1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வாழ்வின் கவிதை

Discussion in 'Stories in Regional Languages' started by GowriJ, Feb 11, 2014.

  1. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Friends,

    Enakum kathai ezhuthanumnu aasai vanthuruchu. I have been a silent reader for so many years. Now I have planned to write a story of mine. A brief introduction of the story.



    தலைப்பு: என் வாழ்வின் கவிதை


    நாயகன்: ப்ரசன்னா


    நாயகி: மித்ரா


    மித்ரா அமைதியான பெண். நண்பர்கள் மத்தியில் குறும்புக்காரபெண்.


    ப்ரசன்னா நண்பர்கள் மத்தியில் அமைதியானபையன். மற்றவர்கள் முன்புசரவெடிதான்.


    மற்றவர்களை பத்தி கதையில் பார்க்கலாம்.

    Enna friends ready'a?

     
    Last edited: Feb 11, 2014
    2 people like this.
    Loading...

  2. rjfara

    rjfara New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Male
    wow what a storyyyyy
     
  3. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை - 1

    அந்த மார்கழி மாத காலை வேளையில் சென்னை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஆனால் நமது நாயகி மித்ராவுக்கு இன்னும் விடியாமல் இருந்தது. அது ஒரு மகளிர் விடுதி. மித்ராவின் தோழியும் ரூமேட்டும் ஆன ரம்யா அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

    ரம்யா, 'ஏ! மித்து எழுந்திருடி. தினமும் உன்னோட இதே ரோதனையா போச்சு. சீக்கரமா எழுந்திருக்கறதில்லை. அப்புறம் ஆஃபீஸ்க்கு லேட் ஆச்சுனு குதிக்க வேண்டியது. எழுந்திருடி எருமை.' மித்து, ஏண்டி ரம்யா! காலங்காத்தால இந்த கத்து கத்துற.'

    'என்னது? காலங்காத்தாலயா!! மணி என்னனு தெரியுமா? எட்டு முப்பது டி'. என்று ரம்யா சொன்னவுடன் தான் நம்ம மித்து விழுந்து அடிச்சு எழுந்தாள். அரக்க பறக்க கிளம்பி ஒன்பதே காலுக்கு விடுதிக்கு வெளியே வந்துவிட்டாள். அது தான் மித்ரா. என்ன தான் லேட்டா எழுந்தாலும், நேரம் தவறாமை அவளுக்கு மிக முக்கியம்.

    வேளச்சேரியில் இருந்த விடுதியில் இருந்து மித்துவும், ரம்யாவும் OMR ரோட்டில் இருக்கும் ஆஃபீஸ் நோக்கி விரைந்தனர். அவர்கள் இருவரும் ஆபிஸ்க்குள் நுழையும் போது திரும்பி பார்க்காத கண்களே கிடையாது. ரம்யா நல்ல சிவந்த நிறம். கொஞ்சம் பூசினார் போல இருந்தாலும் கூட பார்ப்பதற்கு திகட்டாது. (தோழியை வர்ணிச்சிட்டு நம்ம ஹீரோயினை பத்தி சொல்லாம விடுவோமா என்ன?)

    மித்ரா சிவந்த நிறம் இல்லை என்றால் கூட அவள் தங்க நிறம். அவள் கண்கள் தான் அவளது அழகு. உதட்டில் எப்பவும் ஒரு புன்சிரிப்பு இருக்கும். யாரிடமும் எளிதில் பேச மாட்டாள். ஆனால் அவளது நெருங்கிய தோழிகளை கேட்டால் தான் தெரியும், அவ வாய திறந்தா மூட மாட்டா அப்படினு.

