிய அத்தனையையும் அவள் வார்த்தைகள் வீசும்! அப்படியொரு வேகம் அவளுக்கு! பேசும்போது மட்டுமல்ல.........செயலிலும் அப்படித்தான்.

    அவளுக்கு நியாயமென்று தோன்றினால் அதை செய்தே முடிப்பாள்.அநியாயமாக தோன்றினால் தட்டிக் கேட்பாள்.அது ஆபத்து என்று தெரிந்தால் தயங்காமல் விலகி நிற்பாள்.ஆபத்து என்றே தெரிந்துவிட்ட காரியத்தில் தேவையில்லாமல் இறங்கி கைக் கால் உடைந்து கிடப்பானேன்? முடிந்தால் முயன்று பார்க்கலாம்.........முடியாது என்று தெரிந்துவிட்டால் விலகி நிற்கலாம். இது தான் தாரிகா! இது தான் அவளால் அவளுக்காகவே உருவாக்கப்பட்ட அவளின் எதார்த்தம்!


    எதார்த்தவாதியான தாரிகாவுக்கும்,பக்தியில் தீவிரவாதியான சிந்தியாவுக்கும் இடையில் உருவான நட்பு கல்லூரியின் இன்னொரு ஆச்சர்யம்.பூனைக்கும் எலிக்கும் நடுவில் கூட நட்பு உருவாகும் ஒரே களம் கல்லூரி தான்.காதல் இங்கே எந்த சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறதோ அதே இடத்தை நட்பும் அதனோடு பகிர்ந்துக் கொள்கிறது.

    சிந்தியா........தாரிகாவின் எதிர் துருவம்! மகிழ்ச்சி என்றாலும் சரி....வேதனை என்றாலும் சரி......இரண்டையுமே அதிகப்படியாக தான் காண்பிப்பாள்.சிலருக்கு அது நடிப்பாக கூட தெரியும்.ஏன் தாரிகாவுக்குமே அவளோடு நன்றாக பழகாத நாட்களில் சிந்தியாவின் செயல்கள் அத்தனையும் செயற்க்கைத்தனமானதோ என்று தோன்றியிருக்கிறது.ஆனால் அது அவளின் பிறவி குணம் என்பதை அவள் புரிந்துக்கொள்ள தொடங்கியதிலிருந்து இருவரும் இணைப்பிரியா தோழிகளானார்கள்.


    குணத்தில் மட்டுமில்லாமல் சிந்தியாவும் தாரிகாவும் வசிப்பதும் எதிரெதிர் வீட்டில் தான்.அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியே தவிர ஒரே வகுப்பு கிடையாது.கன்யாவில், சிந்தியா பி.எஸ்சி சேர்ந்த அதே வருடம் தான் தாரிகாவும் பி.காம் சேர்ந்தாள்.தாரிகாவுக்கு அது தான் சொந்த ஊர் ஆனால் சிந்தியா கல்லூரியில் சேர அப்போது தான் அவளின் மாமா வீட்டுக்கு வந்திருந்தாள்.மில்லில் வேலைப் பார்த்து வந்த சிந்தியாவின் தந்தைக்கு ஆலை விபத்தில் கையொன்று இல்லாது போகவே, மேற்கொண்டு சம்பாதிக்கும் வழியறியாமல் அவர் வீட்டிலேயே முடங்கிவிட்டார். ரேஷன் கடையில் வேலைப் பார்க்கும் தாயின் சொற்ப வருமானத்தில் படிக்க முடியாத சிந்தியாவின் ஏழ்மை நிலை அவளை தாய் மாமன் வீட்டில் கொண்டு வந்து தள்ளியது.


    அவளின் மாமா தான் அவள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.அவர் வசிக்கும் இடத்திலிருந்தே கல்லூரிக்கு சென்று வருவது நல்லது என்பதால் அவளும் வீட்டோடு வந்து தங்கிவிட்டாள்.அத்தையும் மாமாவும் தான் அவளை ஒரு வாயில்லா பூச்சியாக பார்த்தார்கள் என்றால், அவளின் மாமா மகன் ரகுவரன்? அவனும் கூட அவளை அப்படித்தான் பார்த்தான்.


    ஒற்றை முடிக்கற்றை நெற்றியில் புரள, அடக்கியும் அடங்காத கூந்தலைப் பின்னாமல் விரித்துவிட்டு, கழுத்துக்கு தூக்கு மாட்டிக்கொண்டது போல துப்பட்டாவைப் பறக்க விட்டுக்கொண்டு சிட்டுகள் பறக்கும் இந்த காலத்தில் பாவாடை தாவணியும்.........சேலையும் தவிர எதையுமே உடுத்த தெரியாமல், பின்னலோடு அதற்கு மேல நான்கு முழம் மல்லிகையையும் சூடிக்கொண்டு, நெற்றியில் குங்குமமும் சந்தனமும் தீட்டி வரும் சிந்தியாவைப் பார்ப்பவனுக்கு காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு பெண் வேடம் போட்டது போல தோன்றும்.


    ஆனால்
    அவளின் மேல் அவனுக்கு கரிசனம் இல்லாமல் இல்லை.வீட்டுக்கு எதை வாங்கி வந்தாலும் அவளுக்காக தனிப்பட எதையாவது வாங்கி வருவான்.சம்பளத் தேதியில் அவளுக்கென்று கண்டிப்பாக ஒரு பரிசு,அவன் கையில் இருக்கும்.ரகுவின் அப்பாவும் அம்மாவும் அதைக் கண்டும் காணாதது போல சென்றுவிடுவார்கள்.

    வீடு தீப்பற்றி எரிந்தால் கூட, தண்ணீர் ஊற்றி அதை அணைப்பதை விட்டுவிட்டு கடவுளை வேண்டிக்கொண்டு நிற்கும் சிந்தியாவுக்கும், வானமே இடிந்து விழுந்தாலும் பூகோள விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கி விளக்கம் கண்டுப்பிடிக்கும் தாரிகாவுக்கும் பிடித்த பொதுவான விஷயங்களில் முக்கியமானது ஒன்றிருக்கிறது.அது அவர்களின் உயிர் தோழி மஞ்சுளா!


    மஞ்சுளா எதார்த்தவாதி கிடையாது! அதே சமயம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் அவசர புத்தியும் அவளுக்கில்லை.இப்படித்தான் மஞ்சுளா என்று அவளை பெற்றவர்களால் கூட சொல்லிவிட முடியாது.சிலசமயம் மிகவும் ஆசையாக ஒன்றைக் கேட்பாள்.சரி.....மகளுக்கு தான் அது பிடிக்கிறதே என்று அவள் தாய் மறுபடியும் வேறொரு நாள் அதையே வாங்கி வந்தால் அலட்சியமாக சென்றுவிடுவாள்.வெள்ளிகிழமை காலையில் ஐந்து மணிக்கே எழுந்து குளிர் நீரில் தலையோடு உடம்பும் குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று பக்திபழமாய் நிற்பவள்,மற்ற நாட்களில் விநாயகர்,வீட்டுக்கு அருகில் ஊர்வலம் வந்தால் கூட வெளியில் வரமாட்டாள்.

    மஞ்சுளாவின் அழகுக்காகவே அவளை சுற்றி வந்த கல்லூரி மாணவர்கள் ஏராளம்! ஆனால் அதை விட ஏராளமான பெண்கள் அவளை நாடியிருக்கிறார்கள்........அவளின் நட்புக்காக! அவளோடு கைக்கோர்த்துக் கொண்டால் பெருமையாக கல்லூரியில் வலம் வரலாம் என்ற எண்ணம் தான் காரணம்.ஆனால் அவள் இவர்கள் யாரையும் ஒப்புக்கு கூட மதிக்கவில்லை.


    சுருக்கமாக சொல்வதானால் தானாக தன்னை நாடி வரும் எதையும்....நாடாது அவள் மனம்!


    அவளாக தேடிப்போய் தான் தாரிகாவோடும் சிந்தியாவோடும் பழகினாள்.சிந்தியாவும் மஞ்சுளாவும் வகுப்பு தோழிகள்.சிந்தியாவின் மூலமாக தான் தாரிகாவோடு மஞ்சுளாவுக்கு பழக்கம் என்றாலும், பிரித்துப் பார்க்க முடியாத நட்பு அந்த மூவருக்குள்ளும் உண்டு!
     
    3 people like this.
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-2

    பள்ளியில் இருக்கும் வரை இரட்டை வால் பின்னலையே பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள், கல்லூரி மாணவிகளின் தோளோடு வெட்டி விடப்பட்டு விரிந்து கிடக்கும் கூந்தலில் மயங்கித்தான் விடுகின்றனர்.அது வரையிலும் சைட் அடிப்பதற்கே தயங்கிக்கொண்டிருக்கும் விடலைகள், காளைப் பருவம் வந்ததும் காதலைச் சொல்லும் துணிவையும் பெற்று விடுகிறார்கள்.

    ஆனால் எதற்குமே விதிவிலக்கு இல்லாமல் போகுமா? இருந்தது........இருந்தான்.......அவன் மணிவீரன்!

    அவனும் தான் பாவம்......எத்தனை நாட்கள் தான் மஞ்சுளாவின் பின்னால் காதல் சொல்லிவிட அலைந்துக்கொண்டே கிடப்பான்? அவள் கொஞ்சமாவது இவன் பக்கம் திரும்பி பார்த்தால் தானே ஒரு ஹலோவாவது சொல்ல முடியும்? அவனைக் கடக்கும் போது மட்டும் அவள் கண்களில் தோன்றும் அலட்சியம் இருக்கிறதே........அப்பப்பா........அதை கண்டால், கிராமத்தின் ஒட்டுமொத்த வீரத்தையும் தன் எஃகு உடம்பிலேயே காண்பிக்கும் வல்லமைக் கொண்டவனுக்கு வரும் ரோஷத்தில்...........காதல் மறைந்து விடும்.

    வட்டநிலா......மேகத்துக்குள் மறைந்து போக்குக் காட்டுவது போலத்தான் நம் புற கண்களுக்கு தெரியும். ஆனால் அகம் உண்மையைத் தெளிவுப்படுத்தி விடுவதில்லையா? அவனின் பொய்யான ரோஷம் சில நிமிடங்கள் மட்டுமே அவன் காதலை மறைக்க முடியும் என்ற உண்மை அவன் மனதுக்கு நன்றாகவே தெரியும்.என்னதான் அவள் அலட்சியம் அவனுக்குள் கோபம் உண்டாக்கினாலும், அவளின் அந்த திமிர் தான் அவனை ஈர்த்து தொலைத்தது.இதை சொல்லித்தான் அவன் நண்பர்களும் அவனைக் கிண்டலடிப்பார்கள்.

    "உனக்கு இத்தனை வீராப்பு தேவையாடா மச்சி? வெட்கம் மானம் விட்டு....ஒண்ணா தைரியமா சொல்லிடனும்! இல்லையா கவுந்து படுத்து உருப்படியா கனாவாவது காணனும்! நீ என்னாடானா........அவ பின்னாடி போறதும்......வாயவே திறக்காம திரும்பி வாரதுமா.........போடா டேய்! இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா........நாம அவளுகள பார்க்குறது தெரிஞ்சா இழுத்தடிப்பாளுக.......இதுவே நீ கெத்த மெய்ன்டைன் பண்ணுணனு வச்சிக்க........மச்சி.......நாலே நாளுல மடங்கிரும்.....ஹ்ம்ம்......உனக்கு அவ்ளோ விவரம் போதாதுடா!"

    அவனின் நெய்வேலி ஜில்லா நண்பனொருவன் அடிக்கடி சொல்லும் வசனமிது!

    அவள் முன்னால் போய் நின்று தைரியமாக காதல் சொல்லிவிட நிமிட நேரம் போதும் அவனுக்கு. ஆனால் அவன் குடும்பம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டிருந்தான். இவன் சம்பாதித்து தான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற நிலையில் சகோதரியோ.....இவன் உழைப்பில் தான் படிப்பு செலவை சரிக்கட்ட முடியும் என்ற நிலையில் தம்பி தங்கையோ......உடன் பிறந்தவர்கள் யாரும் அவனுக்கு இல்லை. அவன் தாய் தந்தை கூட, ஊரில் இருக்கும் சிறிய அளவு நிலத்தில் வரும் காசில் அவர்கள் அளவுக்கு வசதியாகவே வாழ முடியும்.

