1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்

Discussion in 'Music and Dance' started by latharam09, Dec 17, 2010.

  1. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube - Ilakkanam Maarudo - Nizhal Nijamakirathu - Kamal Haasan & Sumitra

    படம்: நிழல் நிஜமாகிறது
    குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
    வரிகள்: கண்ணதாசன்

    இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
    இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

    (இலக்கணம்)

    கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான தாகம் ஏனிந்த கானம்
    வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
    யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
    மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ

    (இலக்கணம்)

    என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
    என் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
    புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
    திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
    மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ விளக்கிவைப்பாயோ

    (இலக்கணம்)

    தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
    தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
    தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்
    பாடாமல் போனால் எது தெய்வமாகும்
    மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

    (இலக்கணம்)

    மணியோசையென்ன இடியோசையென்ன
    எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
    நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
    நிஜமாக வந்து எனைக் காக்கக்கண்டேன்
    நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜென்ம பந்தம்

    (இலக்கணம்)
     
  2. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    http://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg&feature=player_embedded

    படம்: அவர்கள்
    குரல் : S ஜானகி

    இப்படியோர் தாலாட்டு பாடவா - அதில்
    அப்படியே என் கதையை கூறவா

    இப்படியோர் தாலாட்டு பாடவா - அதில்
    அப்படியே என் கதையை கூறவா
    கைபிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
    எப்படியோ வேறுபட்டார் என் மடியில் விழுந்தாய் (இப்படியோர்)

    நீலவானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது - கண்ணா
    நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
    இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது - அது
    இருண்டிருந்த வீட்டினிலே தங்கி வந்தது (இப்படியோர்)

    அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள் - ஏனோ
    அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்
    அதுவரை தான் தன் கதையை என்னிடம் சொன்னாள் - நான்
    அதிலிருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன் (இப்படியோர்)

    கண்ணனவன் கையினிலே குழிலிருந்தது - அந்த
    கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
    இன்று வரை அந்த குழல் பாடுகின்றது அந்த
    இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது (இப்படியோர்)
     
    Last edited: Dec 29, 2010
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக

    Haiyo, thank you for your kisses nimmi :)
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    படம்: எங்கள் தங்க ராஜா
    குரல்: TMS, PSuseela

    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை
    ம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை..

    பாதி கண்களை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
    ஆ..ஆ..ஆ..பாதி கண்களை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
    பாதி பாதியாய் இருவரும் மாறி
    பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
    காலை என்பதே துன்பம் இனிமேல்
    மாலை ஒன்று தான் இன்பம்
    காலை என்பதே துன்பம் இனிமேல்
    மாலை ஒன்று தான் இன்பம் (இரவுக்கும் பகலுக்கும்)

    ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
    ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
    தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
    கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப்போவது மஞ்சம்
    ம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப்போவது மஞ்சம் ( இரவுக்கும் பகலுக்கும)
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube -

    படம்: நிறம் மாறாத பூக்கள்
    குரல்: ஜென்சி :)

    இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
    இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
    இது கண்கள் சொல்லும் ரகசியம்
    நீ தெய்வம் தந்த அதிசயம்
    இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன

    சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
    ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
    ஆகாய பூபந்தல் தேரோட்டமும்
    ஆரோட கலை மானாக
    பார்த்தன ரசித்தன ஓராயிரமே

    பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் மலைகளே
    எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன்
    அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
    நீஎன்றும் இனி நானென்றும்
    படிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
     
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    படம் : அன்புக் கரங்கள்
    பாடல்: வாலி
    இசை: சுதர்சனம்
    குரல்: பி. சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ்

    ஆண் : இரவு முடிந்துவிடும்
    பெண் : முடிந்தால்?
    ஆ: பொழுது விடிந்துவிடும்
    பெ: விடிந்தால்?
    ஆ: ஊருக்கு தெரிந்துவிடும்
    பெ: தெரிந்தால்?
    ஆ: உண்மைகள் புரிந்துவிடும் (இரவு)

    பெ: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா?
    ஆ: கைகளில் விழுந்திடாமல் பசியடங்குமா?
    பெ: பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா?
    ஆ: பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா? (இரவு)

    ஆ: ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே - உன்
    அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே

    பெ: அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே - என்
    நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே (இரவு)
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube - Pookkari - Khathelin Pon - Song

    படம் : பூக்காரி
    குரல் : TMS, S Janaki
    இசை : MSV

    காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்
    பண்ணோடு அருகில் வந்தேன் - நான்
    கண்ணோடு உறவு கொண்டேன்

    கா...தலின் பொன் வீதியில் நான் ஒரு பண் பாடினேன்
    பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என்
    கண்ணோடு ஒருத்தி வந்தாள்

    (காதலின் )

    திருபாற்கடலில் பொன் மேடை இட்டு
    நான் காத்திருப்பேன் உனக்காக
    இனி தனிமை இல்லை பகல் இரவும் இல்லை
    நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
    இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
    தேன் கொள்ள வந்தேன் மனம் போல
    என் மனதினிலே உன் நினைவுகளே
    அதை அள்ளி வந்தேன் உனக்காக (காதலின் )

    விழி ஓரங்களில் சில நேரங்களில்
    வரும் பாவங்களும் கவியாகும்
    அந்த கவிதைகளில் உள்ள பொருள் அறிந்து
    அதை சுவைப்பதுதான் கலை ஆகும்
    அந்த கலைகளிலும் பல புதுமை உண்டு
    அதை பழகுவதே பேரின்பம்
    இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
    இனி காலமெல்லாம் உன் சொந்தம் (காதலின் )
     
  10. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக&#3

    YouTube - kathoduthan naan paaduven - Velli Vizha


    படம்: வெள்ளி விழா
    இசை : இளையராஜா
    குரல் : L.R. ஈஸ்வரி
    வரிகள் : கண்ணதாசன்

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன் - உன்
    மடிமீதுதான் கண் மூடுவேன் (காதோடுதான்)

    வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
    அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
    உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா - குல
    விளக்காக நான் வாழ வழி காட்ட வா (காதோடுதான்)

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
    எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
    யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது (காதோடுதான்)
     

Share This Page