    மித்ராவும் ரம்யாவும் வேறு வேறு ப்ராஜெக்ட் குழுவின் லீடர் ஆக இருப்பவர்கள். அலுவலகத்துக்குள் இரண்டு பேரும், 'சரி டி, லன்ச் டைம்ல மீட் பண்ணலாம்' என்று பிரிந்து சென்றனர். மித்ரா தான் அவளது குழுவில் முதல் ஆளாக வருவாள். மத்த எல்லோரும் பத்து மணிக்கு மேல் தான் வருவார்கள். தனது மெயிலைப் பார்த்து, அன்று செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று சரி பார்த்து, அதை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நேரம், அவளது குழுவின் அனைத்து நபர்களும் வந்து விட்டனர் ஒருவனை தவிர. அவன் பெயர் ஆனந்த்.

    மித்ரா எப்பவும் தான் செய்யும் வேலைகளில் சின்சியரா இருப்பா. அவளுக்கு ஆனந்தை அவ்வளவாக பிடிக்காது. ஏன் என்றால் அவன் நேரத்திற்கு ஆஃபீஸ் வர மாட்டான். வந்தாலும் கொடுத்த வேலையை முடிக்க மாட்டான். முதல் இரண்டு முறை சொல்லி பார்த்தாள். அவன் கேட்பதாக இல்லை. அதனால் விட்டுவிட்டாள். அவனுக்கு ஏதாவது சாதாரண வேலையாக தான் கொடுப்பாள். இது தாங்க நம்ம மித்ரா.

    வாங்க நம்ம ஹீரோ Sir என்ன பண்றாருனு பார்ப்போம். அட அவரு இன்னும் எழுந்திருக்கவே இல்லை. இது மட்டும் தான் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மற்ற எல்லாமே நேரெதி்ர் தான். ப்ரசன்னா மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். நேரம் 9:30. மெதுவாக எழுந்து குளித்து முடித்து ஆஃபீஸ் செல்லும் பொழுது நேரம் 11:00. அங்கு அவனை ஏன் என்று கேட்க ஆள் கிடையாது. அவன் வேலையில் எந்த குறையும் இருக்காது. ஸ்மார்ட் வர்கர் அப்பிடிங்கற ரகம். அரை நாளில் வேலை அனைத்தயும் முடித்து விடுவான்.

    ப்ரசன்னா கொஞ்சம் சிவந்த நிறம், நல்ல உயரம். அவன் கண்களுக்கு கண்ணாடி அழகு என்பது போல் இருக்கும். அவன் அவனது பைக்கில் போகும் போது திரும்பி பார்க்காத பெண்களே கிடையாது. அவனுக்கும் பெண்கள் என்றால் ஒரு பிரியம். அது தாங்க நல்லா ஸைட் அடிப்பான். (இதுனால மித்ரா கிட்ட அடி வாங்க போறான். அது வேற விஷயம்).

    தனது வேலையை முடித்து விட்டு, தான் பள்ளியில் படிக்கும் போது எடுத்த போட்டோவ பார்த்து கொண்டிருந்தான். அவனது பள்ளி இறுதி நாளில் எடுத்த போட்டோ அது. இரு பாலினர் படிக்கும் பள்ளி அது. ஒவ்வொருவராக பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தான். அந்த போட்டோவில் அவனும், அவனது பெரியப்பாவின் பெண் ஸ்ருதியும், அவள் பக்கத்தில் மித்ராவும் நின்றிருந்தனர்.

    மித்ராவை பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு சின்ன சிரிப்பு. ஆனால் பள்ளி நாட்களில் அவள் தான் அவனது முதல் எதிரி. ஏன் என்றால் எல்லா ஆசிரியர்களும் மித்ராவை போல் படிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லுவாங்க. அது ப்ரசன்னாவுக்கு பிடிக்காது. ஆனாலும் இருவரும் பேசி கொண்டதில்லை. ஏதாவது பேச வேண்டிய தேவை இருந்தால், ஸ்ருதி மூலம் பேசி முடித்து கொள்வர். அத இப்போ நினைக்கும் போது தான் அந்த புன் சிரிப்பு. அதற்கு அப்புறம் அவன் அடுத்த நபரை பார்த்து என்று போட்டோவில் இருக்கும் அத்தனை பேரையும் பார்த்து முடித்தான்.