    ஆனால் அவனுக்கு மனசாட்சி இருந்தது! தன் பெற்றவர்களுக்கு எப்படியாவது பெருமை சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது. தான் பழைய கஞ்சி குடித்தாலும், வறுத்த கோழியும், பொறித்த மீனும், பொங்கிய சோறுமாய் சிரித்துக்கொண்டே அவனுக்கு பரிமாறும் தாயின் மஞ்சள் முகம்! அந்த முகம் அவன் மனக்கண்ணில் தோன்றும்போதெல்லாம் ஏக்கமாய் இருக்கும்.

    வாட்டி வதைக்கும் வறுமையில் இல்லாவிட்டாலும், அவன் உழைப்பில் அவளுக்கு அவன் வாங்கித்தரும் நூல்புடவையே என்றாலும்......அவன் தாய்க்கு அது பெருமை தானே? ஊரெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்வாள் தானே? அப்படியொரு சந்தோஷத்தில் அவளை மூழ்கடிக்க வேண்டாமா?

    படிக்க வேண்டும்.........நன்றாக படிக்க வேண்டும்........தானே தன் சொந்த முயற்சியில் வேலைத் தேடிக்கொள்ளும் அளவுக்கு படிக்க வேண்டும்........படித்து முடித்து அவனைத் தோளில் சுமந்த அவன் தந்தையின் பாரமிறக்க வேண்டும்! அதற்காகத்தான் காதலை மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறான்.

    காத்திருப்பான்......தனக்கென்று ஒரு வாழ்வு தன் உழைப்பில் இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்வரை அவன் காதலைச் சொல்லாமல் காத்திருப்பான்!

    அவன் எப்படி, காத்திருக்கும் முடிவை எடுத்தானோ அதே போல அவனின் காதல் வெற்றியா தோல்வியா என்று தெரியும் வரை தானும் அவன் மேல் உள்ள தன் காதலை வெளிப்படுத்தாமல் காத்திருப்பது என்ற முடிவை இன்னொருத்தியும் எடுத்தாள்.தன் காதலை அவனிடம் சொல்லும்போது அவன் மறுக்கவே கூடாது..........அப்படி ஒரு நிலை இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் தன் காதல் மணிவீரனுக்கு தெரியவே கூடாது.இது தான் அவள் முடிவு!

    இப்படி நல்லவிதமாய் யோசித்து, நிதானமாய் முடிவெடுக்க வேறு யாரால் முடியும் ஒருத்தியைத் தவிர? அவள் பெயர் சொல்லியா தெரிய வேண்டும்? தாரிகா என்று??

    .................................................. .................................................. ...............................................


    "இது எனக்கே எனக்காகவா மாமா?" கண்களில் ஆர்வம் மின்ன, கைகளில் கிடந்த தங்க மோதிரத்தை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிந்தியாவை,அதை விட ஆர்வத்தோடு நோக்கிக் கொண்டிருந்தான் ரகுவரன்.

    "அடியேய்.........என் அத்தை பெற்ற ரத்தினமே! எத்தனை தடவை சொல்லட்டும் உனக்கு? அந்த தங்கம் இந்த தங்கத்துக்கு தான்...." அவள் கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தான்.அவள் இங்கு வந்து ஒரு வருடம் முடிய போகிறது.அதற்காக தான் விலையுயர்ந்த பரிசாக வாங்கி தந்திருந்தான்.அவளும் புது நகைகள் வாங்கி....அதை போட்டு பார்த்து அழகை ரசித்து வருடக்கணக்காகி விட்டது.

    மதியம் கொடுக்கும் சத்துணவுக்காகவே நாள் தவறாமல் அரசு உயர்நிலை பள்ளிக்கு சென்று படித்தவள் சிந்தியா! அங்கே எந்த மாணவியும் மாணவன் பக்கம் லேசில் திரும்பிவிட முடியாது. ஆண் பெண்ணின உறுப்புகளைப் பற்றியும், அதில் பருவத்தால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் நெளிந்துக்கொண்டே வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னால்,வெட்கத்தோடும் கூச்சத்தோடும் பார்க்கும் எத்தனையோ மாணவிகளில் அவளும் ஒருத்தி!

    களவையும் காதலையும் இலக்கண இலக்கியத்தோடு நயம்பட சொல்லிக்கொடுக்கும் தமிழ் வாத்தியார்களின் முன்பு,அதைக் கேட்டுக்கொண்டே ஓரக்கண்ணில் அந்த பக்கம் இருக்கும் மாணவர்களை திருட்டுத்தனமாய் பார்க்கும் அரசு பள்ளி மாணவிகளில் அவளும் ஒருத்தி!

    எல்லாரோடும் பழகி........ஆண்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்த தேவர்கள் அல்ல என்று புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அவள் வளர்ந்த ஊர் பட்டணம் இல்லை.அவள் பழகிய ஒரே ஆண்மகன் ரகுவரன் தான்.உரிமையோடு நின்று நிமிர்ந்து பார்த்து........முடியாமல் வெட்கமாய் தலை குனிந்துக்கொண்டதும் அவன் ஒருவனைப் பார்த்து தான்.அவன் மீது காதல் இல்லாவிட்டாலும் ஈர்ப்பு இருந்தது.கல்லூரியில் சேர்வதற்காக இங்கேயே தங்கி அவனோடு இருந்த இந்த நாட்களில் அந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாய் மாறிக்கொண்டிருந்தது.பள்ளியில் இருந்து வரும்போது நிர்மலமாய் இருந்த அவள் மனம் இப்போது ரகுவரனை மனதில் குடி வைத்திருந்தது.

    அவள் தான் பட்டணத்தில் வளர்ந்தவள் இல்லையே தவிர ரகுவரன் அப்படி இல்லையே? சிந்தியா தன் தேவனாக அவனை வரிக்கும் நாளுக்கு....எத்தனையோ நாட்கள் முன்பாகவே அவன் தன் தேவதையைக் கண்டுவிட்டான்.எங்கேயோ தூரத்தில் இல்லாமல், தன் எதிர்வீட்டிலேயே அவன் தேவதை இருந்ததால் கண்ணாமூச்சியாட வேண்டிய அவசியம் நேராமல், நேரடியாக காதலிக்கவும் தொடங்கிவிட்டான்.

    சிந்தியாவின் காதல் சரியாக சொல்லப்போனால் ஒரு வருடமாக தான்! ஆனால் ரகுவரன் ஆறு வருடங்களாய் காதலிக்கிறான்.அவனின் தேவதையைப் பார்க்காமல் அவனின் எந்த நாளும் விடிந்ததே இல்லை.படுக்க போகும்போது அவள் கண்ணுக்கு தெரிந்தால் பார்த்துவிட்டு படுப்பான்.இல்லாவிட்டாலும் அவளைக் கற்பனையில் நினைத்துக்கொண்டே உறங்கி விடுவான்.படிக்கும் காலத்தில் இதெல்லாம் அவனுக்கு விளையாட்டாக தோன்றவில்லை தான்........ஆனால் வேலைப் பார்க்க தொடங்கி பக்குவம் வந்துவிட்ட இந்த நாட்களில் அவனுக்கே அவன் போக்கு சிரிக்க தகுந்ததாய் இருந்தது.

    ஆனாலும் அவன் காதல் விளையாட்டல்ல........யாரும் அதைக் கண்டு சிரிப்பதை அவன் விரும்புவதும் அல்ல!

    இதில் விசேஷம் என்னவென்றால்.........மணிவீரனை போல ரகுவரனும் தன் காதலை மனதுக்குள் தான் வைத்திருந்தான். ஐயோ.........அவன் காதலியின் பெயர் கூட தாரிகா தான்!
     
    1 person likes this.
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-3

    மஞ்சுளாவைப் பார்க்கும்போதெல்லாம் மணிவீரனின் கண்களில் தெரியும் ஒளிக்கு காதல் என்பதைத் தவிர வேறெந்த பெயரும் இல்லை என்பது தாரிகாவுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது. தாரிகாவும் மணிவீரனும் நல்ல நண்பர்கள்.அவளும் இவனும் ஒரே வகுப்பும் கூட.....அப்படி ஏற்பட்ட பழக்கம் தான்.

    காலையில் சீக்கிரமே கல்லூரிக்கு வந்து மரத்தடியில் உட்கார்ந்துக்கொண்டு சிந்தியாவுக்காக காத்திருந்த போது தான் அவனாக வந்து பேசினான்.

    "ஹலோ........நீங்க மட்டும் எப்பவும் விலகியே போறீங்களே.....யார் கூடயும் ஒட்டாம?" சிரித்தான்.

    அந்த சிரிப்பில் வழிசல் இல்லை........ஆனால் ஒரு நேர்மை இருந்தது. தன் மனதில் இருக்கும் அதே வெளிப்படையான குணம் அவன் கண்களில் தெரிவதைக் கண்டு அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    "அப்படியெல்லாம் இல்லையே? என் தோழிகள் இருவரும் வேறு குரூப்! லஞ்ச் டைமில் அவர்களை பார்த்து பேசிவிட்டு தான் வருவேன்."

    "இப்படி உட்காரட்டுமா?" அவள் அமர்ந்திருந்த சிமண்ட் பெஞ்சின் ஓரமாக ஒரு இடம் கேட்டான். அவனுக்காக மனதிலேயே இடம் கொடுக்க பிற்காலத்தில் தயாராக இருந்தவள் பற்களைக் காட்டிக்கொண்டே அப்போது சொன்னாள். "தாராளமாக!"

    அவள் தந்த தாராளத்தின் எல்லையை மீறாமல் ஓரமாகவே அமர்ந்தவன், " உங்கள் தோழிகள் என்றால்.........அந்த தாவணி பிகர்....அதுவா?"

    "ஏய்..........." அவள் ஒற்றை விரலை அவன் கண்களுக்கு நேராக நீட்டி முறைத்தாள். அவன் உல்லாசமாக சிரித்தான்.

    "ஹா....ஹா.....சும்மா.....லுல்லுலாயி...." கண்சிமிட்டி அவள் கைவிரலை அவளிடமே பத்திரமாக ஒப்படைத்துவிட்டான்.

    குழந்தைக்கு விளையாட்டு காட்ட...சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை என்ற அளவில் புரிந்துக்கொண்டவள் தூரத்தில் வந்துக்கொண்டிருந்த சிந்தியாவை சைகையால் காட்டினாள். "இருங்க....அவளிடம் சொல்லித் தருகிறேன்."

    "ஓ........ஹா ஹா ஹா.......யாரு அந்த வாத்துகிட்டயா?"

    "வாத்தா?? யூ.........."

    "ஹே தரு......ஐயோ வேணாம்டி....." ஓடி வந்த வேகத்தில் அவளோடு மோதிக்கொண்டே நின்ற சிந்தியா அப்போது தான் அந்த ஆண்மகனைக் கவனித்தாள்.

    "யாருடி இவரு? ஏன் இவர அடிக்க போன?" மூச்சு வாங்கியது அவளுக்கு.

    "பின்ன? என் உயிர் தோழியை வாத்துன்னு இவரு சொல்வாரு.....அதை கேட்டுக்கிட்டு நான் தலையாட்டனுமா?"

    "யாரடி சொன்னாரு? மஞ்சுவையா?" அப்பாவியாய் அவள் விழி விரித்தாள்.

    அப்போது கூட தன்னைத்தான் அவன் சொல்லியிருப்பான் என்ற சந்தேகமே அவளுக்கு வரவில்லை.வீரன் அதற்கும் சிரித்தான்.தன் தோழி இப்படி ஒரு மக்காய் இருக்க வேண்டாம் என்று தாரிகாவுக்குமே தோன்றியது.

    மெல்ல அவள் காதுக்குள் முணுமுணுத்தாள். "அவர் சொன்னது உன்னைத்தான்டி லூசு"

    "என்னையா??" ஆஆ....என்று வாயைப் பிளந்தவள்,அடுத்த நொடி தைரியமாய் அவன் கண்ணோடு கண் பார்த்தாள்.

