1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கங்கையின் மகிமை

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 17, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "பெருக்கெடுத்து ஓடும் கங்கையின் நீரது,
    பாவங்கள் யாவையும் கழுவிச் செல்லும்,
    என நிலவி வருகின்ற நம்பிக்கையானது,
    மெய்யா? என சுவாமி! நீரே சொல்லும்!"

    என உமையவள் ஈசரிடத்தில் வேண்ட,
    ஈசரும் மோகனப் புன்னகை புரிந்தார்.
    "சகியே! உன்னிரு விழிகளால் கண்ட,
    பின், உணர்வாய் நீ!" என மொழிந்தார்.

    வயோதிகத்துக்கு ஒரு சரியான சான்றென,
    இருவரும் தொண்டு கிழங்களாய் மாறினர்.
    கரையில் தரையைக் காண முடியாதென,
    தொலைவில் இருந்தே கண்டு கொண்டனர்.

    சிலர் நீரைத் தொட்டுத் தலை தெளிக்கவும்,
    சிலர் ஈசர் நாமத்தைச் சொல்லிக் குளிக்கவும்,
    சிலரோ, நதியின் வேகத்தினைக் கண்டே,
    பயந்து விட்ட பசுங்கன்றென மிரண்டே,

    ஐந்தடிகள் அப்பால் நின்று, ஒரு சிறு குவளை,
    நீட்டி, குளிப்போரிடம், நிரப்பித் தரவும் வேண்டி,
    நின்ற காட்சியும், சாதுக்கள் சிலரோ, உடலை,
    நீரின் போக்குக்கு ஏற்ப, நகர்ந்து, நன்கு முங்கி,

    உடல் சட்டையைக் கழுவிக் கொள்வதும்,
    அவர் இருந்த தொலைவில் வேறெவரும்,
    செல்லாது கரையின் அருகில் குளிப்பதும்,
    பார்த்து விட்டு, அக்கிழங்கள் இருவரும்,

    கரையோரத்தில் நின்று, மெல்ல சிலவடிகள்,
    உள்ளே சென்று, குளிரில் மிக நடுங்கியபடி,
    மூழ்க, ஈசரோ நீரின் வேகத்தில் சிலவடிகள்,
    இழுக்கப்பட, உமைக் கிழவியோ கதறியபடி,

    அவரைக் காக்க ஒருவரும் இலையோ?" என்றே,
    பெரும் கூக்குரலிட, பதறிய பலரும் உடனே,
    நான், நீ என்று விரைந்திட முயல, "அங்கே
    பாவமற்றோர் எவரோ செல்வீர் உடனே!"

    அவரே என் பதியைக் காக்க முடியும்!" என்று,
    கௌரியும் உரைக்கவும், உடனே, முன்னே
    ஓடியோர், தயக்கத்தோடு பின்னால் சென்று,
    நிற்க, வேடிக்கை பார்க்க வந்தவன் உடனே,

    நீரில் பாய்ந்து, சிரமத்துடன் முன்னேறி,
    தன் சக்தியனைத்தும் சேர்த்து, போராடி,
    கிழவரை மீட்டு, கரைதனில் சேர்த்தான்.
    அவர் நினைவடைய உதவியும் செய்தான்.

    "ஐயோ! இவன் ஓர் இரக்கமற்ற திருடன்!" என,
    அங்கிருந்த பலரும் ஓங்கி, குரலினை எழுப்பி,
    "கூசாது பொய் சொன்னாள் இக்கிழவி!" என,
    திருடனும் முகத்தில் இகழ்ச்சியைக் காட்டி,

    பாவங்கள் தீர்க்கும் கங்கை நீர் என்பது
    மெய்யெனில், என் மெய் அதில் பட்டதும்,
    என் பாவம் எல்லாம் போயின. ஆகவே,
    கிழவியின் கூற்றில் தவறில்லை! எனவே,

    அங்கிருந்தோர் வெட்கித் தலைகுனிந்தனர்,
    உமையின் ஐயமும் முழுதாய்த் தீர்ந்தது.
    இருவரும் அவன் முன் காட்சி அளித்தனர்.
    திருடனின் மறுவினை யாவும் தீர்ந்தது.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கங்கையின் மகிமையை ஈசர் சொன்ன விதம் அருமை, உங்கள் கவிதையும்.
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மற்றதெல்லாம் புரிந்தது...இதற்கு என்ன அர்த்தம் ஸ்ரீ?
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தரையே தெரியாதபடி மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது என்று பொருள் தேவப்ரியா. எள் விழ இடமின்றி இருந்தது என்று சொல்வோமில்லையா? அதைப் போல். நன்றி. -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி நிம்மி. -ஸ்ரீ
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    கதையே கவிதையாய் , அருமையாய் இருந்தது ஸ்ரீ
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி லதா. -ஸ்ரீ
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஸ்ரீ ஆபத்தில் உள்ளவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவன் பாவத்தை போக்கிவிட்டது.ஈசனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று.உங்கள் கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்து சரியே. உங்கள் பாராட்டுக்கு நன்றி பெரியம்மா. -ஸ்ரீ
     
  10. sana009

    sana009 New IL'ite

    Messages:
    53
    Likes Received:
    0
    Trophy Points:
    8
    Gender:
    Female
    கங்கையின் மகிமையை கவிதை வடிவில் எங்களுக்கு கொடுத்தவிதம் அருமை.
     

Share This Page