    இப்படி இரண்டு பேரும் அவர்களது தினசரி வாழ்க்கையில் இருந்தனர். இவர்களை விதி சந்திக்க வைக்க முடிவு செய்தது!!!

     
    4 people like this.
  4. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Friends,

    I have given first update of my story. Please give me your valuable feedback which will be helpful for me to improve myself.
     
  5. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
  6. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை– 2

    அன்று அலுவலகத்தில் இருந்து விடுதிக்கு வந்த பிறகு மித்ரா வாயை மூடாமல் பேசிகொண்டிருந்தாள். ரம்யா பொறுத்து பொறுத்து பார்த்தாள், ஒரு கட்டத்திற்கு மேல் அவளால்முடியவில்லை. ரம்யா, 'போதும் மித்து வாய் வலிக்க போது. கொஞ்சம் Gap விட்டு பேசுடி'.மித்ரா, 'போடி!, உனக்கு நான் பேசுனா பிடிக்கவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டாள்.

    ரம்யா, 'நம்ம ஆஃபீஸ்ல, நீ ஒரு அமைதியின் மறு உருவம்னு எல்லாரும் தப்பா நினைக்குறாங்க டி. எனக்கு தான் தெரியும் நீ எவ்ளோ பேசுரேனு. ஒரு நாள் உனக்கு தெரியாம நீ பேசுரது எல்லாத்தயும் ரெகார்ட் பண்ணி உன் டீம்ல போட்டுகாட்டலேனா என் பேர் ரம்யா இல்ல'. மித்து, 'சரி டி. அப்போ ரெம்யானு வச்சுக்கோ' அப்பிடினுபதிலடி கொடுத்தாள்.

    அந்த நேரம் ரம்யாவின் மொபைல் சிணுங்க தப்பித்தேன் என்று மொபைலை எடுத்துட்டு ஓடிவிட்டாள். மித்துவிற்கு போர் அடித்தது. அவளது Laptop'ஐ எடுத்து சமூக வலைதளத்துக்குள் சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவளது பள்ளி நண்பர்களுக்காக ஒரு group open பண்ணி இருந்தார்கள். மித்ராவுக்கு பள்ளி நண்பர்கள் யாரிடமும் தொடர்பு இல்லை.


    அதனால் ரொம்ப ஆர்வமாக அந்த group'ஐ open பண்ணி அவளது தோழிகளுக்கு "நண்பராக வேண்டுகோள்" (அதாங்க Friend Request) அனுப்பினாள். அவளுக்கு friends ரொம்ப கம்மி தான். அவளது உயிர் தோழியான ஸ்ருதியை தேடினாள் அந்த க்ரூபில். ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஸ்ருதி அந்த சமூக வலைதளத்தில் இல்லை. அவளது friends கிட்ட கேட்கலாம் என்று நினைக்கும் பொழுது அவளுக்கு ப்ரசன்னாவின் பெயர் கண்ணில் பட்டது. 'அட! இவன் நம்ம ஸ்ருதியோட சித்தப்பா பையன் தானே! இவனிடம் அவளை பத்தி கேட்கலாம். ஆனா இவன் நம்மகிட்ட பேசுவானா! நம்மளால teachers எல்லார் கிட்டயும் திட்டு வாங்குனவன் ஆச்சே' என்று யோசித்தாள்.

    'சரி, request அனுப்பி பார்ப்போம். பேசாவிட்டால் பரவா இல்லை' என்று friend request அனுப்பினாள். அதற்குள் ரம்யா வந்துவிடவே திரும்ப அவள் உயிரை வாங்க போய்ட்டாங்க மேடம். அந்த நேரம் நம்ம மித்துவோட மொபைல் மெஸேஜ் வந்ததற்கான அறிகுறியாக சிணுங்கியது. எடுத்து பார்த்தவளின் உதட்டில் ஒரு புன் சிரிப்பு. அனுப்பியது அவள் உயிர் தோழனான ரகு. ரம்யா, 'யாருடி?' என்று கேட்டாள். மித்து, 'நம்ம ரகு தான் டி. ஒழுங்கா hostel வந்துசேர்ந்தோமானு கேக்குறான்'.