    "என்னையா சொன்னீங்க?"

    "ம்ம்...." கண்மூடித் திறந்தான் ஆமாம் என்பது போல!

    "ஏன் அப்படி சொன்னீங்க?"

    "வாத்து நடை நடந்தா? அப்படித்தான் சொல்வோம்.நானாவது பரவாயில்ல....இப்படி உன்கிட்டயே சொல்றேன்! உன் கிளாஸ் பசங்க......."

    "பசங்க?" அவளுக்கு நடுங்கியது.

    "போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா பாய்ஸ் ஹாஸ்டல் முழுக்க சொல்லிக்கிட்டு திரியறானுங்க....."

    "ம்மம்க்க்...." அவளிடமிருந்து வினோதமான ஒலி கிளம்பியது. அடுத்த நொடி தாரிகா உட்கார்ந்திருந்த இடத்திலேயே தானும் உட்கார்ந்துக்கொண்டு அழ தொடங்கினாள்.

    "அய்யய்யோ....இப்படி அழுது வைக்காதம்மா.....அப்பறம் அதுக்கு வேற புதுசா ஒரு பேர வெச்சுருவானுங்க...."

    தாரிகா அவனை முறைத்துக்கொண்டே சிந்தியாவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டாள்.

    "என்னடி சிந்து நீ........ச்சீ....... ச்சீ.........இதுக்கெல்லாம் அழலாமா? அவனுங்களுக்கு நாமும் ஒரு பேரு வெச்சுட்டா போச்சு.....ஒன்னென்ன ஓராயிரம் பேர் வெச்சுடலாம். அழாதடா.....இந்தா தண்ணி.....குடி!"

    "ஏன் அப்படியே உன் ஃப்ரண்டுக்கு வுட்வர்ட்ஸ் குடுக்குறது?"

    "டேய்......வேணாம்! சொல்லிட்டேன்........சிந்து என்னை மாதிரி இல்லை...."

    முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டான் அவன். "ஆமாம் தரு........அவ நடக்குறது வாத்து மாதிரி இருந்தாலும் உன்னவிட அவ அழகு தான்.....சந்தேகமே இல்ல" இயல்பாக அவள் அவனை தோழமையோடு பேச, அவனும் அவள் பெயரைச் சுருக்கமாய் அழைக்க தொடங்கினான்.

    பக்கத்திலிருந்த புத்தகப்பையைத் தூக்கி அவன்மீது எறிந்தவள், "கிளம்புடா இங்கிருந்து.........பேசுன முதல் நாளே ஒருத்திய அழ வெச்சுட்ட.........."

    "யார் யாரை அழ வைத்தது?" என்ற கேள்வியோடு வந்த மஞ்சள் நிலவை......மஞ்சுளாவை அன்று தான்....அந்த நிமிடம் தான் வீரன் முதன்முதலாக பார்த்தான்.

    "இவந்தாண்டி.....என் கிளாஸ்மேட்......இன்னைக்குத்தான் பேசினான்.அதுக்குள்ளே சிந்தியாவைக் கிண்டலடித்து அழ வெச்சுட்டான்."

    மஞ்சுளா சிந்தியாவின் தோளில் தட்டினாள். "அடச்சி......எழுந்திரிடி......தொட்டாசிணுங்கி மாதிரி எதுக்கெடுத்தாலும்......"

    சிந்தியா அவளை ஏக்கமாய் பார்த்தாள். "மஞ்சு.....உனக்கு தெரியாதுடி.....இவரு.......இவரு........" திக்கித்திக்கி பேசியவளைத் தடுத்து நிறுத்திவிட்டு மஞ்சு தாரிகாவைப் பார்த்தாள்.

    "இவரு உன் கிளாஸ் தான?"

    "ஆமாம்......"

    இப்போது மஞ்சுளாவின் துளைக்கும் பார்வை சிந்தியாவை நடுங்க வைத்தது. "அப்பறம் என்ன இவரு........கழுதை முட்டின சுவருன்னு.....மரியாதை வேண்டிக்கிடக்கு? பேர் சொல்லியே கூப்பிட்டு பழகு.....இவனும் நம்ம வயசு தான்."

    ஆண்பிள்ளையைப் பேர் சொல்லி அழைப்பது எப்படி என்று சிந்தியா திகைத்தாள். தாரிகாவுக்கும் மஞ்சுளாவுக்கும் அவள் அதிர்ச்சிக்கு காரணம் தெரியாவிட்டாலும், அவளைப் போலவே கிராமத்தில் வளர்ந்தவனுக்கு அந்த திகைப்புக்கான காரணம் புரிந்தது.

    மஞ்சுளா வேறொரு காரணத்தைக் கண்டுப்பிடித்தவளாய், "உன் பேர் என்ன?" என்று வீரனைக் கேட்டாள்.

    "மணிவீரன்......" காலரைத் தூக்காத பெருமையோடு அவன் கம்பீரமாய் சொன்னான்.

    "ம்ம்.....இனிமேல் இவளை இப்படி சீண்டாதே........அவள் பட்டிக்காட்டில் பிறந்தவள்.....பயந்துவிடுவாள்....புரிகிறதா?" அவள் என்னவோ ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்தவளைப் போல அவனுக்கு உத்தரவிட்டாள்.

    அந்த அதிகார சொல் அவன் போக்கை நிறுத்தவில்லை என்றாலும், அவளின் அந்த திமிர் கலந்த பேச்சு அவனுக்கு பிடித்தது.அவனுக்கு மற்றவர்களை அடக்கித்தான் பழக்கம்.முதன்முறையாக தன்னை அடங்க சொல்லும் பெண்ணை அவன் கண்களில் ஆர்வத்தோடு பார்த்தான்.

    அதற்குள் தோழிகளைக் கிளப்பிவிட்ட மஞ்சுளா "வாங்க...கிளாஸ்க்கு போகலாம்!" என்று சிந்தியாவின் தோள் பிடித்து நடந்தாள்.

    "கருப்புசாமி கோயில்ல மணியடிக்கிறவன் மாதிரி ஆளும்....அவன் மூஞ்சியும்! இந்த அசகாய சூரன் சொல்லிட்டானாம்...இந்த பைத்தியமும் அதுக்கு அழுததாம்." சிந்தியாவின் காதுக்குள் கிசுகிசுத்தபடி மணிவீரனைக் கடந்தாள் மஞ்சுளா.

    தாரிகா மட்டும் அசையாமல் அவன் பக்கத்திலேயே நின்றிருந்தாள்.அவள் உடன் வராததைக் கவனித்த சிந்தியா தூரத்திலிருந்து திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள். "வரலயாடி?"

    "நீ போ..........நான் இவன் கூடவே கிளாஸ்க்கு போய்விடுகிறேன்." தாரிகா இங்கிருந்து கத்திய சத்தத்தில் தான் வீரன் சுய உணர்வுக்கு வந்தான்.

    "ஏன்டி இப்படி காதுக்குள் வந்து கத்தி தொலைக்கிற?"

    "அப்படியாவது நீ பூமிக்கு வரியான்னு பார்க்கத்தான்."

    தாரிகாவுக்கு புரிந்ததில் வெட்கப்பட்டவன், "சரி...சரி.....வா....டைமாச்சு......போகலாம்." மஞ்சுளாவைப் பார்த்த வினாடியில் இருந்து தன் நண்பனின் பார்வை அவள் பக்கமே இருப்பதை தாரிகா உணர்ந்தே இருந்தாள்.

    அன்று மட்டுமல்ல.....அதற்கு பின் வந்த நாட்களிலும் வீரனின் கண்கள் தாரிகாவைப் பார்த்துவிட்டால் பக்கத்தில் மஞ்சுளாவையும் தேடும்.அவள் இல்லாத நேரங்களில் அவன் கண்களில் தோன்றி மறையும் ஏமாற்றத்தைக் கண்டால்,அவனை விட தாரிகாவுக்கு தான் அதிகமாய் வலிக்கும்.

    ஒருநாள் அவளாகவே கேட்டாள். "என்னடா லவ் பண்றியா?"

    "ம்ம்ம்........."

    "அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது வீரா........"

    "ஆனால் எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது."

    "வீரா........."

    "ப்ளீஸ் தரு.........என் மனதை நோகடிக்கும்படி எதுவும் சொல்லாதே.......விட்டுவிடு! உன் தோழிக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்காது...."

    "நீயும் என் ஃப்ரண்டுடா........உனக்கு வலிக்க கூடாதேன்னு தான் சொல்றேன்."

    அவன் சிரித்தான். "அடி போடி.....நீ காதலிச்சிருக்கியா? அப்படி காதலிச்சிருந்தா வலி கூட சுகம் தான்னு உனக்கு புரியும்."

    தாரிகா சிரித்துக்கொண்டாள்.'எனக்கா புரியாது? எனக்கு புரிஞ்சது உனக்கு புரிஞ்சா உன்னால தாங்கிக்க முடியாதுன்னு தான்டா சொல்றேன்.' அவள் மௌனமாய் மனதுக்குள் சிந்திக்க தொடங்கினாள்.

    அவனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

    "போலாமா தரு?" சிந்தியா அவர்களின் வகுப்புக்கு வந்தாள்.

    "இதோ கிளம்பிட்டேன் சிந்து." தாரிகா புத்தகங்களை அடுக்க தொடங்கினாள்.

    மணிவீரன் சிந்தனைக் கலைந்தவனாய் அவளை வம்பிழுத்தான். "ஹே வாத்து.....என்னடி ஆளையே காணோம் ரொம்ப நாளா? கண்ணுலயே சிக்க மாட்டேன்றியே........பயந்துட்டியா?"

    அவர்கள் இருவரும் சகஜமாய் பேச தொடங்கியிருந்தார்கள் இப்போது."உன்னைப் பார்த்து நான் ஏன்டா பயப்படனும்?"

    "ஓய்........என்ன மரியாதை தேயுது?" அவளின் ஒற்றை ஜடை பின்னலை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான்.

    "ச்சீ....விடுடா........தேஞ்சு போன உன் மூஞ்சிக்கு இதுவே அதிகம்......"

    "மன்மதன்டி.....நானெல்லாம் எங்க ஊரு வயக்காட்டுல இறங்கி நடந்தேன்னு வச்சிக்க........"

    "பொண்ணுங்க சேறு வாரி இறைப்பாங்களா?" அவனை பேச விடாமல் தடுத்து காலை வாரினாள்.

    "அடியேய்.......உன்ன.........ஏய் தரு நீ முன்னாடி போ.............இவளை ஒரு கை பார்த்துட்டு வரேன்." கைகளை மடக்க தொடங்கினான் அவன்.

    "ஐயோ தரு..........இந்த அரை பைத்தியத்துகிட்ட என்னை தனியா விட்டுட்டு போய்டாதடி........" சிந்தியா உண்மையாகவே அலறினாள்.

    தாரிகா இருவரையும் பார்த்துக்கொண்டே சலிப்போடு உட்கார்ந்துவிட்டாள். "எனக்கு தெரியாதா? இதே வசனத்தை ஒரு மணிநேரமா சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் அசையாம இங்கயே உக்காந்துகிட்டு இருப்பீங்க......நான் உங்களுக்கு காவல்? மஞ்சுளாவைப் பார்த்து நீ சைட் அடிப்ப........அதை யாரும் பார்த்துடாம இருக்க, நான் எல்லாரையும் பார்க்கணும்? அங்கயும் நான் தான் காவல்? ம்ம்?"

    வீரன் சிந்தியாவைப் பார்த்து கண்சிமிட்டிக்கொண்டே தாரிகாவிடம் சொன்னான். "ஹா....ஹா.....நீ காவலன் படம் பார்த்ததில்லையா தரு? அசினுக்கும் விஜய்க்கும் இடையில மாட்டிக்கிட்டு அசினோட தோழி முழிக்குமே? அந்த கதையில் வெயிட்டான ரோல் அந்த பொண்ணுக்கு தான். உனக்கு அப்படியொரு உயர்ந்த பதவியை அளித்திருக்கும் எம்மையா நீ சாடுகிறாய்?"

