1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்றா பசுபதி, என்ன நான் சொல்றது ???

Discussion in 'Posts in Regional Languages' started by ILoveTulips, Nov 1, 2010.

  1. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    இது எங்க ஆபீஸ் கதைங்க... யாருக்கிட்டயாவது சொல்லி பொலம்பணும்னு தோணிச்சு. என்னடா இவ எப்போ பாத்தாலும் எதையாவது சொல்லி அழுதுட்டு இருக்கான்னு நெனப்பீங்க. இப்போ சொல்றத கேட்டீங்கன்னா, எனக்காக நீங்க வருத்தப்படுவீங்க. கண்டிப்பா.

    கதை கொஞ்சம் சுத்தி வளைச்சு வரனால எடுத்துக்காட்டோட சொல்றேன்.

    மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஆபீஸ்ல, ரெண்டு பேரு இருக்குற டீமுக்கு ஒரு மேனேஜர் இருந்தாரு. அவர பெரிய நாட்டாமைன்னு வெச்சுக்குவோம். நீங்க வேணும்னா நடிகர் விஜயகுமார் கற்பனை பண்ணிக்கோங்க. நம்ம நாட்டாமை தனக்கு வேலை பளு அதிகமா இருக்குன்னு ஒரு சின்ன நாட்டாம(Assistant Manager) வேணும்னு மேலிடத்துக்கு மனு போட்டு, அந்த போஸ்டுக்கு நேர்முகதேர்வும் (Interview) நடந்துச்சு.

    அந்த தேர்வுக்கு, ரெண்டு பேரு வந்தாங்க. ஒன்னு நம்ம சரத்குமார் (அட நாட்டாம தம்பி பசுபதி மாதிரின்னு வச்சுக்கோங்களே! ). இன்னொருத்தர் ஆனந்தராஜ். இவருதான் நம்ம கதைக்கு வில்லன். (நாட்டாமை படத்துல வர வில்லன் பேரு தெரியல. அதுனால ஆனந்தராஜ்-னு வச்சுக்குவோம்.)

    ரெண்டு பேரும் நேர்முகதேர்வுல நல்லா தான் பண்ணாங்க. நம்ம பெரிய நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்றதுல கொழப்பம். இருந்தாலும் மாரியாத்தா மேல பாரத்த போட்டுட்டு விஜயகுமார் தீர்ப்பு சொன்னார்...

    "இந்தாப்பா பசுபதி, உனக்கு பஞ்சாயத்து (meetings ) நல்லா நடத்துற திறமை இருக்கு; எல்லாருகிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசுற;(diplomatic) அதுனால நீ இன்னியிலிருந்து சின்ன நாட்டாமை.

    கண்ணா ஆனந்தராசா... நீ வயல்ல நல்லா நாத்து நடர (coding)... களை புடுங்குற..(bug fixing) ஆனா மூஞ்சிய எப்போதும் எட்டு மொழ நீளத்துக்கு தூக்கி வெச்சுக்குற...(No communiation skill) அதனால நீ இங்க வயல் வேல (Developer) பாத்துட்டு இருந்துரு..
    "

    தீர்ப்ப சொல்லிட்டு நம்ம பெரிய நாட்டாம "நாட்டாம பாதம் பட்டா இங்க வெள்ளாம விளையுமடி ..." னு பாட்டு பேக்கிரவுண்டுல ஊர் மக்களுக்கு வணக்கம் சொல்லிட்டே கெளம்பிட்டாரு...

    அன்னைலேர்ந்து சின்ன நாட்டாம பசுபதி, பஞ்சாயத்துக்கு(Meeting) ஆலமரம் பார்க்கறது (booking meeting toom), பித்தள சோம்பு, ஜமுக்காளம் ரெடி பண்றது (meeting request, confirming attendees) இந்த மாதிரி வேல பண்ணிட்டு இருந்தாரு.. டைம் கெடைக்கும் போதெல்லாம், கணக்கு டீச்சர் கூட பேசுறதுனு சொகுசா வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்தாரு. ஆனந்தராஜு, வயல்ல வேல பாத்து பாத்து கலைச்சு போயி பசுபதி மேல பொறாம நாளுக்கு நாள் அதிகமாயட்டே இருந்தது. அதுனால கொஞ்ச நாள் கழிச்சு, வேலையே ஏதும் பண்ணாம, நான் நாட்டாம வேலைதான் பார்ப்பேன்னு உறுதியா சொல்லிட்டாரு.

    ஊரு மக்கள் கொஞ்ச நாள் யாரு சின்ன நாட்டாம னு கொழம்பி பொய் இருந்தாங்க.... பசுபதியும், "ப்ளீஸ் நம்புங்க... நாந்தான் சின்ன நாட்டாம, நாந்தான் சின்ன நாட்டாம" -னு எல்லார்கிட்டயும் கெஞ்சிட்டு இருந்தாரு ...

    பசுபதி வயல்ல நெல்லு வெதக்கனும்னு சொன்னா, வில்லன், இல்ல சோளம் தான் போடணும்னு ஒரே பிடிவாதமா நிப்பாரு. இப்படியே ரெண்டு வருஷம் போயி, வயல்ல ஒன்னும் பண்ணாம, நல்லா நிலம் தரிசு நிலமா போயிட்டு இருந்தது (absolutely no improvement in project).. இவங்க ரெண்டு பேரோட சண்டை மட்டும் ஓயாம போயிட்டு இருந்தது...