    மித்ரா, ரகு மற்றும் ரம்யா மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ரம்யா, 'ஓ சரி. சரி. ஆனா ஒன்னு டி, நீ அமைதினு நம்புற இன்னொரு ஜீவன் இந்த ரகு தான் டி. உன் frienda இருந்தும் கூட உன்ன பத்தி தெரியாம இருக்கான்'. மித்து, 'போடி. அப்படி இல்லை.அவன் கிட்டயும் நான் நல்லா தான் பேசுவேன். ஆனா அவனுக்கு என்னமோ நான் அமைதி அப்படினு ஒரு நினைப்பு'.

    ரம்யாவுடன் பேசி கொண்டே, ரகுவுடனும் மெஸேஜ் மூலம் பேசி கொண்டிருந்தாள். ரகுவிற்கு மித்ரா ஒரு உலகம் அறியா பெண் போல. அவள் மேல ஒரு தனி பிரியம். அதனால் அவனாக வந்து தான் அவளிடம் நட்பு ஏற்படுத்தி கொண்டான் கல்லூரியில். அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பான். மித்ராவிற்கும் அவன் மேல் ஒரு பாசம்.

    இவர்கள் இங்கு பேசி கொண்டிருக்க, ப்ரசன்னா நம்ப முடியாதவனாக தன் laptop'ஐ பார்த்து கொண்டிருந்தான். ஆம், நீங்கள் நினைப்பது போல் அவன் பார்த்து கொண்டிருந்தது நம்ம மித்ரா உடய requesta தான். 'இன்னைக்கு தான இவளை பத்தி நினைத்தோம். ஆனா அவளிடம் இருந்து ஒருfriend request வரும் என்று நினைத்து கூட பார்க்கவே இல்லை' என்று நினைத்து கொண்டான்.

    அது தான் கடவுள் போட்ட முடிச்சு!!!
     
    4 people like this.
  7. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
  8. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை– 3

    ப்ரசன்னாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. 'மித்ராவா friend request அனுப்பியிருக்கிறாள். ம்ம் சரி, accept பண்ணலாம்' என்று முடிவு செய்து அவளது requesta ஏற்றான். மேலும் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பினான். 'Hai மித்ரா. எப்பிடிஇருக்க? என்ன பண்ணிட்டிருக்க? PG படிக்கிறியா அல்லது வேலை பார்த்து கொண்டிருக்கிறாயா?' என்பது தான் அது. அனுப்பிவிட்டு கொஞ்ச நேரம் laptopyae பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கே புரியவில்லை ஏன் இப்படி உட்காந்திருக்கோம் என்று. அவன் roomate கணேஷ் வந்து, 'டாய் ப்ரசன்னா எனக்கு பசி உயிர் போகுது, வாடா சாப்பிட போகலாம்' என்று சொன்ன பிறகு தான் இயல்புக்கு வந்தான்.

    கணேஷிடம் மித்ரா அனுப்பிய friend request பற்றி கூறினான் ப்ரசன்னா. கணேஷும் அதே பள்ளியில் தான் படித்தான். அதன் பிறகு ப்ரசன்னாவுடன் ஒரே கல்லூரியில் தான் படித்தான். இப்பொழுது இரண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். கணேஷ், 'அப்படியா? என்னால நம்பவே முடியவில்லை டா. அவள் யார்கிட்டயும் பேச மாட்டாளே ஸ்கூல் dayslayae. நாமலா பேசுனா கூட கேட்குற கேள்விக்கு மட்டும் தான் பதில் வரும். அவள் எப்படிடா உனக்கு friend request அனுப்பினாள்!!!' என்று ஆச்சிரியப்பட்டான்.