    "யாரு நீ விஜய்? மஞ்சுளா......அசின்? இதை மட்டும் அவங்க இரண்டு பேரும் கேட்டாங்க........."

    சிந்தியா தாரிகாவை முந்திக்கொண்டு சொன்னாள். "இதை கேட்டுகிட்டு உட்கார்ந்திருந்த நம்ம இரண்டு பேரையும் துரத்தித் துரத்தி அடிப்பாங்க...ஹா "

    "ம்ம்....ம்ம்.....சரி சரி........பப்ளிக்....பப்ளிக்......" மணிவீரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டே அவள் மேலே பேசாமல் நிறுத்தினான்.மணிவீரனின் காதல் தாரிகாவின் மூலமாக சிந்தியாவுக்கும் தெரிந்திருந்தது.

    அதை பற்றி எதையும் ஆரம்பத்தில் சொல்லாதவள், இன்று தாரிகாவோடு வீட்டுக்கு செல்லும் வழியில் கேட்டாள். "மஞ்சுளா இவனை ஏற்றுப்பாளா? உனக்கு அப்படி தோணுதா?"

    தாரிகாவுக்கு "காவலன்" படம் தான் கண்ணில் தோன்றியது.'அந்த தோழி நானென்றால் மணிவீரன் திருமணம் செய்துகொள்ள போவது என்னையா? அது நடக்குமா?'
     
    1 person likes this.
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [FONT=&quot]பகு[/FONT][FONT=&quot]தி[/FONT][FONT=&quot]-4

    [/FONT]
    மணிவீரனின் காதலைப் புரிந்துக்கொண்ட தாரிகாவுக்கு ரகுவின் காதல் மட்டும் புரியவே இல்லை.அவனும் இவளைக் கடந்துபோகும் போதெல்லாம் அவளை மட்டுமே கவரும் விதமாக எதையாவது செய்து வைப்பான்.அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இவள் நகர்ந்து விடுவாள்.தெரிந்தே அப்படி செய்தாளா தெரியாமல் அப்படி நடந்ததா என்று ரகுவுக்கு புரியவில்லை.

    சிந்தியா ரகு வீட்டுக்கு வந்தது முதல் தாரிகாவின் வரவு அதிகரித்தது.ரகு தாரிகாவின் மனதில் காதலை விதைப்பதாய் எண்ணி சிந்தியாவின் மனதில் ஆசையை வளர்த்ததும் அப்போது தான்.சிந்தியாவும் தாரிகாவும் மொட்டை மாடியின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே கதையளந்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம் ரகு அங்கு வந்தான்.

    மஞ்சள் சூரியனின் மாலை நேர கதிர்கள் தாரிகாவின் பக்கமாய் தழுவிக்கொண்டு நிற்க,ஏற்கனவே மின்னும் பொன்னழகாய் இருந்தவள், அதிகமாய் ஜொலித்தாள் அப்போது.ஓரக்கண்ணில் ரகுவைப் பார்த்த சிந்தியா தாரிகாவின் காதில் கிசுகிசுத்தாள்.

    "
    ஏய்....சட்டுன்னு திரும்பிப் பார்க்காதே....மாமா உனக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்காரு......"

    சிந்தியா ரகுவரனைக் காதலிப்பது.....தோழி என்ற முறையில் தாரிகாவுக்கு நன்றாகவே தெரியும்.ரகுவரனும் சிந்தியாவைத்தான் காதலிக்கிறான் என்ற எண்ணத்தில்தான் தாரிகா இருந்தாள்.சிறுவயதிலிருந்து தினமும் பார்த்து பழகிக் கொண்டிருந்த ரகுவரன் மீது தாரிகாவுக்கு எந்த ஈர்ப்பும் வந்து விடவில்லை.அறியாத வயதிலேயே எதுவும் தோன்றாத காரணத்தினால் வளர்ந்த பின்பும் இயல்பாகத்தான் இருந்தாள்.ரகுவரனுக்கும் அவளுக்கும் இடையில் ஆறு வருட வித்தியாசம்.ரகுவின் இளமைக் காலத்தில் தான் தாரிகா பருவப்பெண்ணாக அவன் வீட்டுக்கு எதிரிலேயே குடி வந்தாள்.முழுவதும் மலர்ந்திடாத அவள் அழகு அவன் மனதில் முழுமையாய் குடிக்கொண்டது.அவளின் வயதை மனதில்கொண்டு எந்த ஆசையையும் அவளிடம் சொல்லாமல் மறைத்தே வைத்திருந்தான்.

    "
    மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன....சுவாமி...மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன....." தாரிகா மெல்லிய குரலில் பாட தொடங்கினாள்.

    அவளோ
    சிந்தியாவையும் ரகுவையும் வைத்து முடிந்துக்கொண்டிருக்க, ரகுவரனுக்கு அவள் தன்னைத்தான் கிண்டலடிக்கிறாள் அதுவும் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்காக என்று தோன்றியது.அவனும் அவளை வம்பிழுப்பதாய் நினைத்துக் கொண்டு சொன்னான்.

    "
    சிந்து.........என் அத்தை மகளைப் பார்க்க நான் மறைந்திருக்க வேண்டியதில்லை....இதோ இப்படி நேராகவே வந்து சைட் அடிப்பேன்." பின்னால் நின்றவன் உரிமையோடு முன்னால் வந்து சிந்தியாவைப் பார்த்து சிரித்தான்.தாரிகாவைத் தான் அவன் பார்த்துக் கொண்டிருந்ததாய் அவள் நினைத்துவிடக் கூடாதே என்ற வெட்கத்தில் சிந்தியாவைப் பார்த்துக் கொண்டிருந்தது போல காட்டிக்கொண்டான்.

    "
    உங்க மாமாவுக்கு அத்தனை தைரியம் இருக்கிறதா சிந்தியா?"

    ரகுவரன் தன்னை சைட் அடிப்பதை நேரடியாக சொல்லிவிட்டான் என்ற உற்சாகத்தில் சிந்தியா துள்ளினாள்.

    "
    ஏன்.........? என் மாமாவுக்கு என்னடி? அவர் தைரியம் இந்த ஊரில் வேறு யாருக்கும் வராது....தெரிந்துக்கொள்..."

    "
    அப்படி சொல்லடி என் அத்தை மகளே........." ரகு அவளின் கன்னம் கிள்ளினான்.அவள் முகம் ரத்த சிவப்பாயிற்று.'ச்சே...ச்சே....இவருக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை....என்னதான் அத்தைப் பெண்ணாக இருந்தாலும் தாரிகாவின் முன்னால் போய்....ஐயோ....'

    தாரிகாவுக்கும் சிந்தியாவின் மனம் புரிந்ததால் அவள் எழுந்துக் கொண்டாள். "சரி சிந்து.....நேரமாச்சு....கிளம்புறேன்."

    "
    என்ன சிந்து......உன் தோழிக்கு என்னைக் கண்டு அத்தனை நடுக்கமா? பயந்துப் போய் புறப்பட்டு விட்டார்கள்?"

    தாரிகா அவனை முறைத்தாள் ஆனால் பதிலைச்சிந்தியாவைப் பார்த்து சொன்னாள். "அப்படி நாங்கள் பயந்து நடுங்குமளவு உன் மாமா என்னடிம்மா செய்துவிட்டார்? அதையும் தான் கொஞ்சம் சொல்ல சொல்லேன்."

    "
    பிறகு எழுந்து போவானேன்? இங்கேயே இருக்கலாமே?" இப்போது ரகு அவளைப் பார்த்தான் நேராக!

    "அத்தை மகளுக்கும் மாமன் மகனுக்கும் இடையில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பேச....இடையில் நான் எதற்கு?" அவள் சூசகமாய் விஷயத்தைச் சொன்னாள்.

    சிந்தியாவைச் சொன்னதால் தாரிகாவின் மனதில் பொறாமை வந்துவிட்டதோ என்ற மகிழ்ச்சியில் ரகு அவளைச் சமாதானப்படுத்தினான்."எங்கள் இருவருக்கும் நடுவில் வருமளவுக்கு எல்லாம்....உரிமைப்பட்டவள் தான்.....அதனால் இங்கேயே இருக்கலாம்."

    '
    தன் காதலிக்கு தன்னிடம் இல்லாத உரிமையா அத்தை மகளுக்கு மட்டும் இருந்துவிடும்?'

    '
    என் தோழி என்ற முறையில் தாரிகாவை இருக்க சொல்கிறார்.என் தோழிக்கே இத்தனை மரியாதையும் மதிப்பும் கொடுப்பவர் என்னை எத்தனை அக்கறையாக பார்த்துக்கொள்வார்?' சிந்தியாவின் மனம் பூரித்தது.

    "உட்காரேன் தரு.....அவர்தான் சொல்கிறாரே?"

    "
    அவர் சொன்னால் நான் உடனே கைக்கட்டி வாய்மூடி கேட்டுக்கொள்ள வேண்டுமோ?" தாரிகா அலட்சியமாய் இதழைச் சுளித்தாள்.
     
    1 person likes this.
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-5

    "
    ஐயோடா பார்த்தும்மா.....சுளிக்கிக்க போவுது.....பிறகு ஒருத்தனும் கட்டிக்க மாட்டான்."

    "
    யாரோ ஒருத்தன் எதுக்குடி? ஏன் உன் மாமா இல்லையா? அவரையே கட்டிக்கொண்டால் போகிறது..." சிந்தியாவின் கோபத்தைத் தூண்டுவதற்காக தாரிகா கிண்டலாய் சொன்னது ரகுவரனை உன்மத்தம் கொள்ள வைத்தது.

    'சொல்லிவிட்டாள்......பெண்ணாக பிறந்தவள் வெட்கத்தை விட்டு சொல்லிவிட்டாள்.இதற்குமேல் அவளும்தான் வேறு எப்படி அவனுக்கு தெரிய வைப்பது? பாவம்....இத்தனை ஆசையா இவளுக்கு என்மீது? படித்துக் கொண்டிருக்கிறாளே என்று நான்தான் கொஞ்சம் அலட்சியமாய் விட்டுவிட்டேன் போல! அவளே தைரியமாய் ஆசையைச் சொல்லிவிட்ட பின்பு இனியும் நான் சும்மா இருந்தால் அது நன்றாக இருக்காதே?'

    உரிமை எடுத்துக் கொள்ள நினைத்தவன், தனக்கும் அவள் மீது இருக்கும் ஆசையை உணர்த்திவிட துடித்தவன்........ஊஞ்சலின் அந்த பக்கத்து ஓரத்தில் சிந்தியாவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தவன்.....அவளின் முதுகு பக்கமாய் கையை நீட்டி நின்றிருந்த தாரிகாவின் கைப்பிடித்து அவளையும் ஊஞ்சலில் அமர வைத்தான்.இப்போது ஊஞ்சலின் இரு ஓரங்களில் ரகுவும் தாரிகாவும் அமர்ந்திருக்க....நடுவில் உட்கார்ந்திருந்தாள் சிந்தியா.

    "
    வீட்டுக்கு போய் தனிமையில் என்ன செய்ய போகிறாய் தரு? கொஞ்சநேரம் தான் எங்களோடு பேசிக்கொண்டிரேன்." அவள் முகம் பார்த்து பேசினான்.[FONT=&quot]

    [/FONT] "ஏன்........நீங்கள் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரமாய் இங்கேதான் உட்கார்ந்திருந்தேன்.குடிக்க கூட ஒன்றும் தரவில்லை இவள்....இனி மட்டும் தந்து விடவா போகிறீர்கள்?" சோகமாய் அவள் முகத்தை வைத்துக் கொண்டிருக்க ரகுவரன் சிந்தியாவை முறைத்தான்.

    "என்ன பழக்கம் இது சிந்தியா? நம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு சாப்பிட எதையாவது தர வேண்டாமா? இரு தரு....நான் சென்று எடுத்து வருகிறேன்." அவன் உண்மையாகவே சமையலறைப் பக்கம் நகரவே, தாரிகா சிரித்தாள்.

    "
    என்னடி சிந்து..........உன் ஆளு என்னை ஜொள்ளு விடுறாரு? நான் வேணா ஒரு முயற்சி பண்ணி பார்க்கட்டுமா?"

