1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு பக்க (கடி)கதை

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, May 11, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சிவா வசுமதி புதிதாக கல்யாணம் செய்த தம்பதிகள் .சிவா தன் படிப்புக்கேற்ற தொழிலான இயந்திர உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறான் .எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டு இருப்பான் .அன்று விடுமுறை நாள் .ஆனால் எப்போதும் எழுந்து கொள்வது போல் ஆறு மணிக்கு எழுந்து விட்டான் .பக்கத்தில் அவன் மனைவி வசு தூங்கி கொண்டு இருந்தாள்.சிவா த்ன் மனைவியை எழுப்பினான் .ஆனால் அவள் எழும்பவில்லை .

    உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் .வசு எழுந்து உட்கார்ந்து ,பழமொழி தெரிஞ்சா சொல்லணும் .இல்லை வாயை மூடி கிட்டு இருக்கணும்னு சொல்லவும் சிவாவுக்கு சந்தேகம் வந்து விட்டது .நாம தப்பா சொல்லிட்டோமோ அப்படின்னு நினைச்சுகிட்டு ஏம்மா நான் சரியா தானே சொன்னேன் .நீ ஏன் என்னை குழப்புறேன்னு கேட்டான் .உடனே வசு மாம்ஸ் அது அப்படி இல்ல சன் தூங்கிய பின் மூன் எழுவாள் .அதாவது சூரியன் தூங்கினா தானே நிலா வர முடியும் .இந்த அர்த்தத்திலே எழுதி வச்சா யாரோ ஆணாதிக்கம் குணம் கொண்டவர் இப்படி மாத்தி எழுதி வச்சிருக்காரு என்று அமைதியாக சொன்னாள் .சிவா அப்படியே தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டான் .

    அடுத்து வசு குளித்து விட்டு சோப்பின் நறுமணம் கமழ வந்தாள் .உடனே சிவா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அப்படிங்கற மாதிரி நறுமணம் வரும் முன்னே என் மனைவி வருவாள் பின்னேங்கிறது உண்மையா போச்சு என்று சொல்ல வசு அவனை முறைத்தாள் .ஏங்க இதே சோப்பு போட்டுட்டு வேறொரு பெண் வந்தா நான் தான் வரதா நினைப்பிங்களா என கேட்கவும் சிவா நொந்து நூல் ஆகிட்டான் .இந்த பழ மொழியும் தப்புங்க அப்படின்னு வசு ஆரம்பிக்க ஐயயோ நான் பழமொழியை இனி சொல்லவே மாட்டேன்மான்னு அலறினான் .ஆனாலும் அவள் விடுவதாக இல்லை .மாமா பிள்ளையார் கோயிலில் முதலில் மணி அடிப்பாங்க .அப்ப தான் பிள்ளையார் ஆசீர்வாதம் பண்ணுவார் .அவரு தனியா உட்கார்ந்து பல நல்ல காரியங்களை பத்தி நினைச்சுகிட்டு இருப்பார்.அதனாலே நாம் மணி அடித்து ஓசை எழுப்பினால் தான் அவர் கண் முழித்து நமக்கு அருள் புரிவார்.பிள்ளையார் தானே ஆனைமுகத்தோன் என்று சொல்லி சிரித்தாள் .

    சிவா அதன் பின் வாயை திறக்கலை .பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி வாயை மூடி கிட்டு இருக்கீங்களே .அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கல கலன்னு சிரித்தாள் வசுமதி என்னை விட்டுருமான்னு கை எடுத்து கும்பிட்டான் .
     
    Bhoonzee, Thyagarajan, ksuji and 10 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma ,

    பெரியம்மா, உங்கள் நகைச்சுவையும், அறிவுக்கூர்மையும் ஆஹா ! அருமை ! கடிக் கதையில்லை, என்னைப் படிக்கத் தூண்டிய கதை !

    இந்தப் பழ மொழிகளுக்கு உண்மையான பொருள் என்ன என்று இவ்வளவு நாளாக அறியாமல் இருந்துவிட்டேன். என்ன செய்வது ? கழுதைக்குத்(நான் தான் !) தெரியுமா கற்பூர வாசம் ?

    சிவா தன் மனைவியின் அறிவை உணராமல் பழமொழி கூறி கேலி செய்தது , ஆழமறியாமல் காலை விட்டது போலாகிவிட்டது, பாவம் ! இனிமேலாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று உணர்ந்து கொண்டு , மனைவியின் அறிவை மெச்சி , அவளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்கட்டும் .

    அதோடல்லாது, ஜாடிக் கேத்த மூடியாக, சிவா இன்னும் பல பழ(புது?) மொழிகளைத் தன்னருமை மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு , உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கம் பெற்று , வசுமதியோடு வளமாக வாழட்டும் !

    வசுமதியும் இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான் என்று புரிந்து கொண்டு, அன்பு நிறைந்த கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழட்டும் ! ( நானும் கொஞ்சம் பழமொழி எடுத்து விட ஆசைப் பட்டேன் , அதான் ! ஹா ஹா ஹா !! ;):smiley:)

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    Bhoonzee, Thyagarajan, ksuji and 8 others like this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Superb ma. ரொம்ப தாங்கஸ் மா, நான் கேட்டவுடனே நீங்க போட்டதுக்கு.

    நல்லா இருந்தது மா with the humour touch.
     
    Thyagarajan and periamma like this.
  4. deepv

    deepv Platinum IL'ite

    Messages:
    2,245
    Likes Received:
    1,681
    Trophy Points:
    283
    Gender:
    Female
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா ஆழம் தெரியாமல் காலை விட்டது சிவா இல்லை நான் தான் .நான் இரண்டடி பாஞ்சா நீங்க நாலு அடி பாஞ்சிட்டீங்க .அருமையான பழமொழிகள்
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா நன்றி நன்றி நன்றி .
     
    sreeram likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றிமா
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ருக்மணி, உங்க கதை சூப்பர் :) .....பவித்ராவின் பின்னூட்டம் அதைவிட சூப்பர் :) :clap2::clap2::clap2:
     
  9. Mirage

    Mirage Silver IL'ite

    Messages:
    77
    Likes Received:
    96
    Trophy Points:
    58
    Gender:
    Male
    வேண்டாம் வம்பு
    கொல்லன் பட்டரயில்
    ஈக்கென்ன வேலை என
    ஓடுவதே சால சிறந்தது :)
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி சகோதரி
     

Share This Page