    ப்ரசன்னா, 'எனக்கும் அது தான் டா எனக்கும் புரியவில்லை. எப்படியும் இடையில் ஆறு வருஷம் முடிஞ்சிருக்குல, அவள் மாறியிருக்கலாம்' என்று கூறினான். அப்படி எல்லாம் இல்லை என்று அடுத்த நாளே மித்ரா நிரூபிக்க போகிறாள் என்று பாவம் அவர்களுக்கு தெரியவில்லை. இப்படியே மித்ராவும், பிரசன்னாவும் அவரவர் நண்பர்களுடன் பேசி அந்த நாளை முடித்தனர். அடுத்த நாள் மித்ராவிற்கு ஆச்சிரியம், ப்ரசன்னா அவளது requesta ஏற்று கொண்டது மட்டும் அல்லாது அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வேறு அனுப்பியிருந்தான்.

    அதற்கு பதில் அனுப்பினாள். 'நான் நல்லா இருக்கேன். நீ எப்பிடி இருக்கிறாய்? நான் XXX கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நீ என்ன பண்ணுகிறாய்? அப்புறம் ஸ்ருதி எப்பிடி இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?' என்று வினவினாள். அந்த பதிலை படித்தவுடன் ப்ரசன்னாவிற்கு புரிந்து விட்டது, 'இவள் ஸ்ருதிக்காக தான் நம்ம கிட்ட பேசி இருக்கிறாள்' என்று. கணேஷும் இதை கேட்டவுடன், 'அதானே பார்த்தேன் இவளாவது சும்மா பேசுரதாவது' என்று கூறினான்.

    ப்ரசன்னா, 'சரி விடு டா. அது அவளது குணம். அதற்கு என்ன பண்றது. ஸ்ருதியை பற்றி சொல்லிவிட்டால் நம்ம வேலை முடிந்துவிட்டது. அதற்கு பிறகு அவள் யாரோ நாம் யாரோ' என்று நண்பனுக்கு சமாதானம் சொல்கிற மாதிரி தனக்கே சொல்லி கொண்டான். ஆம் அவனுக்கு ஒரு சிறு ஏமாற்றம், அவள் தனக்காக பேசவில்லை ஸ்ருதிக்காகதான் பேசி இருக்கிறாள் என்று. அவளுக்கு பதில் அனுப்பினான். 'ஸ்ருதி நன்றாக இருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இது தான் அவளது நம்பர் 9xxxxxxxxx' என்று ஸ்ருதியை பற்றிமட்டும் கூறினான் தன்னை பற்றி ஒன்றும் கூறவில்லை. எப்படியும் அவளுக்கு தன்னை பற்றி ஒன்றும் தேவை இல்லை என்று நினைத்து கொண்டான்.

    ஆனால் அவன் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. மித்ரா online வந்தாள் அவன் குறுஞ்செய்தி அனுப்பியவுடன். மித்ரா, 'Hai ப்ரசன்னா. தாங்க்ஸ் ஸ்ருதி நம்பர் தந்தற்கு' என்று அனுப்பினாள். அதற்கு ப்ரசன்னா, 'Hai பரவால்லை' என்று மட்டும் கூறினான். 'ஏன் உன்னை பற்றி ஒன்றும் கூறவில்லை. நீ எப்பிடி இருக்கிறாய்? என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்' என்று வினவினாள். ப்ரசன்னாவிற்கு ஒரு நிமிடம் உலகம் தலை கீழாக சுற்றுவது போல் இருந்தது. இவளா நம்மலை பற்றி கேட்கிறாள் என்று எண்ணி கொண்டிருந்தான்.