    "
    அடி போடி பைத்தியம்........இது எங்கள் வீடு....நான் தானே உரிமையோடு வந்தவர்களைக் கவனிக்க வேண்டும்? அதை சொல்கிறார் அவர்! நீயும் ரொம்ப அலையாதே.....தெரிகிறதா?"

    "
    தோ பாருடா......இவங்க மாமன் பெரிய மன்மதன்.......நாங்க அலையுறோம்! போடி...போடி.....இதை விட சூப்பர் பிகர் எல்லாம் என் பின்னாடி வந்தப்பவே நான் கண்டுக்கல.....இது ஒரு அட்டு........ஆ.....[FONT=&quot][/FONT].......ஏய் விடுடி....வலிக்குது......"

    "
    சொல்லுவியா? இனி சொல்லுவியா அப்படி?"

    "
    ஐயோ சொல்லமாட்டேன்! விடு காதை! ஸ்ஸ்.......ப்பா! பாவி இந்த திருகு திருகுறியே....வலி உயிர் போகுது!"

    சிந்தியாவின் கண்ணோரம் ஈரமானது."இனி அப்படி சொல்லாத தரு!"

    "
    ஹே.........ஐயோ சிந்து........உன் மாமா உண்மையாகவே ரொம்ப அழகுடி........நான் சும்மா கேலிக்கு தான்......"

    "
    அதில்ல......அவர் என் கண்ணுக்கு மட்டும் அழகாய் இருந்தால் அதுவே எனக்கு போதும்!"

    "
    பிறகு?"

    "
    அவர் உன்னைப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார்......நீ அவரை சைட் அடிக்கிறாய்.....என்று இது போல இனி பேசாதே! விளையாட்டாக கூட அதை ஏற்க முடியவில்லை! தரு.....நீ வளர்ந்த சூழ்நிலை எப்படியோ தெரியாது! ஆனால் எங்கள் கிராமத்தில் ஒரு பெண் மனதில் ஒருவனை நினைக்கும் வரைதான் அவள் கன்னிப்பெண்[FONT=&quot]! [/FONT]நினைத்துவிட்டால் பிறகு அவளும் திருமணமான பெண்களைப் போலத்தான்[FONT=&quot]! [/FONT]இன்னொருத்தனை கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள்[FONT=&quot]."

    "
    [/FONT]சரிடா[FONT=&quot]....[/FONT]விடு[FONT=&quot]![/FONT] எனக்கு தெரியாதா உன்னைப்பற்றி[FONT=&quot]? [/FONT]சும்மா உன்னை சீண்டினேன் சிந்தும்மா[FONT=&quot]....[/FONT]சரி இனி விளையாட்டுக்கு கூட அப்படி சொல்வதில்லை[FONT=&quot]....[/FONT]ஓகேவா[FONT=&quot]?"

    "
    [/FONT]ம்ம்ம்[FONT=&quot]....[/FONT]தேங்க்ஸ்டி[FONT=&quot]!"

    "
    [/FONT]அடச்சி[FONT=&quot]....[/FONT]நமக்குள் என்ன தேங்க்ஸ்[FONT=&quot]? [/FONT]மக்கு[FONT=&quot]........[/FONT]எனக்கும் காதலின் வலி நன்றாக தெரியும் சிந்து[FONT=&quot]!"[/FONT]
     
    2 people like this.
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-6

    [FONT=&quot]"[/FONT]ஏய்[FONT=&quot].........[/FONT]சொல்லவே இல்ல[FONT=&quot]? [/FONT]யாருடி அது[FONT=&quot]?"

    "
    [/FONT]எது[FONT=&quot]?"

    "
    [/FONT]உன் ஆளு[FONT=&quot]?"

    'அவன் இன்னும் என்னவன் ஆகவில்லை சிந்து! அவனே சொன்னது போல
    [/FONT]காதலினால் [FONT=&quot]ஏற்படும் வலி கூட சமயத்தில் இனிக்கிறது தான்!' [/FONT][FONT=&quot]வெளியில் சொல்ல வழியில்லாமல் மனதுக்குள் புலம்பினாள் தாரிகா.[/FONT]
    [FONT=&quot]
    பெருமூச்சோடு சொன்னாள்..."
    [/FONT]ஐயோ நான் வீரனைப்பற்றி சொன்னேன்[FONT=&quot]!"

    "அதுக்கு ஏன்டி இந்த மூச்சு விடற?
    [/FONT]ம்ம்[FONT=&quot]...[/FONT]ஆனால் எனக்கென்னவோ மஞ்சுளா ஒத்துக்கமாட்டா என்று தான் நினைக்க தோணுது[FONT=&quot]!"

    "
    [/FONT]அதை சொன்னால் தான் கேட்க மாட்டேன்றானே[FONT=&quot]......"

    "
    [/FONT]இதை பற்றி மஞ்சுகிட்ட நானே கேட்கவா[FONT=&quot]?"

    "
    [/FONT]ஐயோ வேணாம் சிந்து[FONT=&quot]......[/FONT]காதலில் மட்டும் அவர்களாகவே நம் உதவிக்கு கேட்கும்வரை நாம் அதில் தலையிட கூடாது[FONT=&quot].[/FONT]அது நல்லாவும் இருக்காது[FONT=&quot]!"

    "
    [/FONT]ம்ம்[FONT=&quot]....[/FONT]நீ சொல்றதும் சரிதான்[FONT=&quot]!"

    "
    [/FONT]தரு சொன்னால் அது எப்பவும் சரியாதான் இருக்கும் சிந்து[FONT=&quot]......[/FONT]அவளைக் கேட்டு நட[FONT=&quot]!" [/FONT]சுடச்சுட வாழை பஜ்ஜியோடு வந்தான் ரகுவரன்[FONT=&quot].

    "
    [/FONT]அதற்குள் பஜ்ஜியா[FONT=&quot]? [/FONT]ஹே சிந்து உன் மாமா உண்மையில் பெரியாளுதான்[FONT=&quot]!"

    "
    [/FONT]பின்ன நாளைக்கு வரப்போற என் மனைவிக்கு துணையா நானும் சமைக்க வேண்டாமா[FONT=&quot]?"

    "
    [/FONT]கவலையே வேண்டாம்[FONT=&quot]! [/FONT]உங்கள் மனைவிக்கு சூப்பரா சமைக்க தெரியும்[FONT=&quot]." [/FONT]தாரிகா சிந்தியாவைப் பார்த்து கண்ணடித்தாள்[FONT=&quot].

    [/FONT]சிந்தியா கூச்சத்தோடு குனிந்துக்கொள்ள ரகுவரன் யோசித்தான்[FONT=&quot].'[/FONT]இல்லையே[FONT=&quot]? [/FONT]அன்னைக்கு கூட தருவோட அம்மா அவளால ஒரு பிரயோஜனமும் இல்ல தம்பி என்று சொன்னார்களே[FONT=&quot]?'

    [/FONT]தாரிகாவும் சிந்தியாவும் ஒரு பிடிபிடிக்க ரகுவரன் காபி போட்டு கொண்டு வந்தான்[FONT=&quot]. "[/FONT]இந்தாங்க[FONT=&quot]....[/FONT]இரண்டுபேரும் இதையும் குடிச்சுடுங்க[FONT=&quot]!"

    [/FONT]தாரிகா அனைத்தையும் முடித்துக்கொண்டு கிளம்பினாள்[FONT=&quot].[/FONT]சிந்தியா அவள் போவதைப் பார்த்துக்கொண்டே ரகுவிடம் சொன்னாள்[FONT=&quot].

    "
    [/FONT]ரொம்ப நல்ல பெண்[FONT=&quot]....[/FONT]இல்லையா மாமா[FONT=&quot]? [/FONT]என் அதிர்ஷ்டம் இவளும் மஞ்சுளாவும் தோழிகளாக கிடைத்தார்கள்[FONT=&quot]! [/FONT]இல்லாவிட்டால் இந்த ஊரில் திண்டாடியிருப்பேன்[FONT=&quot]."

    [/FONT][FONT=&quot]அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே ரகுவரன் கனவுகளில் மூழ்கினான். [/FONT][FONT=&quot]'அவளை ஒருமையில் அழைத்தபோது அதை இயல்பாக எற்றுக்கொண்டாளே? பாவம் இத்தனை நாள் சொல்ல வழியில்லாமல் தவித்திருக்கிறாள்.நான் அதை புரிந்துக் கொள்ளாமல் ச்சே....என்ன ஆண் பிள்ளையோ நான்!'

    [/FONT][FONT=&quot]"என்ன மாமா பதிலே காணோம்?[/FONT][FONT=&quot] என்ன யோசனை?[/FONT][FONT=&quot]"[/FONT]

    [FONT=&quot] "[/FONT][FONT=&quot]ஆ.....என்ன சிந்து?? ஆமாம்...[/FONT]ஆமாம் சிந்து[FONT=&quot]......[/FONT]அப்போது சொன்னேனே[FONT=&quot]? [/FONT]தாரிகாவிடம் எதற்கும் யோசனைக் கேட்டு நடந்துக்கொள் என[FONT=&quot]? [/FONT]அது விளையாட்டு பேச்சல்ல[FONT=&quot]! [/FONT]உண்மையாகத் தான் சொன்னேன்[FONT=&quot]! [/FONT]அவளுக்கு எல்லாரிடமும் எந்த எல்லையோடு பழக வேண்டும் என்பது நன்றாக தெரியும்[FONT=&quot].[/FONT]இந்த ஊர் பெண்களைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா[FONT=&quot]? [/FONT]ஆனால் தாரிகா அப்படிப்பட்டவள் இல்லை[FONT=&quot].[/FONT]எதையும் ஒன்றுக்கு நான்காய் யோசித்து தான் செய்வாள்[FONT=&quot].[/FONT]அவளோடு நீ இருப்பது அப்பாவுக்கும் அம்மாவுக்குமே நிம்மதி[FONT=&quot]! [/FONT]என்னிடமும் அதைதான் சொல்கிறார்கள்[FONT=&quot]."[/FONT] சொல்லும்போது அவன் குரலில் பெருமிதம் தெரிந்தது.

    தன்னைப்பற்றி இப்படித்தான் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பது தாரிகாவுக்கும் தெரியும்[FONT=&quot]! [/FONT]ஆனால் அவளால் மட்டும் அதை நம்ப முடியவில்லை[FONT=&quot].[/FONT]யோசித்து செய்பவளாக இருந்திருந்தால் இப்படி தோழியைக் காதலிப்பவனை நான் காதலித்துக்கொண்டு இருப்பேனா[FONT=&quot]?

    [/FONT]எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அதே போன்ற சூழ்நிலையோடு அவர்கள் மூன்றாமாண்டு நுழைந்தார்கள்! அதுவே இறுதியாண்டு என்பதால் மணிவீரன் மஞ்சுளாவோடு பேசிவிட வேண்டும் என்பதில் இப்போது உறுதியாக இருந்தான்.வேலை பார்த்துக்கொண்டு தாரிகா வேறெங்கும் போய்விட கூடாதென்ற கவலையில் ரகுவரனும் அவளிடம் காதல் சொல்லி திருமணத்துக்கு தயாராகிவிட எண்ணினான்.
     
    1 person likes this.
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-7

    மஞ்சுளாவுக்கு எரிச்சல் அதிகமானது.இது இன்றோ நேற்றோ தொடங்கிய எரிச்சல் இல்லை.என்று வீரன் அவளை பின்தொடர்ந்து வர ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே அவளுக்கு தலைவலியும் ஆரம்பமானது.முதலில் அவனின் காதலை அவள் கண்டுக்கொள்ளவில்லை.அவனை அலட்சியம் காட்டி நடந்துக் கொண்டாள்.ஆனால் அவன் நேரடியாகவே வந்து சொன்னபின்பு எதை சொல்லி மறுப்பது என்று தெரியாமல் திணறினாள்.

    "
    இங்க பாருங்க எனக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்லை! சொன்னா புரிஞ்சுக்கோங்க!"