    இப்படி இருக்கயில, நம்ம பெரிய நாட்டாம, இப்படியே போனா ஊரு(Company) ஒன்னுக்குமில்லாம போயிடுமேன்னு, இன்னொருத்தர வேலைக்கு எடுக்கலாம்னு யோசிச்சாரு..

    இருங்க இருங்க தூங்கிடாதீங்க... கதைக்கு வரேன்....

    ஆனா மொதல்ல பண்ண தப்ப பண்ண கூடாதுன்னு நிறைய கண்டிஷன்(Job responsibility) போட்டாரு...

    1 . மாங்கு மாங்குன்னு வேல செய்யணும்.
    2 . யாரு மொதலாளின்னு கவலை பட கூடாது...
    3 . வாயில்லா பூச்சியா இருக்கணும்..
    4 . நாளெல்லாம், வில்லன் கிட்ட போராடி வேலைய முடிக்கணும்...
    5 . மொத்ததுல ஒரு இளிச்சவாயனா இருக்கணும்....

    நேர்முகத்தேர்வுக்கு ஆளுங்க வந்தாங்க... அதுல ஒருத்தர தேர்வும் பண்ணாங்க... அங்கதான் நான் நிக்கிறேன்....

    சரி இந்த கதையில என்னோட கேரக்டரு என்னனு கேக்கலியே?? சொல்றேன்...

    நாட்டாம படத்துல, ஒரு சீன்ல , ஒன்னும் தெரியாத புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு, பெரிய நாட்டாமைகிட்ட நேரா போயி, "ஏங்க, நம்ம பசுபதி தம்பி, கணக்கு டீச்சர வச்சிருக்காரா" -னு கேட்டு, கன்னம் வீங்கி, கண்ணுல பொறி பறக்க, காது செவிடாகி பாவமா நிப்பாரே, அந்த கவுண்டமணி கேரக்டரு தாங்க நான்...:bonk

    மூணு வருஷமா என்ன பிரச்சனை நடந்ததுன்னு தெரியாம, பசுபதிகிட்ட எதார்த்தமா ஏதாவது கேட்டு தொலைக்க, அவரு அத பதார்த்தமா புரிஞ்சுக்கிட்டு ரிவிட்டடிக்க, வில்லன் சப்போர்ட்டு பண்ணுவாரு... சரி, இவருதான் நல்லவருன்னு நம்பி வேல பாக்கும்போது, வில்லனோட உண்மையான குணம் தெரியும் ... அப்புறமென்ன? மத்தளம் கதைதான்...:drowning

    ஆனா ஒன்னு... நாட்டமையோட பதினெட்டு பட்டி அங்கவஸ்திரத்த, ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலைய புடிச்சுட்டு "எனக்குதான் வேணும் " னு இழுத்துக்கிட்டு இருப்பாங்க... சும்மா சொல்ல கூடாது... கையில பாப்கார்ன் இல்லாத குறைதான்... நம்ம வடிவேலு, விவேக் பண்றது எல்லாம் என்ன காமெடி?

    இது இன்னும் முடியலீங்க... அப்பப்ப நடக்குறத உங்களுக்கு சொல்றேன்...

    தொடரும்...

     
    Loading...

  2. radhaparth2000

    radhaparth2000 Platinum IL'ite

    Messages:
    2,674
    Likes Received:
    654
    Trophy Points:
    233
    Gender:
    Female
    ILTulips,

    I loved the way to narrated it. Very hilarious and it was good to start my day with this. Waiting for the next episode
     
  3. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    hayyayyooo.. mudiyalae... eppudi ippidi... :) amam, andha kanakku teacher aarunga ammani??? waiting for the second part
     
  4. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    நம்ம மயில்சாமி பாஷைல சொல்லணும்னா "சூப்பரப்பு."
    எல்லா கம்ப்யூட்டர் கம்பெனிலயும் இப்படித்தான் கோக்குமாக்கு நடந்துகிட்டிருக்குங்கறது தெரிஞ்ச விஷயம்தான். இருந்தாலும் நீங்க சொன்ன விதம் சூப்பர்.
    காலைல இந்தக் கணக்குப் புள்ளைய சிரிக்க வச்சி நல்ல புள்ளையாக்கிட்டீங்க.
    நீங்க நல்லா இருக்கோணும் அம்மணி
    வரலொட்டி
     
  5. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Tulips,

    really nice. u have developed a skill of explaing things in a hilarious way.. enjoyed reading it. expecting the continuation too...

    andal
     
  6. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    thank you Radhika.... :)
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    varaanga varaanga... kanakku teacher adutha paagathula varaanga.... stay tuned... :) thank you for liking this post...
     
  8. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    vaanga varalotti saar... very happy to get the very first comment from you... :) Glad you liked it...
     
  9. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    hi andal.... thank you.... hope you like the future series too.... :)
     
  10. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Kalakiteenga ILT :)

    Next episode eppa pa?? waiting...
     

Share This Page