    மித்ரா,' என்ன ப்ரசன்னா பதிலையே காணோம்' என்று கேட்டாள். ப்ரசன்னா, 'நான் நல்லா இருக்கேன். YYY கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்' என்று பதில் அளித்தான். 'Hey நம்ம ரெண்டு பேரோட கம்பெனியும் பக்கத்து பக்கத்துல தான் இருக்கு. முடிந்தால் ஒரு தடவை மீட் பண்ணலாம். சரி இப்பொழுது நான் தூங்க போகிறேன். பை குட் நைட்' என்று கூறினாள். ப்ரசன்னா, 'ஓகே குட் நைட்' என்றான்.

    மித்ராவிற்கு தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. நானா இவ்ளோ பேசுறேன். அதுவும் அதிகம் பேசி பழகாத ஒரு ஆணுடன். ரகுவிடம் கூட இவ்வளவு சீக்கரம் தான் பேசியது இல்லயேஎன்று வியந்தாள்.

    இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!!!


     
    4 people like this.
  9. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
  10. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை - 4

    கணேஷ் சத்தமாக பாட்டு பாடி கொண்டிருந்தான்.
    "பம்பர கண்ணாலே!
    பச்ச குத்த வந்தாலே!
    மச்சானே வாயேன்டா!"

    எப்பவும் கடுப்பாகும் ப்ரசன்னா இன்று ஒன்னும் வாயை திறக்கவில்லை. கணேஷ் அவனிடம் வந்து 'என்னாச்சு டா? ஏதோ உலக அதிசயத்த பார்த்த மாதிரி உக்காந்திருக்க' என்று கேட்டான்.
    ப்ரசன்னா, 'இது அதுக்கும் மேல டா.' என்று மித்ராவுடன் நடந்த உரையாடலை காண்பித்தான். கணேஷ் திறந்த வாயை மூடவில்லை ஆச்சிரியத்தில். 'என்னடா நடக்குது இந்த உலகத்தில? யாரை பத்தியும் புரிஞ்சுக்க முடியலயே!' என்று புலம்பி கொண்டே போய்விட்டான். ப்ரசன்னாவிற்கு அன்று தூக்கமே வரவில்லை. ஏதோ இனம் புரியாத சந்தோஷம். அடுத்த ஒரு வாரம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சென்றது.

    ஒரு வாரம் முடிவில் ப்ரசன்னாவிற்கு ஊருக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஊருக்கு அவனது மடிகணினியை எடுத்து செல்ல வில்லை அவன். ஊரில் இருந்து 5 நாட்கள் பிறகு தான் வந்தான். வந்த பிறகும் அலுவலகத்தில் நிமிர கூட முடியாமல் வேலை இருந்தது. அதில் அவன் மித்ராவை பற்றி மறந்தே விட்டான் எனலாம். மேலும் 10 நாட்கள் சென்ற பின் ஒரு நாள் அவனது Personal mail திறந்து பார்த்து கொண்டிருந்தான். ஒரு புதிய id-யில் இருந்து அவனுக்கு ஒரு mail வந்திருந்தது. மற்ற mail களை படித்து விட்டு கடைசியாக அந்த mail ஐ திறந்தவனுக்கு ஆனந்த அதிர்ச்சி. ஆம் அது மித்ராவின் mail தான். செய்தி இது தான்.

    'ஹை ப்ரசன்னா!
    என்னுடய மொபைல் நம்பர் உனக்கு கொடுக்க மறந்து விட்டேன் நாம் பேசும் பொழுது. இதோ என் நம்பர். 9xxxxxxxxx. நேரம் கிடைக்கும் போது கால் பண்ணு. Keep in touch'.

    தேதியை பார்த்தான். ஒரு வாரத்திற்கு முன் வந்திருந்தது. நாம் தான் சில நாட்களாக mail செக் பண்ணவில்லையே. அதில் மிஸ் ஆகியிருக்கும் என்று நினைத்து கொண்டான்.

