1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரையை தொட்ட அலைகள் 3

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Dec 6, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விதியின் விளையாட்டே!


    [​IMG]


    ஒருவன் பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை,வரும்போதே யார் யாருக்காகப் பிறக்கப் போகிறோம்,யார் யாரை சந்திக்கப் போகிறோம்,எங்கே, எப்பொழுது,ஏன் என்பதெல்லாம் அட்டவணைப் போட்டுத்தான் நம்மை ஆண்டவன் அனுப்புகிறான்.


    மனிதன் உயிருடன் இருக்கும் போது என்ன எடை வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவனுடைய ஆன்மாவின் எடை வெறும் இருபது கிராம் மட்டுமே .இதை ஆராச்சியில் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.


    அப்புறம் எதற்காக நாம் விதியுடன்ஓடிப்பிடித்துவிளையாடணும்?
    அதிலேத் தான் ஒரு த்ரில் இருக்கு!



    நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் நம்முடைய செயல்களினால் ,நாம் விதியை மாற்றுகிறோம் என்று, அது வெறும் கண் துடைப்பே!


    ஒருநாள்இரவு,தூக்கம் வராதப் போது அப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும்போது திடிர் என்று மனதில் பட்டது இது தான். சாதாரணமாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
    திருமணம் ஆகும் முன்பே அவர்களுடைய மாப்பிள்ளையோ ,ரொம்ப அபூர்வமாக சில சமயம் மருமகளோ பிறந்து விடுகிறார்கள்.


    அப்போ இது எல்லாம் விதியின் விளையாட்டு தானே?அவர்கள் பிறந்ததனால் தானே இந்தத் திருமணமே நடக்கிறது?
    யார் யாருக்காக என்பது முன்பே முடிவெடுத்தது தான்.


    நாம் சாதுரியமாக விதியை வென்றதாக நினைக்கிறோம்,அதுவும் விதியின் விளையாட்டே!


    [​IMG]

    யார் யாரை வாழ்வில் பார்க்கப் போகிறோம்,யார் யாருடன் தொடர்புக் கொள்ளப் போகிறோம் என்பதெல்லாம் ப்ரோக்ராம் போட்டுதான் பிறக்கிறோம்.


    [​IMG]
     
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    சில விஷயங்களை மூடநம்பிக்கையாய் ஏற்றுக் கொண்டு அதை விதியின் மேல் பழி போட்டு அமர்ந்து விடக்கூடாது என்றுதான் நம் பெரியவர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்..
    எதையும் பகுத்து ஆராய்ந்தால் சிலவிதியின் செயல்களை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்..
     

Share This Page