    "
    அது தான் ஏன்? எனக்கு இன்னும் வேலை எதுவும் கிடைக்கலன்னு யோசிக்குற.....அப்படித்தான மஞ்சு? நான் அவ்ளோ பொறுப்பில்லாதவன் இல்லை. நீ என் மனைவியா வரும்போது நான் ஒரு நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருப்பேன்.அது நிச்சயம் மஞ்சு!" மணிவீரனின் குரலில் கெஞ்சல் இருந்தது.

    "
    உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பேன்........ஐயோ......கெஞ்சி வாங்கி விடுவதற்கு இது கடன் இல்லை.....காதல்! நானா விரும்பி உங்களைத் தேடி வரணும்."

    "
    ஓகே மஞ்சு..........நீயா எப்போ என்னைத் தேடி வருவாய் என்று சொல்லிவிடு! அதுவரை நிச்சயமா காத்திருப்பேன்!"

    மஞ்சுளாவுக்கு அலுத்து போனது! பக்கத்தில் சிந்தியாவோ தாரிகாவோ இருந்திருந்தால் இந்த பைத்தியத்தோடு அவர்களை விட்டுவிட்டு சென்றிருப்பாள்.ஆனால் மணிவீரன் அருகில் வரும்போதே அவர்கள் ஒதுங்கி செல்ல தொடங்கினார்கள்.இவள் தடுத்து பார்த்தும் தாரிகா நிற்கவில்லை.

    "
    நோ மஞ்சு..........இது உனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் தனிப்பட்ட விவகாரம்! அதை நீ தான் பார்த்துக்கணும்."

    சிந்தியாவுக்கு மஞ்சுளாவின் முகம் பார்க்க பாவமாய் இருந்தது.அவள் வக்காலத்து வாங்கினாள் தோழிக்காக!

    "
    என்ன தரு......அவளுக்கு தனியா சமாளிக்க பயம்....அது தான் நம்மையும் இருக்க சொல்கிறாள்.இருப்போமே?"

    இப்போது தாரிகாவின் குரல் கறாராக வந்தது.
    "
    பாரு சிந்தியா......உனக்கு அன்னைக்கே சொன்னேன்.....இது நம் விஷயம் இல்லை.தோழியாக இருந்தாலும் அவளுக்கென்று தனிப்பட்ட நேரம் இருக்கிறது.அவள் படுக்கையறைக்குள் நாம் எட்டி பார்க்க முடியாது."

    "
    ஐயோ......ஏன்டி இப்படியெல்லாம் பேசுற? நான் அவளுக்காக தானே............"

    "
    அது தான் வேண்டாம் என்கிறேன்! அவளும் அவனும் பேசட்டும்! சரியோ தப்போ அவர்களே அந்த முடிவை எடுக்கட்டும்! மீறி அவளுக்கு முடியவே முடியாது என்ற நிலைமை வந்தால் நாம் தலையிடலாம்.அதுவரை நாம் ஓரமாக நின்று வேடிக்கைத்தான் பார்க்க வேண்டும்.வா......" அவளையும் இழுத்துக்கொண்டு தூரமாக இருந்த மரத்தின் நிழலுக்கு சென்றுவிட்டாள்.

    மஞ்சுளாவுக்கு என்னவோ குழப்பமாக இருந்தது.அந்த குழப்பத்தோடு இந்த எரிச்சலும் சேர்ந்துவிடவே அவளுக்கு அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்றிருந்தது.ஆனால் இவன் நகர விட்டால் தானே!

    "
    ஏன் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்குறீங்க? லுக்..........எனக்கு காதல் வரல! அதுவும் உங்க மேல சுத்தமா வரல! வரவும் வராது! ரைட்? ஜஸ்ட் லீவ் மீ!" பொறுமையாக சொன்னாலும் அழுத்தம் திருத்தமாய் நிதானம் தவறாமல் சொல்லிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றாள்.

    மணிவீரன் அதற்கு பின்பு அவளைத் தொடரவில்லை.'இன்றைக்கு இது போதும்! அவளிடம் என் காதலைச் சொல்லிவிட்டேன்....அது போதும்! இப்போதே வற்புறுத்தி அவளை ஒரேடியாக மறுக்க வைக்க கூடாது.பொறுத்து பார்ப்போம்! இன்னும் நமக்கு வேலை கிடைக்க வேண்டும்.....ஒரு நல்ல வீட்டுக்கு குடிப்போக வேண்டும்.பிறகு கௌரவமாய் சென்று அவளைக் கேட்கலாம்!' அவள் மறுத்த வேதனை எதுவும் இல்லாமல் அவன் சகஜமாய் நண்பர்களோடு சேர்ந்துக் கொண்டான்.

    "
    என்னடா மச்சான்.........தங்கச்சி என்ன சொல்லுது?"

    "அவளுக்கு காதலில் ஆர்வம் இல்லையாம்! அதுவும் என்னை எப்போதும் காதலிக்க மாட்டாளாம்! உறுதியா சொல்லிட்டா!"

    "சரி விடுடா உனக்கென்ன....சூர்யா மாதிரி அம்சமா இருக்க.....இவள விட்டா வேற பொண்ணா இல்லை? நீ மட்டும் ஒரு வேலை வாங்கிருடா....அப்புறம் பாரு..."

    "ஆமாடா வேலை தேடிக்கிட்டு அவளிடம் போய் காதல் சொல்லணும்....அப்போ கண்டிப்பா ஒத்துப்பா!"

    "அடேய்....அடேய்.....நீயெல்லாம்! அவளை.........விடுடா வீரா! அவ ஒருத்திதான் பொண்ணா?"


    "அவள் ஒருத்தி தான் எனக்கு மனைவியா வர முடியும்!"

    "சரி ஓகே டா......டேய் இவன் திருந்த மாட்டான்டா.....என்ன பண்றது? நம்ம தலையெழுத்து......இவன் காதலுக்காக நம்ம உயிரைக் கொடுத்துதான் ஆகணும். கவலையை விடு வீரா.........அந்த பொண்ணு கால்ல விழுந்தாவது அவளோட உன்னை நான் சேர்த்து வைக்குறேன் மாப்பிள்ள...."


    வீரன் சிரித்துக் கொண்டான்.த
    ன் நண்பர்களுக்கும் மஞ்சுளாவின் தோழிகளுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை நினைத்துக் கொண்டான்.பெண்கள் எப்போதும் எதிலும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு தான் இருக்கின்றனர்.அது அவசியமும் கூட! ஆண்களைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர்களால் சுயமாக எதையும் செய்துவிட முடியாது என்பதை விட...செய்ய கூடாது என்பதே நியாயம்!

    எதையோ நினைத்தவனாக தூரத்தில் தெரிந்த மரத்தடியை நோக்கினான்.அவன் நினைத்தது போலவே தாரிகாவிடமும் சிந்தியாவிடமும் பொரிந்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.ஆனால் இவன் காதுக்கு அது கேட்கவில்லை.

    "ஏன் நீ சொன்னால் அவன் கேட்க மாட்டானா? ஒரு தடவை சொல்லி பார் என்கிறேன்! அதிலென்ன தப்பு?" மஞ்சுளா தாரிகாவைத் துளைக்கும் பார்வையொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


    "உனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயார்! ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் எதுவும் செய்ய என்னால் முடியாது மஞ்சு!"

    சிந்தியாவுக்கே தாரிகாவின் பதில் கோபத்தை உண்டு பண்ணியது."அவளுக்கு தேவைப்படும் உதவியைச் செய்யாமல் வேறு எதை செய்ய போகிறாய் தரு? உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல!"

    தாரிகா செய்வதறியாமல் திகைத்தாள்.மணிவீரனிடம் அவளாக சென்று மஞ்சுளாவை மறந்து விடு என்று எப்படி சொல்ல முடியும்? சொன்னால் அது தன்னை நம்பியிருக்கும் இருவருக்கு செய்த துரோகம் ஆகாதா? மஞ்சுளாவை மறந்துவிடு என்று சொல்லலாம்.....சொல்லிவிட்டு த
    ன் காதலையும் அவனிடம் சொல்லிவிடலாம்.ஆனால் அவன் தவறாக நினைத்துவிட்டால்? என் காதலை ஜெயிப்பதற்காக தான் அவனை மஞ்சுவிடமிருந்து நான் பிரிப்பதாக எண்ணிவிட்டால்? கூடாது!

    "எதை எப்படி பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும் சிந்து........நீ சொல்ல வேண்டிய அவசியமில்லை.முடிந்தால் நீயே மஞ்சுவுக்காக அவனிடம் சென்று பேசி பார்.என்னை விட்டுவிடுங்கள் இருவரும்!" கோபமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

    மஞ்சுளாவும் சிந்தியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.சிந்தியா ஆதங்கத்தோடு சொன்னாள்.

    "நம்மை விட அவளுக்கு அவன் தான் பெரிதாக போய்விட்டான் மஞ்சு! பார்....இதுவரை என்னைவிட்டு அவள் மட்டுமாக சென்றதே இல்லை.இப்போது தனியாக வீட்டுக்கு போய்விட்டாள்."

    "விடு சிந்தியா.....அவளைப் பற்றி தான் நமக்கு தெரியுமே! முடியாது என்று சொல்லிவிட்டால் நாம் என்ன கெஞ்சினாலும் ஒத்துக்க மாட்டா...."

    "இந்த விஷயத்தில் ரொம்ப தீவிரமா இருக்காளே மஞ்சு? அதுதான் எனக்கு புரியலை! நான் அப்போதே சொன்னேன்...மஞ்சுவிடம் இதை சொல்லிவிடலாம்...ஆரம்பத்திலேயே வெட்டிவிடலாம் என்று...அப்போதும் இவள் தான் என்னைத் தடுத்துவிட்டாள்."

    மஞ்சுளாவுக்கும் சமீபகாலமாக தாரிகாவிடம் தெரியும் மாற்றம் வியப்பாக தான் இருந்தது. சிந்தியாவும் அவளும் மற்றவரிடம் மறைத்தாலும் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் தாரிகா சந்தோஷத்தை மட்டும் தான் தோழிகளுக்கு சொல்லுவாள். கஷ்டத்தை அவளோடு வைத்துக் கொள்வாள். அது சிந்தியாவை விட மஞ்சுளாவுக்கு நன்றாகவே தெரியும்.

    'இப்போதும் அப்படி ஏதாவது இருக்குமோ? நம்மிடம் மறைத்துவிட்டு தனிமையில் அழுகிறாளோ?' இந்த சந்தேகம் கடைசி ஆறு மாதங்களாய் மஞ்சுளாவை யோசிக்க வைத்தது.ஆனால் தாரிகாவிடம் இதைக் கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது!

    "சிந்தியா......நீ நான் சொல்வது போல செய்! அவள் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் யாரிடமாவது நெருக்கமாக பழகுகிறாளா என்று உன்னிப்பாக கவனி! அவளோடு இருக்கும் நேரங்களில் அவள் கைபேசியையும் பார்த்துவிடலாம்."

    "இதெல்லாம் எதற்குடி?"

    "காரணமாகத்தான்! அவள் எதையோ நம்மிடம் இருந்து மறைக்கிறாள் சிந்தியா......ஒன்று அது மணிவீரனைப் பற்றிய விஷயமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு காதல் வந்திருக்க வேண்டும்."

    "ஏய்......மஞ்சு.....ஐ....அப்படியும் இருக்குமா? கள்ளி...நம்மிடம் மறைத்துவிட்டாள் பாரேன்?"

    "இதில் சந்தோஷப்பட ஒன்றுமே இல்லை சிந்தியா! அவளுக்கு ஒருவேளை காதல் வந்திருந்தால் அது வருத்தப்பட வேண்டிய விஷயம்."

    "ஏன்
    டி அப்படி சொல்ற? உனக்கு தான் அதெல்லாம் பிடிக்காது! அதுக்காக அவளும் காதலிக்க கூடாதா?"

    "அடி பைத்தியமே......சந்தோஷமான காதலாக இருந்திருந்தா அவள் நம்மிடம் மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே? இப்போ அவளுக்குள்ள எதையோ வைத்து மருகுகிறாளே....ஏன்? அவள் காதல் தோல்வியில் முடிந்திருக்க வேண்டும்........அல்லது அவள் இன்னும் காதலைச் சொல்லவில்லை என்று அர்த்தம்."