    அங்கே மித்ராவிற்கு தன்னை நினைத்தே எரிச்சலாக இருந்தது. எந்த தயிரத்தில் நம்பர் அனுப்பினேன் ப்ரசன்னாவிற்கு. என்னை பற்றி என்ன நினைப்பான். ஏற்கனவே அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் சொன்னான். இதுல நம்பர் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு வாரம் முடிந்துவிட்டது. அவனிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை என்று தன்னை தானே கடிந்து கொண்டாள். மேலும் அவன் தன்னை தப்பாக தான் நினைத்திருப்பான் என்று தானே முடிவு செய்து கொண்டாள்.

    ரம்யா இவளை ரொம்ப நேரமாக பார்த்து கொண்டிருந்தாள். தனக்கு தானே பேசி கொள்ளும் மித்ராவை பார்த்து அவளுக்கு சிரிப்பாக வந்தது. சிரித்தால் அவள் கொலை வெறி ஆகிவிடுவாள் என்று தெரியும். அதனால் அவளிடம் தானே பேசினாள், 'ஹே மித்து, என்ன ஆச்சு? ரொம்ப நேரமா நீயா பேசிட்டிருக்க. தலையில தட்டிக்கிற. என்ன விஷயம்? என்று வினவினாள்.

    மித்ரா, 'நான் உனக்கு என்னுடய ஸ்கூல் friend ஸ்ருதியை பற்றி சொல்லி இருக்கேன் இல்லயா?' என்று தொடங்கினாள். ரம்யா, 'ஆம், அதுக்கு என்ன இப்போ?' என்று கேட்டாள். மித்ரா நடந்தவை அனைத்தயும் கூறினாள். கடைசியாக ப்ரசன்னாவிற்கு நம்பர் அனுப்பினதயும் கூறினாள். ரம்யா உடனே ஒன்றும் சொல்லவில்லை. மித்ரா, 'ஏன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குற ரம்யா? நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா?' என்று அழுது விடுபவள் போல் கேட்டாள். ரம்யா, 'ச ச! அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. நான் யோசிக்குறேன். இது வரைக்கும் எனக்கு தெரிஞ்சு நீயா யார்கிட்டயும் பேசுனது இல்லை. அதுவும் ஒரு பய்யனிடம் சான்சே இல்லை. ஆனால் இந்த ப்ரசன்னா கிட்ட நீயா பேசுனது மட்டும் இல்லாமல் நம்பர் வேறு குடுத்திருக்க!! அது தான் எனக்கு ஆச்சிரியமா இருக்கு' என்று கூறினாள்.

    மித்து, 'இதுல நீ ஆச்சிரிய பட என்ன இருக்கு டி. நான் இது வரைக்கும் ப்ரசன்னாவிடம் பேசினது இல்லை தவிர ஸ்ருதி மூலம் எனக்கு அவனை பற்றி நன்றாக தெரியும். நல்ல பையன். அது மட்டும் இல்லாமல் சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கோம். அதனால் எனக்கு அவன்கிட்ட புதுசா பழகுற மாதிரி தோணவே இல்லை' என்று விளக்கம் அளித்தாள். இதில் பாதி உண்மை, பாதி பொய். ஏன் என்றால் மித்ரா விற்கே புரிய வில்லை தான் ஏன் அவனிடம் மட்டும் தானாக பேசுகிறோம் என்று.

    மித்ராவின் மொபைல் ஸைலென்ட் மோட்டில் இருந்தது அதனால் அவள் புதிய எண்ணில் இருந்து வந்த காலை கவனிக்கவில்லை. இரண்டு முறை அழைத்து பார்த்து விட்டு பின்பு விட்டு விட்டான் ப்ரசன்னா. ஆம் அது ப்ரசன்னா வின் எண் தான். அவனிடம் இருந்து ஒரு அழைப்பும் வர வில்லை என்று எண்ணிக்கொண்டே அவனது அழைப்பை தவர விட்டாள் மித்ரா.

    இது தான் விதி செயும் விளையாட்டு!!!
     
    3 people like this.

Share This Page