    "அவன் யாராக இருக்கும் மஞ்சு?"

    ஓங்கி ஒரு குட்டு குட்டினாள் சிந்தியாவின் தலையில்!

    "ஐயோ......ஆ.....ஏன்டி?"

    "ம்ம்.....அப்படியாவது உள்ளிருக்கும் களிமண் வெளியில் வரட்டும் என்று தான்! யாரை அவள் காதலிக்கிறாள் என்று தெரிந்தால் இத்தனை நேரம் இப்படியெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டு இருப்பேனா?"

    "ஓ.....ஆமாம்ல! சரி மஞ்சு! இதெல்லாம் நம் யூகம் தானே? வேறு ஏதாவது காரணம் இருந்தால்?"

    "அதனால் தான் உன்னைக் கவனிக்க சொல்கிறேன். கல்லூரியில் அவள் இருக்கும் நேரம் நானே பார்த்துக்கொள்வேன்.ஆனால் வீட்டுக்கு அருகில் இருக்கும் உனக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். குடும்ப பிரச்சனை எதுவும் தாரிகாவுக்கு இருக்க முடியாது சிந்து........"

    "அப்படியே இருந்தாலும் அது அவங்க அம்மா மூலமா என் அத்தைக் காதுக்கு இந்நேரம் வந்திருக்கும்.அத்தை என்கிட்டே மறைக்க மாட்டாங்க மஞ்சு!"

    "குட்......அப்போ நாம் யோசித்த காரணமாகத்தான் இருக்க வேண்டும்.மணிவீரனைப் பற்றிய விஷயமா என்பதை நான் கவனிக்கிறேன்.காதலா இல்லையா என்பதை நீ கவனி....ஓகே?"

    "டபுள் ஓகே!"

    அன்றைக்கு சிந்தியா உற்சாகத்தோடு வீட்டுக்கு சென்றாள்.தாரிகாவை அவள் பார்த்தும் பார்க்காத நேரங்களில் எல்லாம் கவனிக்க தொடங்கினாள்.

    சிந்தியாவின் முயற்சிக்கான பலன் விரைவில் கிடைத்தது.ஆனால் சிந்தியா முக்கியமான ஒரு தவறையும் செய்தாள்.
     
    1 person likes this.
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-8

    தோழிகளோடு உட்கார்ந்திருந்த மஞ்சுளாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தான் அன்பழகன்......மணிவீரனின் தோழன்!

    "ஹாய் மஞ்சுளா........இந்தாங்கா!" அவளிடம் பரிசு கவர் ஒன்றை நீட்டினான்.

    அதை குழப்பமான கண்களோடு பார்த்துவிட்டு நிமிர்ந்து அவனையும் பார்த்தவள் கையில் வாங்காமலே கேட்டாள். "என்ன இது?"

    "மணிவீரனோட மனசு!" காலரைத் தூக்காத குறையாய் பெருமை பொங்க சொன்னான்.

    "அதை ஏன் இப்படி பொட்டலம் கட்டி கொண்டு வந்துருக்க?" சிந்தியா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

    "இது பொட்டலம் இல்லம்மா.....பொக்கிஷம்!"

    "ஓஹோ.........பொக்கிஷம் இத்தனை மலிவா கிடைக்க ஆரம்பிச்சுடுச்சா? ஆமா.......கிலோ என்ன விலைக்கு போகுது?"

    "கிலோவா?? ஹலோ.........." அன்பு இப்போது தலையை ஒரு பக்கமாய் சாய்த்து வலது கையின் ஆட்காட்டி விரலை சிந்தியாவை நோக்கி நீட்டினான்.

    "சரி சரி.........ரொம்ப நீட்டாத! அதை இப்படி கொடு பார்ப்போம்!"

    "இதை நீங்கெல்லாம் பார்க்க முடியாது! மஞ்சுளாவுக்கு சொந்தமான ப்ராபர்ட்டி........அவங்ககிட்ட தான் கொடுக்க முடியும்."

    "ஏய் மஞ்சு..........வாங்குடி! அதில் என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்!"

    மஞ்சுளா அப்போதும் வாங்க மறுத்தாள்.இப்போது சிந்தியாவே அன்பழகனின் கைகளில் இருந்து அதை வாங்கிக் கொண்டு தாறுமாறாய் உறையைக் கிழித்தாள். அன்பழகன் சிந்தியாவைக் கார பார்வை ஒன்று பார்த்தான்.ஆனால் அவள் கவனம் பிரிப்பதில் இருந்தது.உள்ளே வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட ஒரு கடிதம் மஞ்சுளாவுக்கு என்ற முகவரியோடு தொடங்கியிருந்தது.

    "ச்சை.........கடுதாசியா? நான் கூட இதயத்துல செஞ்ச மோதிரம்........செய்ன் அப்படி ஏதாவது காஸ்ட்லியா இருக்குமோன்னு ஆசையா பிரிச்சேன்!"

    அன்பழகன் நக்கலாய் சிரித்தான்......"ஏன் அப்படி ஏதாவது இருந்தா ஆட்டைய போட்டுரலாம்னா?"

    "டேய் ஒழுங்கா பேசு.........நானே ஐந்தடி தங்கம்..........எனக்கெதுக்குடா தனியா தங்கம்?"

    மேலும் அவர்கள் கதையளக்க தொடங்குவதற்குள் மஞ்சுளா அந்த கடிதத்தை வாங்கி படிக்க தொடங்கினாள். உள்ளே கவிதை இருந்தது.

    அன்பே மஞ்சுளா!
    நீ என்னை கொள்ளைக் கொண்ட ஏஞ்சலா?!
    வானத்தில் ஒற்றை வெண்ணிலவு
    என் மனதில் நீ ஒருத்திதான் பொன்னிலவு!
    உன் இதய சிறை தான் எனக்கு மஞ்சம்
    எப்போதும் என் காதல் உன்னிடத்தில் தஞ்சம்!
    உன் கால் கொலுசாய் இருக்கவே எனக்கு விருப்பு
    கால்மிதியாக இருக்கவாவது கொடுத்திடு ஒரு வாய்ப்பு!
    வேண்டாமடி காதல் சோதனை
    இன்னும் ஏன் தருகிறாய் எனக்கு வேதனை?
    சொல்லிவிடு ஒரு வார்த்தை உந்தன் வாயால்
    சுமந்திடுவேனே காலம் முழுக்க உன்னை-எந்தன் கையால்!

    இப்படிக்கு,

    உன் காதல் அடிமை மணிவீரன்!


    படிக்க படிக்க மஞ்சுளாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது! காரணம் அறியாமல் அதை வாங்கிப் பார்த்த தாரிகாவும் சிந்தியாவும் கொல்லென சிரித்துவிட்டனர்.சிந்தியா தாரிகாவின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

    "என்னடி தரு.........வீரன் வீராப்பா எதையாச்சும் எழுதிருப்பான் என்று நினைத்தால் இப்படி கண்ணே கலைமானே என்று பாடியிருக்கான்! ஹா ஹா ஹா.........கடைசியில் கில்லி பிரகாஷ்ராஜ விட அம்சமா காமெடி பண்ணிருக்கானேடி!"

    தாரிகாவும் அதை கேட்டு சிரித்தாலும் அவளுக்கு புரிந்தது இது கண்டிப்பாக மணிவீரன் எழுதிய கடிதம் அல்லவென்று! கல்லூரியில் அன்று அவர்கள் துறை விழா நடந்துக் கொண்டிருந்தது. அதனால் வகுப்புகள் இல்லாமல் அங்கெங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் மாணவர்கள் எல்லாரும்.

    "மஞ்சு.....இங்கேயே உட்கார்ந்திரு! நான் இதோ வந்து விடுகிறேன்." அன்பழகனை அழைத்துக் கொண்டு வகுப்புக்கு சென்றாள் தாரிகா.அங்கே தான் மணிவீரன் அமர்ந்திருந்தான்.அவன் முன்னால் சென்று இந்த கடிதத்தை நீட்டியவள்,

    "என்னடா கூத்து இது?" என்றாள்.

    எதுவும் புரியாமல் வாங்கி படித்தவன் எரிமலையாய் அன்பழகனைப் பார்த்தான்.அன்பு கெத்தாய் சொன்னான்.

    "உனக்காக ஏதாவது செய்யணும் என்ற வெறிடா மச்சான்....அந்த வெறி என்னைய தூங்க விடலடா இரண்டு நாளா!"

    வீரன் அருகில் இருந்த கனமான அட்டைக் கொண்ட ரெக்கார்ட் நோட்டை எடுத்து அவனை அடியடியென்று அடித்தான். "நீ வெறியாட்டம் ஆடுறதுக்கு என் காதல் தான் கிடைத்ததா? சொறிநாயை விட என்னை கேவலப்படுத்திட்டியேடா பாவி.....இப்போ அவள் என்னைப் பத்தி என்னடா நினைப்பா?"

    இத்தனைக்கும் அருகில் இருந்த தாரிகா சிரித்துக்கொண்டு தான் இருந்தாள். "போதும் வீரா.....அவனை விட்டுடு!"

    "இப்போ என்ன செய்வது தரு? மஞ்சுளா இதை முழுவதும் படித்துவிட்டாளா?"

    "ஒரு வரி விடாம படிச்சுட்டா! ஹா....."

    "சும்மாவே குதிப்பா........இனி சுத்தம்! எல்லாம்..........இதோ......இதோ....இவனால.........இவன ை....." ஓங்கி முதுகில் இரண்டு உள்ளங்கை ரேகையும் பதியும் வண்ணமாக அடித்தும் அவன் ஆத்திரம் தீரவில்லை.

    "ஏன்டா வீரா........ஒருநாள் முழுக்க யோசிச்சு யோசிச்சு காதலா ஒரு கவிதையை எழுதியிருக்கேன்.அதுக்கு என்னை பாராட்டாம இப்படி போட்டு அடிக்குறியே?"

    "காதலாவா எழுதியிருக்க? கன்றாவியா எழுதியிருக்கடா! இதுக்கு பேரு கவிதையாம்! சத்தமா சொல்லிராத.......வைரமுத்துக்கு இதயம் வெடித்துவிட போகிறது இதை கேட்டு!"

    "இப்போ சொல்றேன் கேட்டுக்கடா........இதை விட அருமையா ஒரு காதல் கவிதையை எழுதி அந்த மஞ்சு புள்ளகிட்ட அதை காண்பிச்சு அவளை உன்னை காதலிக்க வைக்கல.........நான் அன்பும் இல்ல.....அழகும் இல்ல......இது இந்த சொக்காய் போட்ட அக்கா மேல சத்தியம்டா மாப்பிள்ள...."

    தன் மீது சத்தியம் செய்ய வந்த அவனின் கையைத் தட்டிவிட்ட தாரிகா கிண்டலாய் சொன்னாள். "உனக்கு அறிவும் இல்ல.....முக்கியமான இதை சொல்லாமல் விட்டுட்டியே?"

    அதே நேரம் மணிவீரன் கையை நம்புவதை விட்டுவிட்டு காலால் அவனை எட்டி உதைத்து வகுப்பறையில் இருந்து வெளியில் தள்ளினான்.தாரிகா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் கண்களில் நீர் வர!

    "சிரிக்காதடி எனக்கு எரிச்சலா இருக்கு!"

    "நான் என்னடா பண்ணட்டும்? என்கிட்டே இந்த கடிதம் வந்திருந்தா மஞ்சுகிட்ட போக விடாம தடுத்திருப்பேன்.ஆனா சிந்தியா அவசரப்பட்டு பிரிச்சுட்டா!"

    பற்களை நறநறவென்று கடித்தான் வீரன்."அந்த குரங்கு செய்த வேலையா இதெல்லாம்? எப்பவும் எதையாவது பிச்சு குதறிகிட்டே இருக்கணுமா அவளுக்கு?"

    அந்த குரங்கு அப்போதும் தன் குரங்குத்தனத்தைக் காட்டிக் கொண்டுத்தான் இருந்தது தாரிகாவின் கைபேசியில்!

    "சீக்கிரம் சிந்து........பார்த்துட்டியா? அவள் வருவதற்குள் தேடு!"

    "அட சும்மா இருடி.........நாற்பது வருஷத்துக்கு முன்னாடி அவங்க கொள்ளு தாத்தாவுக்கு வந்த மெசேஜ எல்லாம் இவள் இன்னும் டெலீட் பண்ணாம வைச்சுருக்கா.......அரத பழசு எல்லாம்....."

    "ஓகே ஓகே.......சென்ட் ஐடம்ஸ் பாரு..........ஏதாவது இருக்கான்னு?"

    பத்து நிமிடங்களாக தாரிகா அங்கேயே விட்டு சென்ற அவளின் கைபேசியில் தேடித்தேடி பார்த்த சிந்தியா எதுவும் கிடைக்காமல் சோர்வாக மஞ்சுளாவைப் பார்த்தாள்.

    "ம்ம்...க்கும் ! எதுவும் கிடைக்கல மஞ்சு! எல்லாம் ஃபார்வர்ட் மெசேஜ்! படிக்க கூட இல்லாம விட்டுட்டேன்!"

    மஞ்சுளா ஆறுதலாய் சொன்னாள். "சரி விடு! இப்போதானே களம் இறங்கியிருக்கோம்? நீ வீட்டில் கவனி......ஏதாவது துப்பு கிடைக்கும் கண்டிப்பா!"

    மஞ்சுளா சொன்ன அந்த குறிப்பு தாரிகாவின் கைபேசியில் கிடைக்கத்தான் செய்தது! அதுவும் சிந்தியாவுக்கு மிக மிக அவசியமான அந்த குறிப்பு கண்ணில் பட்டும், அவள் அதை வெறும் ஃபார்வர்ட் என்று அலட்சியமாக விட்டிருந்தாள்.
     
    1 person likes this.
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-9

    தாரிகாவுக்கு சற்றே எரிச்சலாக கூட இருந்தது.'இது என்ன புது பழக்கம்? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த ஒரு வாரமாக மட்டும் ஏன் இத்தனை ஃபார்வர்ட் மெசேஜ்? அதுவும் சம்மந்தமே இல்லாத எனக்கு?' அவளுக்கு வயிறு எரிந்தது.அதுக்கு காரணம் பசியாக கூட இருக்கும் என்றெண்ணி வீட்டில் இருந்ததை எடுத்து போட்டு அள்ளி அள்ளி சாப்பிட்டாள்.தாரிகாவிடம் எப்போதும் இது ஒரு வழக்கம்! அதிகமான கோபமோ அழுகையோ வந்தால் அதிகமாக சாப்பிடுவாள்.என்ன செய்வதென்றே தெரியாத தருணங்களிலும் அப்படித்தான்.......அவளுக்கு பிடித்ததை ஏதேனும் சமைத்து சாப்பிடுவாள்.அம்மாவையோ தங்கையையோ தொல்லைப்படுத்த மாட்டாள்.அப்படி சாப்பிட்டு முடித்ததும் மனம் தெளிவானதைப் போல இருக்கும். இது அடிக்கடி நடக்குமாதலால் அவள் நேரம் கெட்டு சாப்பிட்டாலும் அந்த வீட்டில் அவளை யாரும் எதுவும் கேட்பதில்லை.

    ஆனால் இன்று அவள் எவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்கியது போலவே தெரியவில்லை.வயிறோ அல்லது நெஞ்சோ....அது இன்னும் எரிந்துக்கொண்டே தான் இருந்தது.சொம்பில் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்தாள்.

    ரகுவரன் அனுப்பியிருந்த மெசேஜ் தான் இத்தனைக்கும் காரணம்! தவறாக ஒன்றும் அனுப்பவில்லை தான்.....ஆனால் அவன் அனுப்பியது எதற்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லாதது போல தோன்றியது.எல்லாம் காதல் வகையறாக்கள்! இதையெல்லாம் மணிவீரன் அனுப்பியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

    நினைத்ததும் பெருமூச்சு தான் வந்தது அவளுக்கு! காதல் ஒருவகை கிறுக்குத்தான்! இல்லாவிட்டால் நம்மை அலட்சியப்படுத்தி அலைய விடும் யாரோ ஒருத்தியின் பின்னால் மனதை அலைய விடுமா? ஆனால் அவனுக்கு புரியவில்லையே? மஞ்சுளாவின் மனது என்றைக்குமே மாறாதது என்பதை அவனுக்கு யார் எடுத்து சொல்வது? எடுத்து சொன்னாலும் புரிந்துக் கொள்வானா?

    இதை தாரிகா ஆயிரத்தி நூறாவது முறையாக நினைக்கிறாள்.ஆனால் அவனிடம் சொல்லியதே இல்லை.என்னதான் அவள் இயல்பாக காட்டிக்கொண்டாலும் அவளின் உள்மனம் அவளுக்கு எதிராக உண்மையாக வேலை செய்தது. மஞ்சுளாவின் குணம் பற்றி வீரனிடம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. சொல்லி அவன் வேறு ஏதாவது வழியில் முயற்சித்து அவளை வென்றுவிடுவானோ என்று தான் அவளுக்கு பயம்! கூடாது..........அவன் எனக்கு தான்! எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! இது தான் அவளின் உள்மனம் சொல்லும் தினசரி சுலோகம்! ஆனால் அவளின் வெளிமனம் இதை ஏற்க தயாராயில்லை.அது மனித மனம் அல்லவா? தன் தோழிக்கு துரோகம் செய்யவில்லை என்று போலியாய் தன்னையும் மற்றவரையும் அது ஏமாற்றிக்கொண்டு இருந்தது.

    மனம் அலுப்பாக இருப்பதாய் தோன்றவே, அம்மாவிடம் சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்றாள்.நுழைந்ததுமே வந்த விபூதி குங்கும வாசனையில் அத்தனை குழப்பமும் மறைந்தே போனது போல இருந்தது.சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கேயே ஒரு ஓரமாய் சென்று தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.

    பிரச்சனை வரும்போது கூடவே பக்தியும் வந்துவிடுகிறதே?? தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

    எதுவுமே நினைக்க தோன்றாமல் மனம் அமைதியாய் இருந்தது.அதை கலைப்பது போல அருகில் ஒரு குரல் கேட்டது.

    "ஆழ்ந்த சிந்தனையோ?"

    தன்னைத்தான் யாரும் அப்படி கேட்கக்கூடும் என்று எண்ணாதவளாக அமர்ந்திருந்தவள், ரகுவரனின் சிரித்த முகம் அவள் கண்களுக்கு நேராய் வரவும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

    "இல்லை......நீங்கள்.........எப்படி இங்கே?"

    "உன்னைப் பார்த்தேன்.........அதுதான் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாமே என்று!"

    பழைய உற்சாகம் மெதுவாக எட்டிப்பார்க்க சொன்னாள். "என்னிடம் பேசி என்னவாக போகிறது? அத்தை மகளிடம் கொஞ்சினாலாவது பின்னால் சௌகர்யமாக இருக்கும்."

    அவளின் கிண்டலை அவன் ஒரு தலையசைப்போடு ஏற்றுக்கொண்டான். "இல்லை தரு......இப்போதெல்லாம் நான் சிந்தியாவிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.அவளுக்கென்று எதையாவது வாங்கி தரும் நேரங்களில் பேசுவேன்......அவ்வளவுதான்."

    "ஏன்?" புரியாமல் பார்த்தாள்.

    "நான் அவளிடம் எதார்த்தமாக பழகுவதை அவள் வேறு விதமாய் கற்பனை செய்துவிடக் கூடாது இல்லையா?"

    வீட்டிலிருந்து வரும்போது இருந்த குழப்பம் பன்மடங்கு அதிகமானதைப் போல முகத்தை வைத்திருந்தாள் தாரிகா!

    "வேறுவிதம் என்றால்?"

    "நம்மூரில் அத்தை மகள்-மாமன் மகன் உறவு சகஜமாகி போன ஒன்று! ஆனால் சிந்தியா வளர்ந்த கிராமத்தில் அப்படியில்லை! நான் அவளிடம் அதிக உரிமை எடுத்து பழகுவதை காதல் அது இதென்று அவள் எண்ணிவிட்டால்? அது தான் நிறுத்திவிட்டேன்!"

    'அப்போது உனக்கு அவள்மேல் காதல் இல்லையா?' அவள் மனம் சிந்தியாவுக்காக அழுதது.

    "காதல் இல்லாமல் அப்படி பழகுவதும் தவறுதான்! அதை இப்போது தான் நானும் உணர்கிறேன்!" அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தான்.

    'இப்போது உணர்ந்து என்ன செய்ய? அவள் உன்னைக் காதலித்துவிட்டாளே?'

    "அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் தெரிய தொடங்கியது தரு.......அதற்கு பின்பு தான் நான் என்னை மாற்றிக்கொண்டேன்!"

    'உன்னைப் போல அவளும் மாறுவாளா? நீ அவளைக் காதலிக்கவில்லை என்று தெரிந்தால் இப்படி நீ சிரிப்பது போல அவளும் சிரிப்பாளா?'

    "முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் தரு! செடியாக முளைத்து மரமாக வளர்ந்துவிட கூடாது பார்?"

    'அடப்பாவி...........அவளுக்கு காதல் பூத்து...அது காய்த்து கனியாகிவிட்டதே? இப்போதா உனக்கு இந்த ஞானோதயம் வர வேண்டும்?'

    "என்ன தரு? ஒன்றுமே பேசாமல் இருக்கிறாய்?"

    அவள் குரல் சன்னமாய் வெளிவந்தது. "சிந்தியாவுக்கு உங்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது என்றால்,அதற்கு அவள் மட்டும் காரணம் இல்லையே?"

    ரகுவரன் அவளை பாவமாய் பார்த்தான்."நீ கூடவா என்னைத் தவறாக நினைக்கிறாய் தரு? நீ சொல்வது போல அவள் காரணமில்லை தான்! அதே போல நானும் பொறுப்பாளி அல்ல! தொட்டு பேசும்போது கூட அவளைத் தங்கையாக தான் நினைத்தேன்."

    "ஹ்ம்ம்......இனி நாம் இருவரும் இதை பேசி ஒன்றுமில்லை! கடவுள் தான் வழிவிட வேண்டும்.வந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாகிறது....நான் கிளம்புகிறேன்!"

    "நான் பைக்கில் தான்........"

    "இல்லை வேண்டாம்! நடந்தே சென்று விடுவேன்."

    தாரிகாவின் தளர்ந்த நடைக் கண்டு ரகுவுக்கு பரிதாபமாக இருந்தது. 'எல்லா பெண்களும் அவர்களின் காதலன் அவர்களுக்கு மட்டுமே சொந்தமென்று தானே நினைப்பார்கள்? பாவம்......சிந்தியாவுக்கும் என்மேல் உரிமை இருக்கிறதோ என்று எண்ணி பயந்துவிட்டாள்.மக்கு.....இவளைத் தவிர வேறு யாரிடமாவது என் மனம் செல்லுமா என்று நினைக்க தெரியவில்லையே??'

    சிந்தியாவின் காதல் தோற்றுவிட்டது என்பதை அறிந்த நொடியிலிருந்து தாரிகா ரகுவரனை அந்நியனாக நினைக்க தொடங்கினாள்.அவன் சிந்தியாவை ஏமாற்றிவிட்டதைப் போலத்தான் அவளுக்கு எண்ண தோன்றியது.

    'இவன் பொறுப்பாளி இல்லையாமா? அவளுக்கு ஆசை வருவது போல பேசி......கன்னம் தட்டி கொஞ்சிவிட்டு......இன்னைக்கு வேதாந்தம் பேசுகிறான்! அவளுக்கு மனம் இருக்காதா? அது என்ன கல்லா? இவன் தொட்டபோதும் மரத்து சிலையாக கிடப்பதற்கு? ஐயோ........சிந்தியா......எப்படி உன்னிடம் நான் இதை சொல்ல போகிறேன்?'

    இந்த விஷயத்தை தோழியிடம் சொல்லி அவளுக்கு ஆறுதலாய் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து தாரிகா சிந்தியாவின் வீட்டுக்கு போக, சிந்தியாவோ தாரிகாவின் வீட்டில் இருந்தாள் அந்நேரம்.
     
    1 person likes this.

Share This Page